Showing posts with label M Kumaran s/o Mahalakshmi. Show all posts
Showing posts with label M Kumaran s/o Mahalakshmi. Show all posts

Sunday, May 12, 2013

M குமரன் S/O மகாலெட்சுமி - நீயே நீயே

படம்: M குமரன் S/O மகாலெட்சுமி
இசை: ஸ்ரீகாந்த் தேவா
பாடியவர்: கே கே





நீயே நீயே நானே நீயே
நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே

நீயே நீயே நானே நீயே

நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே
தந்தை நீயே தோழன் நீயே
தாலாட்டிடும் என் தோழி நீயே
ஏப்ரல் மே வெயிலும் நீயே
ஜூன் ஜூலை தென்றலும் நீயே... ஐ லைக் யூ
செப்டம்பர் வான் மழை நீயே
அக்டோபர் வாடையும் நீயே... ஐ தேங்க் யூ
உன்னை போல் ஓர் தாய் தான் இருக்க
என்ன வேண்டும் வாழ்வில் ஜெயிக்க


நீயே நீயே நானே நீயே
நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே
தந்தை நீயே தோழன் நீயே
தாலாட்டிடும் என் தோழி நீயே


என் கண்ணில் ஈரம் வந்தால்
என் நெஞ்சில் பாரம் வந்தால்
சாய்வேனே உன் தோளிலே
கண்ணீரே கூடாதென்றும்
என் பிள்ளை வாடாதென்றும்
சொல்வாயே அந்நாளிலே
இனியொரு ஜென்மம் எடுத்து வந்தாலும்
உன் மகனாகும் வரம் தருவாய்
உன் வீட்டு சின்ன குயில் 
நீ கொஞ்சும் வண்ணக் குயில் நாந்தானே
நான் வயதில் வளர்ந்தால் கூட
மடி ஊஞ்சல் வேண்டும் ஆட


வேருக்கு நீரை விட்டாய்
நீராய் கண்ணீரை விட்டாய்
பூவாச்சு என் தோட்டமே
உன் பேரை சொல்லும் பிள்ளை
போராடி வெல்லும் பிள்ளை
பூமாலை என் தோளிலே
இளம்பிறை என்று இருந்தவன் என்னை
முழு நிலவாய் நீ வடிவமைத்தாய்
வற்றாத கங்கை நதியாய்
தேயாத மங்கை மதியாய் நீ வாழ்க
புது விடியல் வேண்டும் எனக்கு
எந்த நாளும் நீதான் கிழக்கு


நீயே நீயே நானே நீயே
நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே
தந்தை நீயே தோழன் நீயே
தாலாட்டிடும் என் தோழி நீயே


Thursday, March 17, 2011

M.குமரன் S/O மகாலட்சுமி - சென்னை செந்தமிழ்



படம் : M.குமரன் S/O மகாலட்சுமி (2004)
இசை :  ஸ்ரீகாந்த் தேவா
பாடியவர் :  ஹரீஸ்ராகவேந்திரா
பாடலாசிரியர் : 
 நா.முத்துகுமார்










சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே 
சென்னை செந்தமிழ் முழுவதும் மறந்தேன் 
கேரள நாட்டு கிளியே நீ சொல்லு வசியம் வைத்தாயோ 
சென்னை செந்தமிழ்.... மறந்தேன் உன்னாலே....


சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே 
சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே 
நேந்திரம பழமே நெய்மேனி நதியே மிளகு கொடியே 
நான் சென்னை செந்தமிழ் முழுவதும் மறந்தேன் 


சகி உன்னிடம்... ஆ... ஆ....
சகி உன்னிடம் செம்பருத்தி பூ நிறம் 
சகி உன்னிடம் செம்பருத்தி பூ நிறம் 
சாலையில் நீ நடந்தால் விபத்துகள் ஆயிரம் 
உன்னை காணவே நிலவும் தோன்றிடும் 
ஆ... உன்னை காணவே நிலவும் தோன்றிடும் 
இத்தனை அழகா என்று தேய்ந்திடும் 


சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே 
சென்னை செந்தமிழ் 
ஹேய் த... ர.. தட்... தட்....டா.... ர....


காதல் கதக்களி 
காதல் கதக்களி கண்களில் பார்க்கிறேன் 
காதல் கதக்களி கண்களில் பார்க்கிறேன் 
திருவோணம் திருவிழா இதயத்தில் பார்க்கிறேன் 
பாக்கு மரங்களை கழுத்தில் பார்க்கிறேன் 
பாக்கு மரங்களை கழுத்தில் பார்க்கிறேன் 
பேசும் ரோஜா உதட்டில் பார்க்கிறேன் 

சென்னை செந்தமிழ் மறந்தேன் உன்னாலே 
சென்னை செந்தமிழ் முழுவதும் மறந்தேன் 
கேரள நாட்டு கிளியே நீ சொல்லு வசியம் வைத்தாயோ 
சென்னை செந்தமிழ்.... மறந்தேன் உன்னாலே....

Popular Posts