Showing posts with label Nee Varuvai Ena. Show all posts
Showing posts with label Nee Varuvai Ena. Show all posts

Sunday, July 8, 2018

Nee Varuvai Ena - Oru Devathai

ப‌டம் : நீ வருவாய் என (1999)
இசை : S.A. ராஜ்குமார்
பாடியவர் : K.S.சித்ரா






தேவதை வந்துவிட்டாள் உன்னை தேடியே
வண்ண மாலைகள் சூட வந்தாள் தங்க தேரிலே

ஒரு தேவதை வந்துவிட்டாள் உன்னை தேடியே
வண்ண மாலைகள் சூட வந்தாள் தங்க தேரிலே
நூறு நூறு ஜென்மம் வாழ்ந்திருக்க
நூலில் பூவை போல சேர்ந்திருக்க
தீபம் ஏற்றிவைத்து தேரிழுக்க
சேலை சோலை கொண்டு சேர்த்தணைக்க
புன்னகையில் பூப்பறிக்க
ஒரு தேவதை வந்துவிட்டாள் உன்னை தேடியே


பூக்கும் செடியை எல்லாம் சிரிக்கும் பூவை எல்லாம்
உன் பெயரை கேட்டு இருந்தார்
எட்டு திசையும் சேர்த்து ஒற்றை திசையை மாற்றி
உன் வரவாய் பார்த்திருந்தார்
கண்ணுக்குள் கண்ணுக்குள் உன்னை வைத்து
நெஞ்சுக்குள் நெஞ்சுக்குள் அன்பை வைத்து
உள்ளத்தை உள்ளத்தை அள்ளி தந்து
உன்னிடும் உன்னிடும் தன்னை தந்து
உன் நிழலில் வாழ்ந்திருக்க
உன் உயிரில் சேர்ந்திருக்க
ஒரு தேவதை வந்துவிட்டாள் உன்னை தேடியே


கொஞ்சும் கிளியே உன்னை நெஞ்சில் உறங்கசொல்லி
தென்றல் என்னும் பாடிசைப்பார்
நெஞ்சம் நோகும் என்றால் மேகம் கொண்டு வந்து
மெத்தை செய்து பூ விரிப்பார்
வானத்து வானத்து நட்சத்திரம்
வாசலில் வாசலில் புள்ளி வைக்க
வானவில் வானவில் கொண்டு வந்து
வண்ணத்தில் கோலங்கள் இட்டு வைக்க
உள்ளங்கையில் பச்சை குத்தி
உன் பெயரை உச்சரிக்க

ஒரு தேவதை வந்துவிட்டாள் உன்னை தேடியே
வண்ண மாலைகள் சூட வந்தாள் தங்க தேரிலே
நூறு நூறு ஜென்மம் வாழ்ந்திருக்க
நூலில் பூவை போல சேர்ந்திரிக்க
தீபம் ஏற்றிவைத்து தேரிழுக்க
சேலை சோலை கொண்டு சேர்த்தணைக்க
புன்னகையில் பூப்பறிக்க
ஒரு தேவதை வந்துவிட்டாள் உன்னை தேடியே
வண்ண மாலைகள் சூடவந்தாள் தங்க தேரிலே

Monday, February 4, 2013

Nee Varuvai Ena - Parthu Parthu

படம் : நீ வருவாய் என (1999)
இசை : S.A. ராஜ்குமார்
பாடியவர் : S.P.பாலசுப்ரமணியம்





பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன் நீ வருவாயென
பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன் நீ வருவாயென
தென்றலாக நீ வருவாயா ஜன்னலாகிறேன்
தீர்த்தமாக நீ வருவாயா மேகமாகிறேன்
வண்ணமாக நீ வருவாயா பூக்களாகிறேன்
வார்த்தையாக நீ வருவாயா கவிதை ஆகிறேன்

நீ வருவாயென... நீ வருவாயென...

பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன் நீ வருவாயென
பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன் நீ வருவாயென


கரைகளில் ஒதுங்கிய கிளிஞ்சல்கள் உனக்கென தினம்தினம் சேகரித்தேன்
குமுதமும் விகடனும் நீ படிப்பாயென வாசகனாகிவிட்டேன்
கவிதை நூலோடு கோலப் புத்தகம் உனக்காய் சேமிக்கிறேன்
கனவில் உன்னோடு என்ன பேசலாம் தினமும் யோசிக்கிறேன்
ஒரு காகம் காவெனக் கரைந்தாலும் என் வாசல் பார்க்கிறேன்

நீ வருவாயென... நீ வருவாயென...


பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன் நீ வருவாயென
பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன் நீ வருவாயென


எனக்குள்ள வேதனை நிலவுக்கு தெரிந்திடும் நிலவுக்கும் ஜோடியில்லை
எழுதிய கவிதைகள் உனை வந்து சேர்ந்திட கவிதைக்கும் கால்களில்லை
உலகில் பெண்வர்க்கம் நூறு கோடியாம் அதிலே நீ யாரடி
சருகாய் அன்பே நான் காத்திருக்கிறேன் எங்கே உன் காலடி
மணி சரிபார்த்து தினம் வழிபார்த்து இரு விழிகள் தேய்கிறேன்

நீ வருவாயென... நீ வருவாயென...


பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன் நீ வருவாயென
பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன் நீ வருவாயென
தென்றலாக நீ வருவாயா ஜன்னலாகிறேன்
தீர்த்தமாக நீ வருவாயா மேகமாகிறேன்
வண்ணமாக நீ வருவாயா பூக்களாகிறேன்
வார்த்தையாக நீ வருவாயா கவிதை ஆகிறேன்

நீ வருவாயென... நீ வருவாயென...
நீ வருவாயென... நீ வருவாயென...



Saturday, July 9, 2011

Nee Varuvai Ena - Poonkuyil Pattu

படம் : நீ வருவாய் என (1999)
இசை : S.A. ராஜ்குமார்
பாடியவர் : 
ஹரிணி, அருண்மொழி
பாடல் வரி : விவேகா




பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
பூங்காற்றே பிடிச்சிருக்கா
பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கா
பனிக்காற்றே பிடிச்சிருக்கா

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
பூங்காற்றே பிடிச்சிருக்கா
பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கா
பனிக்காற்றே பிடிச்சிருக்கா

சின்ன சின்ன நட்சத்திரம் பிடிச்சிருக்கா
சுத்திவரும் மின்மினிகள் பிடிச்சிருக்கா
அடி கிளியே நீ சொல்லு
வெள்ளி நிலவே நீ சொல்லு

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
பூங்காற்றே பிடிச்சிருக்கா
பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கா
பனிக்காற்றே பிடிச்சிருக்கா


ஜன்னலுக்குள்ளே வந்து கண்ணடிக்கிற
அந்த வெண்ணிலவை பிடிச்சிருக்கா
கண்கள் திறந்து தினம் காத்துக் கிடந்தேன்
என்னை கண்டுக் கொள்ள மனசிருக்கா
இளமனசுக்குள் கனவுகளை
இறக்கி வச்சது நெனப்பிருக்கா
மேகம் கூட்டம் மறைச்சிருக்கே
மீண்டும் சேர வழியிருக்கா
அடி கிளியே நீ சொல்லு
வெள்ளி நிலவே நீ சொல்லு

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
பூங்காற்றே பிடிச்சிருக்கா
பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கா
பனிக்காற்றே பிடிச்சிருக்கா


ஆலமரத்தில் உன் பேரை செதுக்கி
நான் ரசிச்சது பிடிச்சிருக்கா
கொட்டும் மழையில் அந்த ஒற்றை குடையில்
நாம நனைஞ்சது நெனப்பிருக்கா
திறந்திருக்கிற மனசுக்குள்ளே
திருடிச் சென்றது பிடிச்சிருக்கா
வாசப் பூவு பிடிச்சிருக்கா
வாழ்ந்து பார்க்க வழியிருக்கா
அடி கிளியே நீ சொல்லு
வெள்ளி நிலவே நீ சொல்லு

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கு
பூங்காத்தும் பிடிச்சிருக்கு
பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கு
பனிக்காத்தும் பிடிச்சிருக்கு
சின்ன சின்ன நட்சத்திரம் பிடிச்சிருக்கு
சுத்தி வரும் மின்மினிகள் பிடிச்சிருக்கு
அடி கிளியே நீ சொல்லு
வெள்ளி நிலவே நீ சொல்லு

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கு
பூங்காத்தும் பிடிச்சிருக்கு
பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கு
பௌர்ணமியும் பிடிச்சிருக்கு

Popular Posts