Friday, September 14, 2018

Suryavamsam - Natchathira Jannalil

ப‌டம் : சூரியவம்சம் (1997
இசை :  S.A. ராஜ்குமார்
பாடியவர்கள்: மனோ,  சுனந்தா
பாடல்வரிகள்: பழனிபாரதி

Image result for Suryavamsam



நட்சத்திர ஜன்னலில் 
வானம் எட்டிப் பார்க்குது
சிறகை விரித்துப் பறப்போம் 
நம் உறவில் உலகை அளப்போம்
விளையாடலாம் நிலாவிலே 
நிழல் மூழ்குமோ தண்ணீரிலே
வானைப் புரட்டிப்போடு 
புது வாழ்வின் கீதம் பாடு

நட்சத்திர ஜன்னலில் 
வானம் எட்டிப் பார்க்குது
சிறகை விரித்துப் பறப்போம்
நம் உறவில் உலகை அளப்போம்


சித்திரங்களைப் பாடச்சொல்லலாம்
தென்றலை அஞ்சல் ஒன்று போடச்சொல்லலாம்

புத்தகங்களில் முத்தெடுக்கலாம்
பொன்னாடை இமயத்துக்குப் போர்த்திவிடலாம்

பூமிக்குப்பொட்டு வைத்து பாக்கலாம் பாக்கலாம்
பூவுக்கும் ஆடை தைத்துப் போடலாமா

சூரியத்தேரை மண்ணில் ஓட்டலாம் ஓட்டலாம் 
சொர்கத்தின் புகைப்படத்தைக் காட்டலாமா

வானம்பாடி வாழ்விலே 
வருந்தி அழுவதில்லை
வணங்கி விழுவதில்லை

நட்சத்திர ஜன்னலில் 
வானம் எட்டிப் பார்க்குது

சிறகை விரித்துப் பறப்போம் 
நம் உறவில் உலகை அளப்போம்


சங்கீதப்புறா நெஞ்சில் பறக்கும்
சந்தோஷ முல்லை எங்க வீட்டில் முளைக்கும்

சந்தனமழை நம்மை நனைக்கும்
பூந்தென்றல் காதில் சொல்ல வந்து அழைக்கும்

சிட்டுக்குச் சிறகடிக்கச் சொல்லித்தந்ததாரடி
மீனுக்கு நீச்சல் கற்றுத் தந்ததாரோ

மேகத்தில் வீடு கட்டி வாழலாம் வாழலாம்
மின்னலில் கூரை பின்னிப் போடலாமா

ஓங்கும் உந்தன் கைகளால் 
வானைப் புரட்டிப்போடு 
புது வாழ்வின் கீதம் பாடு

நட்சத்திர ஜன்னலில் 
வானம் எட்டிப் பார்க்குது

சிறகை விரித்துப் பறப்போம் 
நம் உறவில் உலகை அளப்போம்

விளையாடலாம் நிலாவிலே 
நிழல் மூழ்குமோ தண்ணீரிலே
வானைப் புரட்டிப்போடு 
புது வாழ்வின் கீதம் பாடு

நட்சத்திர ஜன்னலில் 
வானம் எட்டிப் பார்க்குது
லாலா... லாலா... லாலா... லாலா...

Popular Posts