Wednesday, May 25, 2022

Thithikudhe - Iraq Yuthham

 படம் : தித்திக்குதே (2003)

இசை : வித்யாசாகர்

பாடியவர்கள் : உதித் நாராயன், அனுராதாஸ்ரீ ராம்

பாடல்வரிகள் : வைரமுத்து



Download this MP3

மர்ஹபா......


ஈராக் யுத்தம் 

முடிஞ்சுபோச்சு அங்க

அட எனக்குள்ள யுத்தம் 

தொடங்கிடிச்சு இங்க


ஈராக் யுத்தம் 

முடிஞ்சுபோச்சு அங்க


அட எனக்குள்ள யுத்தம் 

தொடங்கிடிச்சு இங்க


ஹே எண்ணெய் வயல் 

எரிஞ்சுபோச்சு அங்கே


என் என்னவயல் 

எரியுதாடா இங்கே


கண்ணிவெடி 

அணைஞ்சுபோச்சு அங்கே


என் கன்னிவெடி 

வெடிக்குதடா இங்கே


ஈராக் யுத்தம்...


யே... ஈராக் யுத்தம் 

முடிஞ்சுபோச்சு அங்க


அட எனக்குள்ள யுத்தம் 

தொடங்கிடிச்சு இங்க



மர்ஹபா... 

மர்ஹபா...


ஹே ஏவிவிட்ட ஏவுகணை 

போதும் போதும் போதுமென

ஏதேதோ எரிஞ்சு போச்சு அங்க


எங்கும் ஏவாத ஏவுகணை 

வேணும் வேணும் வேணுமுன்னு

என் மார்பு துடிக்குது இங்கே


வட்டமிட்டு வட்டமிட்டு 

வல்லரசு குண்டுபோட

கட்டடங்கள் உடைஞ்சு போச்சு அங்க


நீ திட்டமிட்டு திட்டமிட்டு 

என் மனசில் துண்டுபோட

கட்டழகு கழண்டுபோச்சு இங்கே


ஊருக்குள்ள சேதம் வருமே

அந்த யுத்தம் யுத்தம் யுத்தம் நிறுத்து? ஹோய்


என்ன கொஞ்சம் சேதப்படுத்து

நீ நித்தம் நித்தம் யுத்தம் நடத்து



ஹே எண்ணெய்வயல் 

எரிஞ்சுபோச்சு அங்கே


என் என்னவயல் 

எரியுதாடா இங்கே


கண்ணிவெடி 

அணைஞ்சுபோச்சு அங்கே


என் கன்னிவெடி 

வெடிக்குதடா இங்கே

ஈராக் யுத்தம்....

அட எனக்குள்ள யுத்தம் 

தொடங்கிடிச்சு இங்க



பீரங்கியும் துப்பாக்கியும் 

பெருமூச்சு விட்டு விட்டு

பாலைவனம் கருகிப்போச்சு அங்க


பேரழகா உன்னை எண்ணி 

பெருமூச்சு விட்டு விட்டு

சேலைவனம் கருத்துப்போச்சு இங்கே


வான்வழி தரைவழி 

ரெண்டுபக்கம் தாக்கப்பட்டு

பாக்தாத் விழுந்துருச்சு அங்க


ஹே கண்ணுக்குள்ள நெஞ்சுக்குள்ள 

ரெண்டுபக்கம் தாக்கப்பட்டு

கண்ணுமுழி பிதுங்கிருச்சு இங்கே


அன்னம் தண்ணி ஏதும் இல்லாம அங்க

ஆர்ப்பாட்டம் நடக்கிறதே


அன்னம் தண்ணி ஏதும் செல்லாமா

என் ஆவி இங்கு துடிக்கிறதே


ஹே எண்ணெய்வயல் 

எரிஞ்சுபோச்சு அங்கே


என் என்னவயல் 

எரியுதாடா இங்கே


ஹே கண்ணிவெடி 

அணைஞ்சுபோச்சு அங்கே


என் கன்னிவெடி 

வெடிக்குதடா இங்கே


ஹே ஈராக் யுத்தம் 

முடிஞ்சுபோச்சு அங்க


அட எனக்குள்ள யுத்தம் 

தொடங்கிடிச்சு இங்க


ஹே எண்ணெய்வயல் 

எரிஞ்சுபோச்சு அங்கே


என் என்னவயல் 

எரியுதாடா இங்கே


கண்ணிவெடி 

அணைஞ்சுபோச்சு அங்கே


என் கன்னிவெடி 

வெடிக்குதடா இங்கே


ஈராக் யுத்தம்...



Thithikudhe - Silendra Theepori Ondru

 படம் : தித்திக்குதே (2003)

இசை : வித்யாசாகர்

பாடியவர்கள் : ஸ்வேதா மோகன்

பாடல்வரிகள் : வைரமுத்து


Download this MP3


சில்லென்ற தீப்பொறி ஒன்று

சிலு சிலு சிலுவென 

குளு குளு குளுவென‌

சர சர சரவென 

பரவுது நெஞ்சில் பார்த்தாயா?


இதோ உன் காதலன் என்று 

விறு விறு விருவென 

கல கல களவென

அடி மன வெளிகளில் 

ஒரு நதி நகருது கேட்டாயா


உன் மெத்தை மேல் தலை சாய்கிறேன் 

உயிர் என்னையே தின்னுதே

உன் ஆடைகள் நான் சூடினேன் 

என்னென்னவோ பண்ணுதே

தித்திக்குதே... தித்திக்குதே... 

தித்திக்குதே... தித்திக்குதே... 

தித்திக்குதே... தித்திக்குதே... 

தித்திக்குதே... நா நா நா நா நா

தித்திக்குதே... தித்திக்குதே... 

தித்திக்குதே... நா நா நா நா நா


சில்லென்ற தீப்பொறி ஒன்று

சிலு சிலு சிலுவென 

குளு குளு குளுவென‌

சர சர சரவென 

பரவுது நெஞ்சில் பார்த்தாயா?



கண்ணா உன் காலணி உள்ளே

என் கால்கள் நான் சேர்ப்பதும்

கண்மூடி நான் சாய்வதும்

கனவோடு நான் தொய்வதும்


கண்ணா உன் கால் உறை உள்ளே 

என் கைகள் நான் தொய்ப்பதும்

உள்ளூற தேன் பாய்வதும்

உயிரோடு நான் தேய்வதும்


முத்து பையன் தேநீர் உண்டு 

மிச்சம் வைத்த‌  கோப்பைகளும்

தங்க கைகள் உண்ணும் போது 

தட்டில் பட்ட ரேகைகளும்

மூக்கின் மேலே மூகாமிடும் கோபங்களும் ஓ...

தித்திக்குதே... தித்திக்குதே... 

தித்திக்குதே... தித்திக்குதே... 



அன்பே உன் புன்னகை கண்டு 

எனக்காக தான் என்று

இரவோடு நான் எரிவதும்

பகலோடு நான் உறைவதும்


நீ வாழும் அறைதனில் நின்று 

உன் வாசம் நாசியில் உண்டு

நுரையிரல் பூ மலர்வதும் 

நோய் கொண்டு நான் அழுவதும்


ஆக்கம் பக்கம் நோட்டம் விட்டு 

ஆளை தின்னும் பார்வைகளும்

நேரில் கண்டு உண்மை சொல்ல 

நெஞ்சில் முட்டும் வார்த்தைகளும்

மார்பை சுடும் தூரங்களில் சுவாசங்களும்


தித்திக்குதே... தித்திக்குதே... 

தித்திக்குதே... தித்திக்குதே... 

தித்திக்குதே... தித்திக்குதே... 

தித்திக்குதே... நா நா நா நா நா...

தித்திக்குதே... தித்திக்குதே... 

தித்திக்குதே... நா நா நா நா நா...


Thursday, May 12, 2022

Iravin Nizhal - Maayava Thooyava

 படம் : இரவின் நிழல் (2022)

இசை : A.R.ரஹ்மான்

பாடியவர்கள் : ஸ்ரேயா கோஷல்

பாடல்வரிகள்: மதன் கார்க்கி




ஆஆஆ... ஆஆ... ஆ...ஆ......

ஆஆஆ... ஆஆ... ஆ...ஆ......

ஆஆ... ஆஆஆ... 

ஆ...... ஆ... 


மாயவா தூயவா மலர் சூட வா

மழையாகி எனில் வீழ வா

மாதவா யாதவா குழல் ஊதவா

இதழோடு இசையாக வா


உன் மார்பே என் மாகாணம்

உன் பார்வை என் பூங்கானம்

எந்தன் வாயில் தீந்தேன் ஊறுதே

என் நாவா... உன் நாவா... கண்ணா வா...


மாயவா தூயவா மலர் சூட வா

மழையாகி எனில் வீழ வா...



 ஆ... ஆ...ஆரா 

ஆஆஆ.... 

ஆஆஆஆநா... ஆநா...

ஆஆஆ... ஆஆஆ...


பூக்களை கோர்க்கின்ற சரங்களிலே

ஏக்கங்கள் கோர்திவள் காத்திருக்க

யாக்கையில் அணிந்திட வா...

ஆநிரை தூங்கிடும் இரவினிலே

அதிராமல் ஆடிட வா...

உதிராமல் சூடிட வா...


மாயவா தூயவா மலர் சூட வா

மழையாகி எனில் வீழ வா...

மாதவா யாதவா குழல் ஊதவா

இதழோடு இசையாக வா


உன் மார்பே என் மாகாணம்

உன் பார்வை என் பூங்கானம்

எந்தன் வாயில் தீந்தேன் ஊறுதே

என் நாவா... உன் நாவா... கண்ணா வா...


மாயவா தூயவா மலர் சூட வா

மழையாகி எனில் வீழ வா...

Monday, April 25, 2022

Thavasi - Thanthana Thanthana

 படம் : தவசி (2001)

இசை : வித்யா சாகர்

பாடியவர்கள் : K.J.யேசுதாஸ், சாதனா சர்கம்

பாடல்வரிகள் : பழனி பாரதி





இரு விழி இரு விழி 

இமை கொட்டி அழைக்குது 

உயிர் தட்டி திறக்குது

ரெக்கை கட்டி பறக்குதம்மா

ரெக்கை கட்டி பறக்குதம்மா


இரு மனம் இரு மனம் 

விட்டு விட்டு துடிக்குது

விண்ணை தொட்டு மிதக்குது

வெட்கம் விட்டு இணைந்ததம்மா



தந்தன தந்தன தை மாசம் 

அது தந்தது தந்தது உன்ன தான்


சந்தன சந்தன மல்லி வாசம் 

தேன் சிந்துது சிந்துது இப்ப தான்


என்னது என்னது இந்த நாணம் 

மெல்ல கொல்லுது கொல்லுது என்ன தான்


தொட்டது தொட்டது இப்ப போதும் 

அட மத்தது மத்தது எப்பதான்


ஆத்தாடி ஆத்தாடி

என் நெஞ்சில் காத்தாடி


அய்யா உன் முகம் பார்க்க 

என் கண்ணே கண்ணாடி


தந்தன தந்தன தை மாசம் 

அது தந்தது தந்தது உன்ன தான்


சந்தன சந்தன மல்லி வாசம் 

தேன் சிந்துது சிந்துது இப்ப தான்



ஆண் யாரோ பெண் யாரோ 

தெரிய வேண்டுமா நீ சொல்


யார் மீது யார் யாரோ 

புரிய வேண்டுமா நீ சொல்


என் காது ரெண்டும் கூச 

வாய் சொன்னதென்ன நீ சொல்


அந்த நேரம் என்ன பேச 

அறியாது போனேன் நீ சொல்


ஒரு பூவும் அறியாமல் 

தேன் திருடிய ரகசியம் நீயே சொல்


இனி என்ன நான் செய்ய 

இதழோரம் சொல்வாயா


இடைவேளை நீ தந்து 

இமை தூங்க செல்வாயா


தந்தன தந்தன தை மாசம் 

அது தந்தது தந்தது உன்ன தான்


சந்தன சந்தன மல்லி வாசம் 

தேன் சிந்துது சிந்துது இப்ப தான்



 



ஆகாயம் போதாதே

உனது புகழையும் தீட்ட


அன்பே உன் கண் போதும் 

எனது உயிரையும் பூட்ட


உன் கண்களோடு நானும் 

முகம் பார்த்து வாழ வேண்டும்


உன்னை பார்த்து பார்த்து வாழ 

நக கண்ணில் பார்வை வேண்டும்


உன் கையில் உயிர் வாழ்ந்தேன் 

இது தவமா வரமா புரியவில்லை


உன்னோடு என் சொந்தம் 

ஈரெழு ஜென்மங்கள்


உன் வார்த்தை இது போதும் 

வேண்டாமே சொர்கங்கள்


தந்தன தந்தன தை மாசம் 

அது தந்தது தந்தது உன்ன தான்


சந்தன சந்தன மல்லி வாசம் 

தேன் சிந்துது சிந்துது இப்ப தான்


என்னது என்னது இந்த நாணம் 

மெல்ல கொல்லுது கொல்லுது என்ன தான்


தொட்டது தொட்டது இப்ப போதும் 

அட மத்தது மத்தது எப்பதான்


ஆத்தாடி ஆத்தாடி

என் நெஞ்சில் காத்தாடி


அய்யா உன் முகம் பார்க்க 

என் கண்ணே கண்ணாடி


Wednesday, April 20, 2022

Naatpadu Theral 2 - Rojave Tamil Pesu

 படம் : நாட்படு தேறல் 2.0 (2022)

இசை : ரமேஷ் தமிழ்மணி

பாடியவர்கள் : பாம்பே ஜெயஸ்ரீ

பாடல்வரிகள் : வைரமுத்து





ரோஜாவே தமிழ் பேசு


செடியில் பூத்த நட்சத்திரமே

சிரிப்பில் எழுதிய சித்திரமே


சின்னஞ்சிறு காலம்தான்

நீ வாழ்வது – ஆனால்

காற்றில் ஒரு பெருவாழ்வு

நீயெழுதிப் போவது

எங்ஙனம் உன்னால் ஆனது?


ரோஜாவே தமிழ் பேசு

ரோஜாவே தமிழ் பேசு



வான் கொடுத்தாலும்

விண்மீன் போதும்


மண் கொடுத்தாலும்

மலரொன்று போதும்


கடல் கொடுத்தாலும்

மீன்ஒன்று போதும்


பெரியது எல்லாம்

பெரும்பொருள் இல்லை

சிறியது எல்லாம்

சிறுபொருள் இல்லை


பயன்களைப் பொறுத்தே

பொருள்களின் எல்லை


ரோஜாவே தமிழ் பேசு

ரோஜாவே தமிழ் பேசு



வெயிலுக்குத் தன்னை

விருந்து வைத்தாலும்

முயலுக்கு தாகம்

தீர்த்து வைத்தாலும்


பனித்துளி வாழ்வு 

பூரணமாகும்


தொடங்கிய வாழ்வை

அழகு செய்தாலும்

அடங்கிய வாழ்வை

அமைதி செய்தாலும்


மலர்களின் வாழ்வு

பூரணமாகும்


ரோஜாவே தமிழ் பேசு

ரோஜாவே தமிழ் பேசு


செடியில் பூத்த நட்சத்திரமே

சிரிப்பில் எழுதிய சித்திரமே


சின்னஞ்சிறு காலம்தான்

நீ வாழ்வது – ஆனால்

காற்றில் ஒரு பெருவாழ்வு

நீயெழுதிப் போவது

எங்ஙனம் உன்னால் ஆனது?

Monday, April 18, 2022

Manithan - Aval

 படம் : மனிதன் (2016)

இசை : சந்தோஷ் நாராயணன்

பாடியவர்கள் : ப்ரதீப் குமார், ப்ரியா ஹிமேஷ்

பாடல்வரிகள் : விவேக்


Download this MP3

அவள் குழல் உதிர்த்திடும்

இலை எனை துளைத்திடும்

இடைவெளி முளைத்திடும்

நேரம் உயிர் நனைத்திடும்


அவள் இதழ் திரட்டிடும்

மழை என்னில் தெரித்திடும்

சுழல் என சுழற்றிடும்

நெஞ்சைச் சுருட்டிடும்


அழகழகா 

அவ தெரிவா

உயிர் உரிவா

மெது மெதுவா

விரி விரிவா

விழி எறிவா


எனக்கானவளே நீதான் கிட்ட வறியா

தெரிஞ்சா செஞ்சே மன்னிப்பே கிடையாதா

உடனே என்ன உதறிப்போனா சரியா

இனிமே நானும் உயிரும் அட தனியா


என் சொகமே... என் மொகமே...

எங்கேயோ... தொலைஞ்சவளே...

என் வரமே... என் நிறமே...

ஏழாக வளைஞ்சவளே...



காலம் போகுதே கடிகாரம் ஓடுதே

உன்ன மாத்திக்கும் நேரம் எப்போ

வாதம் பண்ணுனா பிடிவாதம் பண்ணுற

திருந்தாத நான்தான் தப்போ



படபடக்கும் கண்ணால

என மிரட்டிக் கொஞ்சம் மாத்திட்ட

மனசுடைஞ்சு போகாத

உன் விரல் புடிச்சு நானும் கரை ஏறுவேன்


என் சொகமே... என் மொகமே...

எங்கேயோ... தொலைஞ்சவளே...

என் வரமே... என் நிறமே...

ஏழாக வளைஞ்சவளே...


அழகழகா...

அவ தெரிவா...

உயிர் உரிவா...

மெது மெதுவா...

விரி விரிவா...

விழி அறிவா...


உடனே என்ன உதறிப்போனா சரியா

இனிமே நானும் உயிரும் அட தனியா

என் வரமே என் நிறமே...

ஏழாக வளைஞ்சவளே...

Tuesday, March 29, 2022

OK Kanmani - Malargal Kaettaen

 படம் : ஒ... காதல் கண்மனி (2015)

இசை : A.R.ரஹ்மான்

பாடியவர்கள் : K.S.சித்ரா, A.R.ரஹ்மான்

பாடல்வரிகள் : வைரமுத்து






மலர்கள் கேட்டேன் 

வனமே தந்தனை

தண்ணீர் கேட்டேன்

அமிர்தம் தந்தனை

மலர்கள் கேட்டேன்

வனமே தந்தனை

தண்ணீர் கேட்டேன்

அமிர்தம் தந்தனை

எதை நான் கேட்பின் 

ஆ... ஆ... ஆ... ஆ...

எதை நான் கேட்பின்

உனையே தருவாய்

எதை நான் கேட்பின்

உனையே தருவாய்

மலர்கள் கேட்டேன்

வனமே தந்தனை

தண்ணீர் கேட்டேன்

அமிர்தம் தந்தனை

மலர்கள் கேட்டேன்

மலர்கள் கேட்டேன்

மலர்கள் கேட்டேன்

மலர்கள் கேட்டேன்

எதை நான் கேட்பின்

உனையே தருவாய்



மலர்கள் கேட்டேன்

வனமே தந்தனை

தண்ணீர் கேட்டேன்

அமிர்தம் தந்தனை



காட்டில் தொலைந்தேன் 

வழியாய் வந்தனை

இருளில் தொலைந்தேன்

ஒளியாய் வந்தனை

காட்டில் தொலைந்தேன்

வழியாய் வந்தனை

இருளில் தொலைந்தேன்

ஒளியாய் வந்தனை

எதனில் தொலைந்தால்

எதனில் தொலைந்தால் 

நீயே வருவாய்


மலர்கள் கேட்டேன்

வனமே தந்தனை

தண்ணீர் கேட்டேன்

அமிர்தம் தந்தனை



பள்ளம் வீழ்ந்தேன்

சிகரம் சேர்தனை

வெள்ளம் வீழ்ந்தேன்

கரையில் சேர்தனை

பள்ளம் வீழ்ந்தேன்

சிகரம் சேர்ந்தனை

வெள்ளம் வீழ்ந்தேன்

கரையில் சேர்தனை

எதனில் வீழ்ந்தால்...

ஆ... ஆ... ஆ... ஆ...

எதனில் வீழ்ந்தால்

உன்னிடம் சேர்ப்பாய்


மலர்கள் கேட்டேன்

வனமே தந்தனை

தண்ணீர் கேட்டேன்

அமிர்தம் தந்தனை

மலர்கள் கேட்டேன்

வனமே தந்தனை

தண்ணீர் கேட்டேன்

அமிர்தம் தந்தனை

எதை நான் கேட்பின்

ஆ... ஆ... ஆ... 

எதை நான் கேட்பின்

உனையே தருவாய்

உனையே தருவாய்

மலர்கள் கேட்டேன்

வனமே தந்தனை

தண்ணீர் கேட்டேன்

அமிர்தம் தந்தனை

மலர்கள் கேட்டேன்

வனமே தந்தனை

தண்ணீர் கேட்டேன்

அமிர்தம் தந்தனை

Don - Bae

 படம் : டான் (2022)

இசை : அனிருத்

பாடியவர்கள் : ஆதித்யா ஆர். கே.

பாடல்வரிகள் : விக்னேஷ் சிவன்





பே கண்ணால திட்டிடாதே

ஏன்னா பே பழசெல்லாம்

பறந்து போயே போயாச்சே


பே அந்த சிரிப்ப நிறுத்திடாதே

ஏன்னா பே இனி அதுதான்மா

என் வேலைன்னு ஆயாச்சே


இனி நான் உன்னை

என் கண்ணைப்போல

பார்த்துக்கப் போறேன்


துணையா காத்த

அந்த மலையக்கூட

சேர்த்துக்கப் போறேன்


உனக்கு எதுலாம்

ரொம்ப புடிக்கும்னு

தெரிச்சுக்கப் போறேன்


என் பே நீதான்

ன்னு ஊருக்கெல்லாம்

தெரிவிக்கப் போறேன்


அன்பே என் பே நீதானே

எந்தன் அன்பே நீதானே

என் பே என்றால் நீ

எல்லாத்துக்கும் மேலே நீதானே


என் பே என் பே நீதானே

எந்தன் தெம்பே நீதானே

முன்பே முன்பே வந்தாய்

என் பே நீதானே


பே கண்ணால திட்டிடாதே

ஏன்னா பே பழசெல்லாம்

பறந்து போயே போயாச்சே


பே அந்த சிரிப்ப நிறுத்திடாதே

ஏன்னா பே இனி அதுதான்மா

என் வேலைன்னு ஆயாச்சே


இனி நான் உன்னை

என் கண்ணைப்போல

பாத்துக்கப் போறேன்


துணையா காத்த

அந்த மலையக்கோட

சேர்த்துக்கப் போறேன்



உனக்கு எதுலாம்

ரொம்ப புடிக்கும்னு

தெரிச்சுக்கப் போறேன்


என் பே நீதான்

ன்னு ஊருக்கெல்லாம்

தெரிவிக்கப் போறேன்



தள்ளி நீ போனா தேடி வருவேனே

தக்க சமயத்தில் கைய தருவேனே

ஓ... அக்கம் பக்கமா ஆளு இல்லாட்டி

பக்கம் வரலாமே கண்ணே ஒருவாட்டி


புதுசா காதல 

பழகி பாக்குறேன் நல்ல நேரம்

எதுக்கு எடஞ்சலா

மைல் கணக்குல தூரம்


காதல் சின்னமே

உன்னை பாக்கணும்னு கேட்காதா

இங்கே கொண்டு வந்தேனே


அன்பே என் பே நீதானே

எந்தன் அன்பே நீதானே

என் பே என்றால் நீ

எல்லாத்துக்கும் மேலே நீதானே


என் பே என் பே நீதானே

எந்தன் தெம்பே நீதானே

முன்பே முன்பே வந்தாய்

என் பே நீதானே


பே கண்ணால திட்டிடாதே

ஏன்னா பே பழசெல்லாம்

பறந்து போயே போயாச்சே


பே அந்த சிரிப்ப நிறுத்திடாதே

ஏன்னா பே இனி அதுதான்மா

என் வேலைன்னு ஆயாச்சே


இனி நான் உன்னை

என் கண்ணைப்போல

பார்த்துக்கப் போறேன்


துணையா காத்த

அந்த மலையக்கூட

சேர்த்துக்கப் போறேன்


உனக்கு எதுலாம்

ரொம்ப புடிக்கும்னு

தெரிச்சுக்கப் போறேன்


என் பே நீதான்

ன்னு ஊருக்கெல்லாம்

தெரிவிக்கப் போறேன்

Tuesday, March 15, 2022

Mayakirriye - Music Video

 படம் : மயக்கிறியே (2022)

இசை : அனிவீ

பாடியவர்கள் : அனிருத்

பாடல்வரிகள் : அனிவீ





மூக்குத்தி baby cute'ah இருக்கீங்க

கொஞ்சம் பேசிப் பேசி ஆசை காட்டுறீங்க

ஏன் இப்போ நீங்க தள்ளிப் போகறீங்க, ஏங்க?

ஏங்க?...

ஆமா நாங்க கொஞ்சம் local தாங்க

போடுவோமே உங்களுக்கு love song'ah

கேட்டுப்புட்டு நீங்க love பண்ண வாங்க, வாங்க

வாங்க... ஓ-ஓ-ஓ...

வாங்கம்மா சும்மா

ஓ-ஓ-ஓ...

Give me an உம்மா

ஓ-ஓ-ஓ...

I'll make you an அம்மா

ஓ-ஓ-ஓ...


ஹா... ஹா... ஹா...

மயக்கிறியே சிரிக்கிறியே

பாவமா இருந்த heart'ah உடைக்கிறியே

மயக்கிறியே சிரிக்கிறியே

அப்பாவிப் போல என்னைப் பாத்து நடிக்கிறியே

மயக்கிறியே சிரிக்கிறியே

Idea வா love சொன்னா அடிக்கிறியே

மயக்கிறியே சிரிக்கிறியே

என் love'ah நீயும் mop'u வெச்சு தொடக்கிறியே



மயக்கிறியே சிரிக்கிறியே

ஒரு ஓரப் பார்வையாலே வெறுக்கிறியே

தடுக்கிறியே தவிக்கிறியே

ரெண்டு வார்த்தைப் பேசிட்டா மொறைக்குறியே

ஏண்டி? ஏண்டி? அவ்வளவு அழகா இருக்க

பாக்க பாக்க ஆகுறேன்டி நானும் கிறுக்கா...

ஆனா நானும் கொஞ்சம் open'u type'u

நீயும் நானும் சேர்ந்தா மஜாவான vibe'u

Baby I just want you in my life as a wife'u...

Wife'u...

ஆமா நானும் கொஞ்சம் local'u தாண்டி

பின்னாடியே சுத்துவேன்டி பாட்டுப்பாடி

கேட்டுப்புட்டு நீயும் love பண்ண வாடி... வாடி

வாடி... ஓ-ஓ-ஓ...

ஏ pretty lady

ஓ-ஓ-ஓ...

Please join me baby

ஓ-ஓ-ஓ...

நான் ஆகனும் daddy

ஓ-ஓ-ஓ...

வர்லன்னா போடி


மயக்கிறியே... சிரிக்கிறியே...

பாவமா இருந்த heart'ah உடைக்கிறியே

மயக்கிறியே... சிரிக்கிறியே...

அப்பாவிப் போல என்னைப் பாத்து நடிக்கிறியே

மயக்கிறியே... சிரிக்கிறியே...

Idea வா love சொன்னா அடிக்கிறியே

மயக்கிறியே... சிரிக்கிறியே...

என் love'ah நீயும் mop'u வெச்சு தொடக்கிறியே


மயக்கிறியே... சிரிக்கிறியே

மயக்கிறியே... சிரிக்கிறியே

மயக்கிறியே... மயக்கிறியே

சிரிக்கிறியே... சிரிக்கிறியே

மயக்கிறியே... மயக்கிறியே

சிரிக்கிறியே... சிரிக்கிறியே


Sunday, February 27, 2022

Thirumanam Enum Nikkah - Enthaaraa Enthaaraa

 படம் : திருமணம் என்னும் நிக்காஹ் (2014)

இசை : ஜிப்ரான்

பாடியவர்கள் : ஷாதாப் ஃபரிதி, சின்மயி

பாடல்வரிகள் : கார்த்திக் நேத்தா






என்தாரா என்தாரா நீயே என் தாரா

என் மனம் பூத்ததே தாரா

கண்பூரா கண்பூரா நீயேதான் தாரா

கண்ணாரக் காண்கிறேன் பூரா

தண்ணீரை கூசிக் கொண்டு

மெல்ல செல்லும் பிம்பங்கள் நீயாகிறாய்

எதிரே என்னோடு காதல் வந்தே

என்ன சொல்ல வெட்கங்கள் பேசுதே


உன்தாரா உன்தாரா நானே உன்தாரா

என் வானம் பூத்ததே சீரா

கண்பூரா கண்பூரா நீயேதான் வீரா

என் பார்வை ஆனதே கூரா

தண்ணீரை கூசிக் கொண்டு

மெல்ல செல்லும் பிம்பங்கள் நீயாகிறாய்

எதிரே என்னோடு காதல் வந்து

என்ன சொல்ல வெட்கங்கள் பேசுதே



ஏனோ இன்று ஏனோ

நா.....ன் உந்தன் நானோ

நீயோ இல்லை நானோ

நா....ம் என்னும் நாமோ


தூண்டிலா..... நீ ஊஞ்சலா


தூரலா நீ..... காணலா


ப்ரேத்யேக மௌனம் நீ கொண்டு வந்தாய் 

என் வார்த்தை ஆனதே

இல்லாத ஊரில் இல்லாத பேரில்

நம் காதல் வாழுமே 


ஒய் நம் காதல் வாழுமே



உன் அசைவினில் என் திசைகளை 

பட படவென தந்தாய்

மின்மினிகளை உன் விழிகளில் கொண்டாய்

கண் இமைகளில் என் இரவினை

கத கதப்புடன் தந்தாய்

கண் அவிழ்கையில் வெண்ணிலவொளி தந்தாய்


பிரம்மாண்ட காலம் நீ தந்து சென்றாய்

என் நாட்கள் தீர்ந்ததே

உன் பாத சூட்டில் என் காதல் பூக்கும்

நம் தேடல் தீருமே.....



என்தாரா என்தாரா நீயே என் தாரா

என் மனம் பூத்ததே தாரா

கண்பூரா கண்பூரா நீயேதான் தாரா

கண்ணாரக் காண்கிறேன் தாரா


தண்ணீரை கூசிக் கொண்டு

மெல்ல செல்லும் பிம்பங்கள் நீயாகிறாய்

எதிரே என்னோடு காதல் வந்து

என்ன சொல்ல...


வெட்கங்கள் பேசுதே...

Wednesday, February 23, 2022

Galatta Kalyaanam - Kaadhalai Solla Mudiyaadha

 படம்: கலாட்டா கல்யாணம் (2021)

இசை : A.R ரஹ்மான்

பாடியவர்கள் : யஷின் நிஷார், சாஷா த்ரிபதி

பாடல்வரிகள்: கபிலன்





காதல் போயின் காதல்

யாதும் உன் ஆளாதோ

கனவே கனவே

கண்ணை கடனாக தருவாயோ

அடியே அடியே


உயிரினை காதல் தாங்காதா

ஒரு விழியாவது தூங்காதா

மொழி இருந்தும் வழி இருந்தும்

என் காதலை சொல்ல முடியாதா


ஒரு விழி இன்பம் ஆனதடி

ஒரு விழி வன்மம் ஆனதடி

மின்சாரம் ரீங்காரம்

இரண்டுக்கும் நடுவே தவித்தேனே


வாசம் அது வாசம் வீசுதடி

வாசம் அது வாசம் வீசுதடி



உன் கண்கள்

கண்ணாடி ஆனால்

கண்ணின் முன்னே

என்னை காண கூடாதா


ஆகாயம் தேடி

நான் போக மாட்டேன்

வீட்டோடு வெண்ணிலா நீதானே


மயில் தோகையோ

என் கை ரேகையாய்

சேரும் வரை சேர்ந்திருப்பேன்


இவள் ஒரு காதல் அழகா நீ

இரு விழி தாயின் மொழியா நீ

உன் மடியில் நான் தினமும்

ஒரு புல்லின் மீது பனியானேன்


ஆருயிர் உன்னை மறவேனே

யாரிடம் என்னை தருவேனே

நீயே சொல் நீயே சொல்

ஒரு மின்மினி இல்லா இரவானேன்


வாசம் அது வாசம் வீசுதடி

வாசம் அது வாசம் வீசுதடி

Galatta Kalyanam - Murali Mogha

படம்: கலாட்டா கல்யாணம் (2021)

இசை : A.R ரஹ்மான்

பாடியவர்கள் : ஹரிச்சரன் சேஷாத்ரி, K.S. சித்ரா

பாடல்வரிகள்: ரோகினி





தக திமித்த திமித்த மதி சரிய சரிய 

சதிராட்டம் இட்டு போனானே

ஒரு சிமிட்டு சிமிட்டி ஒரு கணத்தில் 

அனைத்து மறு கணத்தில் நண்பனானவனே

அவன் நீல வண்ண கார் மேக கண்ணன் போல் 

பூத்ததிந்த சிறு மயிலின் நெஞ்சம் 

அடி அங்கம் எங்கும் சச்சரவு நடக்க 

ஒரு உறவு வேண்டி உத்தரவு தருமா அவள் இதழ்கள்


முரளி மோஹா குழலிசையிலே

முரளி மோஹா குழலிசையிலே

முரளி மோஹா குழலிசையிலே


என் நேச சுவாசமே இசைந்து

என் நேச சுவாசமே இசைந்து தருவாய்

காதலின் காதலின் மோகத்தின் வரம்


முரளி மோஹா குழலிசையிலே

முரளி மோஹா குழலிசையிலே

முரளி மோஹா குழலிசையிலே


ஆஹ்...


பறந்தோம் நீயும் நானும் 

துளி வானம் ஆனோமே

பிரிவோம் நாம் மெய் எனில் 

உயிர் நீங்கும் நீங்குமே

உன் அங்கம் அங்கம் தரும் அந்தரங்கம் 

அதில் மயங்குதே விழி கலங்குதே

உன் அங்கம் அங்கம் தரும் அந்தரங்கம் 

அதில் மயங்குதே விழி கலங்குதே


உன் அங்கம் அங்கம் தரும் அந்தரங்கம் 

அதில் மயங்குதே விழி கலங்குதே

பறந்தோம் நீயும் நானும் 

துளி வானம் ஆனோமே

பிரிவோம் நாம் மெய் எனில் 

உயிர் நீங்கும் நீங்குமே

உன் அங்கம் அங்கம் தரும் அந்தரங்கம் 

அதில் மயங்குதே விழி கலங்குதே

உன் அங்கம் அங்கம் தரும் அந்தரங்கம் 

அதில் மயங்குதே விழி கலங்குதே



நம்மில் உன்னை கண்டு உன்மத்தம் ‍‍‍- உன்மத்தம்

காற்றில் நீருக்குள்ள தன்மத்தம் ‍- தன்மத்தம்

எண்ணில் உன்னை கண்டு உன்மத்தம்


பார்வைகள் மீர பந்தம் என்று தந்த ஆதாரம் ‍ - ஆதாரம்

வாழ்வை வெட்டி போகாதே பார்வை பறிக்காதே

இதயம் நனையும் உன் விழிகளிலே

உயிர் ஓவியம் ‍ உயிர் ஓவியம்

பாதை எங்கே போனாலும் நீ வேண்டும்


உன் அங்கம் அங்கம் தரும் அந்தரங்கம் 

அதில் மயங்குதே விழி கலங்குதே

உன் அங்கம் அங்கம் தரும் அந்தரங்கம் 

அதில் மயங்குதே விழி கலங்குதே

உன் அங்கம் அங்கம் தரும் அந்தரங்கம் 

அதில் மயங்குதே விழி கலங்குதே

உன் அங்கம் அங்கம் தரும் அந்தரங்கம் 

அதில் மயங்குதே விழி கலங்குதே


முரளி மோஹா குழலிசையிலே

முரளி மோஹா குழலிசையிலே

முரளி மோஹா குழலிசையிலே


என் நேச சுவாசமே இசைந்து

என் நேச சுவாசமே இசைந்து தருவாய்

காதலின் காதலின் மோகத்தின் வரம்


முரளி மோஹா குழலிசையிலே

முரளி மோஹா குழலிசையிலே

முரளி மோஹா குழலிசையிலே

Saturday, February 19, 2022

Mudhal Nee Mudivum Nee - Mudhal Nee

படம்: முதல் நீ முடிவும் நீ (2022)
இசை : தர்புகா சிவா
பாடியவர்கள் : சித் ஸ்ரீராம் மற்றும் தர்புகா சிவா
பாடல்வரிகள்: தாமரை




ஆ... ஆ... ஆ... ஆ...
ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ
ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ 
ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ
ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ
ஆ... ஆ... ஆ... ஆ...


முதல் நீ முடிவும் நீ
மூன்று காலம் நீ
கடல் நீ கரையும் நீ
காற்று கூட நீ

மனதோரம் ஒரு காயம்
உன்னை எண்ணாத நாள் இல்லையே
நானாக நானும் இல்லையே

வழி எங்கும் பல பிம்பம்
அதில் நான் சாய தோள் இல்லையே
உன் போல யாரும் இல்லையே

தீரா நதி நீதானடி
நீந்தாமல் நான் மூழ்கி போனேன்
நீதானடி வானில் மதி
நீயல்ல நான்தானே தேய்ந்தேன்

பாதி கானகம்
அதில் காணாமல் போனவன்
ஒரு பாவை கால் தடம்
அதை தேடாமல் தேய்ந்தவன்

காணாத பாரம் என் நெஞ்சிலே
துணை இல்லா நான் அன்றிலே
நாளெல்லாம் போகும் ஆனால் நான்
உயிர் இல்லாத உடலே


ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ
ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ


முதல் நீ முடிவும் நீ
மூன்று காலம் நீ
கடல் நீ கரையும் நீ
காற்று கூட நீ


தூர தேசத்தில்
தொலைந்தாயோ கண்மணி
உனை தேடி கண்டதும்
என் கண்ணெல்லாம் மின்மினி

பின்னோக்கி காலம் போகும் எனில்
உன் மன்னிப்பை கோருவேன்
கண்ணோக்கி நேராய் பார்க்கும் கணம்
பிழை எல்லாமே கலைவேன்

ஆ... ஆ... ஆ... ஆ...
ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ
ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ 
ஆ... ஆ... ஆ... ஆ...
ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ
ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ 


முதல் நீ முடிவும் நீ
மூன்று காலம் நீ
கடல் நீ கரையும் நீ
காற்று கூட நீ

நகராத கடிகாரம்
அது போல் நானும் நின்றிருந்தேன்
நீ எங்கு சென்றாய் கண்ணம்மா
அழகான அரிதாரம்
வெளிப்பார்வைக்கு பூசி கொண்டேன்
புன்னைகைக்கு போதும் கண்ணம்மா

நீ கேட்கவே என் பாடலை
உன் ஆசை ராகத்தில் செய்தேன்
உன் புன்னகை பொன் மின்னலை
நான் கோர்த்து ஆங்காங்கு நெய்தேன்

ஆ... ஆ... ஆ... ஆ...
ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ
ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ 

முதல் நீ...
முடிவும் நீ...

Popular Posts