Showing posts with label Kalaignan. Show all posts
Showing posts with label Kalaignan. Show all posts

Wednesday, January 16, 2013

கலைஞன் - எந்தன் நெஞ்சில்

படம் : கலைஞன் (1993)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : K.J.யேசுதாஸ். S.ஜானகி
பாடல்வரிகள் : வாலி




எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திர்திர் தில்லானா

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திர்திர் தில்லானா
இசையின் ஸ்வரங்கள் தேனா… ஆ... ஆ...
இசைக்கும் குயில் நீ தானா வா

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திர்திர் தில்லானா


பனியில் நனையும் மார்கழிப்பூவே
எனை நீ பிரிந்தால் ஏதொரு வாழ்வே

உனக்கென பிறந்தவள் நானா
நிலவுக்கு துணை இந்த வானா

வாழ்தேனே உறவின்றி முந்நாள்
வந்தாயே உறவாக இந்நா....ள்

எந்தன் நெஞ்சில் ஹோ… ம்ம்... ம்ம்… ம்
எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திர்திர் தில்லானா
இசையின் ஸ்வரங்கள் தேனா… ஆ... ஆ...
இசைக்கும் குயில் நீ தானா வா

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திர்திர் தில்லானா

ஆ..... ஆஆஆஆ... ஆஆ... ஆஆஆஆ...
ச க ரி ம க ரி ச நி ச நி ப ம ப நி ச க ரி

சுகங்கள் மெதுவாய் நீ தர வேண்டும்
நகங்கள் பதித்தால் காயங்கள் தோன்றும்

உதடுகள் உரசிடத்தானே
வலிகளும் குறைந்திடும் மானே

நான் சூடும் நூலாடைப்போலே
நீயாடு பூமேனி மேலே

எந்தன் நெஞ்சில் ஹோ… ம்ம்... ம்ம்… ம்
எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திர்திர் தில்லானா

இசையின் ஸ்வரங்கள் தேனா… ஆ... ஆ...

இசைக்கும் குயில் நீ தானா வா

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா

எண்ணம் எங்கும் நீ பாடும் திர்திர் தில்லானா


Thursday, December 20, 2012

கலைஞன் - தில்லுபருஜானே

படம் : கலைஞன் (1993)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : மனோ, K.S. சித்ரா
பாடல்வரிகள் : வாலி





தில்லுபருஜானே தில்லு தீவானே தித்திக்கிற தேனே
உள்ளபடி நானே உனைச் சேர்ந்தேனே ஒட்டியிருப்பேனே

தில்லுபருஜானே தில்லு தீவானே தித்திக்கிற தேனே
உள்ளபடி நானே உனைச் சேர்ந்தேனே ஒட்டியிருப்பேனே
போதும் இனி பேச்சு அனல் வீசுது மூச்சு
ஒரு மாதிரி ஆச்சுது
ஆஜா ஆஜா...
ஆஜா ஆஜா... அரரரே... ஆஜா ஆஜா...

தில்லுபருஜானே தில்லு தீவானே தித்திக்கிற தேனே
உள்ளபடி நானே உனைச் சேர்ந்தேனே ஒட்டியிருப்பேனே
 

மன்னன் மாளிகையில் வாழும் மஞ்சள் வெயில்
ஆடைகட்டி வந்ததென்ன மெல்ல

க‌ண்ண‌ன் நீதானென்று மீரா வந்தாளிங்கு
காதல் கதை ஜாடைகளில் சொல்ல

மாலை கண் மயங்கும் வேளை மங்கை நதி

மங்கை நதி பொங்கி வரும் கங்கை நதி

ஏதோ காமம் செய்த சூதோ அச்சம்விட

அச்சம்விட அவனொரு பானம்விட

புது லீலைகள் தான் அதிகாலை வரை தான்
அடி காதலி கண்மணி
ஆஜா ஆஜா... கையணைக்க... ஆஜா ஆஜா...

தில்லுபருஜானே தில்லு தீவானே தித்திக்கிற தேனே
உள்ளபடி நானே உனைச் சேர்ந்தேனே ஒட்டியிருப்பேனே


உன்னால் தூக்கம் கெட்டு வாடும் தென்னஞ்சிட்டு
கூடுவிட்டு உன்னை தொட்டுக் கொஞ்சும்

சொன்னால் போதுமடி வாம்மா நானும் ரெடி
காதல் செய்ய காத்திருக்கு நெஞ்சம்

வாங்கு தோளிரண்டில் தாங்கி சொல்லிக்கொடு

சொல்லிக்கொடு பாடங்களை அள்ளிக்கொடு

ஏக்கம் என்னையும் தான் தாக்கும் முத்தமிட்டு

முத்தமிட்டு கட்டிக்கொள்ளு கட்டில் மெட்டு

சிறு நூலிடைதான் ஒரு இன்பக்கதை தான்
உந்தன் தேவையை வாங்கிட
ஆஜா ஆஜா... என்ன வேணும்... ஆஜா அஜா...

தில்லுபருஜானே தில்லு தீவானே தித்திக்கிற தேனே
உள்ளபடி நானே உனைச் சேர்ந்தேனே ஒட்டியிருப்பேனே
போதும் இனி பேச்சு அனல் வீசுது மூச்சு
ஒரு மாதிரி ஆச்சுது
ஆஜா ஆஜா...
ஆஜா ஆஜா... அரரரே... ஆஜா ஆஜா...

ஆஹா... ஓஹோய்....
ஏ ஹே... ஆஹா...


Popular Posts