Showing posts with label M Ghibran. Show all posts
Showing posts with label M Ghibran. Show all posts

Sunday, February 27, 2022

Thirumanam Enum Nikkah - Enthaaraa Enthaaraa

 படம் : திருமணம் என்னும் நிக்காஹ் (2014)

இசை : ஜிப்ரான்

பாடியவர்கள் : ஷாதாப் ஃபரிதி, சின்மயி

பாடல்வரிகள் : கார்த்திக் நேத்தா






என்தாரா என்தாரா நீயே என் தாரா

என் மனம் பூத்ததே தாரா

கண்பூரா கண்பூரா நீயேதான் தாரா

கண்ணாரக் காண்கிறேன் பூரா

தண்ணீரை கூசிக் கொண்டு

மெல்ல செல்லும் பிம்பங்கள் நீயாகிறாய்

எதிரே என்னோடு காதல் வந்தே

என்ன சொல்ல வெட்கங்கள் பேசுதே


உன்தாரா உன்தாரா நானே உன்தாரா

என் வானம் பூத்ததே சீரா

கண்பூரா கண்பூரா நீயேதான் வீரா

என் பார்வை ஆனதே கூரா

தண்ணீரை கூசிக் கொண்டு

மெல்ல செல்லும் பிம்பங்கள் நீயாகிறாய்

எதிரே என்னோடு காதல் வந்து

என்ன சொல்ல வெட்கங்கள் பேசுதே



ஏனோ இன்று ஏனோ

நா.....ன் உந்தன் நானோ

நீயோ இல்லை நானோ

நா....ம் என்னும் நாமோ


தூண்டிலா..... நீ ஊஞ்சலா


தூரலா நீ..... காணலா


ப்ரேத்யேக மௌனம் நீ கொண்டு வந்தாய் 

என் வார்த்தை ஆனதே

இல்லாத ஊரில் இல்லாத பேரில்

நம் காதல் வாழுமே 


ஒய் நம் காதல் வாழுமே



உன் அசைவினில் என் திசைகளை 

பட படவென தந்தாய்

மின்மினிகளை உன் விழிகளில் கொண்டாய்

கண் இமைகளில் என் இரவினை

கத கதப்புடன் தந்தாய்

கண் அவிழ்கையில் வெண்ணிலவொளி தந்தாய்


பிரம்மாண்ட காலம் நீ தந்து சென்றாய்

என் நாட்கள் தீர்ந்ததே

உன் பாத சூட்டில் என் காதல் பூக்கும்

நம் தேடல் தீருமே.....



என்தாரா என்தாரா நீயே என் தாரா

என் மனம் பூத்ததே தாரா

கண்பூரா கண்பூரா நீயேதான் தாரா

கண்ணாரக் காண்கிறேன் தாரா


தண்ணீரை கூசிக் கொண்டு

மெல்ல செல்லும் பிம்பங்கள் நீயாகிறாய்

எதிரே என்னோடு காதல் வந்து

என்ன சொல்ல...


வெட்கங்கள் பேசுதே...

Tuesday, April 28, 2020

Arivum Anbum

படம்: அறிவும் அன்பும் (2020)
இசை: ஜிப்ரான்
பாடியவர்கள்: கமல்ஹாசன், பாம்பே ஜெயஸ்ரீ, அண்டிரியா, யுவன் சங்கர் ராஜா, அனிருத், சித்தாத், முகின் ராவ், சித் ஸ்ரீராம், சங்கர் மகாதேவன், ஸ்ருதி ஹாசன், தேவி ஸ்ரீபிரசாத்
பாடல்வரிகள்: கமல்ஹாசன்





பொது நலமென்பது
தனி மனிதன்‌ செய்வதே
தன்‌ நலமென்பதும்‌
தனி நபர்கள்‌ செய்வதே


பொது நலமென்பது
தனி மனிதன்‌ செய்வதே
தன்‌ நலமென்பதும்‌
தனி நபர்கள்‌ செய்வதே

அலாதி அன்பிருந்தால்‌
அனாதை யாருமில்லை

அடாத துயர்‌ வரினும்‌
விடாது வென்றிடுவோம்‌

அகண்ட பாழ்‌ வெளியில்‌
ஓர்‌ அணுவாம்‌ நம்முலகு
அதில் நீரே பெருமளவு
நாம்‌ அதிலும்‌ சிறிதளவே

சரி சமம்‌ என்றிடும்‌ முன்பு
உனைச்‌ சமம்‌ செய்திடப்‌ பாரு
சினையுறும்‌ சிறு உயிர்‌ கூட
உறவெனப்‌ புரிந்திடப்‌ பாரு

சரி சமம்‌ என்றிடும்‌ முன்பு
உனைச்‌ சமம்‌ செய்திடப்‌ பாரு
சினையுறும்‌ சிறு உயிர்‌ கூட
உறவெனப்‌ புரிந்திடப்‌ பாரு

உலகிலும்‌ பெரியது 
உம்‌ அகம்‌ வாழ்‌ அன்பு தான்‌

உலகிலும்‌ பெரியது
நம்‌ அகம்‌ வாழ்‌ அன்பு தான்‌


புதுக்‌ கண்டம்‌ புது நாடு
என வென்றார்‌ பல மன்னர்‌
அவர் எந்நாளும்‌ எய்தாததை

சிலர் பண்பால்‌ உள்ளன்பால்‌
உடன்‌ வாழ்ந்து உயிர்‌ நீத்து 
அதன்‌ பின்னாலும் சாகாத
உணர்வாகி உயிராகிறார்‌

சரி சமம்‌ என்றிடும்‌ முன்பு
உனைச்‌ சமம்‌ செய்திடப்‌ பாரு
சினையுறும்‌ சிறு உயிர்‌ கூட
உறவெனப்‌ புரிந்திடப்‌ பாரு

சரி சமம்‌ என்றிடும்‌ முன்பு
உனைச்‌ சமம்‌ செய்திடப்‌ பாரு
சினையுறும்‌ சிறு உயிர்‌ கூட
உறவெனப்‌ புரிந்திடப்‌ பாரு

அழிவின்றி வாழ்வது 
நம்‌ அறிவும்‌ அன்புமே
அழிவின்றி வாழ்வது
நம்‌ அறிவும்‌ அன்புமே

சரி சமம்‌ என்றிடும்‌ முன்பு
உனைச்‌ சமம்‌ செய்திடப்‌ பாரு
சினையுறும்‌ சிறு உயிர்‌ கூட
உறவெனப்‌ புரிந்திடப்‌ பாரு

சரி சமம்‌ என்றிடும்‌ முன்பு
உனைச்‌ சமம்‌ செய்திடப்‌ பாரு
சினையுறும்‌ சிறு உயிர்‌ கூட
உறவெனப்‌ புரிந்திடப்‌ பாரு

அழிவின்றி வாழ்வது
நம்‌ அறிவும்‌ அன்புமே...

Wednesday, October 17, 2018

Aan Dhevathai - Pesugindren Pesugindren

ப‌டம் : ஆண் தேவதை (2018)
இசை : ஜுப்ரான்
பாடியவர் : சைத்ரியா அப்படிபுடி
பாடல்வரிகள் : கார்த்திக் பிரசன்னா

Related image



பேசுகின்றேன் பேசுகின்றேன்
பேச்சை தாண்டி வந்து பேசுகின்றேன்
ஓசை எல்லாம் வேஷம் என்றே
உள்ளிருந்தே உள்ளம் பேசுகின்றேன்

வாழ்கின்ற நேரத்தை வாழ்கின்ற நேரத்தில்
வாழ்கின்ற நேர்மை தான் வாழ்க்கையாகும்
தூரத்தில் காண்கின்ற மேகத்தின் பிரம்மாண்டம்
மழையாகி விழும்போது துணையாய் மாறும்

பேசுகின்றேன் பேசுகின்றேன்
பேச்சை தாண்டி வந்து பேசுகின்றேன்
உள்ளிருந்தே உள்ளம் பேசுகின்றேன்


தனக்கென பிடித்த ஒன்றை
சலனத்தில் தவற விட்டு
பழங்கதை புழுதியிலே ஏனிந்த மோதல்
இருப்பதை ரசித்து கொண்டு
கிடைப்பதில் உயர்வு கொண்டு
மகிழ்ச்சியில் திளைத்திருந்தால் தீராதே காதல்

மீனோடு வாழ்நாளும் அலைகளில் இல்லை நாற்றம்
நாம் காணும் எல்லாமே முரண்களின் சிநேகம்
மாட்டாத காற்றுக்கு ஏன் பலவித தூண்டில்
எந்நாளும் ஏன் இந்த கோமாளி தேடல்
அட முயல் ஆமை கதையாச்சு உலகமே சலனமே
அகந்தை கூட மரணமே

பேசுகின்றேன் பேசுகின்றேன்
பேச்சை தாண்டி வந்து பேசுகின்றேன்
ஓசை எல்லாம் வேஷம் என்றே
உள்ளிருந்தே உள்ளம் பேசுகின்றேன்

வாழ்கின்ற நேரத்தை வாழ்கின்ற நேரத்தில்
வாழ்கின்ற நேர்மை தான் வாழ்க்கையாகும்
தூரத்தில் காண்கின்ற மேகத்தின் பிரம்மாண்டம்
மழையாகி விழும் போது துணையாய் மாறும்

பேசுகின்றேன் பேசுகின்றேன்
பேச்சை தாண்டி வந்து பேசுகின்றேன்
உள்ளிருந்தே உள்ளம் பேசுகின்றேன்

Monday, October 8, 2018

Aan Dhevathai - Nigara Than Nigara

படம் : ஆண் தேவதை (2018)
இசை : ஜுப்ரான்
பாடியவர் : வினித் சீனிவாசன்
பாடல்வரிகள் : செளந்தராஜன் K


Related image




நிகரா தன் நிகரா ஓர் தாலாட்டு நீ

இதமாய் பெரிதமாய் ஓர் தந்தை மொழி
மயில்தோகையாய் இவன் வாசனை 
தாயாகிடும் ஆண் தேவதை 
அன்பின் உயரம் உருவம் தாயுமானவன்

நிகரா தன் நிகரா ஓர் தாலாட்டு நீ

இதமாய் பெரிதமாய் ஓர் தந்தை மொழி


உலகை இந்த உலகை அறிமுகம் செய்யும் ஒருவன்

ஒளியாய் வழித்துணையாய் விர‌ல் பிடித்திடும் தலைவன்
பிழையை நம் பிழையை திருத்திடும் ஒரு கவிதை
தந்தை உன் நிழலில் நிலைத்திடுமா கவலை
தாயாக மாற முயல்வாய் பல நேரம்
உனைமீறி அடைவாய் பிள்ளையெனும் வேடம்
தாய்பட்டம் நெஞ்சோடு சுமக்கும் தந்தையே

நிகரா தன் நிகரா ஓர் தாலாட்டு நீ

இதமாய் பெரிதமாய் ஓர் தந்தை மொழி
மயில்தோகையாய் இவன் வாசனை
தாயாகிடும் ஆண் தேவதை 
அன்பின் உயரம் உருவம் தாயுமானவன்


மடியே இவன் மடியே மரகத தலையணையே

மழலை தன் மழலை குறும்பினில் இவன் நகலே 
விடியல் புது விடியல் கொடுத்திடும் கதிரவனே
நிலவும் கண்வளரும் கதைகளை கதைப்பவனே
தாயென்ற ஒன்றில் பால் என்பதில்லை
தன்கண்கள் ரெண்டால் பாலூட்டும் அன்னை
உயிர்தந்து தனைதந்திடும் தந்தைக்கினையில்லை

நிகரா தன் நிகரா ஓர் தாலாட்டு நீ

இதமாய் பெரிதமாய் ஓர் தந்தை மொழி
மயில்தோகையாய் இவன் வாசனை 
தாயாகிடும் ஆண் தேவதை 
அன்பின் உயரம் உருவம் தாயுமானவன்
நிகரா தன் நிகரா ஓர் தாலாட்டு நீ

Thursday, August 30, 2018

Vishwaroopam 2 - Naanaagiya

படம் : விஸ்வரூபம் 2 (2018)
இசை: M. ஜீப்ரான்
பாடியவர்கள் : கமல்ஹாசன், கெளசிகி சக்ரபூர்தி, மாஸ்டர் கார்த்திக், சுரேஷ் ஐயர்
பாடல்வரிகள் : கமல்ஹாசன்


Image result for Vishwaroopam 2



நானாகிய நதி மூலமே 
தாயாகிய ஆதாரமே 
எனை தாங்கிய கருக்குடம்
இணையேயில்லா திருத்தலம்
அனுதினமும் நான் நினைந்திருக்கிறேன் 
அனுதினமும் உனை ம்நினைந்திருக்கிறேன்

உன் போல நான் உயிரானதும் 
பெண் என்ற நான் தாயானதும்
பிறந்த பயனாய் உன்னை பெரும்
சிறந்த பெருமை நிகழ்ந்ததும்
அனுதினமும் நான் நினைந்திருக்கிறேன்  
அனுதினமும் நான் நினைந்திருக்கிறேன் 


அம்மாவும் நீ அப்பாவும் நீ
அன்பால் எனை ஆண்டாளும் நீ
பிறந்த பயனாய் உனை பெரும் 
சிறந்த பெருமை நிகழ்ந்ததும்
அனுதினமும் நான் நினைந்திருக்கிறேன் 


உன் மனதின் சாயலுள்ள
பெண் உருவைத் தேடினேன்
பழங்கனவைக் கானலிலே
கண்கலங்க காண்கிறேன்
பழையபடி நினைவுகள் திரும்பிடும்
பிறந்தமடி சாய்ந்திடக் கிடைத்திடும்
நாள் வருமோ திருநாள் வருமோ

நானாகிய நதி மூலமே 
தாயாகிய ஆதாரமே 
எனை தாங்கிய கருக்குடம்
இணையேயில்லா திருத்தலம்
அனுதினமும் நான் நினைந்திருக்கிறேன்

Wednesday, February 14, 2018

Theeran Adhigaram Ondru - Laali Laali

ப‌டம்: தீரன் அதிகாரம் ஒன்று (2017)
இசை: M. ஜிப்ரான்
பாடியவர்: சத்ய பிரகாஷ், ப்ரகதி குருபிரஷாத்
பாடல்வரிகள்: ராஜு முருகன்


Image result for theeran adhigaaram ondru mp3




சின்ன சின்ன கண் அசைவில்
உன் அடிமை ஆகவா
செல்ல செல்ல முத்தங்களில்
உன் உயிரை வாங்கவா
லாலி... லாலி... நான் உன் தூழி... தூழி...

மெல்ல மெல்ல என்னுயிரில்
உன்னுயிரும் அசையுதே
துள்ள துள்ள என் இதயம்
நம்முயிரில் நிறையுதே
லாலி... லாலி... நீ என் தூழி... தூழி...

உன்னை அள்ளி ஏந்தியே
ஒரு யுகம் போகவா
தலை முதல் கால் வரை
பணிவிடை பார்க்கவா
லாலி... லாலி... நான் உன் தூழி... தூழி...

லாலி... லாலி... நீ என் தூழி... தூழி...


காலை அணைப்பின் வாசமும்
காதல் கிறங்கும் சுவாசமும்
சாகும்போதும் தீர்ந்திடாது வா உயிரே

காலில் உதைக்கும் பாதமும்
மார்பில் கிடக்கும் நேரமும்
வாழும் வரைக்கும் தேய்ந்திடாது வா உயிரே
ஆணில் தாய்மை கருவாகும்
ஈரம் பூத்து மழையாகும்

கண்ணில் சுகமாய் இமை மீறும்
காலம் உந்தன் வரமாகும்


சின்ன சின்ன கண் அசைவில்
உன் அடிமை ஆகவா
செல்ல செல்ல முத்தங்களில்
உன் உயிரை வாங்கவா
லாலி... லாலி... நான் உன் தூழி... தூழி...

மெல்ல மெல்ல என்னுயிரில்
உன்னுயிரும் அசையுதே
துள்ள துள்ள என் இதயம்
நம்முயிரில் நிறையுதே
லாலி... லாலி... நீ என் தூழி... தூழி...

என்னை அள்ளி ஏந்தியே
ஒரு யுகம் போகவா
தலை முதல் கால் வரை
பணிவிடை பார்க்கவா

லாலி... லாலி... நீ என் தூழி... தூழி...
லாலி... லாலி... நீ என் தூழி... தூழி...
லாலி... லாலி... நீ என் தூழி... தூழி...

Sunday, February 5, 2017

Adhe Kangal - Thandhiraa

படம் :அதே கண்கள் (2017)
இசை :  ஜிப்ரான்
பாடியவர்: ராஜன் செல்லையா, கணேஷ், லியோனாட்(விசில்)
பாடல் வரிகள் :  அனுராதா



Image result for adhe kangal 2017 songs



அடியே நீ களவாணி குட்டி காட்டேரி
கண்ணாடி தேகத்தில் காட்டாறு நீ

அடியே நீ களவாணி குட்டி காட்டேரி
அலட்டாமல் விளையாடும் கில்லாடி நீ

கருவண்டு கண்ணுக்குள்
ஒரு வண்டு பொய் தானே
அமுல் பேபி மேக்கப்பில்
அனகோண்டா நீ

தந்திரா... தந்திரா... 
தந்திரா... தந்திரா... தந்திரா...


அழகான சதிகாரி அடங்காபிடாரி
சிதறாமல் பந்தாடும் சிறு மர்மம் நீ

அழகான சதிகாரி அடங்காபிடாரி
பார்பி டால் கெட்டபில் பச்சோந்தி நீ

பசு தோலில் புலி தானே
படியாத மான் தானே
வெளி வேசம் எல்லாமே
வெளிச்சம் ஆச்சே

தந்திரா... தந்திரா... 
தந்திரா... தந்திரா... தந்திரா...


அழகான ஒரு ஆபத்தே இவள் தானே
விலகு விலகு வினையும் இவளே

அதிவேகம் பெண் மதிதானே புயல் தானே
கொடிய கொடிய அனலும் இவளே

தந்திரா... தந்திரா... 
தந்திரா... தந்திரா... தந்திரா...


அடியே நீ களவாணி குட்டி காட்டேரி
கண்ணாடி தேகத்தில் காட்டாறு நீ

கருவண்டு கண்ணுக்குள் 
ஒரு வண்டு பொய் தானே
அமுல் பேபி மேக்கப்பில் 
அனகோண்டா நீ

தந்திரா... தந்திரா... 
தந்திரா... தந்திரா... தந்திரா...

Friday, July 24, 2015

பாபநாசம் - ஏயா என் கோட்டிக்காரா

படம்: பாபநாசம் (2015)
இசை: M.ஜிப்ரான்
பாடியவர்: சுந்தர் நாராயணராவ், மாளவிகா
பாடல்வரிகள்: நா.முத்துகுமார்









ஏயா என் கோட்டிக்காரா
அட வாயா என் வேட்டக்காராா
குத்தால சாரல் போல் தல தட்டும் சேட்டக்காரா
செத்தாலும் வாழ்ந்தாலும் நீதான் என் சோட்டுக்காரா

யே எட்டி என் கோட்டிக்காரி

அடி ஏளா என் வேட்டக்காரி
குத்தால சாரல் போல் தல தட்டும் சேட்டைக்காரி
செத்தாலும் வாழ்ந்தாலும் நீதான் என் சோட்டுக்காரி

தேடி சேத்த காசு போல் காதல் இருக்குதா

கொஞ்சமாக எடுக்குற கஞ்சம் தடுக்குதா

காசப்போல காதலும் செலவுக்கில்லட்டி

கோடி முத்தம் வாங்கிக்கோ கஞ்சம் இல்லட்டி


சின்னப்புள்ள நான்தான் பெண்ணே உண்மையல்லோ

என்ன தாங்க இப்போ மூணு அம்மையல்லோ

பாலருவியும் தேனருவியும் ஐந்தருவியும் உன் நேசத்தின் 

முன்னே முன்னே தோத்தே போகும் மண்ணில் சொர்கமிது

ஏயா என் கோட்டிக்காரா
அட வாயா என் வேட்டக்காராா
குத்தால சாரல் போல் தல தட்டும் சேட்டக்காரா
செத்தாலும் வாழ்ந்தாலும் நீதான் என் சோட்டுக்காரா

காசப்போல காதலும் செலவுக்கில்லட்டி
கோடி முத்தம் வாங்கிக்கோ கஞ்சம் இல்லட்டி


தட்டான் பூச்சி போல வண்ணம் அள்ளி தாரே

கண்ணில் இன்னும் வேற ஏதோ சொல்லி தாரே

நான் நினைச்சதும் நீ நினைச்சதும் நூழிலையில் தான் வழுக்கிட

பேசி பேசி இன்னும் பேசி பேசாநிலை வருமோ

தேடி சேத்த காசு போல் காதல் இருக்குதா
கொஞ்சமாக எடுக்குற கஞ்சம் தடுக்குதா

காசப்போல காதலும் செலவுக்கில்லட்டி

கோடி முத்தம் வாங்கிக்கோ கஞ்சம் இல்லட்டி

Saturday, November 1, 2014

Thirumanam Enum Nikkah - Chillendra Chillendra

படம் : திருமணம் என்னும் நிக்காஹ் (2014)
இசை : ஜிப்ரான் 
பாடியவர்கள் : சுந்தர் நாராயன ராவ் - கௌஷிகி சக்ரபர்டி -
                         முன்னா சௌகத் அலி -  ஜிப்ரான்
பாடல்வரிகள் : காதல்மதி - முன்னா சௌகத் அலி





ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... 
யா மெரே மோலா 
ஷுகுரு ஹே தேரா
யா மெரே மோலா 
ஷுகுரு ஹே தேரா

சில்லென்ற சில்லென்ற காற்றிலே
சிறகை விரித்தேனே

சில்லென்ற சில்லென்ற காற்றிலே
சிறகை விரித்தேனே
மெஹந்தி வரைந்த வானிலே
தேடி அலைந்தேனே

ஹமாரே திலோங்கா ஹே கெஹெனா

நேசத்தின் சாரல்கள் தூவத் தூவ

தேரி பியாரி அதாஏ தேரா பாங்க் பன்   
க்யா பாத் ஹே வல்லா

வானில் உதிர்ந்த இறகொன்று 
காற்றின் கன்னங்களில் 
கவிதை எழுதியதே

சில்லென்ற சில்லென்ற காற்றிலே
சிறகை விரித்தேனே
சிறகை விரித்தேன் 
தேடி அலைந்தேன்... ஓ.. ஓ.. ஓஓஓ...

யா மெரே மோலா 
ஷுகுரு ஹே தேரா
யா மெரே மோலா 
ஷுகுரு ஹே தேரா
ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... 


கர்தேஷே துனியா...
சுற்றிடும் உலகம் 
சுழலும் ஓசையும்
காதில் கேட்குமா

மௌனத்தின் வெளியில் 
ஓம்கார ஒலியும்
ஆமீனும் கேட்குமே

உன் மூச்சு நின்றாலும் 
உன்னைத் தான் நீங்காத சொந்தம் எது

கண் மூடிப் போனாலும் 
உன்னோடு சாய்கின்ற நிழல் தானது

என்னைப் போல் பெண் ஒன்று
அச்சாக இன்னொன்று கண்டேனே நான் 
இன்று யாரென்று சொல்

தாயா... உன் சேயா...

நேசத்தை சொல்ல 
வார்த்தை வசப்படுமா

சில்லென்ற சில்லென்ற காற்றிலே
சிறகை விரித்தேனே

மெஹந்தி வரைந்த வானிலே
பாடிப் பறந்தேனே


இரண்டு வானம் விண்மீன் கூட்டம்
வட்ட நிலா என்ன?

ஏழை ஒருவன் கந்தல் குடை போல்
தொலைந்த என் மனம்

ஆ... மெல்லிய வெப்பத்தில் மேகத்தின் குளிர்சியின்
சலனம் தான் என்ன?

சட்டென்று தூவிடும் நட்பென்னும் பூ மழை
சாரலே அது

எல்லாமே நீயாக எண்ணத்தில் பூவாக
சொல்லாத சொல்லொன்று என்னென்று சொல்

பாசமா... நேசமா...

மெஹபூபு மேரா ஹோ 
பொஹத்து கூபு சஜ்னா...  
வாழ்வே உன்னோடு   
என்னுடன் இணைந்திட வா

இனி எல்லாம் நீ தான் 
நீயே நான் தான்

ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... 
யா மெரே மோலா 
ஷுகுரு ஹே தேரா

சில்லென்ற சில்லென்ற காற்றிலே
சிறகை விரித்தேனே
சிறகை விரித்தேனே 
பாடிப் பறந்தேனே

யா மெரே மோலா 
ஷுகுரு ஹே தேரா
யா மெரே மோலா 
ஷுகுரு ஹே தேரா
ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... 


Friday, October 31, 2014

Thirumanam Enum Nikkah - Kannukkul Pothivaippen

படம் : திருமணம் என்னும் நிக்காஹ்
இசை : ஜிப்ரான்
பாடியவர்கள் : சாருலதா மணி, சாதனா சர்கம், கணேஷ், விஜய் பிரகாஷ்
பாடல்வரிகள் : பார்வதி




கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்
என் செல்ல கண்ணனே வா!
த்தித்தி ததை ஜதிக்குள்
என்னோடு ஆட வா வா!
அடிக் கடி உன்னை பிடிக்க நான் மன்றாடிட
இடப் புறம் விரல் மடக்கி நீ டு காட்டிட
என் கண்ணனே வாடா வா!
விஷம கண்ணனே வாடா வா!
கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்
என் செல்ல கண்ணனே வா!
த்தித்தி ததை ஜதிக்குள்
என்னோடு ஆட வா வா!

அடிக் கடி உன்னை பிடிக்க நான் மன்றாடிட
இடப் புறம் விரல் மடக்கி நீ டு காட்டிட

என் கண்ணனே வாடா வா!
விஷம கண்ணனே வாடா வா!


சிறு சிட்டிகை பாசம்
பெரும் கடலாய் மாற
மணித்துளி எல்லாமே
அரை நொடிக்குள் தீர

மழை தரையாய் உள்ளம்
பிசுபிசிப்பை பேண
எதற்கடி திண்டாட்டம்
கதகதப்பைக் காண !

நீ ராதே இனம்
சொல்லாமல் சொன்னாயே

செங்கோதை மனம்
உன் பேச்சில் தந்தாயே
உன்னாலே… யோசிக்கிறேன்…

உன் விரலை பிடித்து நடக்கும் நிமிடம் யாசிக்கிறேன்!

கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்
என் செல்ல கண்ணனே வா!
த்தித்தி ததை ஜதிக்குள்
என்னோடு ஆட வா வா!
அடிக் கடி உன்னை பிடிக்க நான் மன்றாடிட
இடப் புறம் விரல் மடக்கி நீ டு காட்டிட
என் கண்ணனே வாடா வா!
விஷம கண்ணனே வாடா வா!


உயிர் எதையோ தேடும்
மனம் அதையே நாடும்
தனித்தனியே ரெண்டும்
ஒரு வழியில் ஓடும்

எது எதற்கோ பொய்கள்
எதிர் எதிராய் மெய்கள்
எது எதுவாய் ஆகும்
விடை கடந்தே போகும்!

கண்ணாடி முனைப் போல்
எண்ணங்கள் கூராய்

முன் இல்லாததை போல்
எல்லாமே வேறாய்
உன்னாலே… பூரிக்கிறேன்…

உன் சிரிப்பு சரத்தில் மகிழ மரத்தில் பூ தைக்கிறேன்!

கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்
என் செல்ல கண்ணனே வா!
த்தித்தி ததை ஜதிக்குள்
என்னோடு ஆட வா வா!

அடிக் கடி உன்னை பிடிக்க நான் மன்றாடிட

இடப் புறம் விரல் மடக்கி நீ டு காட்டிட

என் கண்ணனே வாடா வா!
விஷம கண்ணனே வாடா வா!


குட்டி புலி - காத்து காத்து

படம் : குட்டி புலி (2013)
இசை : M. ஜிப்ரான்
பாடியவர்கள் : கோல்டு தேவராஜ்
பாடல்வரிகள் : வைரமுத்து





ஹூ... ஹே... ஹூ... ஹே...
ஹூ... ஹே... ஹூ... ஹே...

காத்து காத்து வீசுது பொண்ணு காத்து வீசுது
பாத்து பாத்து வீசுது என்ன பாத்து வீசுது
இவ எந்த ஊருகாரியோ இந்த மின்னு மின்னுறா
கரண்ட் இல்லா ஊருக்கு கரண்ட் உண்டு பண்ணுறா

தோ தோ பாக்குறா... பத்த வைக்க பாக்குறா...
தோ தோ நிக்குறா... நெஞ்ச தூக்கி நிக்குறா...
தோ தோ தோ பூக்குறா... போகும் போதே பூக்குறா...
தோ தோ தோ தோ வாங்குறா... எங்க மூச்ச வாங்குறா...

காத்து காத்து வீசுது பொண்ணு காத்து வீசுது
பாத்து பாத்து வீசுது என்ன பாத்து வீசுது


ஒய்யாரே...
ஒய்யா ஒய்யா ஒய்யா ஒய்யா
ஒய்யா ஒய்யா ஒய்யா ஒய்யா
ஒய்யா ஒய்யா ஒய்யா ஒய்யா
ஒய்யா ஒய்யா ஒய்யா ஒய்யாரே...

முன்னால பாத்தா அவ கேரளத்து வள்ளி தான் ஆஆஆ...
பின்னால பாத்தா அவ கன்னடத்து கன்னி தான் ஆஆஆ...
இடுப்பு மட்டும் ஆந்திரா கொழுப்பு நம்ம ஊருடா
தென்னகத்து வீதியில் திராவிடத்து செல்வி 
போறாளே... போறாளே... போறாளே...
கோவில் தேர்போல

தோ தோ பாக்குறா... பத்த வைக்க பாக்குறா...
தோ தோ நிக்குறா... நெஞ்ச தூக்கி நிக்குறா...
தோ தோ தோ பூக்குறா... போகும் போதே பூக்குறா...
தோ தோ தோ தோ வாங்குறா... எங்க மூச்ச வாங்குறா...ஆஆஆஆஆ...

காத்து காத்து வீசுது பொண்ணு காத்து வீசுது
பாத்து பாத்து வீசுது என்ன பாத்து வீசுது



ஹூ... ஹே... ஹூ... ஹே...
... ஆ...   ஆ... 

கண்ணாடிப் பொண்ணு அட கண்ணுரெண்டும் கூசுது ஆஆஆஆ...
காள மாட்டுக்கன்னு ஒண்ணு வால தூக்கிப் பாக்குது ஆ... ஆ... ஆ...
கண்ணாடிப் பொண்ணு அட கண்ணுரெண்டும் கூசுது
காள மாட்டுக் கன்னு ஒண்ணு வால தூக்கிப் பாக்குது
டீ குடிக்கும் ஆளுக ஷாக் அடிச்சு நிக்குது
ஐஸ்கட்டி போலவே வயசு குட்டி வந்து 
போறாளே... போறாளே... போறாளே...
ஆவின் பால்போலே

தோ தோ பாக்குறா... பத்த வைக்க பாக்குறா...
தோ தோ நிக்குறா... நெஞ்ச தூக்கி நிக்குறா...
தோ தோ தோ பூக்குறா... போகும் போதே பூக்குறா...
தோ தோ தோ தோ வாங்குறா... எங்க மூச்ச வாங்குறா...

காத்து காத்து வீசுது பொண்ணு காத்து வீசுது
பாத்து பாத்து வீசுது என்ன பாத்து வீசுது
இவ எந்த ஊருகாரியோ இந்த மின்னு மின்னுறா
கரண்ட் இல்லா ஊருக்கு கரண்ட் உண்டு பண்ணுறா

தோ தோ பாக்குறா... பத்த வைக்க பாக்குறா...
தோ தோ நிக்குறா... நெஞ்ச தூக்கி நிக்குறா...
தோ தோ தோ பூக்குறா... போகும் போதே பூக்குறா...
தோ தோ தோ தோ வாங்குறா... எங்க மூச்ச வாங்குறா...

காத்து காத்து வீசுது பொண்ணு காத்து வீசுது


Popular Posts