Showing posts with label Gopika. Show all posts
Showing posts with label Gopika. Show all posts

Wednesday, March 13, 2013

பொன்னியின் செல்வன் - வெண்ணிலா

படம்: பொன்னியின் செல்வன் (2005)
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்:  ஹரீஷ் ராகவேந்திரா, சிசில்லி
பாடல்வரிகள்: பா.விஜய்





வெண்ணிலா சிறகடிக்க... வெளிச்சம்தான் வலை விரிக்க...
வெண்பனி முகம் துடைக்க... வா வா ரசித்திருக்க...

வெண்ணிலா சிறகடிக்க... வெளிச்சம் தான் வலை விரிக்க...
வெண்பனி முகம் துடைக்க...  வா வா ரசித்திருக்க...

செடியிலே பூ பறிக்க... வேருக்கு விரல் வலிக்க...
வலியைத்தான் எதில் மறைக்க... வசனம் நீ படிக்க...


யே அக்கா அக்கா ஏலக்கா
நீ அக்கம் பக்கம் பாரக்கா
யே தாவி போன தத்தக்கா
தள்ளி போன பித்தக்கா 
ஆட்டம் போட்டு பாடு சொக்கா


வெண்ணிலா சிறகடிக்க... வெளிச்சம் தான் வலை விரிக்க...
வெண்பனி முகம் துடைக்க...  வாவா ரசித்திருக்க...


பிள்ளை அழகு பிறையும் அழகு...
உலகில் எல்லாம் அழகு...


நீயும் அழகு.. நிலவும் அழகு...
நாளைக்கு நான் அழகு...

ஒன்றை எடுத்தால் ஒன்றை கொடுக்கும்
தெய்வத்தின் தீர்ப்பு இது


வாழ்க்கை என்ன மளிகை கடையா?
கொடுத்து எதை வாங்குவது....?


வானம் உனக்காக இந்த வாழ்க்கை உனக்காக

கடவுள்... நீ தானா நான் வரம் தான் கேட்டேனா

யாருக்கு கவலையில்ல



அத பத்தி கவலையில்ல

வெண்ணிலா சிறகடிக்க... வெளிச்சம் தான் வலை விரிக்க...
வெண்பனி முகம் துடைக்க...  வா வா ரசித்திருக்க...


அழகு என்றால்.... அழகு என்றால்... 
அகத்திலே இருப்பது தான்


அகத்தின் அழகு முகத்தில் தெரியும்...
உலகமும் சொல்வதுதான்


மழையின் சத்தம் மழலை முத்தம் 
அத்தனைக்கும் ஆசை படு


ம்... ஆசை வந்தால் அவஸ்தை வருமே 
அறிவுரையை மாற்றி விடு

கண்ணில் இமை சுமையா 
பூங்காற்றுக்கு இலை சுமையா


அடடா உன் பேச்சு
என் காதுக்கு சுமை தானே

பாடவா புது பாட்டு


மயங்குறேன் அத கேட்டு

வெண்ணிலா சிறகடிக்க... வெளிச்சம் தான் வலை விரிக்க...
வெண்பனி முகம் துடைக்க...  வா வா ரசித்திருக்க...

செடியிலே பூ பறிக்க... வேருக்கு விரல் வலிக்க...
வலியைத்தான் எதில் மறைக்க... வசனம் நீ படிக்க...


யே அக்கா அக்கா ஏலக்கா
நீ அக்கம் பக்கம் பாரக்கா
யே தாவி போன தத்தக்கா
தள்ளி போன பித்தக்கா 
ஆட்டம் போட்டு பாடு சொக்கா



Friday, August 26, 2011

ஆட்டோகிராப் - நினைவுகள்

படம் : ஆட்டோகிராப் (2004)
இசை : பரத்வாஜ்

பாடியவர் :  
உன்னிமேனன்
பாடல் வரி : சேரன்






நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்
நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்
உன் உருவம் கண்களிலே பதிந்ததினால்
கண்ணீர் விட்டு கண்ணீர் விட்டு அழிக்கின்றேன்
தாய் தந்தைக்காக எனைப் பிரிய
காதலை காகிதமாய் தூக்கி எறிய
பெண்ணே உன்னால் முடிகிறதே
என்னால் ஏனோ முடியவில்லை
எனக்கே எனக்கே என்னைப் பிடிக்கவில்லை
காரணம் கேட்டால் தெரியவில்லை


நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்
நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்
உன் உருவம் கண்களிலே பதிந்ததினால்
கண்ணீர் விட்டு கண்ணீர் விட்டு அழிக்கின்றேன்


காத்திருந்து காத்திருந்து பழகியவன்
நீ என்னை கடக்கின்ற ஒரு நொடிக்காக
காத்திருந்து காத்திருந்து பழகியவன்
கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு பேசியவன்
நீ என்னை காதலிக்க உன் தாய்மொழியை
கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு பேசியவன்
நொடிகள் எல்லாம் நோய்பட்டு
எனை சுமந்து போக மறுக்கிறதே
மொழிகள் எல்லாம் முடமாகி
என் மெளனத்தைக் கூட எரிக்கிறதே
சுவாசிக்க கூட முடியவில்லை
எனை வாசிக்க மண்ணில் எவருமில்லை
என்னை எனக்கே பிடிக்கவில்லை
காரணம் கேட்டால் தெரியவில்லை


நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்
நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்
உன் உருவம் கண்களிலே பதிந்ததினால்
கண்ணீர் விட்டு கண்ணீர் விட்டு அழிக்கின்றேன்
தாய் தந்தைக்காக எனைப் பிரிய
காதலை காகிதமாய் தூக்கி எறிய
பெண்ணே உன்னால் முடிகிறதே
என்னால் ஏனோ முடியவில்லை
எனக்கே எனக்கே என்னைப் பிடிக்கவில்லை
காரணம் கேட்டால் தெரியவில்லை

Monday, July 4, 2011

ஆட்டோகிராப் - மனமே நலமா



படம் : ஆட்டோகிராப் (2004)
இசை : பரத்வாஜ்

பாடியவர் :  
பரத்வாஜ்
பாடல் வரி : சினேகன்




மனமே நலமா
உந்தன் மாற்றங்கள் நிஜமா
புது புது விதமா
ஏதோ வந்ததே சுகமா


நீ சொல்லு நடந்தது என்ன
எனை மாற்றி போனது என்ன
அவளை நான் கண்டுகொண்டேன்
அங்கே நான் தொலைந்து போனேன்


மனமே நலமா
உந்தன் மாற்றங்கள் நிஜமா
புது புது விதமா
ஏதோ வந்ததே சுகமா


நீ சொல்லு நடந்தது என்ன
எனை மாற்றி போனது என்ன
அவளை நான் கண்டு கொண்டேன்
அங்கே நான் தொலைந்து போனேன்

Saturday, April 23, 2011

கனா கண்டேன் - மூளை திருகும்


படம் : கனா கண்டேன் (2005)
இசை : 
வித்யா சாகர்
பாடியவர் :  ஸ்ரீனிவாஸ், கல்யாணி
பாடல் வரி : வைரமுத்து




காலை அரும்பி பகலெல்லாம் போதாகி 
மாலை மலரும் இந்நோய்

மூளை திருகும் மூச்சுக்குள் அடுப்பெரிக்கும் 
இடப்பக்கம் வலப்பக்கம் இதயம் பென்டுலம் ஆடும்

மூளை திருகும் மூச்சுக்குள் அடுப்பெரிக்கும் 
இடப்பக்கம் வலப்பக்கம் இதயம் பென்டுலம் ஆடும்
ஆடும்... ஆடும்.. ஆடும்....


வாய் மட்டும் பேசாது உடம்பெல்லாம் பேசும் 

வாய் மட்டும் பேசாது உடம்பெல்லாம் பேசும் 


இது மோசமான நோய் ரொம்ப பாசமான நோய்

இது மோசமான நோய் ரொம்ப பாசமான நோய்


மூளை திருகும் 

மூச்சுக்குள் அடுப்பெரிக்கும் 
இடப்பக்கம் வலப்பக்கம் இதயம் பென்டுலம் ஆடும்



மூளை இருந்த இடம் சூலை ஆகி விடும் 
அது தான் நோயின் ஆரம்பம் 

கால்கள் பறித்து கொண்டு சிறகை ஈரவல் தரும்
ஆனால் அதுவே ஆனந்தம் 

ஒரு கடிதம் எழுதவே கை வானை கிழிக்குமே 
விரல் எழுதி முடித்ததும் அதை கிழித்து போடுமே 

இது ஆண் நோயா பெண் நோயா 
காமன் நோய் தான் என்போமே 

மூளை திருகும் 

மூச்சுக்குள் அடுப்பெரிக்கும் 

இடப்பக்கம் வலப்பக்கம் இதயம் பென்டுலம் ஆடும் 
ஆடும் ... ஆடும் ... ஆடும் ....


சோற்றை மறுதலித்து விண்மீன் விழங்க சொல்லும் 
அன்னம் தண்ணீர் செல்லாது

நெஞ்சில் குழல் செலுத்தி குருதி குடித்து கொல்லும் 
வேண்டாம் என்றால் கேட்காது

ஒரு நண்பன் என்று தான் அது கதவு திறக்குமே 
பின் காதலாகியே வந்த கதவு சாத்துமே

இந்த நோயின்றி போனாலே 
வாழ்க்கை செளக்கியம் ஆகாதே 

மூளை திருகும் 

மூச்சுக்குள் அடுப்பெரிக்கும் 

இடப்பக்கம் வலப்பக்கம் இதயம் பென்டுலம் ஆ.....டும் 


வாய் மட்டும் பேசாது உடம்பெல்லாம் பேசும் 

வாய் மட்டும் பேசாது உடம்பெல்லாம் பேசும் 

இது மோசமான நோய் ரொம்ப பாசமான நோய்

இது மோசமான நோய் ரொம்ப பாசமான நோய்

Popular Posts