Showing posts with label Nithya Menen. Show all posts
Showing posts with label Nithya Menen. Show all posts

Thursday, March 16, 2023

Thiruchitrambalam - Life of Pazham

படம் : திருச்சிற்றம்பலம் (2022)
இசை : அனிருத் ரவிச்சந்தர்
பாடியவர்கள் : அனிருத் ரவிச்சந்தர்
பாடல்வரிகள் : விவேக்





கண்ணால கதை பேச நீயும்
கை கோர்த்து நட போட நானும்
வேறென்ன வேறென்ன வேணும்
நீ மட்டும் நீ மட்டும் போதும்

தாங்காத பாரம் நான் தாங்கும் போதும்
எனை தாங்கும் தூணாக நீதானடி
யார் வந்த போதும் யார் போன போதும்
நீ மட்டும் என விட்டு நீங்காதடி

எனக்கினு ஒரு வானம்
எனக்கினு ஒரு மேகம்
மழை பொழியிது ஆத்தாடி
அது தானே நீயும்

எனக்கினு ஒரு வானம்
எனக்கினு ஒரு மேகம்
மழை பொழியிது ஆத்தாடி
அது தானே நீயும்

ஆத்தாடி அது தானே நீயும்
ஆத்தாடி அது தானே நீயும்


நீ வந்ததால் இதுவும் தூசாகுது
உன்னால தான் மனசு லேசாகுது
என் வாழ்க்க இதுதான்னு கதையாக சொல்ல
உன் பேரு இல்லமா ஒரு பக்கம் இல்ல

எனக்காக உருக எக்காத திருக
வழி பாத நிலவா நீ வேண்டும் நெடுக
தீராத தீயாக நான் ஆன போதும்
திரி ஒரம் நீதாண்டி என ஏத்துன

ஆத்தாடி அது தானே நீயும்

கண்ணால கதை பேச நீயும்
கை கோர்த்து நட போட நானும்
வேறென்ன வேறென்ன வேணும்
நீ மட்டும் நீ மட்டும் போதும்

கண்ணே...  பெண்ணே... எல்லாம் நீதானடி
யார் வந்த போதும் யார் போன போதும்
நீ மட்டும் என விட்டு நீங்காதடி

எனக்கினு ஒரு ... எனக்கினு ஒரு
உயிர் இருக்குது... உயிர் இருக்குது
மழ பொழியிது... மழ பொழியிது
அது தானே நீயும்

எனக்கினு ஒரு வானம்
எனக்கினு ஒரு மேகம்
மழ பொழியிது
மழ பொழியிது
மழ பொழியிது

ஆத்தாடி அது தானே நீயும்
ஆத்தாடி அது தானே நீயும்

Wednesday, March 15, 2023

Thiruchitrambalam - Thenmozhi

படம் : திருச்சிற்றம்பலம் (2022)
இசை : அனிருத் ரவிச்சந்தர்
பாடியவர்கள் : சந்தோஷ் நாராயணன்
பாடல்வரிகள் : தனுஷ்






தேன்மொழி பூங்கொடி
வாடி போச்சே என் செடி
வான்மதி பைங்கிளி
ஆசை தீர வாட்டு நீ

உன்ன நெனச்சொன்னும் உருகல போடி
சோகத்தில் ஒண்ணும் வளக்கல தாடி
கெத்து காட்டிட்டு அழுவுரனே
அழுது முடிச்சிட்டு சிரிக்கிறனே

தேன்மொழி பூங்கொடி
வாடி போச்சே என் செடி
வான்மதி பைங்கிளி
ஆசை தீர வாட்டு நீ


நெஜமா நா செஞ்ச பாவம்
முழுசா உன் மேல வெதச்ச பாசம்
நெழலும் பின்னால காணோம்
அதுக்கும் அம்மாடி புதுசா கோவம்

பாலே இங்க தேறல
பாயாசம் கேக்குதா
காத்தே இங்க வீசல
காத்தாடி கேக்குதா
உன் மேல குத்தம் இல்ல
நீ ஒண்ணும் நானும் இல்ல

தேன்மொழி பூங்கொடி
வாடி போச்சே என் செடி
வான்மதி பைங்கிளி
ஆசை தீர வாட்டு நீ

உன்ன நெனச்சொன்னும் உருகல போடி
சோகத்தில் ஒண்ணும் வளக்கல தாடி
கெத்து காட்டிட்டு அழுவுரனே
அழுது முடிச்சிட்டு சிரிக்கிறனே

தேன்மொழி பூங்கொடி
வாடி போச்சே என் செடி
வான்மதி பைங்கிளி
ஆசை தீர வாட்டு நீ

Thiruchitrambalam - Mayakkama Kalakkama

படம் : திருச்சிற்றம்பலம் (2022)
இசை : அனிருத் ரவிச்சந்தர்
பாடியவர்கள் : தனுஷ்
பாடல்வரிகள் : தனுஷ்





மயக்கமா கலக்கமா
மைன்டு ஃபுல்லா கொழ‌ப்பமா
இருக்குதா இல்லியா
இந்த டென்ஷன் எனக்குமா

ஆல்ரெடி நான் வாங்கிட்டேன் பல்பு
லவ்வுல எனக்கெடுக்கல செல்ஃபு
என்ன சங்கதி புரியலையே
இப்போ என் கதி தெரியிலயே

மயக்கமா கலக்கமா
மைன்டு ஃபுல்லா கொளப்பமா
இருக்குதா இல்லியா
இந்த டென்ஷன் எனக்குமா


வேர்ரா என் லைஃபில் நீ தான்
பேர்ரா என்னாலும் பாக்கல நான் தான்
எனக்கு நீ தானா பெஸ்ட்டு
கடவுள் வச்சானே டெஸ்ட்டு டெஸ்ட்டு

பாசம் வச்சேன் ஓவரா
இது தான் லவ் ஃபீவரா
நான் என்ன பண்ணுவேன்
நீயே சொல்லு ஈஸ்வரா
என் நெஞ்சில் பூந்துகிட்ட
இப்போ நான் மாட்டிக்கிட்டேன்

தேன்மொழி பூங்கொடி
மைன்டு ஃபுல்லா நீயடி
வான்மதி பைங்கிளி
தோழி இப்போ காதலி

Thursday, September 29, 2022

Thiruchitrambalam - Megham Karukatha

 படம் : திருச்சிற்றம்பலம் (2022)

இசை : அனிருத்

பாடியவர்கள் : தனுஷ்

பாடல்வரிகள் : தனுஷ்






மேகம் கருக்காதா

பெண்ணே பெண்ணே

சாரல் அடிக்காதா

பெண்ணே பெண்ணே


தேகம் நனையாதா

பெண்ணே பெண்ணே

தீயும் அணையாதா

பெண்ணே பெண்ணே


கண் பாஷை பேசினால்

நான் என்ன செய்வேன்

கன்ப்யூசன் ஆகிறேன்

உள்ளுக்குள்ளே


பறக்க பறக்க துடிக்குதே

பழக பழக பிடிக்குதே

பழைய ரணங்கள் மறக்குதே

பெண் தோகை வருடுதே


பறக்க பறக்க...

பழக பழக...

பழைய ரணங்கள்...

பெண் தோகை வருடுதே


மேகம் கருக்காதா

பெண்ணே பெண்ணே

சாரால் அடிக்காதா

பெண்ணே பெண்ணே



மண்ணை தூறல் தீண்டும் முன்னே

வாசம் பார்க்கிறேன்

மண்ணை கூட பொம்மை ஆக்கும்

நேசம் பார்க்கிறேன்


இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம்

என்று கேட்கிறேன்

கொஞ்ச கொஞ்ச இன்னும் இன்னும்

என்று கேட்கிறேன்


என்னோடு சேர்ந்து வாழும் சோகம் எல்லாம்

காற்றில் போக பார்க்கிறேன்

கால்கள் போன பாதை எல்லாம்

நான் போகிறேன்



என்னுள்ளே மூடி இருந்த கதவு ஒன்று

வெட்கப்பட்டு திறக்கிறேன்

வாழ்க்கை போகும் போக்கிலெல்லாம்

நான் போகிறேன்


கண் பாஷை பேசினால்

நான் என்ன செய்வேன்

கன்ப்யூசன் ஆகிறேன்

உள்ளுக்குள்ளே


பறக்க பறக்க துடிக்குதே

பழக பழக பிடிக்குதே

பழைய ரணங்கள் மறக்குதே

பெண் தோகை வருடுதே


பறக்க பறக்க...

பழக பழக...

பழைய ரணங்கள்...

பெண் தோகை வருடுதே


மேகம் கருக்காதா

பெண்ணே பெண்ணே

சாரல் அடிக்காதா

பெண்ணே பெண்ணே

தேகம் நனையாதா

தீயும் அணையாதா

Tuesday, March 29, 2022

OK Kanmani - Malargal Kaettaen

 படம் : ஒ... காதல் கண்மனி (2015)

இசை : A.R.ரஹ்மான்

பாடியவர்கள் : K.S.சித்ரா, A.R.ரஹ்மான்

பாடல்வரிகள் : வைரமுத்து






மலர்கள் கேட்டேன் 

வனமே தந்தனை

தண்ணீர் கேட்டேன்

அமிர்தம் தந்தனை

மலர்கள் கேட்டேன்

வனமே தந்தனை

தண்ணீர் கேட்டேன்

அமிர்தம் தந்தனை

எதை நான் கேட்பின் 

ஆ... ஆ... ஆ... ஆ...

எதை நான் கேட்பின்

உனையே தருவாய்

எதை நான் கேட்பின்

உனையே தருவாய்

மலர்கள் கேட்டேன்

வனமே தந்தனை

தண்ணீர் கேட்டேன்

அமிர்தம் தந்தனை

மலர்கள் கேட்டேன்

மலர்கள் கேட்டேன்

மலர்கள் கேட்டேன்

மலர்கள் கேட்டேன்

எதை நான் கேட்பின்

உனையே தருவாய்



மலர்கள் கேட்டேன்

வனமே தந்தனை

தண்ணீர் கேட்டேன்

அமிர்தம் தந்தனை



காட்டில் தொலைந்தேன் 

வழியாய் வந்தனை

இருளில் தொலைந்தேன்

ஒளியாய் வந்தனை

காட்டில் தொலைந்தேன்

வழியாய் வந்தனை

இருளில் தொலைந்தேன்

ஒளியாய் வந்தனை

எதனில் தொலைந்தால்

எதனில் தொலைந்தால் 

நீயே வருவாய்


மலர்கள் கேட்டேன்

வனமே தந்தனை

தண்ணீர் கேட்டேன்

அமிர்தம் தந்தனை



பள்ளம் வீழ்ந்தேன்

சிகரம் சேர்தனை

வெள்ளம் வீழ்ந்தேன்

கரையில் சேர்தனை

பள்ளம் வீழ்ந்தேன்

சிகரம் சேர்ந்தனை

வெள்ளம் வீழ்ந்தேன்

கரையில் சேர்தனை

எதனில் வீழ்ந்தால்...

ஆ... ஆ... ஆ... ஆ...

எதனில் வீழ்ந்தால்

உன்னிடம் சேர்ப்பாய்


மலர்கள் கேட்டேன்

வனமே தந்தனை

தண்ணீர் கேட்டேன்

அமிர்தம் தந்தனை

மலர்கள் கேட்டேன்

வனமே தந்தனை

தண்ணீர் கேட்டேன்

அமிர்தம் தந்தனை

எதை நான் கேட்பின்

ஆ... ஆ... ஆ... 

எதை நான் கேட்பின்

உனையே தருவாய்

உனையே தருவாய்

மலர்கள் கேட்டேன்

வனமே தந்தனை

தண்ணீர் கேட்டேன்

அமிர்தம் தந்தனை

மலர்கள் கேட்டேன்

வனமே தந்தனை

தண்ணீர் கேட்டேன்

அமிர்தம் தந்தனை

Sunday, July 22, 2018

Mersal - Aalaporan Thamizhan

படம்: மெர்சல் (2017)
இசை: A.R.ரஹ்மான்
பாடியவர்கள்: கைலாஷ் க்ஹெர், சத்ய பிரகாஷ், தீபக் & பூஜா
பாடல்வரிகள்: விவேக்


Image result for Mersal



ஊருக்கண்ணு, உறவுக்கண்ணு
உன்ன மொச்சுப் பாக்கும் நின்னு
சின்ன மகராசன் வரான் மீசமுறுக்கு
எங்க மண்ணு தங்க மண்ணு
உன்ன வைக்கும் சிங்கமுன்னு

முத்துமணி ரத்தினத்தைப் பெத்தெடுத்த ரஞ்சிதம்
ஊருக்குன்னே வாழு கண்ணு அப்பனுக்கும் சம்மதம்
எந்த இடம் வலிகண்டாலும் கண்ணுதானே கலங்கும்
கண்ணபோல எங்களுக்கு காவலா நீ வரணும்...

ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே
வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே
வீரன்னா யாருனு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே
வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே

சொல்லிச் சொல்லி.. சரித்திரத்தில் பேர் பொறிப்பான்
நெஞ்சில் அள்ளி.. காற்றில் நம்ம தேன் தமிழ்தெளிப்பான்
இன்னும் உலகம் ஏழ, அங்க தமிழப்பாட
பச்சத்தமிழ் உச்சிப்புகழ் ஏறி சிரிக்கும்…

வாராயோ வாராய் நீ அன்பா வந்தா ஒளி கொடுப்போம்
வாராயோ வாராய் நீ வம்பா வந்தா சுளுக்கெடுப்போம்
தமிழன்டா எந்நாளும்.. சொன்னாலே திமிரேறும்
காற்றோட கலந்தாலும்.. அதுதான் உன் அடையாளம்


ஏ... அன்பக்கொட்டி எங்கமொழி அடித்தளம் போட்டோம்
மகுடத்தை தரிக்கிற  ழகரத்தை சேர்த்தோம்
தலைமுறை கடந்துமே விரிவதைப் பாத்தோம்
உலகத்தின்  முதல்மொழி உசுரெனக் காத்தோம்

நாள்நக மாற்றங்கள் நேரும் உன் மொழி சாயும் என்பானே
பார் இல்லையா தமிழனும் வருவான் தாய்த்தமிழ் தூக்கி நிற்பானே
கடைசித் தமிழனின் ரத்தம் எழும் வீழாதே…
தமிழினமே…   வீழாதே… தமிழினமே…
கண்ணுபோல எங்களுக்கு காவலா நீ வரணும்


நெடுந்தூரம் உன்இசை கேட்கும்
பிறை நீக்கி பௌர்ணமியாக்கும்
வெதக்காட்டில் விண்மீன் பூக்கும்
விழிச்சாலும் நெசந்தான்
உயிர் அலையுமோ நெத்தி முத்தம் போதும்
வருங்காலம் வாசனை சேர்க்கும்

முத்துமணி ரத்தினத்தைப் பெத்தெடுத்த ரஞ்சிதம்
ஊருக்குன்னே வாழு கண்ணு அப்பனுக்கும் சம்மதம்
எந்த இடம் வலிகண்டாலும் கண்ணுதானே கலங்கும்
கண்ணபோல எங்களுக்கு காவலா நீ வரணும்..

ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே
வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே
வீரன்னா யாருனு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே
வாயில்லா மாட்டுக்கும் அவன் நீதிய தந்தானே...

வாராயோ வாராய் நீ அன்பா வந்தா ஒளி கொடுப்போம்
வாராயோ வாராய் நீ வம்பா வந்தா சுளுக்கெடுப்போம்
தமிழாலே ஒண்ணானோம்... மாறாது எந்நாளும்...
தமிழாலே ஒண்ணானோம்... மாறாது எந்நாளும்...

Friday, April 24, 2015

ஒ காதல் கண்மணி - நானே வருகிறேன்

படம்: ஒ காதல் கண்மணி (2015)
இசை: A.R. ரகுமான்
பாடியவர்: ஷாஷா திருபட்டி, சத்ய பிரகாஷ்
பாடல்வரிகள்: வைரமுத்து




பொல்லாத என் இதயம் ஏதோ சொல்....லுதே
நில்லாத என் உயிரோ எங்கோ செல்....லுதே
பொல்லாத என் இதயம் ஏதோ சொல்...லுதே

நா...னே வருகிறேன்
கே...ளாமல் தருகிறேன்
நா...னே வருகிறேன்
கே...ளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்

நா...னே வருகிறேன்
கே...ளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்
நினைவுகளை மறக்கிறேன்
நிகழ் கணமும் மறக்கிறேன்
இடம் பொருளை மறக்கிறேன்
எது எனது மறக்கிறேன்
நா...னே..... நா...னே.....  நா...னே.....  வருகிறேன்
கேளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்

சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே
சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே
சின்னஞ்சிறு சின்னஞ்சிறு அதிசயமே
சின்னஞ்சிறு விரல் கொடு
சின்னஞ்சிறு சின்னஞ்சிறு இடம் கொடு
சின்னஞ்சிறு ஆசைக்கு பொய் சொல்ல தெரியாதே

நா...னே வருகிறேன்
கே...ளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்
நினைவுகளை மறக்கிறேன்
நிகழ் கணமும் மறக்கிறேன்
இடம் பொருளை மறக்கிறேன்
எது எனது மறக்கிறேன்
நா...னே..... நா...னே.....  நா...னே.....  வருகிறேன்
கே...ளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்

தக்க திமி தக்க திமி விழியாட
தக்க திமி தக்க திமி விழியாட
தக்க திமி தக்க திமி உரையாட
தக்க திமி உடல் தொட
தக்க திமி தக்க திமி உயிர் தொட
தக்க திமி ஆனந்தம் முடிவது கிடையாதே

நா...னே வருகிறேன்
கே...ளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்
நினைவுகளை மறக்கிறேன்
நிகழ் கணமும் மறக்கிறேன்
இடம் பொருளை மறக்கிறேன்
எது எனது மறக்கிறேன்
நா...னே..... நா...னே.....  நா...னே.....  வருகிறேன்
கே...ளாமல் தருகிறேன்
கண் தீண்டி உறைகிறேன்
கை தீண்டி கரைகிறேன்


Wednesday, November 21, 2012

வெப்பம் - காற்றில் ஈரம்


படம் : வெப்பம் (2011)
இசை: ஜோஷ்வா  ஸ்ரீதர் 
பாடியவர்கள் : கார்த்திக், 
ஸ்ரீசரண்
பாடல் வரி : நா.முத்துகுமார்






காற்றில் ஈரம் அதை யார் தந்ததோ
கால்கள் நடனம் இட யார் சொன்னதோ
பூமி முடியும் அந்த எல்லை வரைப் போவோமா?
நேற்று நாளை அது பொய்யானதோ?
இன்று மட்டும் இங்கு மெய்யானதோ?
மேகம் அலையும் அந்த வானம் வரைப் போவோமா?
இன்றென்ன இத்தனை இன்பம் இதயக்கூட்டில் நீந்திடுதே
நடை பாதை பூக்கள் எல்லாம் கைகள் நீட்டிடுதே
நீங்காத புன்னகை ஒன்று உதட்டின் மேலே பூத்திடுதே
வாழ்க்கையை பிடிக்கிறதே...

காற்றில் ஈரம் அதை யார் தந்ததோ
கால்கள் நடனம் இட யார் சொன்னதோ
பூமி முடியும் அந்த எல்லை வரைப் போவோமா?
நேற்று நாளை அது பொய்யானதோ?
இன்று மட்டும் இங்கு மெய்யானதோ?
மேகம் அலையும் அந்த வானம் வரைப் போவோமா?


ஓ... ஒரு நாள் இந்த ஒரு நாள் உயிரோடு இருந்தாலும் வாழும்
பயணம் இந்த பயணம் இது தொடர்ந்திட வேண்டும்
அருகில் உனதருகில் நான் வாழும் நிகழ் காலம் போதும்
நிமிடம் இந்த நிமிடம் இது உறைந்திட வேண்டும்
ம்...மௌனத்தில் சில நேரம்
மயக்கத்தில் சில நேரம்
தயக்கத்தில் சில நேரம்
இது என்னவோ புது உலகிங்கே
கண்ணருகில் சில தூரம்
கை அருகில் சில தூரம்
வழித்துணையைக் கேட்கிறதே வா வா....

ஓ... நம் நெஞ்சில் ஓரம் ஏன் இங்கு இதனை ஈரமோ?
நம் கண்களில் ஓரமா புதுக் கனவுகள் நூறும்
இது என்ன இது என்ன இந்த நாள் தான் திருநாளா?
இதற்காக இதற்காக காத்திருந்தோம் வெகு நாளா ?


ஓ... இன்றென்ன இத்தனை இன்பம் இதயக் கூட்டில் நீந்திடுதே
நடை பாதை பூக்கள் எல்லாம் கைகள் நீட்டிடுதே
நீங்காத புன்னகை ஒன்று உதட்டின் மேலே பூத்திடுதே
வாழ்க்கையை பிடிக்கிறதே...

காற்றில் ஈரம் அதை யார் தந்ததோ
கால்கள் நடனம் இட யார் சொன்னதோ
பூமி முடியும் அந்த எல்லை வரைப் போவோமா?
நேற்று நாளை அது பொய்யானதோ?
இன்று மட்டும் இங்கு மெய்யானதோ?
மேகம் அலையும் அந்த வானம் வரைப் போவோமா?

Monday, November 5, 2012

அன்வர் - கிழக்கு பூக்கும் ஆதவன்

படம்: அன்வர் (2010)
இசை: கோபி சுந்தர்
பாடியவர்கள்: ஸ்ரேயா கோஷல், நவீன் ஐயர், ரகீயுப் ஆலம்
பாடல் வரிகள்: ரஃபீக் அஹ்மத்





ஹபிலத்தி... அல்லா... ஆ... ஹபிலத்தி... 

கிழக்கு பூக்கும் ஆதவன் போல் ஒளிர்ந்திருப்பானே
காதல் பெண்ணின் கனவில் கலந்து மினுமினுப்பானே
இனிக்கும் நெஞ்சின் கீதத்தை இசைக்க வந்தவன் மாறன்
டைக்கும் கண்ணில் கனவினை விதைக்க வந்தவன் தோழன்

ஹபிலத்தி... ஹபிலத்தி...
ஹபிலத்தி... ஹபிலத்தி... ஹபிலத்தி...

கிழக்கு பூக்கும் ஆதவன் போல் ஒளிர்ந்திருப்பானே
காதல் பெண்ணின் கனவில் கலந்து மினுமினுப்பானே
இனிக்கும் நெஞ்சின் கீதத்தை இசைக்க வந்தவன் மாறன்
அடைக்கும் கண்ணில் கனவினை விதைக்க வந்தவன் தோழன்

ஹபிலத்தி... ஹபிலத்தி...
ஹபிலத்தி... ஹபிலத்தி... ஹபிலத்தி...

ஆகாய... ஆகாய....
வெண்ணிலவோ.... வெண்ணிலவோ...
தேனுரும்... தேனுரும்...
புன்னகையோ... அழகின் அம்மொழியோ...
பால்நிலாவோ பால்நிலாவோ
தேன்கனாவோ காணுமோ
ஓ... காதலென்னும் சிறகு வீசி
கவிதை கொண்டு பேசுவா...
கவிதை கொண்டு பேசுவா...

ஹபிலத்தி... ஹபிலத்தி...
ஹபிலத்தி... ஹபிலத்தி... ஹபிலத்தி...

ஒ... ஆ... கிழக்கு பூக்கும் ஆதவன் போல் ஒளிர்ந்திருப்பானே... ஆ ஹா
ஹோய்... காதல் பெண்ணின் கனவில் கலந்து மினுமினுப்பானே
இனிக்கும் நெஞ்சின் கீதத்தை இசைக்க வந்தவன் மாறன்
டைக்கும் கண்ணில் கனவினை விதைக்க வந்தவன் தோழன் ஹோ...

ஹபிலத்தி... ஹபிலத்தி...
ஹபிலத்தி... ஹபிலத்தி... ஹபிலத்தி...

Monday, April 30, 2012

வெப்பம் - மழை வரும் அறிகுறி



படம் : வெப்பம் (2011)
இசை: ஜோஷ்வா  ஸ்ரீதர்
பாடியவர்கள் : நரேஷ் அய்யர், சுசன்னே
பாடல் வரி : நா.முத்துகுமார்






மழை வரும் அறிகுறி என் விழிகளில் தெரியுதே
மனம் இன்று நனையுதே இது என்ன காதலா சாதலா
பழகிய காலங்கள் என் பார்வையில் விரியுதே
பாதைகள் நழுவுதே இது ஏனோ ஏனோ
உன் தோளில் சாயும்போது உற்சாகம் கொள்ளும் கண்கள்
நீ எங்கே எங்கே  ன்று உனை தேடி தேடி பார்க்கிறது
உன்னொடு போகும் போது பூ பூக்கும் சாலையாவும்
நீ எங்கே என்று என்னை கேட்ட பின்பு வாடிடுதே



மழை வரும் அறிகுறி என் விழிகளில் தெரியுதே
மனம் இன்று நனையுதே இது என்ன காதலா சாதலா
பழகிய காலங்கள் என் பார்வையில் விரியுதே
பாதைகள் நழுவுதே இது ஏனோ ஏனோ



அறியாத வயதில் விதைத்தது ஒ... ஒ... ஒ... ஹோ...
அதுவாகவே தானாய் வளர்ந்தது ஒ... ஒ... ஹோ...
புதிதாய் ஒரு பூவும் பூக்கையில் ஒ... ஒ... ஒ... ஹோ...
அட யாரது யாரது பறித்தது ஒ... ஒ... ஹோ...
உன் கால் தடம் சென்ற வழி பார்த்து நானும் வந்தேனே
அது பாதியில் தொலைந்தடா


நான் கேட்டது அழகிய நேரங்கள் ஒ... ஒ... ஒ... ஹோ...
யார் தந்தது விழிகளில் ஈரங்கள் ஒ... ஒ... ஹோ...
நான் கேட்டது வானவில் மாயங்கள் ஒ... ஒ... ஒ... ஹோ...
யார் தந்தது வழிகளில் காயங்கள் ஒ... ஒ... ஹோ...
இந்த காதலும் ஒருவகை சித்ரவதை தானே
அது உயிருடன் எரிக்குதடா


மழை வரும் அறிகுறி என் விழிகளில் தெரியுதே
மனம் இன்று நனையுதே இது என்ன காதலா சாதலா
பழகிய காலங்கள் என் பார்வையில் விரியுதே
பாதைகள் நழுவுதே இது ஏனோ ஏனோ
உன் தோளில் சாயும்போது உற்சாகம் கொள்ளும் கண்கள்
நீ எங்கே எங்கே  ன்று உனை தேடி தேடி பார்க்கிறது
உன்னொடு போகும் போது பூ பூக்கும் சாலையாவும்
நீ எங்கே என்று என்னை கேட்ட பின்பு வாடிடுதே


மழை வரும் அறிகுறி என் விழிகளில் தெரியுதே
மனம் இன்று நனையுதே இது என்ன காதலா சாதலா
பழகிய காலங்கள் என் பார்வையில் விரியுதே
பாதைகள் நழுவுதே இது ஏனோ ஏனோ



Popular Posts