Showing posts with label Samuthrakani. Show all posts
Showing posts with label Samuthrakani. Show all posts

Wednesday, October 17, 2018

Aan Dhevathai - Pesugindren Pesugindren

ப‌டம் : ஆண் தேவதை (2018)
இசை : ஜுப்ரான்
பாடியவர் : சைத்ரியா அப்படிபுடி
பாடல்வரிகள் : கார்த்திக் பிரசன்னா

Related image



பேசுகின்றேன் பேசுகின்றேன்
பேச்சை தாண்டி வந்து பேசுகின்றேன்
ஓசை எல்லாம் வேஷம் என்றே
உள்ளிருந்தே உள்ளம் பேசுகின்றேன்

வாழ்கின்ற நேரத்தை வாழ்கின்ற நேரத்தில்
வாழ்கின்ற நேர்மை தான் வாழ்க்கையாகும்
தூரத்தில் காண்கின்ற மேகத்தின் பிரம்மாண்டம்
மழையாகி விழும்போது துணையாய் மாறும்

பேசுகின்றேன் பேசுகின்றேன்
பேச்சை தாண்டி வந்து பேசுகின்றேன்
உள்ளிருந்தே உள்ளம் பேசுகின்றேன்


தனக்கென பிடித்த ஒன்றை
சலனத்தில் தவற விட்டு
பழங்கதை புழுதியிலே ஏனிந்த மோதல்
இருப்பதை ரசித்து கொண்டு
கிடைப்பதில் உயர்வு கொண்டு
மகிழ்ச்சியில் திளைத்திருந்தால் தீராதே காதல்

மீனோடு வாழ்நாளும் அலைகளில் இல்லை நாற்றம்
நாம் காணும் எல்லாமே முரண்களின் சிநேகம்
மாட்டாத காற்றுக்கு ஏன் பலவித தூண்டில்
எந்நாளும் ஏன் இந்த கோமாளி தேடல்
அட முயல் ஆமை கதையாச்சு உலகமே சலனமே
அகந்தை கூட மரணமே

பேசுகின்றேன் பேசுகின்றேன்
பேச்சை தாண்டி வந்து பேசுகின்றேன்
ஓசை எல்லாம் வேஷம் என்றே
உள்ளிருந்தே உள்ளம் பேசுகின்றேன்

வாழ்கின்ற நேரத்தை வாழ்கின்ற நேரத்தில்
வாழ்கின்ற நேர்மை தான் வாழ்க்கையாகும்
தூரத்தில் காண்கின்ற மேகத்தின் பிரம்மாண்டம்
மழையாகி விழும் போது துணையாய் மாறும்

பேசுகின்றேன் பேசுகின்றேன்
பேச்சை தாண்டி வந்து பேசுகின்றேன்
உள்ளிருந்தே உள்ளம் பேசுகின்றேன்

Monday, October 8, 2018

Aan Dhevathai - Nigara Than Nigara

படம் : ஆண் தேவதை (2018)
இசை : ஜுப்ரான்
பாடியவர் : வினித் சீனிவாசன்
பாடல்வரிகள் : செளந்தராஜன் K


Related image




நிகரா தன் நிகரா ஓர் தாலாட்டு நீ

இதமாய் பெரிதமாய் ஓர் தந்தை மொழி
மயில்தோகையாய் இவன் வாசனை 
தாயாகிடும் ஆண் தேவதை 
அன்பின் உயரம் உருவம் தாயுமானவன்

நிகரா தன் நிகரா ஓர் தாலாட்டு நீ

இதமாய் பெரிதமாய் ஓர் தந்தை மொழி


உலகை இந்த உலகை அறிமுகம் செய்யும் ஒருவன்

ஒளியாய் வழித்துணையாய் விர‌ல் பிடித்திடும் தலைவன்
பிழையை நம் பிழையை திருத்திடும் ஒரு கவிதை
தந்தை உன் நிழலில் நிலைத்திடுமா கவலை
தாயாக மாற முயல்வாய் பல நேரம்
உனைமீறி அடைவாய் பிள்ளையெனும் வேடம்
தாய்பட்டம் நெஞ்சோடு சுமக்கும் தந்தையே

நிகரா தன் நிகரா ஓர் தாலாட்டு நீ

இதமாய் பெரிதமாய் ஓர் தந்தை மொழி
மயில்தோகையாய் இவன் வாசனை
தாயாகிடும் ஆண் தேவதை 
அன்பின் உயரம் உருவம் தாயுமானவன்


மடியே இவன் மடியே மரகத தலையணையே

மழலை தன் மழலை குறும்பினில் இவன் நகலே 
விடியல் புது விடியல் கொடுத்திடும் கதிரவனே
நிலவும் கண்வளரும் கதைகளை கதைப்பவனே
தாயென்ற ஒன்றில் பால் என்பதில்லை
தன்கண்கள் ரெண்டால் பாலூட்டும் அன்னை
உயிர்தந்து தனைதந்திடும் தந்தைக்கினையில்லை

நிகரா தன் நிகரா ஓர் தாலாட்டு நீ

இதமாய் பெரிதமாய் ஓர் தந்தை மொழி
மயில்தோகையாய் இவன் வாசனை 
தாயாகிடும் ஆண் தேவதை 
அன்பின் உயரம் உருவம் தாயுமானவன்
நிகரா தன் நிகரா ஓர் தாலாட்டு நீ

Thursday, May 3, 2018

Kaala - Semma Weightu

ப‌டம்: காலா(2018)
இசை: சந்தோஷ் நாராயணன்
பாடியவர்கள்: ஹரிஹர சுதன், சந்தோஷ் நாராயணன்
                            Dope Daddy, Stony Psyko, MC Mawali, Arunraja Kamaraj
பாடல்வரிகள்: அருண்ராஜா காமராஜ், Dopeadelicz, Logan


Image result for kaala tamil movie mp3 free download




செம வெயிட்டு... 
செம வெயிட்டு...
அடங்க மறுப்பவன் வெளிச்சம் கொடுப்பவன்
கவல கலைக்கிறவன் யாருன்னுதான் காட்டு

மனச தொடவில்ல‌ மனுசன் விடவில்ல‌
கருப்ப பூசிக்கிட்டு வந்தவரு கிரேட்டு


எங்கள் கருப்பர் நகரத்தின்
கருப்பு வைரம் கருஞ்சிறுத்தை
இந்த ஊரு காவல் வீரன்
மச்சதுன்னா வீடு திரும்ப மாட்ட‌ எங்க சாலுல
போட்டு தாக்கு யாரு வந்தாலும் நம்ம வழியில‌
Be Careful

இதுதான் தாராவி பாரு பாரு
யாரு யாரு வந்துட்டா உன் முன்னாடி
யேய்... மவனே நீ காலி
காலா சேட் இனிமே நம்ம பின்னாடி
சோ சிதற விடலாம் தற விடலாம்
சிறக விரித்து பறக்க விடலாம்
தடுக்க வந்தாலும் தடையில்லாமல் 
அழித்து விடலாம்

செம வெயிட்டு... நம்ம காலா சேட்...
செம வெயிட்டு... நம்ம காலா சேட்...

கிராஸ் ரோடு, T ஜங்சன்
60 ஃபிட்டு, 90 ஃபிட்டு, கொலிவாடா
கும்பரவாடா ரொம்ப  ரொம்ப பில்லா டா
ஒட்டுமொத்த ஏரியாவும் காலாவோட‌ கில்லாடா

செம வெயிட்டு... செம வெயிட்டு...

கோயில் மணி அத்தனையும் ஒத்துமையா ஒலிக்கும்
சொந்த பந்தம் போலதான் ஒன்னா நாங்க இருப்போம்
எப்படியும் எங்க கொடி உச்சத்துல பறக்கும்

வணக்கம் நமஸ்கார் சலாம் அலைக்கும்
எப்பவும் நம்ம கூட்டம் யூனைட்டடா இருக்கும்
ஸ்லம்‍‍-ஆ பத்தி உன் எண்ணத்த கொஞ்சம் மாத்திக்கோ
உள்ள வந்து எங்க லைஃப் ஸ்டைல்-ஆ நீ பாத்துக்கோ
ஜோபதா வீடுனாலும் ஷோக்கா நாங்க இருப்போம்
காலுக்கு கீழ கீசந்துனாலும் நெஞ்ச நிமித்து நடப்போம்
தோள் கொடுப்போம் துக்கத்திலும் சிரிப்போம்
ஏறி பேசி பாரு தொங்க விட்டு தோல உரிப்போம்

கைய கட்டி வாய பொத்தி நின்ன காலம் போச்சு
எட்டி வந்து எண்ணத்திலாம் வானத்தில‌ ஏத்தியாச்சு
தாராவி எங்க ஏரியா
இங்க காலா சேட்தான்  அவரு முன்ன வேற யாரு
இங்க காலா சேட் தான் அவரு முன்ன வேற யாரு

செம வெயிட்டு... நம்ம காலா சேட்...
செம வெயிட்டு... நம்ம காலா சேட்...


யா.. ஹா..
ரொம்ப கதார்நாக் மாதா காலா சேட்...
இஸ்யே பஜ்கி ஜப் தேரே இரதே ‍னா ஹோ நேக்
மாதாதேக் தியாசே சங்கெ மாஜெ மாப்பு
ஸ்டிரிட்குள்ள சாத்துர் திதில் துலா ஆப்பு 


நகர நெரிசல் பிணைஞ்சி கெடப்போம்
தகர ஒட்டில் தாக்கு பிடிப்போம்
உயரம் தெரிஞ்சி உசுர கொடுப்போம்
உலுக்க நெனச்சா வெரட்டி அடிப்போம்

செம வெயிட்டு... செம வெயிட்டு...
செம வெயிட்டு... நம்ம காலா சேட்...

ஒன்னாவே வாழுறது எப்பவுமே முக்கியம்தான்
நம்மோட மக்களுக்கு ஒத்துமையே ரத்தினம்தான்
கலைக்க நினைச்ச கலைய மாட்டோம்
அழிக்க நெனச்சா நெனப்ப அழிப்போம்

செம வெயிட்டு... நம்ம காலா சேட்...
இங்க காலா சேட் தான் அவரு முன்ன வேற யாரு
செம வெயிட்டு... நம்ம காலா சேட்...

காலா காலா காலா... காலா... நம்ம காலா சேட்...
காலா காலா காலா... காலா... நம்ம காலா சேட்...
காலா காலா காலா... காலா... நம்ம காலா சேட்...

காலா காலா காலா... காலா... நம்ம காலா சேட்...
காலா காலா காலா... காலா... நம்ம காலா சேட்...

காலா சேட்...

Sunday, October 7, 2012

சாட்டை - சகாயனே சகாயனே

படம்: சாட்டை (2012)
இசை:  D. இமான்
பாடியவர்: ஸ்ரேயா கோஷல்
பாடல் வரிகள்: யுகபாரதி





சகாயனே சகாயனே நெஞ்சுக்குள் நீ முளைத்தாய்
சகாயனே சகாயனே என்னை நீ ஏன் பறித்தாய்
உன் எண்ணங்கள் தாக்க என் கன்னங்கள் பூக்க
நீ வயதுக்கு வாசம் தந்தாய்....
சகாயனே சகாயனே நெஞ்சுக்குள் நீ முளைத்தாய்

ஒரு முறை உன் பேரை உதடுகள் சொன்னாலே
பசி இன்றி போவதென்ன?
பலமுறை சொன்னாலும் உறங்கிட எண்ணாமல்
விழி ரெண்டும் கேட்பதென்ன?
தவறி விழுந்த பொருள் போல் என்னை எடுத்தாயடா
தவணை முறையில் உனை நான் சிறை பிடித்தேனடா
பிள்ளை போலே என்னை கையில் ஏந்து
எல்லை ஏதும் இல்லை அன்பில் நீந்து நீந்து

சகாயனே சகாயனே நெஞ்சுக்குள் நீ முளைத்தாய்
சகாயனே சகாயனே....

கனவிலும் காணாத வகையினில் உன் தோற்றம்
எனக்குள்ளே கூச்சல் போட
இதுவரை கேட்காத இசை என உன் பேச்சு
அளவில்லா ஆட்டம் போட
இறந்து இறந்து பிறக்கும் நிலை இதுதானடா
மகிழ்ந்து மகிழ்ந்து மரிக்கும் வரம் குடுத்தாயடா
கள்ள பார்வை என்னை கொத்தி தின்ன
என்ன ஏது என்று உள்ளம் எண்ண எண்ண

சகாயனே சகாயனே நெஞ்சுக்குள் நீ முளைத்தாய்
சகாயனே சகாயனே என்னை நீ ஏன் பறித்தாய்
உன் எண்ணங்கள் தாக்க என் கன்னங்கள் பூக்க
நீ வயதுக்கு வாசம் தந்தாய்....


Popular Posts