Showing posts with label Prithviraj. Show all posts
Showing posts with label Prithviraj. Show all posts

Monday, November 5, 2012

அன்வர் - கிழக்கு பூக்கும் ஆதவன்

படம்: அன்வர் (2010)
இசை: கோபி சுந்தர்
பாடியவர்கள்: ஸ்ரேயா கோஷல், நவீன் ஐயர், ரகீயுப் ஆலம்
பாடல் வரிகள்: ரஃபீக் அஹ்மத்





ஹபிலத்தி... அல்லா... ஆ... ஹபிலத்தி... 

கிழக்கு பூக்கும் ஆதவன் போல் ஒளிர்ந்திருப்பானே
காதல் பெண்ணின் கனவில் கலந்து மினுமினுப்பானே
இனிக்கும் நெஞ்சின் கீதத்தை இசைக்க வந்தவன் மாறன்
டைக்கும் கண்ணில் கனவினை விதைக்க வந்தவன் தோழன்

ஹபிலத்தி... ஹபிலத்தி...
ஹபிலத்தி... ஹபிலத்தி... ஹபிலத்தி...

கிழக்கு பூக்கும் ஆதவன் போல் ஒளிர்ந்திருப்பானே
காதல் பெண்ணின் கனவில் கலந்து மினுமினுப்பானே
இனிக்கும் நெஞ்சின் கீதத்தை இசைக்க வந்தவன் மாறன்
அடைக்கும் கண்ணில் கனவினை விதைக்க வந்தவன் தோழன்

ஹபிலத்தி... ஹபிலத்தி...
ஹபிலத்தி... ஹபிலத்தி... ஹபிலத்தி...

ஆகாய... ஆகாய....
வெண்ணிலவோ.... வெண்ணிலவோ...
தேனுரும்... தேனுரும்...
புன்னகையோ... அழகின் அம்மொழியோ...
பால்நிலாவோ பால்நிலாவோ
தேன்கனாவோ காணுமோ
ஓ... காதலென்னும் சிறகு வீசி
கவிதை கொண்டு பேசுவா...
கவிதை கொண்டு பேசுவா...

ஹபிலத்தி... ஹபிலத்தி...
ஹபிலத்தி... ஹபிலத்தி... ஹபிலத்தி...

ஒ... ஆ... கிழக்கு பூக்கும் ஆதவன் போல் ஒளிர்ந்திருப்பானே... ஆ ஹா
ஹோய்... காதல் பெண்ணின் கனவில் கலந்து மினுமினுப்பானே
இனிக்கும் நெஞ்சின் கீதத்தை இசைக்க வந்தவன் மாறன்
டைக்கும் கண்ணில் கனவினை விதைக்க வந்தவன் தோழன் ஹோ...

ஹபிலத்தி... ஹபிலத்தி...
ஹபிலத்தி... ஹபிலத்தி... ஹபிலத்தி...

Thursday, August 4, 2011

மொழி - கண்ணால் பேசும்

படம் : மொழி (2007)
இசை : வித்யாசாகர்
பாடியவர்கள் : S.P. பாலசுப்ரமணியம்
பாடல் வரி: வைரமுத்து





கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா
கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா
சலவை செய்த நிலவே எனை மன்னிப்பாயா
சிறு தவறை தவறி செய்தேன் எனை மன்னிப்பாயா
எனது கோரிக்கை நீ கேளடி கேளடி
உனது கோபங்களும் ஏனடி
உனது சில்லென்ற கண் பாரடி பாரடி
எனது சாபங்களை தீரடி

கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா
கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா



நிலா பேசுவதில்லை அது ஒரு குறை இல்லையே ஹா....
குறை அழகென்று கொண்டால்
வாழ்க்கையில் எங்கும் பிழையில்லையே
பெண்ணே அறிந்துகொண்டேன் இயல்பே அழகு என்றே
பூவை வரைந்து அதிலே மீசை வரையமாட்டேன்
மௌனம் பேசும் போது சப்தம் கேட்கமாட்டேன்
மூன்றாம் பிறையின் உள்ளே நிலவைத் தேடமாட்டேன்
வாழ்வோ துவர்க்குதடி வயசோ கசக்குதடி
சைகையிலே எனை மன்னித்து சாபம் தீரடி
O I'm Sorry I'm Sorry I'm Sorry
O.. O... I'm Sorry I'm Sorry I'm Sorry
O I'm Sorry I'm Sorry I'm Sorry
O.. O... I'm Sorry I'm Sorry I'm Sorry

கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா
கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா


எங்கே குறுநகை எங்கே குறும்புகள் எங்கே கூறடி ஹோ....
கண்ணில் கடல் கொண்ட கண்ணில் புயல்சின்னம் ஏதோ தெரியுதடி
செல்லக் கொஞ்சல் வேண்டாம் சின்னச் சிணுங்கல் போதும்
பார்த்துப் பழக வேண்டாம் பாதிச் சிரிப்பு போதும்
காரப்பார்வை வேண்டாம் ஓரப்பார்வை போதும்
வாசல் திறக்க வேண்டாம் ஜன்னல் மட்டும் போதும்
வாழ்க்கை கடக்குதடி நாட்கள் நனைக்குதடி
இரு கண்ணால் என் வாழ்வை நீ ஈரம் செய்யடி
O I'm Sorry I'm Sorry I'm Sorry
O.. O... I'm Sorry I'm Sorry I'm Sorry
O I'm Sorry I'm Sorry I'm Sorry
O.. O... I'm Sorry I'm Sorry I'm Sorry

கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா
கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா
சலவை செய்த நிலவே எனை மன்னிப்பாயா
சிறு தவறை தவறி செய்தேன் எனை மன்னிப்பாயா
எனது கோரிக்கை நீ கேளடி கேளடி
உனது கோபங்களும் ஏனடி
உனது சில்லென்ற கண் பாரடி பாரடி
எனது சாபங்களை தீரடி

Thursday, June 30, 2011

சத்தம் போடாதே - அழகு குட்டி செல்லம்



படம் : சத்தம் போடாதே (2007)
இசை : யுவன் சங்கர் ராஜா

பாடியவர் : சங்கர் மகாதேவன்

பாடல் வரி :  நா.முத்துகுமார்










அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்


ஆளை கடத்திப் போகும்
உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக்கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்


அம்மு நீ... என் பொம்மு நீ
மம்மு நீ... என் மின்மினி


உனக்கு தெரிந்த மொழியிலே எனக்கு பேசத் தெரியலே
எனக்கு தெரிந்த பாஷை பேச உனக்கு தெரியவில்லை..
இருந்தும் நமக்குள் இது என்ன புது பேச்சு
இதயம் பேச எதற்கிந்த ஆராய்ச்சி


ஜிஞ்ஜனிஞ்ஜ...  ஜிஞ்ஜனிஞ்ஜ... ஜிஞ்ஜனி 
மஞ்ஜனிஞ்ஜ...  மஞ்ஜனிஞ்ஜ... மஞ்ஜனி 


அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்


ஆளை கடத்திப் போகும்
உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக்கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்


ரோஜாப்பூ கை ரெண்டும் காற்றோடு கதை பேசும்
உன் பின்னழகில் பௌர்ணமிகள் தகதிமிதா ஜதி பேசும்
எந்த நேரம் ஓயாத அழுகை
ஏன் இந்த முட்டிக்கால் தொழுகை


எப்போதும் இவன் மீது பால் வாசனை
என்ன மொழி சிந்திக்கும் இவன் யோசனை
எந்த நாட்டை பிடித்து விட்டான்
இப்படியோர் அட்டினக்கால் தோரணை... தோரணை...



ஜிஞ்ஜனிஞ்ஜ...  ஜிஞ்ஜனிஞ்ஜ... ஜிஞ்ஜனி 
மஞ்ஜனிஞ்ஜ...  மஞ்ஜனிஞ்ஜ... மஞ்ஜனி 



அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்


ஆளை கடத்திப் போகும்
உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக்கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்

நீ திண்ற மண் சேர்த்தால் வீடொன்று கட்டிடலாம்
நீ சிணுங்கும் மொழி கேட்டால் சங்கீதம் கற்றிடலாம்
தண்டவாளம் இல்லாத இரயிலை
தவழ்ந்த படி நீ ஓட்டிப் போவாய்

வம்பு தும்பு செய்கின்ற பொல்லாதவன்
கடவுள் போல் கவலைகள் இல்லாதவன்
ஒளிந்து ஒளிந்து போக்கு காட்டி
ஓடுகின்ற கண்ணனே புன்னகை மன்னனே

ஜிஞ்ஜனிஞ்ஜ...  ஜிஞ்ஜனிஞ்ஜ... ஜிஞ்ஜனி 
மஞ்ஜனிஞ்ஜ...  மஞ்ஜனிஞ்ஜ... மஞ்ஜனி 


அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்

ஆளை கடத்திப் போகும்
உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக்கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்

அம்மு நீ... என் பொம்மு நீ
மம்மு நீ... என் மின்மினி

உனக்கு தெரிந்த மொழியிலே எனக்கு பேசத் தெரியலே
எனக்கு தெரிந்த பாஷை பேச உனக்கு தெரியவில்லை
இருந்தும் நமக்குள் இது என்ன புது பேச்சு
இதயம் பேச எதற்கிந்த ஆராய்ச்சி

ஜிஞ்ஜனிஞ்ஜ...  ஜிஞ்ஜனிஞ்ஜ... ஜிஞ்ஜனி 
மஞ்ஜனிஞ்ஜ...  மஞ்ஜனிஞ்ஜ... மஞ்ஜனி 

அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்

ஆளை கடத்திப் போகும்
உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக்கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்

Friday, February 11, 2011

ராவணன் - கள்வரே கள்வரே


படம் : ராவணன் (2010)
இசை : A.R. ரஹ்மான்

பாடியவர் :  
ஸ்ரேயாகோஷல்
பாடல் வரி : 
வைரமுத்து





கள்வரே கள்வரே
கள்வரே கள்வரே
கண்புகும் கள்வரே
கை கொண்டு பாரீரோ
கண் கொண்டு சேரீரோ
கலை சொல்லி தாரீரோ


உம்மை எண்ணி உம்மை எண்ணி
ஊமை கண்கள் தூங்காது
தலைவா என் தலைவா அகமறிவீரோ.. அருள்புரிவீரோ..

வாரம் தோறும் அழகின்  பாரம் கூடும் கூடும் குறையாது
உறவே என் உறவே உடை களைவீரோ உடல் அணிவீரோ


என் ஆசை என் ஆசை
நானா சொல்வேன்
என் ஆசை நானா சொல்வேன்
என் ஆசை நீயே சொன்னால்
கண்ணாலே ஆமாம் என்பேனே


எங்கெங்கே உதடும் போகும்
அங்கங்கே உயிரும் போகும்
அன்பாளா ஆளச் சொல்வேனே
வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள்
தமிழுக்கு தெரிகின்றதே
வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள்
தங்களுக்கு தெரிகின்றதா


கள்வரே கள்வரே
கள்வரே கள்வரே


வெள்ளிதிரை - உயிரிலே என்



படம் : வெள்ளிதிரை (2008)
இசை : G.V. பிரகாஷ்

பாடியவர் :  
நரேஷ் அய்யர்
பாடல் வரி : 
நா.முத்துகுமார்









உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன் நானடி
விழியிலே உன் விழியிலே விழுந்தவன் தானடி
உயிருடன் சாகிறேன் பாரடி
காணாமல் போனாயே இது காதல் சாபமா?
நீ கரையை கடந்த பின்னாலும் நான் மூழ்கும் ஒடமா?
உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன் நானடி


கனவுகளில் வாழ்ந்துவிட்டேன் இறுதிவரை
கண்களிலே தூவிவிட்டாய் மண்துகளை
இந்த சோகம் இங்கு சுகமானது
அது வரமாக நீ தந்தது
நீ மறந்தாலுமே உன் காதல் மட்டும்
என் துணையாக வருகின்றது
ஆறாத காயங்கள் என் வாழ்கை பாடமா?
இனி தீயே வைத்து எரிந்தாலும் என் நெஞ்சம் வேகுமா?


உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உயிருடன் சாகிறேன் பாரடி




கடலினிலே விழுந்தாலும் கரையிருக்கும்
காதலிலே விழுந்தபின்னே கரையில்லையே
இந்த காதல் என்ன ஒரு நடை வண்டியா?
நான் விழுந்தாலும் மீண்டும் எழ?
இரு கண்ணை கட்டி ஒரு காட்டுக்குள்ளே
என்னை விட்டாயே எங்கே செல்ல?
ஆண் நெஞ்சம் எப்போதும் ஒரு ஊமை தானடி
அது தெருவின் ஓரம் நிறுத்திவைக்கும் பழுதான தேரடி


உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி
உனக்கென வாழ்கிறேன் நானடி


Tuesday, December 7, 2010

சத்தம் போடாதே - பேசுகிறேன்


படம் : சத்தம் போடாதே (2007)
இசை : யுவன் சங்கர் ராஜா

பாடியவர் : நேஹா பாஷின்

பாடல் வரி :  நா.முத்துகுமார்


பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்
புயலடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன்
எதை நீ தொலைத்தாலும் மனதை தொலைக்காதே

அடங்காமலே அலை பாய்வதேன்
மனம் அல்லவா.........

பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்
புயலடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன்

கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்
இளைப்பார மரங்கள் இல்லை
கலங்காமலே கண்டம் தாண்டுமே
ஓஹோஹோஹோ......

முற்றுப்புள்ளி அருகில் நீயும்
மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால்
முடிவென்பதும் ஆரம்பமே

வளைவில்லாமல் மலை கிடையாது
வலி இல்லாமல் மனம் கிடையாது
வருந்தாதே வா

அடங்காமலே, அலை பாய்வதேன்
மனம் அல்லவா.........



பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்
புயலடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன்



எதை நீ தொலைத்தாலும் மனதை தொலைக்காதே

Popular Posts