Showing posts with label Devayani. Show all posts
Showing posts with label Devayani. Show all posts

Friday, September 14, 2018

Suryavamsam - Natchathira Jannalil

ப‌டம் : சூரியவம்சம் (1997
இசை :  S.A. ராஜ்குமார்
பாடியவர்கள்: மனோ,  சுனந்தா
பாடல்வரிகள்: பழனிபாரதி

Image result for Suryavamsam



நட்சத்திர ஜன்னலில் 
வானம் எட்டிப் பார்க்குது
சிறகை விரித்துப் பறப்போம் 
நம் உறவில் உலகை அளப்போம்
விளையாடலாம் நிலாவிலே 
நிழல் மூழ்குமோ தண்ணீரிலே
வானைப் புரட்டிப்போடு 
புது வாழ்வின் கீதம் பாடு

நட்சத்திர ஜன்னலில் 
வானம் எட்டிப் பார்க்குது
சிறகை விரித்துப் பறப்போம்
நம் உறவில் உலகை அளப்போம்


சித்திரங்களைப் பாடச்சொல்லலாம்
தென்றலை அஞ்சல் ஒன்று போடச்சொல்லலாம்

புத்தகங்களில் முத்தெடுக்கலாம்
பொன்னாடை இமயத்துக்குப் போர்த்திவிடலாம்

பூமிக்குப்பொட்டு வைத்து பாக்கலாம் பாக்கலாம்
பூவுக்கும் ஆடை தைத்துப் போடலாமா

சூரியத்தேரை மண்ணில் ஓட்டலாம் ஓட்டலாம் 
சொர்கத்தின் புகைப்படத்தைக் காட்டலாமா

வானம்பாடி வாழ்விலே 
வருந்தி அழுவதில்லை
வணங்கி விழுவதில்லை

நட்சத்திர ஜன்னலில் 
வானம் எட்டிப் பார்க்குது

சிறகை விரித்துப் பறப்போம் 
நம் உறவில் உலகை அளப்போம்


சங்கீதப்புறா நெஞ்சில் பறக்கும்
சந்தோஷ முல்லை எங்க வீட்டில் முளைக்கும்

சந்தனமழை நம்மை நனைக்கும்
பூந்தென்றல் காதில் சொல்ல வந்து அழைக்கும்

சிட்டுக்குச் சிறகடிக்கச் சொல்லித்தந்ததாரடி
மீனுக்கு நீச்சல் கற்றுத் தந்ததாரோ

மேகத்தில் வீடு கட்டி வாழலாம் வாழலாம்
மின்னலில் கூரை பின்னிப் போடலாமா

ஓங்கும் உந்தன் கைகளால் 
வானைப் புரட்டிப்போடு 
புது வாழ்வின் கீதம் பாடு

நட்சத்திர ஜன்னலில் 
வானம் எட்டிப் பார்க்குது

சிறகை விரித்துப் பறப்போம் 
நம் உறவில் உலகை அளப்போம்

விளையாடலாம் நிலாவிலே 
நிழல் மூழ்குமோ தண்ணீரிலே
வானைப் புரட்டிப்போடு 
புது வாழ்வின் கீதம் பாடு

நட்சத்திர ஜன்னலில் 
வானம் எட்டிப் பார்க்குது
லாலா... லாலா... லாலா... லாலா...

Sunday, July 22, 2018

Moovendhar - Naan Vaanavillaye Parthen

படம் : மூவேந்தர் (1998)
இசை : சிற்பி
பாடியவர்கள் : ஹரிஹரன்
பாடல்வரிகள்: அறிவுமதி

Image result for Moovendhar


ஓஹோ ஹோ... ஓஓஓ... ஹோ...
ஓஹோ ஹோ... ஓஓ... ஹோ...
ஓஹோ ஹோ ஹோ... ஓஹோ ஹோ ஹோ...

நான் வானவில்லையே பார்த்தேன்
அதை காணவில்லையே வேர்த்தேன்
நான் வானவில்லையே பார்த்தேன்
அதை காணவில்லையே வேர்த்தேன்
ஒரு கோடி மின்னலை பார்வை ஜன்னலால்
வீச சொல்லியா கேட்டேன்
இனி நிலவை பார்க்கவே மாட்டேன்
ஓஹோ ஹோ... ஓஓஓ... ஹோ...


கூந்தல் கண்டவுடன் மேகம் வந்ததென்ன மயிலும் நடனமிடுமோ
பூவில் ஆடிவரும் வண்டு இமையில் விழ‌ கண்கள் ஆகிவிடுமோ
தேடி தின்று விட ஆசை கிள்ளுதடி தேனில் செய்த இதழோ
மூடி வைத்த முயல் மூச்சு முட்டுதடி மீட்க என்ன வழியோ
பகல் நேரம் நிலவை பார்த்தது நானடி கண்ணம்மா
முந்தானை வாசம் வந்தது ஆறுதல் சொல்லம்மா
விழி கண்டவர் கண்டிட கெஞ்சுது நெஞ்ச‌து கொஞ்சம் நில்லம்மா

நான் வானவில்லையே பார்த்தேன்
அதை காணவில்லையே வேர்த்தேன்
ஒரு கோடி மின்னலை பார்வை ஜன்னலால்
வீச சொல்லியா கேட்டேன்
இனி நிலவை பார்க்கவே மாட்டேன்


சேலை சூடி ஒரு சோலை போல வழி பூக்கள் சிந்தி விழுமோ
பாலையான மனம் ஈரமானதடி பார்வை தந்த வரமோ
பாதம் பட்ட இடம் சூடு கண்டு உனை நானும் கண்டு விடுவேன்
காதலான மழை சாரல் தூவி விட மார்பில் ஒதுங்கி விடுவேன்
பொய் மானை தேடி சென்றது ராமனின் கண்ண‌ம்மா
மெய் மானை தேட சொன்னது மாற‌னின் நெஞ்சம்மா
விழி கண்டவர் கண்டிட கெஞ்சுது நெஞ்ச‌து கொஞ்சம் நில்லம்மா

நான் வானவில்லையே பார்த்தேன்
அதை காணவில்லையே வேர்த்தன்
ஒரு கோடி மின்னலை பார்வை ஜன்னலால்
வீச சொல்லியா கேட்டேன்
இனி நிலவை பார்க்கவே மாட்டேன்

ஓஹோ ஹோ... ஓஓஓ... ஹோ...
ஓஹோ ஹோ... ஓஓ... ஹோ...
ஓஹோ ஹோ ஹோ... ஓஹோ ஹோ ஹோ...
ம்ம்ம்‍‍‍... ம்ம்ம்ம்....

Sunday, July 8, 2018

Nee Varuvai Ena - Oru Devathai

ப‌டம் : நீ வருவாய் என (1999)
இசை : S.A. ராஜ்குமார்
பாடியவர் : K.S.சித்ரா






தேவதை வந்துவிட்டாள் உன்னை தேடியே
வண்ண மாலைகள் சூட வந்தாள் தங்க தேரிலே

ஒரு தேவதை வந்துவிட்டாள் உன்னை தேடியே
வண்ண மாலைகள் சூட வந்தாள் தங்க தேரிலே
நூறு நூறு ஜென்மம் வாழ்ந்திருக்க
நூலில் பூவை போல சேர்ந்திருக்க
தீபம் ஏற்றிவைத்து தேரிழுக்க
சேலை சோலை கொண்டு சேர்த்தணைக்க
புன்னகையில் பூப்பறிக்க
ஒரு தேவதை வந்துவிட்டாள் உன்னை தேடியே


பூக்கும் செடியை எல்லாம் சிரிக்கும் பூவை எல்லாம்
உன் பெயரை கேட்டு இருந்தார்
எட்டு திசையும் சேர்த்து ஒற்றை திசையை மாற்றி
உன் வரவாய் பார்த்திருந்தார்
கண்ணுக்குள் கண்ணுக்குள் உன்னை வைத்து
நெஞ்சுக்குள் நெஞ்சுக்குள் அன்பை வைத்து
உள்ளத்தை உள்ளத்தை அள்ளி தந்து
உன்னிடும் உன்னிடும் தன்னை தந்து
உன் நிழலில் வாழ்ந்திருக்க
உன் உயிரில் சேர்ந்திருக்க
ஒரு தேவதை வந்துவிட்டாள் உன்னை தேடியே


கொஞ்சும் கிளியே உன்னை நெஞ்சில் உறங்கசொல்லி
தென்றல் என்னும் பாடிசைப்பார்
நெஞ்சம் நோகும் என்றால் மேகம் கொண்டு வந்து
மெத்தை செய்து பூ விரிப்பார்
வானத்து வானத்து நட்சத்திரம்
வாசலில் வாசலில் புள்ளி வைக்க
வானவில் வானவில் கொண்டு வந்து
வண்ணத்தில் கோலங்கள் இட்டு வைக்க
உள்ளங்கையில் பச்சை குத்தி
உன் பெயரை உச்சரிக்க

ஒரு தேவதை வந்துவிட்டாள் உன்னை தேடியே
வண்ண மாலைகள் சூட வந்தாள் தங்க தேரிலே
நூறு நூறு ஜென்மம் வாழ்ந்திருக்க
நூலில் பூவை போல சேர்ந்திரிக்க
தீபம் ஏற்றிவைத்து தேரிழுக்க
சேலை சோலை கொண்டு சேர்த்தணைக்க
புன்னகையில் பூப்பறிக்க
ஒரு தேவதை வந்துவிட்டாள் உன்னை தேடியே
வண்ண மாலைகள் சூடவந்தாள் தங்க தேரிலே

Wednesday, July 17, 2013

ஃபிரண்ட்ஸ் - தென்றல் வரும்

படம் : ஃபிரண்ட்ஸ் (2001)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : ஹரிஹரன், பவதாரணி
பாடல்வரிகள்: பழனி பாரதி



தென்றல் வரும் வழியை பூக்கள் அறியாதா
தென்றலுக்கு மலரின் நெஞ்சம் புரியாதா
அள்ளி கொடுத்தேன் மனதை
எழுதி வைத்தேன் முதல் கவிதை
கண்ணில் வளர்த்தேன் கனவை
கட்டி பிடித்தேன் தலையணையை
குண்டு மல்லி கொடியே கொள்ளையடிக்காதே நீ

தென்றல் வரும் வழியை... ந ந ந ந நா
தென்றலுக்கு மலரின்... ந ந ந ந நா


நீயா அட நானா நெஞ்சை முதல் முதல் இழந்தது யார்
காதல் என்னும் ஆற்றில் இங்கு முதல் முதல் குதித்தது யார்

என்னில் உன்னை கண்டேன் நம்ம இரண்டென பிரிப்பது யார்
தேகம் அதில் ஜீவன் ஒன்று பிரிந்திட இருப்பது யார்

துன்பம் நீ கொடுக்கும் துன்பம் கூட இன்பம்
ஏங்கும் நெஞ்சில் ஏக்கம் என்றும் தொடரவேண்டும்

குண்டு மல்லி கொடியை கொள்ளையடிக்காதே
வெண்ணிலவு மகளின் உள்ளம் பறிக்காதே

தென்றல் வரும் வழியை பூக்கள் அறியாதா
தென்றலுக்கு மலரின் நெஞ்சம் புரியாதா

தென்றல் வரும் வழியை... ந ந ந நா
தென்றலுக்கு மலரின்... ந ந ந நா
ந ந... ந ந நா... ந ந... ந ந நா... 
ந ந... ந ந நா... ந ந... ந ந நா... 

காதல் உன் காதல் அது மழையென வருகிறதே
நெஞ்சம் என் நெஞ்சம் அதில் சுட சுட நனைகிறதே

நாணம் என் நாணம் ஒரு வானவில் வருகிறதே
மௌனம் என் மௌனம் ஒரு வார்த்தைக்கு அலைகிறதே

பார்த்தேன் காதல் பயிரின் விதைகள் உந்தன் கண்ணில்
வளர்த்தேன் முத்தம் பூக்கும் செடியை எந்தன் நெஞ்சில்

குண்டு மல்லி கொடியை கொள்ளையடிக்காதே
வெண்ணிலவு மகளின் உள்ளம் பறிக்காதே

தென்றல் வரும் வழியை... ந ந ந ந நா
தென்றலுக்கு மலரின்... ந ந ந ந நா


Tuesday, April 9, 2013

Kadhal Kottai - Kaalamellam Kathal

படம்: காதல் கோட்டை (1996)
இசை: தேவா
பாடியவர்கள்: உன்னிகிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம்
பாடல்வரிகள்: அகத்தியன்




காலமெல்லாம் காதல் வாழ்க
காதலெனும் வேதம் வாழ்க
காதலே நிம்மதி கனவுகளே அதன் சன்னிதி
கவிதைகள் பாடி நீ காதலி நீ காதலி நீ காதலி


கண்ணும் கண்ணும் மோதுமம்மா
நெஞ்சம் மட்டும் பேசுமம்மா காதல்

தூக்கம் கெட்டுப் போகுமம்மா
தூது செல்லத் தேடுமம்மா காதல்

ஆணுக்கும் பெண்ணுக்கும்
அன்பையே போதிக்கும் காதல் தினம் தேவை

கெஞ்சினால் மிஞ்சிடும்
மிஞ்சினால் கெஞ்சிடும் காதல் அது போதை

காதலுக்குப் பள்ளி இல்லையே
அது சொல்லித் தரும் பாடம் இல்லையே

காலமெல்லாம் காதல் வாழ்க


ஜாதியில்லை பேதம் இல்லை
சீர்வரிசை தானமில்லை காதல்

ஆதியில்லை அந்தம் இல்லை
ஆதாம் ஏவாள் தப்புமில்லை காதல்

ஊரென்ன பேரென்ன
தாய் தந்தை யாரென்ன காதல் வந்து சேரும்

நீயின்றி நானில்லை
நானின்றி நீயில்லை காதல் மனம் வாழும்

ஜாதகங்கள் பார்ப்பதில்லையே
அது காசு பணம் கேட்பதில்லையே

காலமெல்லாம் காதல் வாழ்க
காதலெனும் வேதம் வாழ்க
காதலே நிம்மதி கனவுகளே அதன் சன்னிதி
கவிதைகள் பாடி நீ காதலி நீ காதலி நீ காதலி


Monday, February 4, 2013

Nee Varuvai Ena - Parthu Parthu

படம் : நீ வருவாய் என (1999)
இசை : S.A. ராஜ்குமார்
பாடியவர் : S.P.பாலசுப்ரமணியம்





பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன் நீ வருவாயென
பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன் நீ வருவாயென
தென்றலாக நீ வருவாயா ஜன்னலாகிறேன்
தீர்த்தமாக நீ வருவாயா மேகமாகிறேன்
வண்ணமாக நீ வருவாயா பூக்களாகிறேன்
வார்த்தையாக நீ வருவாயா கவிதை ஆகிறேன்

நீ வருவாயென... நீ வருவாயென...

பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன் நீ வருவாயென
பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன் நீ வருவாயென


கரைகளில் ஒதுங்கிய கிளிஞ்சல்கள் உனக்கென தினம்தினம் சேகரித்தேன்
குமுதமும் விகடனும் நீ படிப்பாயென வாசகனாகிவிட்டேன்
கவிதை நூலோடு கோலப் புத்தகம் உனக்காய் சேமிக்கிறேன்
கனவில் உன்னோடு என்ன பேசலாம் தினமும் யோசிக்கிறேன்
ஒரு காகம் காவெனக் கரைந்தாலும் என் வாசல் பார்க்கிறேன்

நீ வருவாயென... நீ வருவாயென...


பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன் நீ வருவாயென
பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன் நீ வருவாயென


எனக்குள்ள வேதனை நிலவுக்கு தெரிந்திடும் நிலவுக்கும் ஜோடியில்லை
எழுதிய கவிதைகள் உனை வந்து சேர்ந்திட கவிதைக்கும் கால்களில்லை
உலகில் பெண்வர்க்கம் நூறு கோடியாம் அதிலே நீ யாரடி
சருகாய் அன்பே நான் காத்திருக்கிறேன் எங்கே உன் காலடி
மணி சரிபார்த்து தினம் வழிபார்த்து இரு விழிகள் தேய்கிறேன்

நீ வருவாயென... நீ வருவாயென...


பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன் நீ வருவாயென
பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன் நீ வருவாயென
தென்றலாக நீ வருவாயா ஜன்னலாகிறேன்
தீர்த்தமாக நீ வருவாயா மேகமாகிறேன்
வண்ணமாக நீ வருவாயா பூக்களாகிறேன்
வார்த்தையாக நீ வருவாயா கவிதை ஆகிறேன்

நீ வருவாயென... நீ வருவாயென...
நீ வருவாயென... நீ வருவாயென...



Thursday, January 17, 2013

பூமணி - என் பாட்டு என் பாட்டு

படம் : பூமணி (1996)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : இளையராஜா
பாடல்வரிகள் : மு.மேத்தா




ஹே... ஹேஹேஹே... 
ஹே... ஹேஹே... ஹே... ஹே... ஹே...
ஹா ஹா... ஹா ஹா... ஹா ஹா... ஹா...

என்   பாட்டு என்  பாட்டு....
நெஞ்சினிக்கும்  பூங்காத்து....

என்  பாட்டு  என்  பாட்டு நெஞ்சினிக்கும் பூங்காத்து
தாலாட்டு தாலாட்டு தாவி வரும் தேனூத்து
உன்  பொழுது  போகணும்
எனக்கோ  பொழப்ப  பாக்கணும்
உன்னை  பழுது  பாக்கணும்
எனக்குள்ளே  அழுது  தீக்கணும்
அடி  மானே  உன்  நெஞ்சை  துவைக்கிற  ராகமிது
என்  பாட்டு  என்  பாட்டு நெஞ்சினிக்கும்  பூங்காத்து
தாலாட்டு  தாலாட்டு தாவி  வரும்  தேனூத்து

அழகான  மாடத்திலே வந்த  கிளி  இரண்டு
வந்த  கிளி  இரண்டு
அதில்  ஆலோலம்  பாடி  மனம் நொந்த  கிளி  ஒன்று
நொந்த  கிளி  ஒன்று
காத்திருந்த  சின்ன  கிளி காயம்  பட்டு  கத்துதடி
நேத்து  வந்த  வண்ணக்கிளி நெஞ்ச நெஞ்ச கொத்துதடி
இள மானே தத்தளிக்கும்  ஒத்தை  கிளி
தாவுதடி  வெட்டுக்  கிளி
நிழல்  தேடும்  கிளி  இங்கே நிஜம் காணுமா

என்  பாட்டு  என்  பாட்டு நெஞ்சினிக்கும்  பூங்காத்து
தாலாட்டு  தாலாட்டு தாவி  வரும் தேனூத்து
உன்  பொழுது  போகணும்
எனக்கோ  பொழப்ப  பாக்கணும்
உன்னை  பழுது  பாக்கணும்
எனக்குள்ளே  அழுது  தீக்கணும்
அடி  மானே  உன்  நெஞ்சை  துவைக்கிற  ராகமிது
என்  பாட்டு  என்  பாட்டு நெஞ்சினிக்கும்  பூங்காத்து
தாலாட்டு  தாலாட்டு தாவி  வரும் தேனூத்து


ஆத்தோரம் வேலி கட்டி நந்தவனம் போட்டேன்
நான் நந்தவனம் போட்டேன்
அதில் அழகாக மலர் செடிகள் நட்டு வைத்து வளர்த்தேன்
நான் நட்டு வைத்து வளர்த்தேன்
பூ மலர வந்ததெல்லாம் புத்தம் புது வாசமடி
பூப்பறிக்க வந்தவளோ புத்தில மோசமடி
அடி மானே கையில் உள்ள முத்துச்சரம் பத்திரமா வச்சிக்கனும்
ஒரு நூலு பிரிச்சாலும் உதிர்ந்து ஓடுமே

என்  பாட்டு  என்  பாட்டு நெஞ்சினிக்கும்  பூங்காத்து
தாலாட்டு  தாலாட்டு தாவி  வரும் தேனூத்து
உன்  பொழுது  போகணும்
எனக்கோ  பொழப்ப  பாக்கணும்
உன்னை  பழுது  பாக்கணும்
எனக்குள்ளே  அழுது  தீக்கணும்
அடி  மானே  உன்  நெஞ்சை  துவைக்கிற  ராகமிது
என்  பாட்டு  என்  பாட்டு நெஞ்சினிக்கும்  பூங்காத்து
தாலாட்டு  தாலாட்டு தாவி  வரும் தேனூத்து


Tuesday, December 4, 2012

New - Kalayil Dhinamum

படம்: நியூ (2004)
இசை: A.R. ரஹ்மான்
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், சாதனா சர்கம்
பாடல்வரிகள்: வாலி






காலையில் தினமும் கண் விழித்தால்
நான் கை தொழும் தேவதை அம்மா
அன்பென்றாலே அம்மா ...அம்மா
என் தாய் போல் ஆகிடுமா

காலையில் தினமும் கண் விழித்தால்
நான் கை தொழும் தேவதை அம்மா
அன்பென்றாலே அம்மா ...அம்மா
என் தாய் போல் ஆகிடுமா
இமை போல் இரவும் பகலும் 
எனை காத்த அன்னையே
உனதன்பு பார்த்த பின்பு 
அதை விட வானம் பூமி யாவும் சிறியது

காலையில் தினமும் கண் விழித்தால்
நான் கை தொழும் தேவதை அம்மா
அன்பென்றாலே அம்மா 
என் தாய் போல் ஆகிடுமா
காலையில் தினமும் கண் விழித்தால்
நான் கை தொழும் தேவதை அம்மா
அன்பென்றாலே அம்மா 
என் தாய் போல் ஆகிடுமா
இமை போல் இரவும் பகலும் 
எனை காத்த அன்னையே
உனதன்பு பார்த்த பின்பு 
அதை விட வானம் பூமி யாவும் சிறியது



நிறை மாத நிலவே வா வா
நடை போடு மெதுவா மெதுவா
அழகே உன் பாடு அறிவேனம்மா
மசக்கைகள் மயக்கம் கொண்டு
மடி சாயும் வாழை தண்டு
சுமையல்ல பாரம் சுகம் தானம்மா
தாயான பின்பு தான் நீ பெண்மணி
தோள் மீது தூங்கடி கண்மணி கண்மணி

காலையில் தினமும் கண் விழித்தால்
நான் கை தொழும் தேவதை அம்மா
அன்பென்றாலே அம்மா 
என் தாய் போல் ஆகிடுமா
இமை போல் இரவும் பகலும் 
எனை காத்த அன்னையே
உனதன்பு பார்த்த பின்பு
அதை விட வானம் பூமி யாவும் சிறியது


ஆஆ... ஆ... ஆ... ஆ..... ஆ...
ஆஆ... ஆ... ஆ... ஆ..... ஆ...
ஆஆ... ஆஆ... ஆஆ... ஆஆஆஆ... 

ஒரு பிள்ளை கருவில் கொண்டு
ஒரு பிள்ளை கையில் கொண்டு
உறவாடும் யோகம் ஒரு தாய்க்கு இன்று
மழலை போல் உந்தன் நெஞ்சம்
உறங்கட்டும் பாவம் கொஞ்சம்
தாய்க்கு பின் தாரம் நான்
தானையா
தாலேலோ பாடுவேன் நீ தூங்குடா
தாயாக்கி வைத்ததே நீயாடா நீயாடா

தலைவா நீ எந்தன் தலைச்சன் பிள்ளை
பாடுகிறேன் நான் தாலோ
பனிசே பூவிழி தாலோ பொன்மணி தாலேலோ
நிலவோ நிலத்தில் இறங்கி 
உன்னை கொஞ்ச எண்ணுதே
அதிகாலை சேவல் கூவும்
அது வரை வஞ்சி நெஞ்சில் நீயும் உறங்கிடு
தலைவா நீ எந்தன் தலைச்சன் பிள்ளை
பாடுகிறேன் நான் தாலோ
பனிசே பூவிழி டாலோ பொன்மணி தாலேலோ
பொன்மணி தாலேலோ பொன்மணி தாலேலோ
பொன்மணி... தாலேலோ...


ஆஆ... ஆ... ஆ... ஆ..... ஆ...
ஆஆ... ஆ... ஆ... ஆ..... ஆ...

Wednesday, April 11, 2012

அப்பு - நினைத்தால் நெஞ்சுகுழி



 படம் : அப்பு (2000)
இசை : தேவா
பாடியவர்கள் : ஹரிகரன் & ஹரிணி
பாடலாசிரியர் : வைரமுத்து










நினைத்தால் நெஞ்சுகுழி இனிக்கும் அது ஏனோ
சிரித்தால் நெஞ்சுகுழி அடைக்கும் அது ஏனோ
குளிரில் எனக்கோரு புழுக்கம் அது ஏனோ
வெயிலில் எடுக்குது நடுக்கம் அது ஏனோ
ஏனோ... ஏனோ.... ஏனோ... ஏனோ...


காதலென்று கவிகள் சொல்வார்கள் அதுதானோ
நினைத்தால் நெஞ்சுகுழி இனிக்கும் அது ஏனோ
சிரித்தால் நெஞ்சுகுழி அடைக்கும் அது ஏனோ
பூக்கள் கை கொட்டி சிரிக்கும் அது ஏனோ
புடவை அடிகடி நழுவும் அது ஏனோ
ஏனோ... ஏனோ... ஏனோ... ஏனோ...
காதலென்று கவிகள் சொல்வார்கள் அதுதானோ


பால் வடியும் வான் நிலவில் தீ வடிவதேனோ
ராவெழுதும் என் கனவில் தேன் வடிவதேனோ


ஒளியை கண்கள் வெறுக்கும் இது ஏனோ


வார்த்தைகள் நாவிலே உடையுதே ஏனோ
மண்ணில் நான் வாழ்வதே மறந்ததே ஏனோ


அஞ்சுக்கும் ஆறுக்குமே இடைவெளி ஏனோ ஏனோ
நெஞ்சுக்கும் உதடுக்குமே தூரங்கள் ஏனோ ஏனோ



நினைத்தால் நெஞ்சுகுழி இனிக்கும் அது ஏனோ
சிரித்தால் நெஞ்சுகுழி அடைக்கும் அது ஏனோ
குளிரில் எனக்கோரு புழுக்கம் அது ஏனோ
வெயிலில் எடுக்குது நடுக்கம் அது ஏனோ
ஏனோ... ஏனோ.... ஏனோ... ஏனோ...


காதலென்று கவிகள் சொல்வார்கள் அதுதானோ



நான் என்பதில் இன் மறைந்து இம் வந்ததும் ஏனோ
போ என்பதில் போ ஒழிந்து வா வந்ததும் ஏனோ


வெட்கம் என்னை நனைக்கும் இது ஏனோ


கால் விரல் காவியம் எழுதுதே ஏனோ
கண்களும் கண்களும் பொய் சொல்லும் ஏனோ


இமைகயில் இடி சத்தம் கேட்டதும் ஏனோ ஏனோ
நெஞ்சுக்குள் காதல் வந்தால் பெண் நிலவரம் இதுதானோ



நினைத்தால் நெஞ்சுகுழி இனிக்கும் அது ஏனோ
சிரித்தால் நெஞ்சுகுழி அடைக்கும் அது ஏனோ
குளிரில் எனக்கோரு புழுக்கம் அது ஏனோ
வெயிலில் எடுக்குது நடுக்கம் அது ஏனோ
ஏனோ... ஏனோ.... ஏனோ... ஏனோ...


காதலென்று கவிகள் சொல்வார்கள் அதுதானோ




Saturday, October 8, 2011

Appu - Idam Tharuvaya

படம் : அப்பு (2000)
இசை : தேவா
பாடியவர்கள் : உன்னி கிருஷ்ணன் & பாப் ஷாலினி
பாடல்வரிகள் : வைரமுத்து









இடம் தருவாயா மனசுக்குள்ளே
இடம் தருவாயா மனசுக்குள்ளே


தர மாட்டேன் தர மாட்டேன் இடம் தர மாட்டேன்
உள்ளே சென்றால் மனசை விட்டு வர மாட்டாய்


பகலில் வீட்டின் காவலன் ஆவேன்
இரவில் எப்போதும் சேவகன் ஆவேன்
விளக்காய் விழித்திருப்பேன் அன்பே.....


இடம் தருவாயா மனசுக்குள்ளே
இடம் தருவாயா மனசுக்குள்ளே




இதய வீட்டில் ஓர் இடம் 
நீ கெஞ்சிக் கேக்கிறாய்
வீட்டின் உள்ளே காற்றில்லை 
என்றால் என் செய்வாய்


இதய வீட்டில் காற்றில்லையா 
என்ன செய்குவேன்
உந்தன் மூச்சு பிச்சையிலே 
தான் நான் வாழ்வேன்


வீட்டை விட்டு வெளியேறு
ஆணைகள் இட்டால் என் செய்வாய்


இருப்பவருக்கே மனை சொந்தம் என்று
ஒரு சட்டம் நான் இடுவேன்


இடம் ஒன்று கொடுத்தால் மடம் ஒன்று பிடிக்கும்
கள்ளக் கண்ணாளன் நீ என்று கண்டேன்
தரவே தர மாட்டேன்


இடம் தருவாயா....
இடம் தருவாயா மனசுக்குள்ளே
இடம் தருவாயா மனசுக்குள்ளே



தர மாட்டேன் தர மாட்டேன் இடம் தர மாட்டேன்
உள்ளே சென்றால் மனசை விட்டு வர மாட்டாய்


பகலில் வீட்டின் காவலன் ஆவேன்
இரவில் எப்போதும் சேவகன் ஆவேன்
விளக்காய் விழித்திருப்பேன் அன்பே.....



இதயம் என்னும் மாளிகையில் நூறு வாசலே
எந்த வழி புகுவது என்று கேக்கின்றேன்


கண்கள் என்னும் வாசல் வழி புகுந்த கள்வனே
நுழைந்து கொண்டு வாசல் வழியா கேக்கின்றாய்


வீட்டுக்குள்ளே ஒளிந்திருக்கும்
கள்வனைக் காட்டிக் கொடுப்பாயா


கண் கதவை சாத்திக்கொள்வேன்
காலம் முழுதும் இருப்பாயா


இதயம் போலொரு அழகிய வீடு
எங்கு சென்றாலும் அடைவது ஏது
எனக்கு இடம் தருவாயா அன்பே


இடம் ஒன்று தந்தேன்...
இடம் ஒன்று தந்தேன் மனசுக்குள்ளே...
இடம் ஒன்று தந்தேன் மனசுக்குள்ளே...


தந்தாயே தந்தாயே தந்தாயே
இதய வீட்டில் அத்தனை அறைகள் தந்தாயே


அரண்மணை கதவுகள் மொத்தம் அடைத்தேன்
எல்லா ஜன்னலும் சாத்தி முடித்தேன்
தப்பிக்க முடியாது அன்பே...

Friday, September 16, 2011

தென்காசிப்பட்டினம் - மயிலிறகே


படம்: தென்காசிப்பட்டினம் (2002)
இசை: சுரேஷ் பீட்டர்ஸ்
பாடியவர்: மனோ, சொர்ணலதா
பாடல்: வாலி










மயிலிறகே... மயிலிறகே...

மணிகிளியே... மணிகிளியே...

மயிலிறகே மயிலிறகே மனம் வருட வந்தாயா
மணிகிளியே மணிகிளியே மனம் திருட வந்தாயா

ஹே.. மயிலிறகே மயிலிறகே மனம் வருட வந்தாயா
மணிகிளியே மணிகிளியே மனம் திருட வந்தாயா


மாடத்தில் மஞ்சத்தில் இன்பம் இல்லை
மன்னா உன் மனசுக்குள் இடம் பிடித்தேன்
ஊராரும் வேறாரும் காணாமலே
கண்ணா உன் உள்ளத்தை படம் பிடித்தேன்



மயிலிறகே... மணிகிளியே...

மயிலிறகே மயிலிறகே மனம் வருட வந்தாயா
மணிகிளியே மணிகிளியே மனம் திருட வந்தாயா

மன்னா உன் தோள்களில் தொத்தி கொள்ள
மன்றாடும் பிள்ளை இது
கண்ணா நீ கைகளில் ஏந்தி கொள்ள
கண் மூடும் பிள்ளை இது

எனது பார்வையில் எதிரில் தோன்றிடும்
எதுவும் உன் காட்சி தான்
அழகே நீயும் என் மனதில் பாய்கிற
ஆசை நீர் வீழ்ச்சி தான்

நீ சொன்னால் தீக்குள்ளே விரலை வைப்பேன்
நீ சொன்னால் முள்ளை என் விழியில் வைப்பேன்
நான் சொன்னால் கூட நான் கேட்க மாட்டேன்
நீ சொன்னால் நாள் கிழமை பார்க்க மாட்டேன்

ஒ... மானே மானே மனதுக்குள்ளே
உனையின்றி இனிமேலே ஞாபகமில்லை
மயிலிறகே... மணிகிளியே...
மயிலிறகே மயிலிறகே மனம் வருட வந்தாயா
மணிகிளியே மணிகிளியே மனம் திருட வந்தாயா

பழி வாங்கி போனது பல ராத்திரி
உன்னால் நான் தூக்கம் கெட்டேன்
பனி வாடை காற்றோடு விவரம் சொல்லி
உனக்காக தூது விட்டேன்

தூது வந்தது தகவல் தந்தது
தனிமை பொல்லாதது
உன் போல் என் மனம் உருகும் சங்கடம்
வெளியில் சொல்லாதது

எவருக்கு எவரென்று இறைவன் வைத்தான்
அவரோடு அவன் இங்கு அவனே சேர்த்தான்
உனதென்றும் எனதென்றும் இனி இல்லையே
உனக்குள்ளே நான் வந்தேன் தனியில்லையே

என் அன்பே அன்பே காதோடு சொல்
கல்யாண பூமாலை நீ தரும் நேரம்

மயிலிறகே... மயிலிறகே...
மயிலிறகே... மயிலிறகே...


மணிகிளியே... மணிகிளியே...
மணிகிளியே... மணிகிளியே...

மயிலிறகே மயிலிறகே மனம் வருட வந்தாயா

மணிகிளியே மணிகிளியே மனம் திருட வந்தாயா


மயிலிறகே மயிலிறகே மனம் வருட வந்தாயா
மணிகிளியே மணிகிளியே மனம் திருட வந்தாயா

மயிலிறகே... மயிலிறகே...

மயிலிறகே மயிலிறகே மனம் வருட வந்தாயா

மணிகிளியே மணிகிளியே மனம் திருட வந்தாயா


Popular Posts