Showing posts with label Arunraja Kamaraj. Show all posts
Showing posts with label Arunraja Kamaraj. Show all posts

Sunday, March 22, 2020

Asuran - Blood Bath

படம் : அசுரன் (2019)
இசை : G.V. பிரகாஷ் குமார்
பாடியவர் : அருண்ராஜா காமராஜ் & குழுவினர் 
பாடல்வரிகள் : அருண்ராஜா காமராஜ் 


Image result for Asuran



வா எதிரில் வா எதிர்படும்
நொடியில் தலைகள் சிதற
வா விரட்டி வா விரட்டிடும்
விரட்டில் பகைகள் கதற

வா அழிக்க வா ஒழிக்க வா
தீயவர் குலைகள் நடுங்க
வா நெறிக்க வா முறிக்க வா
கொடிய குருதி தெறிக்க

அச்சம் துறந்திடு துச்சம் அறிந்திடு
உச்சம் கிளர்ந்திடு மிச்சம் என்று எதுவும் இன்றி
உந்தன் ஆயுதம் என்னவென்பதை
உந்தன் கைகளில் ஏந்தி நிற்கிறாய்
அந்த ஆயுதம் என்ன செய்திடும்
அச்ச கூச்சல் அடங்கும் முன்னே
மொத்தம் கிள்ளி வீசிடு

வா எதிரில் வா எதிர்படும்
நொடியில் தலைகள் சிதற
வா விரட்டி வா விரட்டிடும்
விரட்டில் பகைகள் கதற

வா அழிக்க வா ஒழிக்க வா
தீயவர் குலைகள் நடுங்க
வா நெறிக்க வா முறிக்க வா
கொடிய குருதி தெறிக்க



ஏலம் போட்டு பிரிக்குது
ஓரம் கட்டி அடைக்குது
பேத பார்வை வேர்வை போல
ஊறி போன உலகிது

இறுகி போன மனமிது
இளகி போக மறுக்குது
பழகி பழகி கெடுக்க நினைக்கும்
கலைகள் களையும் வரம் இது

ஓலம் பரவிடும் அந்த ராகம் கொடியது
காலம் காலமாய் இங்கு துன்ப மேகம் பொழியுது
ஏற்க மறுத்திடு துரோக தீயை அறிந்திடு
பார்க்கும் அனைத்தையும் வீழ்த்த மீதி வாளை வீசிடு

வா எதிரில் வா எதிர்படும்
நொடியில் தலைகள் சிதற
வா விரட்டி வா விரட்டிடும்
விரட்டில் பகைகள் கதற

வா அழிக்க வா ஒழிக்க வா
தீயவர் குலைகள் நடுங்க
வா நெறிக்க வா முறிக்க வா
கொடிய குருதி தெறிக்க



குருதி தாகம் அடிக்குது
பலியை தீர்க்க துடிக்குது
பழைய பகையின் மழையில் நனைய
அசுர வேட்டை நடக்குது

எதுக்கு மண்ணில் பொறக்கிறோம்
வெறுப்ப ஊட்ட தவிக்கிறோம்
மனுஷ பயலின் அரக்க மனசில்
உறக்கம் கெட்டு கொதிக்கிறோம்

நீதி எதுவென இன்று நீயும் கூறிடு
ஆதி எதுவென கொஞ்சம் நீயும் தேடி ஓடிடு
வீதி வெளியிலே உந்தன் கோபம் காட்டிடு
மீதி குருதியை அள்ளி தீர்த்தமாக மாற்றிடு

வா அசுரா வா அசுரா வா
அசுர தலைகள் சிதற
வா அசுரா வா அசுரா வா
அசுர பகைகள் கதற

வா அசுரா வா அசுரா வா
அசுர பலிகள் கொடுக்க
வா அசுரா வா அசுரா வா
அசுர ரத்தம் தெறிக்க

Sunday, March 15, 2020

Master - Kutti Story

படம் : மாஸ்டர் (2020)
இசை : அனிருத்
பாடியவர் : விஜய்

பாடல் வரிகள் : அருண்ராஜா காமராஜ்

Image result for master tamil movie poster




Let me sing a kutti story
Pay attention listen to me

Enna-na englishuu…

Just listen bro..
Let me sing a kutti story
Pay attention listen to me
If you want take it or else 
Venam tension leave it baby...

Life is very short nanbaa…
Always be happy...
Palavidha problems will come and go
Konjam chill pannu maapi...
Together man….

Let me sing a kutti story
Pay attention listen to me
If you want take it or else 
Venam tension Leave it baby...

Life is very short nanbaa…
Always be happy...
Design design ah...
Problems will come and go
Konjam chill pannu maapi...

No tension baby….


Speedaa ponaa... gavanam mustu
Slowaah ponaa... steadyum mustu
Heyyy... haha...haha...
Oh.. Anger always misery baby
Friends-ah ninna powerful maapi
Haters are gonna hate but ignore calmly
Negativity ellam thalli vai baby
Focus on what you dream and dont worry maapi
Postivity unna lift pannum baby

Life is very short nanbaa…
Always be happy...
Very many problems will come and go
Konjam chill pannu maapi...
Students... 

Let me sing a kutti story
Pay attention… listen to me
If you want take it or else 
Venam tension leave it baby...

Life is very short nanbaa…
Always be happy...
Design design ah...
Problems will come and go
Konjam chill pannu maapi...

No tension baby….


Hard workum venum... smart workum venum
Self motivation adhu needhanae
Education venum... dedication venum
Self valuation adha panni paaren
Don't be the person spreading hatred maapi
Pinnadi pesuradhu rombha crappy
Always be polite and just don't be nasty
You will be the reason to make someone happy

Life is very short nanbaa…
Always be happy...
Palavidha problems will come and go
Konjam chill pannu maapi...

One last time

Let me sing a kutti story
Pay attention listen to me
If you want take it or else
Venam tension leave it baby...

Life is very short nanbaa…
Always be happy...
Design design ah...
Problems will come and go
Konjam chill pannu maapi...

That was my kutti story
How was my kutti story
That was my kutti story
How was my kutti story…

Just awesome-na

No tension baby…

Thursday, February 21, 2019

Kanaa - Othaiyadi Pathayila

படம்: கனா (2018)
இசை: திபு நினன் தாமஸ்
பாடியவர்கள் : அனிருத்
பாடல்வரிகள்: அருண்ராஜா காமராஜ்

Related image



ஒத்தையடி பாதையில தாவி ஓடுறேன்
அத்த பெத்த பூங்குயில தேடி வாடுறேன்
சந்தன மாலை அள்ளுது ஆள வாசம் ஏறுது
என் கிளி மேல சங்கிலி போல சேர தோணுது
சக்கர ஆல சொக்குது ஆள
மாலை மாத்த மாமன் வரட்டுமா...

கண்மணியே...
ச... தநிச... 
தநி சம கம கச
தநிச... ககச...
தப கச ககச... நிச...

வழியில பூத்த சாமந்தி நீயே
விழியில சேர்த்த பூங்கொத்து நீயே
அடியே அடியே பூங்கொடியே
கவல மறக்கும் தாய் மடியே
அழகே அழகே பெண்ழகே... ஹா
தரையில் நடக்கும் பேரழகே
நிழலாட்டம் பின்னால
நான் ஓடி வந்தேனே
ஒருவாட்டி என்ன பாரம்மா...

ஒத்தையடி பாதையில தாவி ஓடுறேன்
அத்த பெத்த பூங்குயில தேடி வாடுறேன்



பலமுறை நீயும் பாக்காம போன
இரும்புக்கு மேல துரும்பென ஆனேன்
உசுர உனக்கே நேந்து விட்டேன்
இருந்தும் நெருங்க பயந்துக்கிட்டேன்
உயிரே உயிரே என்னுயிரே... ஹா
உலகம் நீதான் வா உயிரே
மனசெல்லாம் கண்ணாடி
உடைக்காத பந்தாடி
வதைக்காத கண்ணே கண்மணியே...

ஒத்தையடி பாதையில தாவி ஓடுறேன்
அத்த பெத்த பூங்குயில தேடி வாடுறேன்

ஹோய்...
நெஞ்சுல வீசும் கண்மணி வாசம்
காட்டு செண்பகமே
சங்கதி பேசும் கண்களும் கூசும்
காதல் சந்தனமே
பறவை போல பறந்து போக
கூட சேர்ந்து நீயும் வருவியா
கண்மணியே... கொஞ்சிடவே...

Saturday, February 2, 2019

Sarvam Thaalamayam - Dingu Dongu

படம்: சர்வம் தாளமயம் (2019)
இசை: A.R. ரஹ்மான்
பாடியவர்கள் : பாம்பா பாக்யா & அந்தோணி தாசன்
பாடல்வரிகள்: அருண்ராஜா காமராஜ்

Image result for Sarvam Thaala Mayam



எப்போ வருமோ எங்க காலம்
எப்போ வரும்…ம்ம்ம்ம்

எப்போ வருமோ எங்க காலம்
எப்போ வரும்
எப்ப குறையும் எங்க பாரம்
கரையும் பேதம்

எப்போ வருமோ எங்க நேரம்
எப்போ வரும்
எப்ப குறையும் எங்க பாரம்
கரையும் பேதம்

தப்பு கொட்டும் போதும்
உயிர் நாதம் வரும்
அந்த மேளத்தில் 
எல்லாமே ஆடிவிடும்

டிங்கு டாங்கு... டிங்கு டாங்கு...
டிங்கு டாங்கு... டிங்கு டாங்கு...
டிங்கு டாங்கு... டிங்கு டாங்கு...
டிங்கு டாங்கு... டிங்கு டாங்கு...
டிங்கு டாங்கு... டிங்கு டாங்கு...
டிங்கு டாங்கு... டிங்
டிங்கு டாங்கு... டிங்கு டாங்கு...
டிங்கு டாங்கு... டிங்
டிங்கு டாங்கு... டிங்கு டாங்கு...
டிங்கு டாங்கு... டிங்கு டாங்கு...
டிங்கு டாங்கு... டிங்கு டாங்கு...
டிங்கு டாங்கு... டிங்கு டாங்கு...
டிங்கு டாங்கு... டிங்கு டாங்கு...
டிங்கு டாங்கு... டிங்
டிங்கு டாங்கு... டிங்கு டாங்கு...
டிங்கு டாங்கு... டிங்

எப்போ வருமோ எங்க நேரம்
எப்போ வரும்
எப்ப குறையும் எங்க பாரம்
கரையும் பேதம்

எப்போ வருமோ எங்க நேரம்
எப்போ வரும்
எப்ப குறையும் எங்க பாரம்
கரையும் பேதம்



விதைக்கிற கை எல்லாம்
சேத்துலதான் முக்கனுமே
சோத்துல கை வைக்க
வரிசையிலே நிக்கனுமே

கெடைக்குற தோலுலதான்
அடிக்கிற வாத்தியத்த
படைக்கிற கைகளுக்கு
இசைக்கிற ஞானம் உண்டு

எங்க வாழ்வோடும்
இசையோடும் நாதம் உண்டு...
நம்ப பாட்டு சத்தம் வேட்டு போல
ஊரே சேர்ந்து கேட்டாச்சு

டிங்கு டாங்கு... டிங்கு டாங்கு...
டிங்கு டாங்கு... டிங்கு டாங்கு...
டிங்கு டாங்கு... டிங்கு டாங்கு...
டிங்கு டாங்கு... டிங்கு டாங்கு...
டிங்கு டாங்கு... டிங்கு டாங்கு...
டிங்கு டாங்கு... டிங்
டிங்கு டாங்கு... டிங்கு டாங்கு...
டிங்கு டாங்கு... டிங்
டிங்கு டாங்கு... டிங்கு டாங்கு...
டிங்கு டாங்கு... டிங்கு டாங்கு...
டிங்கு டாங்கு... டிங்கு டாங்கு...
டிங்கு டாங்கு... டிங்கு டாங்கு...
டிங்கு டாங்கு... டிங்கு டாங்கு...
டிங்கு டாங்கு... டிங்
டிங்கு டாங்கு... டிங்கு டாங்கு...
டிங்கு டாங்கு... டிங்

எப்போ வருமோ எங்க நேரம்
எப்போ வரும்
எப்ப குறையும் எங்க பாரம்
கரையும் பேதம்

எப்போ வருமோ எங்க நேரம்
எப்போ வரும்
எப்ப குறையும் எங்க பாரம்
கரையும் பேதம்

தப்பு கொட்டும் போதும்
உயிர் நாதம் வரும்
அந்த மேளத்தில் 
எல்லாமே ஆடிவிடும்

டிங்கு டாங்கு... டிங்கு டாங்கு...
டிங்கு டாங்கு... டிங்கு டாங்கு...
டிங்கு டாங்கு... டிங்கு டாங்கு...
டிங்கு டாங்கு... டிங்கு டாங்கு...
டிங்கு டாங்கு... டிங்கு டாங்கு...
டிங்கு டாங்கு... டிங்
டிங்கு டாங்கு... டிங்கு டாங்கு...
டிங்கு டாங்கு... டிங்
டிங்கு டாங்கு... டிங்கு டாங்கு...
டிங்கு டாங்கு... டிங்கு டாங்கு...
டிங்கு டாங்கு... டிங்கு டாங்கு...
டிங்கு டாங்கு... டிங்கு டாங்கு...
டிங்கு டாங்கு... டிங்கு டாங்கு...
டிங்கு டாங்கு... டிங்
டிங்கு டாங்கு... டிங்கு டாங்கு...
டிங்கு டாங்கு... டிங்

Sunday, July 22, 2018

Veera Sivaji - Soppanasundari

படம்: வீரசிவாஜி (2016)
இசை: D. இமான்
பாடியவர்கள்: வைக்கம் விஜயலெட்சுமி
பாடல்வரிகள்: அருண்ராஜா காமராஜ்

Related image



சொப்பன சுந்தரி நான்தானே 
நான் சொப்பன லோகத்தின் தேன்தானே 
சொப்பன சுந்தரி நான்தானே 
நான் சொப்பன லோகத்தின் தேன்தானே 
இராந்தல் மின்னலிலே ஜொலிப்பேனே 
சோம்பல் இல்லாமலே கலிப்பேனே
தீண்டும் இன்பம் மீண்டும் மீண்டும் 
தூண்டும் நெஞ்சில் தோன்றும் தோன்றும் தோன்றும் ஆ...
நான்தான் சொப்பன சொப்பன சுந்தரி 
உங்கள் சோகம் கலைக்கும் கலைக்கும் மந்திரி 
ஏ... நான்தான் சொப்பன சொப்பன சுந்தரி 
உங்கள் சோகம் கலைக்கும் கலைக்கும் மந்திரி  
சொப்பன சுந்தரி நான்தானே 
நான் சொப்பன லோகத்தின் தேன்தானே 
சொப்பன சுந்தரி நான்தானே 

ம்ம்ம்...
மார்கழியை சித்திரையாய் மாத்திடுமே முத்தம்ஒன்னு 
பூக்கடையே இங்கேவந்து பூஜை பண்ணும் கிட்டேநின்னு 
இராத்திரிக்கும் தூக்கத்துக்கும் எப்பவும் இராசியில்ல
ஏக்கத்துக்கும் கூட்டத்துக்கும் எப்பவும் பஞ்சமில்ல
நோன்டிலுக்கும் தென்றலுக்கும் சொந்தமும் தேவையில்ல 
எங்களுக்கும் தேவதைக்கும் சம்பந்தம் மாறவில்ல 
அத்தனை பேரையும் அத்தானா மாத்திடும் 
சங்கமும் இங்கேதான் சங்கமம் ஆகத்தான்... காதல்தான் 

நான்தான் சொப்பன சொப்பன சுந்தரி 
உங்கள் சோகம் கலைக்கும் கலைக்கும் மந்திரி 
ஏ... நான்தான் சொப்பன சொப்பன சுந்தரி 
உங்கள் சோகம் கலைக்கும் கலைக்கும் மந்திரி

சொப்பன சுந்தரி நான்தானே 
நான் சொப்பன லோகத்தின் தேன்தானே 
சொப்பன சுந்தரி நான்தானே 
நான் சொப்பன லோகத்தின் தேன்தானே 
இராந்தல் மின்னலிலே ஜொலிப்பேனே 
சோம்பல் இல்லாமலே கலிப்பேனே
தீண்டும் இன்பம் மீண்டும் மீண்டும் 
தூண்டும் நெஞ்சில் தோன்றும் தோன்றும் தோன்றும் ஆ...
நான்தான் சொப்பன சொப்பன சுந்தரி 
உங்கள் சோகம் கலைக்கும் கலைக்கும் மந்திரி 
ஏ... நான்தான் சொப்பன சொப்பன சுந்தரி 
உங்கள் சோகம் கலைக்கும் கலைக்கும் மந்திரி  

Wednesday, May 9, 2018

Kaala - Katravai Patravai


Movie Name
காலா
Year
2018
2018
Music
Santhosh Narayanan
சந்தோஷ் நாராயணன்
Singers
Arunraja Kamaraj,  Roshan Jamrock, Yogi B,
(RAP) யோகி.B, அருண்ராஜா காமராஜ், ரோஷன் ஜம்ராக்
Lyrics / Lyricist
Kabilan, Arunraja Kamaraj,  Roshan Jamrock,
கபிலன், அருண்ராஜா காமராஜ், ரோஷன் ஜம்ராக்

Director
Pa.Ranjith
பா.ரஞ்சித்


Image result for kaala tamil movie mp3 free download



காலா...

ஒத்த தல ராவணா பத்து தல ஆவுடா

ஒத்தையில நிக்குற வேங்கைடா
தில் இருந்தா மொத்தமா வாங்கடா


எழுச்சிகளை புரட்சியாக்க வா

வரப்புகளை வயல்களாக்க வா
வறுமையெனும் நோயை தீர்க்க வா
அடிமைதனம் நீயும் போக்க வா

புழுத்து போன மனசுல இங்க‌

ஹே.. புடிச்சி போன அழுக்குங்க தங்க‌
தீ வெழுந்து வாங்கும் மனுசங்க எங்க‌
நீ ஒன்னு சாய்ந்து நெரிக்கனும் சங்க‌
வா...

Yeah We Coming calculating

Every Single Moment

உன்னிடம் உள்ளதெல்லாம் தேடி தெளிந்திடு


Pack of Wolves on the loose

And We Howling At the Moon

உள்ளத்தில் ஒற்றுமையாய் கூடி திரிந்திடு


Check Mate! White Facade!

Yo Mama should have Told You 
Not to Mess With My Chawl!

உன்னை வெளியிடு...

இருளை பலியிடு

வா...


உன்னையும் மண்ணையும் வென்று வா

தீ...ராத ஓர் தேவையை கொண்டு வா
நூ...றாயிரம் ஆண்டுகள் போதுமே
ஒன்....றாகவே மாறுவாய், சீறுவாய்

காலா... தீ...


காலா... தீ...


ஒத்த தல ராவணா 


க்யா ரே? செட்டிங்கா?


ஒத்தையில நிக்குற வேங்கைடா


தில் இருந்தா மொத்தமா வாங்கல‌


Hey... Tryna Bring Me

Down For Nothing
Hey... Let me tell you something! 
That I ain't Going Down
Without a Fight, Be afraid
Of the Dark Black Night

Ei... Ei... I Am The Definition OF  Great

Wait! Gotta Stay Humble, But I Am Victorious
In Every Single Way Seat!

எதிரி யாரும் நொறுங்கி போக‌

அடித்து நொறுக்கு நொடியில்
கதறி பதறி சிதறி ஓடும்
சிறு நரிகளை ஓடவிடு இனி வா...

உன்னையும் மண்ணையும் வென்று வா

தீ...ராத ஓர் தேவையை கொண்டு வா
நூ...றாயிரம் ஆண்டுகள் போதுமே
ஒன்....றாகவே மாறுவாய், சீறுவாய்

காலா...

கற்றவை... பற்றவை...
ஒத்த தல ராவணா 

Kaala - Thanga Sela

ப‌டம்: காலா (2018)
இசை: சந்தோஷ் நாராயணன்
பாடியவர்கள்: சங்கர் மகாதேவன், ப்ரதீப் குமார், அனந்து
பாடல்வரிகள்: அருண்ராஜா காமராஜ்


Image result for kaala tamil movie mp3 free download



வாடி என் தங்க செல‌
நீ இல்லாட்டி நான் ஒன்னுமில்ல‌
அடி வாடி என் தங்க செல‌
நீ இல்லாட்டி நான் ஒன்னுமில்ல‌
என் ஜோடியா நீ நிக்கயில‌
வேறென்ன வேணும் வாழ்க்கையில‌
ஒத்த தல ராவணன் பச்சபுள்ள ஆவுறேன்
கக்கத்துல தூக்கிக்க வரீயா
பட்டாக்கத்தி வீசினேன் பட்டாம்பூச்சி ஆக்குன
முட்டக்கண்ணு மயக்கின சரியா

தில்லாத்டாங்கு டாங்கு
சும்மா திருப்பி போட்டு வாங்கு
தில்லாத்டாங்கு டாங்கு
சும்மா திருப்பி போட்டு வாங்கு

வாடி என் தங்க செல‌
நீ இல்லாட்டி நான் ஒன்னுமில்ல‌
என் ஜோடியா நீ நிக்கயில‌
வேறென்ன வேணும் வாழ்க்கையில‌


நெத்தி பொட்டு மத்தியில‌
என்ன தொட்டு வச்சவளே - நீ
மஞ்ச பூசி முன்னே வந்தா
கண்ணு கூசுமடி
பேட்டைகுள்ள பொல்லாதவன்
ஹோய்.. பேட்டைகுள்ள பொல்லாதவன் - ‍‍‍நீ
போட்ட கோட்ட தாண்டாதவன் ‍‍- என்
வீரத்தெல்லாம் மூட்டய‌க்கட்டி
உம் பின்னாடி தள்ளாடி வந்தேனடி
சோகத்தெல்லாம் மூட்டக்கட்டி
கொண்டாட வந்தாயடி

வாடி என் தங்க செல‌
வாடி என் தங்க செல‌
நீ இல்லாட்டி நான் ஒன்னுமில்ல‌
என் ஜோடியா நீ நிக்கயில‌
வேறென்ன வேணும் வாழ்க்கையில‌


தில்லாத்டாங்கு டாங்கு
சும்மா திருப்பி போட்டு வாங்கு

தில்லாத்டாங்கு டாங்கு
சும்மா திருப்பி போட்டு வாங்கு


திருப்பி... திருப்பி... திருப்பி...
அன்பக்கொட்ட நட்பு உண்டு
பாசம் கொட்ட சொந்தம் உண்டு
அட ரத்த பந்தம் ஏதும் இல்ல‌
ஊரே சொந்தமடா
சேட்டையெல்லாம் செய்யாதவன்...
சேட்டையெல்லாம் செய்யாதவன்
பல வேட்டைக்கெல்லாம் சிக்காதவன் - நீ
வீட்டையெல்லாம் ஆளுற அழகுல‌
பெண்ணே நான் திண்டாடி போறேனடி
ஹே... கோட்டையெல்லாம் ஆளுற வயசுல‌
கண்ணே உன் கண் போதுமடி

வாடி...
வாடி என் தங்க செல‌
நீ இல்லாட்டி நான் ஒன்னுமில்ல‌
என் ஜோடியா நீ நிக்கயில‌
வேறென்ன வேணும் வாழ்க்கையில‌
ஒத்த தல ராவணன் பச்சபுள்ள ஆவுறேன்
கக்கத்துல தூக்கிக்க வரீயா
பட்டாக்கத்தி வீசினேன் பட்டாம்பூச்சி ஆக்குன
முட்டக்கண்ணு மயக்கின சரியா

தொட்டா பறக்கும் தூளு
கண்ணு பட்டா கலக்கும் பாரு
ஹே...
தில்லாத்டாங்கு டாங்கு
சும்மா திருப்பி போட்டு வாங்கு
தில்லாத்டாங்கு டாங்கு
சும்மா திருப்பி போட்டு வாங்கு
தில்லாத்டாங்கு டாங்கு
சும்மா திருப்பி போட்டு வாங்கு
தில்லாத்டாங்கு டாங்கு
சும்மா திருப்பி போட்டு வாங்கு
தில்லாத்டாங்கு டாங்கு
சும்மா திருப்பி போட்டு வாங்கு
தில்லாத்டாங்கு டாங்கு
சும்மா திருப்பி போட்டு வாங்கு
தில்லாத்டாங்கு டாங்கு
சும்மா திருப்பி போட்டு வாங்கு

Popular Posts