Showing posts with label Jai. Show all posts
Showing posts with label Jai. Show all posts

Sunday, February 27, 2022

Thirumanam Enum Nikkah - Enthaaraa Enthaaraa

 படம் : திருமணம் என்னும் நிக்காஹ் (2014)

இசை : ஜிப்ரான்

பாடியவர்கள் : ஷாதாப் ஃபரிதி, சின்மயி

பாடல்வரிகள் : கார்த்திக் நேத்தா






என்தாரா என்தாரா நீயே என் தாரா

என் மனம் பூத்ததே தாரா

கண்பூரா கண்பூரா நீயேதான் தாரா

கண்ணாரக் காண்கிறேன் பூரா

தண்ணீரை கூசிக் கொண்டு

மெல்ல செல்லும் பிம்பங்கள் நீயாகிறாய்

எதிரே என்னோடு காதல் வந்தே

என்ன சொல்ல வெட்கங்கள் பேசுதே


உன்தாரா உன்தாரா நானே உன்தாரா

என் வானம் பூத்ததே சீரா

கண்பூரா கண்பூரா நீயேதான் வீரா

என் பார்வை ஆனதே கூரா

தண்ணீரை கூசிக் கொண்டு

மெல்ல செல்லும் பிம்பங்கள் நீயாகிறாய்

எதிரே என்னோடு காதல் வந்து

என்ன சொல்ல வெட்கங்கள் பேசுதே



ஏனோ இன்று ஏனோ

நா.....ன் உந்தன் நானோ

நீயோ இல்லை நானோ

நா....ம் என்னும் நாமோ


தூண்டிலா..... நீ ஊஞ்சலா


தூரலா நீ..... காணலா


ப்ரேத்யேக மௌனம் நீ கொண்டு வந்தாய் 

என் வார்த்தை ஆனதே

இல்லாத ஊரில் இல்லாத பேரில்

நம் காதல் வாழுமே 


ஒய் நம் காதல் வாழுமே



உன் அசைவினில் என் திசைகளை 

பட படவென தந்தாய்

மின்மினிகளை உன் விழிகளில் கொண்டாய்

கண் இமைகளில் என் இரவினை

கத கதப்புடன் தந்தாய்

கண் அவிழ்கையில் வெண்ணிலவொளி தந்தாய்


பிரம்மாண்ட காலம் நீ தந்து சென்றாய்

என் நாட்கள் தீர்ந்ததே

உன் பாத சூட்டில் என் காதல் பூக்கும்

நம் தேடல் தீருமே.....



என்தாரா என்தாரா நீயே என் தாரா

என் மனம் பூத்ததே தாரா

கண்பூரா கண்பூரா நீயேதான் தாரா

கண்ணாரக் காண்கிறேன் தாரா


தண்ணீரை கூசிக் கொண்டு

மெல்ல செல்லும் பிம்பங்கள் நீயாகிறாய்

எதிரே என்னோடு காதல் வந்து

என்ன சொல்ல...


வெட்கங்கள் பேசுதே...

Monday, January 17, 2022

Vaamanan - Oru Devathai

படம்: வாமனன் (2009)
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர்கள் : ரூப் குமார் ரதோட்
பாடல்வரிகள்: நா.முத்து குமார்





ஒரு தேவதை பார்க்கும் நேரமிது 
மிக அருகினில் இருந்தும் தூரம் இது 
இதயமே ஓ... இவளிடம் ஓ...
உருகுதே ஓ
ஹோ...ஓ... ஓ...
இந்த காதல் நினைவுகள் தாங்காதே 
அது தூங்கும் 
போதிலும் தூங்காதே 
பார்க்காதே ஓ... என்றாலும் ஓ...
கேக்காதே 
ஹோ...ஓ... ஓ...


என்னை என்ன செய்தாய் பெண்ணே 
நேரம் காலம் மறந்தேனே
கால்கள் இரண்டும் தரையில் இருந்தும் 
வானில் பறக்கிறேன்
என்னவாகிறேன் எங்கு போகிறேன் 
வழிகள் தெரிந்தும் தொலைந்து போகிறேன்...
காதல் என்றால் 
ஹோ...ஓ... பொல்லாதது
புரிகின்றது ஹோ...ஓ... ஓ...


ஹோ...ஓ... ஓ...
கண்கள் இருக்கும் காரணம் என்ன 
என்னை நானே கேட்டேனே
உனது அழகை காண தானே 
கண்கள் வாழுதே 
மரண நேரத்தில் உன் மடியின் ஓரத்தில் 
இடமும் கிடைத்தால் இறந்தும் வாழுவேன்...
உன் பாதத்தில் 
முடிகின்றதே 
என் சாலைகள் ஹோ...ஓ... ஓ...
இந்த காதல் நினைவுகள் தாங்காதே 
அது தூங்கும் போதிலும் தூங்காதே 

ஒரு தேவதை பார்க்கும் நேரமிது...
மிக அருகினில் இருந்தும் தூரமிது

Thursday, November 1, 2018

Party - Kodi Mangani

ப‌டம் : பார்ட்டி (2018)
இசை : பிரேம்ஜி அமரன்
பாடியவர்கள் :  S.P.பாலசுப்ரமணியம், K.S.சித்ரா
பாடல்வரிகள் : கங்கை அமரன்

Image result for party tamil movie



ஹே... கொடி மாங்கனி புது தேன்கனி
பறித்தேனே எந்தன் செல்லமோகினி

நீ தொடலாம் இனி குண்டு மாங்கனி
நிறுத்தாமல் பாடு இன்பலாவினி

வானவில் பெண்ணை போல் ஆனதே
வந்து தான் கொஞ்சி பேசுதே
தேன் நிலா நேரிலே தோனுதே
ஹே... தேகமே தேய்ந்து போகுதே

பூமியோ சொர்க்கம் போல் மாறுதே
போதையோ மேலும் ஏறுதே
வானிலை மாற்றமாய் போனதே
வாழ்க்கையே வாழ்ந்து காட்டுதே

ஹே கொடி மாங்கனி புது தேன்கனி
பறித்தேனே எந்தன் செல்லமோகினி

நீ தொடலாம் இனி குண்டு மாங்கனி
நிறுத்தாமல் பாடு இன்பலாவினி


ஹே... 
தேடி வந்த தேடல் இன்று தீர்ந்து போனதே
தேகம் எங்கும் ஊறுகின்றதே

கூடி வந்த ஊடல் கண்டு கூச்சம் போகுதே
கோடி மின்னல் தோன்றுகின்றதே

ஆ... அச்சமும் நாணமிட்டு ஓடுதே
ஆவலும் கூடி போனதே
மிச்சமும் மீதமின்றி போகுதே
மேனியோ உச்சம் காணுதே

ஹா... தேவியின் தேகம் வீணையானதே
நாதங்கள் தேடுகின்றதே
தேகமோ பூமி போல வீங்குதே
தேவைகள் தீர்ந்து போனதே

தேய்பிறை தீர்ந்ததே
தேகமோ பந்து போல மாறுகின்றதே

ஹே கொடி மாங்கனி புது தேன்கனி
பறித்தேனே எந்தன் செல்லமோகினி

நீ தொடலாம் இனி குண்டு மாங்கனி
நிறுத்தாமல் பாடு இன்பலாவினி

வானவில் பெண்ணை போல் ஆனதே
வந்து தான் கொஞ்சி பேசுதே
தேன் நிலா நேரிலே தோனுதே
தேகமே தேய்ந்து போகுதே

பூமியோ சொர்க்கம் போல் மாறுதே
போதையோ மேலும் ஏறுதே
வானிலை மாற்றமாய் போனதே
வாழ்க்கையே வாழ்ந்து காட்டுதே

ஹே கொடி மாங்கனி புது தேன்கனி
பறித்தேனே எந்தன் செல்லமோகினி

நீ தொடலாம் இனி குண்டு மாங்கனி
நிறுத்தாமல் பாடு இன்பலாவினி

Friday, November 13, 2015

Raja Rani - Unnale Mei

படம்: ராஜா ராணி (2013)
இசை: G.V.பிரகாஷ்

பாடியவர்கள்: வந்தனா  ஸ்ரீனிவாசன்
பாடல்வரிகள்: நா.முத்துக்குமார்







உன்னாலே மெய் மறந்
து நின்றேனே

மை விழியில் மையலுடன் வந்தேனே
இடைவிடாத நெருக்கங்கள் தொடருமா உயிரே
மொழி இல்லாமல் தவிக்கிறேன் மெளனமாய் இங்கே...
ந... ர... ரே... நரரர...ந... ர... ரே...
உன் தோளில் சாய்ந்து கொள்ள வந்தேனே

இது போதும் ஒஹோ... ஒஹோ...  ஒஹோ... 
எப்போதும் ஒஹோ... ஒஹோ... ஒஹோ... 

Saturday, November 1, 2014

Thirumanam Enum Nikkah - Chillendra Chillendra

படம் : திருமணம் என்னும் நிக்காஹ் (2014)
இசை : ஜிப்ரான் 
பாடியவர்கள் : சுந்தர் நாராயன ராவ் - கௌஷிகி சக்ரபர்டி -
                         முன்னா சௌகத் அலி -  ஜிப்ரான்
பாடல்வரிகள் : காதல்மதி - முன்னா சௌகத் அலி





ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... 
யா மெரே மோலா 
ஷுகுரு ஹே தேரா
யா மெரே மோலா 
ஷுகுரு ஹே தேரா

சில்லென்ற சில்லென்ற காற்றிலே
சிறகை விரித்தேனே

சில்லென்ற சில்லென்ற காற்றிலே
சிறகை விரித்தேனே
மெஹந்தி வரைந்த வானிலே
தேடி அலைந்தேனே

ஹமாரே திலோங்கா ஹே கெஹெனா

நேசத்தின் சாரல்கள் தூவத் தூவ

தேரி பியாரி அதாஏ தேரா பாங்க் பன்   
க்யா பாத் ஹே வல்லா

வானில் உதிர்ந்த இறகொன்று 
காற்றின் கன்னங்களில் 
கவிதை எழுதியதே

சில்லென்ற சில்லென்ற காற்றிலே
சிறகை விரித்தேனே
சிறகை விரித்தேன் 
தேடி அலைந்தேன்... ஓ.. ஓ.. ஓஓஓ...

யா மெரே மோலா 
ஷுகுரு ஹே தேரா
யா மெரே மோலா 
ஷுகுரு ஹே தேரா
ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... 


கர்தேஷே துனியா...
சுற்றிடும் உலகம் 
சுழலும் ஓசையும்
காதில் கேட்குமா

மௌனத்தின் வெளியில் 
ஓம்கார ஒலியும்
ஆமீனும் கேட்குமே

உன் மூச்சு நின்றாலும் 
உன்னைத் தான் நீங்காத சொந்தம் எது

கண் மூடிப் போனாலும் 
உன்னோடு சாய்கின்ற நிழல் தானது

என்னைப் போல் பெண் ஒன்று
அச்சாக இன்னொன்று கண்டேனே நான் 
இன்று யாரென்று சொல்

தாயா... உன் சேயா...

நேசத்தை சொல்ல 
வார்த்தை வசப்படுமா

சில்லென்ற சில்லென்ற காற்றிலே
சிறகை விரித்தேனே

மெஹந்தி வரைந்த வானிலே
பாடிப் பறந்தேனே


இரண்டு வானம் விண்மீன் கூட்டம்
வட்ட நிலா என்ன?

ஏழை ஒருவன் கந்தல் குடை போல்
தொலைந்த என் மனம்

ஆ... மெல்லிய வெப்பத்தில் மேகத்தின் குளிர்சியின்
சலனம் தான் என்ன?

சட்டென்று தூவிடும் நட்பென்னும் பூ மழை
சாரலே அது

எல்லாமே நீயாக எண்ணத்தில் பூவாக
சொல்லாத சொல்லொன்று என்னென்று சொல்

பாசமா... நேசமா...

மெஹபூபு மேரா ஹோ 
பொஹத்து கூபு சஜ்னா...  
வாழ்வே உன்னோடு   
என்னுடன் இணைந்திட வா

இனி எல்லாம் நீ தான் 
நீயே நான் தான்

ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... 
யா மெரே மோலா 
ஷுகுரு ஹே தேரா

சில்லென்ற சில்லென்ற காற்றிலே
சிறகை விரித்தேனே
சிறகை விரித்தேனே 
பாடிப் பறந்தேனே

யா மெரே மோலா 
ஷுகுரு ஹே தேரா
யா மெரே மோலா 
ஷுகுரு ஹே தேரா
ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... 


Friday, October 31, 2014

Thirumanam Enum Nikkah - Kannukkul Pothivaippen

படம் : திருமணம் என்னும் நிக்காஹ்
இசை : ஜிப்ரான்
பாடியவர்கள் : சாருலதா மணி, சாதனா சர்கம், கணேஷ், விஜய் பிரகாஷ்
பாடல்வரிகள் : பார்வதி




கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்
என் செல்ல கண்ணனே வா!
த்தித்தி ததை ஜதிக்குள்
என்னோடு ஆட வா வா!
அடிக் கடி உன்னை பிடிக்க நான் மன்றாடிட
இடப் புறம் விரல் மடக்கி நீ டு காட்டிட
என் கண்ணனே வாடா வா!
விஷம கண்ணனே வாடா வா!
கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்
என் செல்ல கண்ணனே வா!
த்தித்தி ததை ஜதிக்குள்
என்னோடு ஆட வா வா!

அடிக் கடி உன்னை பிடிக்க நான் மன்றாடிட
இடப் புறம் விரல் மடக்கி நீ டு காட்டிட

என் கண்ணனே வாடா வா!
விஷம கண்ணனே வாடா வா!


சிறு சிட்டிகை பாசம்
பெரும் கடலாய் மாற
மணித்துளி எல்லாமே
அரை நொடிக்குள் தீர

மழை தரையாய் உள்ளம்
பிசுபிசிப்பை பேண
எதற்கடி திண்டாட்டம்
கதகதப்பைக் காண !

நீ ராதே இனம்
சொல்லாமல் சொன்னாயே

செங்கோதை மனம்
உன் பேச்சில் தந்தாயே
உன்னாலே… யோசிக்கிறேன்…

உன் விரலை பிடித்து நடக்கும் நிமிடம் யாசிக்கிறேன்!

கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்
என் செல்ல கண்ணனே வா!
த்தித்தி ததை ஜதிக்குள்
என்னோடு ஆட வா வா!
அடிக் கடி உன்னை பிடிக்க நான் மன்றாடிட
இடப் புறம் விரல் மடக்கி நீ டு காட்டிட
என் கண்ணனே வாடா வா!
விஷம கண்ணனே வாடா வா!


உயிர் எதையோ தேடும்
மனம் அதையே நாடும்
தனித்தனியே ரெண்டும்
ஒரு வழியில் ஓடும்

எது எதற்கோ பொய்கள்
எதிர் எதிராய் மெய்கள்
எது எதுவாய் ஆகும்
விடை கடந்தே போகும்!

கண்ணாடி முனைப் போல்
எண்ணங்கள் கூராய்

முன் இல்லாததை போல்
எல்லாமே வேறாய்
உன்னாலே… பூரிக்கிறேன்…

உன் சிரிப்பு சரத்தில் மகிழ மரத்தில் பூ தைக்கிறேன்!

கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்
என் செல்ல கண்ணனே வா!
த்தித்தி ததை ஜதிக்குள்
என்னோடு ஆட வா வா!

அடிக் கடி உன்னை பிடிக்க நான் மன்றாடிட

இடப் புறம் விரல் மடக்கி நீ டு காட்டிட

என் கண்ணனே வாடா வா!
விஷம கண்ணனே வாடா வா!


Wednesday, October 10, 2012

எங்கேயும் எப்போதும் - சொட்ட சொட்ட



படம்: எங்கேயும் எப்போதும் (2011)
இசை: C சத்யா
பாடியவர்கள்: சத்யா, சின்மயி
பாடல் வரிகள்: நா. முத்துக்குமார்








சொட்ட சொட்ட நனைய வைத்தாய்
சொல்லாமல் கொதிக்க வைத்தாய்
எட்டாத இடத்தில் என் நெஞ்சை பறக்க வைத்தாய்
கிட்ட தட்ட கரைய வைத்தாய்
கிட்டாமல் அலைய வைத்தாய்
திட்டாமல் திட்டித் தான் உன் காதல் உணர வைத்தாய்
ரயில் வரும் பாலமாய் ஐயோ எந்தன் இதயம்
தட தட தடவென துடிக்க

நீ ஒரு நாள் ஒருநாள் விதையாய் வந்து விழுந்தாய் கண்ணுக்குள்ளே
விழி பார்க்கும் போதே மரமாய் இன்று எழுந்தாய் நெஞ்சுக்குள்ளே
அட இனி என்ன நடக்கும்... மனம் நடந்ததை நடிக்கும்...
ஒரு குட்டிப்பூனை போல காதல் எட்டிப் பார்க்குதே
அது அச்சம் மடம் நாணம் எல்லாம் தட்டிப் பார்க்குதே
பார்க்குதே... பார்க்குதே.. தோற்குதே

அந்த கடவுள் அடடா ஆண்கள் நெஞ்சை மெழுகில் செய்தானடி
அது ஒவ்வொரு நொடியும் பெண்ணை கண்டால் உருகிட வைத்தானடி
இந்த மௌனத்தின் மயக்கம்... ரொம்ப பிடிக்குது எனக்கும்...
உன் பேச்சும் மூச்சும் என்னைத் தாக்கி விட்டுச் சென்றதே
நீ விட்டுச் சென்ற ஞாபகங்கள் பற்றிக் கொண்டதே
கொண்டதே... கொண்டதே... வென்றதே

சொட்ட சொட்ட நனைய வைத்தாய்
சொல்லாமல் கொதிக்க வைத்தாய்
எட்டாத இடத்தில் என் நெஞ்சை பறக்க வைத்தாய்

Thursday, August 4, 2011

கோவா - காதல் என்றால்

படம்: கோவா (2010)
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: யுவன் ஷங்கர் ராஜா
பாடல் வரி : கங்கை அமரன்









இதுவரை இல்லாத உணர்விது
இதயத்தை துண்டாக்கும் நினைவிது
மனதினை மண்ணோடு புதைத்திடும்
பெண்ணை நம்பாதே


காதல் என்றால் அத்தனையும் கனவு
கண் மூடியே வாழ்கின்ற உறவு
பெண்கள் என்றால் ஆணை கொல்லும்
நோய் ஆனதே


ஐயோ இந்த இளமையின் தொடக்கம்
இன்றே முற்றுப்புள்ளி
அதை சொல்லாமல் சொல்லி
நம்மை பைத்தியமாக்கும்
பெண்ணைத் தேடி தொலையாதே

Friday, August 13, 2010

Subramaniapuram - Kangal Irandal

படம் : சுப்பிரமணியபுரம் (2008)
இசை : ஜேம்ஸ் வசந்தன்
பாடியவர்கள்: பெல்லி ராஜ், தீபா மரியம்
பாடல்வரிகள் : யுகபாரதி

Another Subramaniapuram on its way (With images) | Bollywood ...  

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னைத் தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னைத் தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்



பேச எண்ணி சில நாள்
அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான்
நினைத்தே நகர்வேன் ஏமாற்றிக்
கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ணக் கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே




இரவும் அல்லாத பகலும் அல்லாத
பொழுதுகள் உன்னோடு கழியுமா?
தொடவும் கூடாத படவும் கூடாத
இடைவெளி அப்போது குறையுமா?

மடியினில் சாய்ந்திட துடிக்குதே
மறுபுறம் நாணமும் தடுக்குதே
இது வரை யாரிடமும் சொல்லாத கதை



கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னைத் தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்


கரைகள் அண்டாத, காற்றும் தீண்டாத,
மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய்?
உடலும் அல்லாத உருவம் கொள்ளாத
கடவுளைப் போல் வந்து கலந்திட்டாய்


உனையன்றி வேறொரு நினைவில்லை
இனி இந்த ஊனுயிர் எனதில்லை
தடையில்லை சாவிலுமே உன்னோடு வர



கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ணக் கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே


பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான்
நினைத்தே நகர்வேன் ஏமாற்றி



கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென


சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னைத் தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்


Tuesday, July 27, 2010

Goa - Idhu Varai

படம் : கோவா (2010)
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர் :  அஜீஸ், ஆண்ட்ரியா
பாடல் வரி : கங்கை அமரன்

Goa (Original Motion Picture Soundtrack) by Yuvan Shankar Raja on ...




இதுவரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான கனவிது
பலித்திடும் அந்நாளை தேடிடும்
பாடல் கேட்டாயோ


இதுவரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான கனவிது
பலித்திடும் அந்நாளை தேடிடும்
பாடல் கேட்டாயோ


மூடாமல் மூடி மறைத்தது
தானாக பூத்து வருகுது
தேடாமல் தேடி கிடைத்தது இங்கே
மூடாமல் மூடி மறைத்தது
தானாக பூத்து வருகுது
தேடாமல் தேடி கிடைத்தது இங்கே



இங்கே ஒரு இன்பம் வந்து நிறைய
எப்போது என் உண்மை நிலை அறிய
தாங்காமலும் தூங்காமலும் நாள் செல்லுதே
இல்லாமலே நித்தம் வரும் கனவு கொல்லாமல் கொல்ல
சுகம் என்னென்று சொல்ல
நீ துணை வர வேண்டும்
நீண்ட வழி என் பயணம்


அங்கே அங்கே வந்து வந்து கலக்கும்
வெண்மேகமும் வெண்ணிலவும் போல
எந்தன் மன எண்ணங்களை யார் அறிவார்
என் நெஞ்சமோ உன் போல அல்ல
ஏதோ ஓர் மாற்றம்
நிலை புரியாத தோற்றம்


இது நிரந்தரம் அல்ல
மாறிவிடும் மன நிலை தான்




மனதிலே உள்ளூரும் உணர்வுகள்
மலர்ந்ததே முத்தான உறவுகள்
திறந்ததே தன்னாலே கதவுகள்
நமக்கு முன்னாலே
மனதிலே உள்ளூரும் உணர்வுகள்
மலர்ந்ததே முத்தான உறவுகள்
திறந்ததே தன்னாலே கதவுகள்
நமக்கு முன்னாலே


தேகம் இப்போது உணர்ந்தது
தென்றல் என் மீது படர்ந்தது
மோகம் முன்னேறி வருகுது முன்னே
தேகம் இப்போது உணர்ந்தது
தென்றல் என் மீது படர்ந்தது
மோகம் முன்னேறி வருகுது முன்னே 

Popular Posts