Skip to main content

Posts

நெடுநல்வாடை - ஒரே ஒரு

படம்: நெடுநல்வாடை (2017)
இசை: ஜோஸ்  ‍ஃப்ராங்களின் 
பாடியவர்கள்: யாசின் நிஸார், பூர்ணிமா கிருஷ்ணன்
பாடல் வரிகள்: வைரமுத்து
Download this MP3
ஒரே ஒரு கண்பார்வை
ஒரே ஒரு மெய்தீண்டல்
அதை எண்ணி உயிர் வாழ்வேன் அன்பே

ஒரே ஒரு கண்பார்வை
ஒரே ஒரு மெய்தீண்டல்
அதை எண்ணி உயிர் வாழ்வேன் அன்பே

பிரிவு இல்லாத காதல்
அது சுவர்கள் இல்லாத வீடு
இந்த உறவும் வாழ்க...
பிரிவும் வாழ்க...
வலிகள் வாழ்கவே...

பிரிவு இல்லாத காதல்
அது சுவர்கள் இல்லாத வீடு
இந்த உறவும் வாழ்க...
பிரிவும் வாழ்க...
வலிகள் வாழ்கவே...

ஒரே ஒரு கண்பார்வை
ஒரே ஒரு மெய்தீண்டல்
அதை எண்ணி உயிர் வாழ்வேன் அன்பே


வெய்யில் காயும் செடிகள் தானே
மழைதன்னை நேசிக்கும்
உடல் தாண்டும் காதல் தானே
உண்மை அன்பை யாசிக்கும்

ஊரைவிட்டு போனால் என்ன‌
உள்ளம் உன்னை பூசிக்கும்
சிறகுகொன்று வேண்டும் என்று
சின்ன உள்ளம் நேசிக்கும்

உன்பேரை சொல்லி கொண்டு
உயிரை நான் கிள்ளி கொண்டு
காற்றோடு பேசி கொண்டு வாழ்வேன் ராசாத்தி

கண்ணீரை முடி கொண்டு
கனவோடு பாடி கொண்டு
காற்றோடு தேடி கொண்டு வாழ்வேன் கண்ணாளா

இடைவெளிகளின் வெளியிலே
இரு இதயங்கள் எரியுதே

எரிவதிலும் சுகமிருக்கு
எரியும் மெழுகும் ஒளி வீசும்

அடி

நெடுநல்வாடை - தங்க காவடி

படம்: நெடுநல்வாடை (2017)
இசை: ஜோஸ்  ‍ஃப்ராங்களின் 
பாடியவர்கள்: மச்சியம் பாலா, கலக்கல் காவ்யா, சுகந்தி
பாடல் வரிகள்: வைரமுத்து
Download this MP3
தங்க காவடி எடுக்கிறோம் சாமி
எங்க வாழ்வுக்கு வரம் கொடுங்க‌
சாதி சனமெல்லாம் பொழைக்கனும் சாமி
சின்னஞ் சிறுசுக்கு வழி விடுங்க‌

மதுரை வீரா... சுடலை மாடா...
வழி துணையாக வாங்க வாங்க‌

மதுரை வீரா... சுடலை மாடா...
வழி துணையாக வாங்க வாங்க‌

வாழாத பிஞ்சுகள ஒங்க‌
வாயால வாழ்த்திடுங்க‌

பொல்லாத பகை முடிக்க‌
ரெண்டு பூமால சூட்டிடுங்க‌

ஈயோடு எறும்புகளும் இங்க‌ 
இஷ்டம் போல் வாழுதுங்க‌
ஆனாலும் ஆணும் பொண்ணும்
தினம் அல்லாடி போகுதுங்க‌

சுடச் சுட மழையடிக்குது
சுடலைமாடன் காட்டுக்குள்ள‌
சின்னச் சின்ன குருவி ரெண்டும்
றெக்கையடிக்குது கூட்டுக்குள்ள‌
பருவம் கனிஞ்சிருக்குது
படி கடக்கணும் வீட்டுக்குள்ள‌
துணிஞ்சி முடிவெடுக்கணும்
துணிஞ்ச நெஞ்சில் துக்கமில்ல‌

சுடச் சுட மழையடிக்குது
சுடலைமாடன் காட்டுக்குள்ள‌
சின்னச் சின்ன குருவி ரெண்டும்
றெக்கையடிக்குது கூட்டுக்குள்ள‌


புத்தம் புது நெல் குத்து பொங்க வைப்போம்
இங்க ஏழ சனம் எல்லாரும் திங்க வைப்போம்

ஏ... நல்லது கெட்டது எல்லாமே சொல்லி வைப்போம்
வரம் கொடுக்கலயா சாமி தலைய க…

நெடுநல்வாடை - ஏதோ ஆகிப் போச்சு

படம்: நெடுநல்வாடை (2017)
இசை: ஜோஸ்  ‍ஃப்ராங்களின்
பாடியவர்கள்: ஸ்வேதா மோகன், யாசின் நிஸார்
பாடல் வரிகள்: வைரமுத்து

Download this MP3

ஏதோ ஆகிப் போச்சு
இதயம் இத்துப் போச்சு
ஏனோ இந்த கூத்து நீ சொல்லய்யா

ரோசா மொட்டுக்குள்ள‌
லேசா மெட்டுக்கட்டி
குத்திக் குடையும் வண்டு நீ தானய்யா

பைத்தியமா ஏம் பருவத்த சுத்தவிட்ட‌
பம்பரமா பெண் தாங்காதய்யா
சத்தியமா நான் சாதஞ் சோறு உண்ணலையே
பத்தியமா கண் தூங்காதய்யா

கஞ்சிக்குள் போட்ட உப்பு
கஞ்சியெல்லாங் கூடி போகும்
அது போல நெஞ்சில் சேந்தியே

கண் மூடி தூங்க போனா
கண்ணோடு கலகம் செஞ்ச‌
கனவோடு சிறகாய் நீந்தியே

ஏதோ ஆகிப் போச்சு
இதயம் இத்துப் போச்சு
ஏனோ இந்த கூத்து நீ சொல்லய்யாகாதல் வந்த பொண்ணும்
கண்ணடிச்ச கண்ணும்
உரியவ‌ன் சொல்லாம ஒறங்கிடுமா?

ஒத்த மழத்தூறல்
முத்தந்தரும் போதும்
கொடிகளின் கும்மாளம் கொறைஞ்சிடுமா?

உறவெல்லாம் வெறுத்தாலும்
ஊரெல்லாம் பகைச்சாலும்
ஒங்கூட வாழ்வேன் சுந்தரா

இன்பத்தில் பொரண்டாலும்
துன்பத்தில் மெரண்டாலும்
சரிபாதி நீதான் சங்கரா

நெடுநல்வாடை - கருவாத்தேவா

படம்: நெடுநல்வாடை (2017)
இசை: ஜோஸ்  ‍ஃப்ராங்களின் 
பாடியவர்கள்: தீபக்
பாடல் வரிகள்: வைரமுத்து
Download this MP3
கருவாத்தேவா அட... கருவாத்தேவா
ஒங் கண்ணெல்லாம் கண்ணீரா கருவாத்தேவா
ஒன் நெலம சொன்னா கொளம் நெருப்பா போகும்
ஒங் கதையே ஒரு கருமாயம் கருவாத்தேவா

பொட்டபிள்ள பழுதாப்போச்சு கருவாத்தேவா
பெத்த பிள்ள பகையா போச்சு விதிதானே யார் வெல்வா?
சொந்தமெல்லாம் சொமையாப்போச்சு கருவாத்தேவா
அண்ணந்தம்பி பகையானா மக எங்கே போவா?

கருவாத்தேவா அட... கருவாத்தேவா
ஒங் கண்ணெல்லாம் கண்ணீரா கருவாத்தேவா
ஒன் நெலம சொன்னா கொளம் நெருப்பா போகும்
ஒங் கதையே ஒரு கருமாயம் கருவாத்தேவா


முள்ளு மேல ஒரு சொந்தமோ?
எந்த பக்கம் எது கிழியுமோ?
மானங்காக்க ஒரு கோவங்காட்ட‌ இந்த வாழ்க்கையில் எடமில்ல‌
வேட்டி ஒன்னு தான் மிச்சமோ?
நீ காட்டும் பாசம் அது உச்சமோ?
வானம் பாத்து இந்த பூமி பொளந்திருக்கு மேகம் துளியில்ல‌

தேகந்தான் தேயும்.. செருப்பெல்லாந் தேயும்
நீ காட்டும் பேரன்பு தேயாதய்யா
நிலங்கூட தீரும் கடல் கூட தீரும்
நீ பெத்த‌ கடன் மட்டும் தீராதய்யா
ஒரு பசுவின் தியாகந்தான் உசுரா ஒழுகுது பாலாக‌
ஒரு மனுசனின் தியாகந்தான் ஒவ்வொரு குடும்பம் ஆளாக‌

கருவாத்தேவா அட... கருவாத்தேவா
ஒங் …

இரும்பு குதிரை - பெண்ணே பெண்ணே

படம்: இரும்பு குதிரை (2015)
இசை: G.V.பிரகாஷ்
பாடியவர்: G.V.பிரகாஷ், பவதாரணி, யாழினி
பாடல் வரிகள்:  தாமரைDownload this MP3
ஹாஹா... ஹாஹாஹா... ஹாஹாஹாஹா...
ஹாஹா... ஹாஹாஹா... ஹாஹாஹாஹா...

பெண்ணே பெண்ணே அலைகிறேன்
அன்றிளாகி அழுகிறேன் 
பெண்ணே பெண்ணே நீயும் எங்கே 
என்றே தேடி திகைக்கிறேன்  

நீ சொல்லாததால் மொழி இல்லை 
நீ செல்லாததால் வழி இல்லை 
நீ பாராததால் ஒளி இல்லை 
நீ தாராததால் நிழல் இல்லை 
உயிர் போனாலும் போகட்டும் 
இப்போதே பார்த்தாக வேண்டும்  
நான் உன்னை உன்னை 

ஹாஹா... ஹாஹாஹா... ஹாஹாஹாஹா...

ஓ... பெண்ணே பெண்ணே அலைகிறேன்
அன்றிளாகி அழுகிறேன் 


காற்றை தூதாக நான்விட 
கண்ணே உன் கூந்தல் கோதி பாறாதோ 
உன் கண்ணின் மை பூசி நீவிட 
காற்றும் பெண்ணாகி இங்கு வாராதோ 
முன்னம் முன்னூறு ஆண்டுகள் 
ஒன்றாய் நாம் வாழ்ந்த ஞாபகம் 
ஏங்கி நான் பெற்ற என் வரம் 
ஐயோ இப்போது யாரிடம் 
உன்னை பாராது முத்தம் தாராது 
இனி தூங்காது என் கண்களே 


பெண்ணே பெண்ணே அலைகிறேன்
அன்றிளாகி கரைகிறேன்
பெண்ணே பெண்ணே நீயும் எங்கே 
என்றே தேடி திகைக்கிறேன்  

நீ சொல்லாததால் மொழி இல்லை 
நீ செல்லாததால் வழி இல்லை 
நீ பாராததால் ஒளி இல்லை 
நீ தாராததால் நிழல் இல்லை 
உயிர் போனாலும் போகட்டும் 
இப்ப…

ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் - அம்முகுட்டியே

படம்: ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் (2017)
இசை: D. இமான்
பாடியவர்: ப்ரதீப் குமார்
பாடல் வரிகள்:  யுகபாரதி
Download this MP3
அம்முகுட்டியே அடியே உன்ன‌ எண்ணி கலஞ்சேன்டி
குட்டி குட்டியா கவித சொல்லி கட்டு கொலஞ்சென்டி
உன்ன‌ பெத்த தாய காட்டடி கும்பிட்டுப் போக நான் ரெடி

செல்லக்குட்டி நீயும் பேச சீனி மூட்ட கொட்டுதடி
கன்னுக்குட்டி போல ஆச காதல் பாட்ட‌ கட்டுதடி
அம்முகுட்டியே அடியே உன்ன‌ எண்ணி கலஞ்சேன்டி
குட்டி குட்டியா கவித சொல்லி கட்டு கொலஞ்சென்டி


தங்க செல போல மங்கிடாம என்ன ஓரசி போகுற‌
அங்கம் அழகாக செல்லம் நீயும் எங்க அரிசி வாங்குற
ஒட்டுமொத்த ஊரும் அண்ணாந்து பாக்க சிட்டாகுற‌
முத்தம் ஒண்ணு கேட்டா மின்சாரம் போல கட்டாகுற‌
பொங்க வைக்கும் நீ பால் நொற நெஞ்ச தொட்ட மூணாம்பிற
சொகமா... உசுர... கவ்வுற...

அம்முகுட்டியே அடியே உன்ன‌ எண்ணி கலஞ்சேன்டி
குட்டி குட்டியா கவித சொல்லி கட்டு கொலஞ்சென்டி


எத்தனையோ பேர‌ தள்ளி போனு சொல்லி ஜெயிச்ச ஆம்பள
உன்னுடைய பார்வ கொக்கி போட கண்ணு முழியும் தூங்கல
தள்ளுவண்டி போல முன்னால நானும் தள்ளாடல...
முன்ன வந்து நீயும் கிக்காக‌ பேச உக்காரல‌
ஒண்டி கட்ட நான் வீட்டுல ஒட்டிக்கிட்ட நீ மூச்சுல
நெசமா... கதையும்...…

மேகா - புத்தம் புது காலை...

படம் : மேகா (2014)
இசை : இளையராஜா 
பாடியவர் : S.ஜானகி 
பாடல்வரிகள் : கங்கை அமரன் 
Download this MP3

புத்தம் புது காலை... பொன் நிற வேளை...
என் வாழ்விலே... தினந்தோறும் தோன்றும்...
சுக ராகம் கேட்கும்... எந்நாளும் ஆனந்தம்...
புத்தம் புது காலை பொன் நிற வேளை


பூவில் தோன்றும் வாசம் அதுதான் ராகமோ
இளம் பூவை நெஞ்சில் தோன்றும் அது தான் தாளமோ
மனதின் ஆசைகள்... மலரின் கோலங்கள்
குயில் ஓசையின் பரிபாஷைகள் அதிகாலையின் வரவேற்புகள்

புத்தம் புது காலை பொன் நிற வேளை...


வானில் தோன்றும் கோலம் அதை யார் போட்டதோ
பனி வாடை வீசும் காற்றில் சுகம் யார் சேர்த்தோ
வயதில் தோன்றிடும் நினைவில் ஆனந்தம்
வளர்ந்தோடுது இசைபாடுது வலி கூடிடும் சுவைகூடுது

புத்தம் புது காலை... பொன் நிற வேளை...
என் வாழ்விலே... தினந்தோறும் தோன்றும்...
சுக ராகம் கேட்கும்... எந்நாளும் ஆனந்தம்...