Monday, July 23, 2018

Thendral - Putham Puthu Paatu

படம் : தென்றல் (2004)
இசை : வித்யாஷாகர்
பாடியவர்கள் : புஷ்பவனம் குப்புசாமி, S.P.பாலசுப்ரமணியம்
பாடல்வரிகள்: வைரமுத்து

Image result for thendral (film) songs



வணக்கம் வணக்கம் வணக்கம்
நான் வாழும் பூமிக்கு வணக்கம்
இருக்கோ இல்லையோ தெரியாது
ஒரு வேளை இருந்தா சாமிக்கும் வணக்கம்
குத்த வெச்சு கூத்து பாக்கும் உங்களுக்கு வணக்கம்
உச்சியில வந்து பாக்கும் நிலாவுக்கும் வணக்கம்
பரம்பரை சொல்லி தந்த பாட்டுக்கும் தான் வணக்கம்
நான் பறை கொட்ட தோலு தந்த மாடுக்கும் தான் வணக்கம்
வணக்கம் வணக்கம் வணக்கம்

புத்தம் புது பாட்டு வந்தா தாண்டவகோனே
என் ரத்தம் எல்லாம் தீ புடிக்கும் தாண்டவகோனே
தப்பெடுத்து அடிக்கையிலே தாண்டவகோனே
என் நெத்தியிலே இடி இடிக்கும் தாண்டவகோனே
பாட்டு என்னும் சன்னல் வழி தாண்டவகோனே
என் பழைய காலம் தெரியுதடா தாண்டவகோனே
பாட்டு என்னும் சன்னல் வழி தாண்டவகோனே
என் பழைய காலம் தெரியுதடா தாண்டவகோனே

ஹேய்....
புத்தம் புது பாட்டு வந்தா தாண்டவகோனே
என் ரத்தம் எல்லாம் தீ புடிக்கும் தாண்டவகோனே
தப்பெடுத்து அடிக்கையிலே தாண்டவகோனே
என் நெத்தியிலே இடி இடிக்கும் தாண்டவகோனே


ஏ... மாடு வால புடிச்சி மாடகுளம் கடந்து
தாமர பூ பறிச்சி தந்தேனய்யா... என் மச்சினிக்கு
.. மஞ்சி விரட்டுக்குள்ள மயில காள அடக்கி
தங்க செயின் எடுத்து தந்தேனய்யா.... என் தங்கத்துக்கு
என் ஆனந்திக்கு புடிக்குமுன்னு ஆல மர பொந்துக்குள்ளே
ஆதியிலே புடிச்ச கிளி பாதியிலே பறந்திருச்சே
என் பச்சகிளி அது பறந்த பின்னே
நான் ஒத்தை கிளி நாள செத்த கிளி

தந்தன தந்தன... தந்தன தந்தன...
தந்தன தந்தன... தந்தன தந்தன...
தந்தன தந்தன... தந்தன தந்தன...
தந்தன தந்தன... தந்தன தந்தன...
ஆஆ... ஆஆ... ஆஆ... ஆஆ...


ராஜா டாக்கீஸுகுள்ள ரகசியமா நான் குதிக்க
பாஞ்சி புடிச்சானே பாளையத்தான்... அந்த ரங்கசாமி
நேத்து நெனவாக நாள கனவாக
இன்று என் காலடியில் நழுவுதடா... மனம் உருகுதடா

வந்த தேதி சொன்னதுண்டு
வாழ்ந்த தேதி நெஞ்சில் உண்டு
போகும் தேதி எந்த தேதி
ஊரில் யாரும் சொன்னதுண்டா
போகும் தேதி என் போல் கண்டாருண்டா
அதை கண்டு கொண்ட நானும் கடவுள் தாண்டா

பறை... பறை... பறை... பறை...
பறை... பறை... பறை... பறை...
விலங்கு விரட்ட பிறந்த பறை
கை விலங்கு ஒடிக்க ஒலிக்கும் பறை
கடைசி தமிழன் இருக்கும் வரை
காதில் ஒலிக்கும் பழைய பறை
வீர பறை வெற்றி பறை
போர்கள் துடிக்கும் புனிதப் பறை
கயிறு கட்டி கடலின் அலையை நிறுத்த முடியுமா
விரலை வெட்டி பறையின் இசையை ஒடுக்க முடியுமா
இது விடுதலை இசை புது வீறுகொள் இசை 
வேட்டை ஆடி வாழ்ந்த எங்கள் மக்களின் இசை


என் பாட்டன் முப்பாட்டான்களோட போய் சேரப் போறேன்
இப்போ நான் மறுபடியும் அம்மா கர்ப்ப பையிலேயே படுத்துகிட்டேன்
எல்லாரும் அம்மாவோட வயிதுகுள்ள இருக்குரப்ப 
தெரியுமாமே ஒரு இருட்டு அது இப்போ எனக்கு தெரியுது 
கத கதப்பா இருக்கு
நான் மறுபடியும் பொறந்து வருவேன்டா
பத்திரமா பாத்துகுங்க என் பறையை
என் அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் தாண்டவகோனே
என் தப்பு சத்தம் கேட்டிடுமா தாண்டவகோனே

Popular Posts