Showing posts with label 2019. Show all posts
Showing posts with label 2019. Show all posts

Thursday, October 21, 2021

Iykki Berry - Enna Paathatum

ஆல்பம்: என்ன பார்த்ததும்  (2019)

இசை : தேவ் மேஜர்

பாடியவர்கள் : ஐக்கி பேரி

பாடல்வரிகள்: ஐக்கி பேரி



 

Download this MP3

IYKKI BERRY...


DEV MAJOR...


Oh my! My things are getting heavy

And the world around is getting colder now!

Oh my heart’s just skipping a beat

Better don’t try to come closer now!

Give me some more time to decide

Let me touch your heart and find

Maybe என் mind உன்ன

கடந்து போக சொல்லுதே

Baby mind உன்ன தான்

தேடி போகுதே

என்ன பார்த்ததும் 

cute-a சிரிக்கிற... சிரிக்கிற

Maximum try பண்ணுற

One day match  போல 

tension ஏத்துற…  ஏத்துற

கண்ணால பேசியே என்ன கவுக்குற

என்ன பார்த்ததும் 

cute-a சிரிக்கிற... சிரிக்கிற

Maximum try பண்ணுற

One day match  போல 

tension ஏத்துற…  ஏத்துற

கண்ணால பேசியே என்ன கவுக்குற

 

Dark night-la, dim light-la, bright-a

என் face-u உன் கண்ணுல லேசா

Back N’ back flash ஆகி

Data correct corrupt ஆகுதே

Straight route-la right suite-la

தனியா Thug life-la

No doubts-oda steady-a

இருக்கும் என் single status தடுமாறுதே

Selfie stick போலவே

உன் கண்கள் தான் daily-ம்

என் பிம்பங்கள் தாங்குதே

உன் கண்களேஉன் கண்களே

 

என்ன பார்த்ததும் 

cute-a சிரிக்கிற... சிரிக்கிற

Maximum try பண்ணுற

One day match  போல 

tension ஏத்துற…  ஏத்துற

கண்ணால பேசியே என்ன கவுக்குற

Give me some more time to decide

Let me touch your heart and find

Maybe என் mind உன்ன

கடந்து போக சொல்லுதே

Baby mind உன்ன தான்

தேடி போகுதே

I wonder how could I spot you right-a

That you see me feel me

IYKKI BERRY that’s me

Too many chicks are flying around you

கண்ணோடு கண்ண

Why are you sight seeing me

We gotta know that our life is so little

Now I’m frozen

so get me to a hospital

May be my மனசு

could hear your மனசு

ஏதும் தாங்கும் வயசு

I don’t need your purse

 

என்ன பார்த்ததும் 

cute-a சிரிக்கிற... சிரிக்கிற

Maximum try பண்ணுற

One day match  போல 

tension ஏத்துற…  ஏத்துற

கண்ணால பேசியே என்ன கவுக்குற

பாக்க

வச்சிட்ட மாயம்

செஞ்சிட்ட காதல்

ஏத்திட்ட பேசி

கவுத்திட்ட பாக்க

வச்சிட்ட மாயம்

செஞ்சிட்ட காதல்

ஏத்திட்ட பேசி

கவுத்திட்ட

Friday, July 9, 2021

Adithya Varma - Yaen Ennai Pirindhaai

படம்: ஆதித்யா வர்மா (2019)

இசை: ராதன்

பாடியவர்கள்: சித் ஸ்ரீராம்

பாடல்வரிகள்: ராதன்






கண்ணிலே கண்ணீரிலே
பிரிந்தே நான் போகின்றேன்
விண்ணிலே வெண் மேகமாய்
கலைந்தே நான் மெல்ல மெல்ல கரைந்தேன்

அழுகை என்னும் அருவியில்
தினம் தினம் நானும் விழுந்தேனே
நிலவே உன் நிழலினை
தொடர்ந்திட நானும் விளைந்தேனே

ஏன் என்னை பிரிந்தாய்
உயிரே உயிரே
காதலை எரித்தாய் என் அழகே

ஏன் என்னை பிரிந்தாய்
உயிரே உயிரே
கண்ணீரில் உறைந்தாய் கனவே



ஏன் என்னை பிரிந்தாய்
உயிரே உயிரே
காதலை எரித்தாய் என் அழகே
ஏன் என்னை பிரிந்தாய்
உயிரே உயிரே
கண்ணீரில் உறைந்தாய் கனவே


இரவும் என் பகலும் 
உன் விழியன் ஓரம் பூக்கின்றதே
உதிரும் என் உயிரும்
உன் ஒரு சொல் தேடி அலைகின்றதே
என்னானதோ என் காதலே
மண் தாகம் தீரும் மழையிலே

அழுகை என்னும் அருவியில்
தினம்தினம் நானும் விழுந்தேனே
நிலவே உன் நிழலினை 
தொடர்ந்திட நானும் இழைந்தேனே

ஏன் என்னை பிரிந்தாய்
உயிரே உயிரே
காதலை எரித்தாய் என் அழகே

ஏன் என்னை பிரிந்தாய்
உயிரே உயிரே
கண்ணீரில் உறைந்தாய் கனவே


Mehandi Circus - Kodi Aruvi

படம்: மெஹந்தி சர்க்கஸ் (2019)

இசை: ஷான் ரோல்டன்

பாடியவர்கள்: ப்ரதீப் குமார், நித்யஸ்ரீ

பாடல்வரிகள்: யுகபாரதி





கோடி அருவி கொட்டுதே அடி என் மேல

அது தேடி உசுர முட்டுதே நெதம் உன்னால

கோடி அருவி கொட்டுதே அடி என் மேல

அது தேடி உசுர முட்டுதே நெதம் உன்னால

மலை கோவில் விளக்காக ஒளியா வந்தவளே

மனசோடு தொலைபோட்டு என்னையே கண்டவளே


கண்ண மூடி கண்ட கனவே

பல ஜென்மம் தாண்டி வந்த உறவே

கண்ண மூடி கண்ட கனவே

பல ஜென்மம் தாண்டி வந்த உறவே


கோடி அருவி கொட்டுதே


அட என் மேல


அது தேடி உசுர முட்டுதே


நெதம் உன்னால



நள்ளிரவும் ஏங்க 

நம்ம இசைஞானி

மெட்டமைச்ச பாட்டா

பொங்கி வழிஞ்ச


பொட்டலுல வீசும்

உச்சி மலை காத்த

புன்னகையில் ஏன்டா

என்ன புழிஞ்ச


சாராயம் இல்லாம

சாஞ்சேன்டி கண்ணால

கூழாங்கல் சேராதோ செங்கல்ல


அடகாத்து உன்னை நானும்

சுகமா வெச்சுகிறேன்

உன்னை சேர பொறந்தேன்னு

என்ன நான் மெச்சிகிறேன்


கண்ண மூடி கண்ட கனவே

பல ஜென்மம் தாண்டி வந்த உறவே

கண்ண மூடி கண்ட கனவே

பல ஜென்மம் தாண்டி வந்த உறவே...


கோடி அருவி கொட்டுதே


அட என் மேல


அது தேடி உசுர முட்டுதே


நெதம் உன்னால


கோடி அருவி கொட்டுதே டி என் மேல

அது தேடி உசுர முட்டுதே நெதம் உன்னால

மலை கோவில் விளக்காக ஒளியா வந்தவளே

மனசோடு தொலைபோட்டு என்னையே கண்டவளே


கண்ண மூடி கண்ட கனவே...

பல ஜென்மம் தாண்டி வந்த உறவே...

தன்னா நானா... தன்னா நானா...

தன்னா நானா... தன்னா நானா...


Tuesday, June 2, 2020

Tamizhi

ப‌டம் : தமிழி (2019)
இசை : ஹிப்ஹாப் தமிழா
பாடியவர்கள் :  ஹிப்ஹாப் தமிழா, அந்தோணிதாசன் 
பாடல்வரிகள் : ஹிப்ஹாப் தமிழா

hiphop tamizha tamizhi episodes 1 Mp4 HD Video WapWon



எம்மதமும் சம்மதமாகும்
தமிழ் வரமாகும் தமிழ் உரமாகும்
இந்த உலகாகும் எங்கள் உறவாகும்
தமிழி... வழியே உயிரே உறவே தமிழே

எம்மதமும் சம்மதமாகும்
தமிழ் வரமாகும் தமிழ் உரமாகும்
இந்த உலகாகும் எங்கள் உறவாகும்
தமிழி... வழியே உயிரே உறவே தமிழே

மொழியால் இணைவாய் 
மொழிதான் துணையே
என் தமிழ் இனமே மொழிதான் பலமே

தமிழால் தான் நீயும் தமிழனே

மொழிதான் உறவே
மொழிதான் தொடர்பே
என் தமிழ் இனமே மொழிதான் பலமே

தமிழால்தான் நீயும் தமிழனே
தமிழால்தான் யாரும் தமிழனே
தமிழ் அறிந்தால் தான் நாம் தமிழரே
என் தமிழ் இனமே மொழிதான் பலமே

என் தமிழ் இனமே மொழிதான் பலமே
எம்மதமும் சம்மதமாகும்
தமிழ் வரமாகும் தமிழ் உரமாகும்
இந்த உலகாகும் எங்கள் உறவாகும்
தமிழி... 

மொழியே உயிரே உறவே தமிழே

எம்மதமும் சம்மதமாகும்
தமிழ் வரமாகும் தமிழ் உரமாகும்
இந்த உலகாகும் எங்கள் உறவாகும்
தமிழி... 

மொழியே உயிரே உறவே தமிழே

தமிழே... 

தமிழே...

எங்கள் உடல் பொருள் ஆவியும் நீ... 

தமிழி

எங்கள் அறிவுக்குள் எரிகின்ற தீ... 

தமிழி தமிழி

தமிழ் அழிந்தால் இனம் அழியும்
தமிழ் அறிவால் மொழி பகிர்வாய்

பல பிரிவாய் ஏன் பிரிந்தாய்
இனி தமிழால் ஒன்றிணைவாய்

இனம் வேறு மதம் வேறு
குலம் வேறு என பிரிந்திடும் வரலாறு

இருந்தாலும் ஒரு போதும்
பகை உணர்வினை செம்மொழி வளர்க்காது

மனிதனாய் இருந்தால் ஒரு வேளை
தமிழனாய் இருப்பாய் 
தமிழனாய் இருப்பாய்
நீ தமிழனாய் இருந்தால் நண்பா 
ஒரு மனிதனாய் இறப்பாய்

மனிதனாய் இறப்பாய்
மனிதனாய் இருந்தால் ஒரு வேளை 
தமிழனாய் இருப்பாய்
நீ தமிழனாய் இருந்தால் நண்பா 
ஒரு மனிதனாய் இறப்பாய்


Digital யுகத்துக்கு வந்தடைந்த செந்தமிழே
வணக்கம் உலகத்துக்காக உழைக்கும்
உலக தமிழர் அனைவருக்கும்
தமிழ்தானே நம்மை இணைக்கும்
அன்பாலே நம்மை பிணைக்கும்
பிற மொழிகளுக்கே துவக்கம்
தமிழ்தானே தமிழரின் விளக்கம்
வணக்கம் ஊரே யாவரும் கேளீர்
தமிழ் அறிந்தால் ஒரு மனிதராய் வாழ்வீர்
ஒரு தலைமுறைக்கும் தமிழ் கற்று தருவீர்
தமிழே நம் அடையாளம் அறிவீர்
உலகில் உள்ள மொழிகள் தோன்றும்
முன்னே தோன்றிய என் மொழி செம்மொழி
எங்கள் உயிர் அது மண்ணில் மறைந்தாலும்
என்றென்றும் வாழிய வாழிய நீ
கொத்து கொத்தாய் தமிழரை
ஒன்று குவித்தாலும் அழித்தாலும்
தமிழ் மொழி வாழும் வரை
தமிழர்க் அழிவில்லை மீண்டும் தோன்றும்
போற்றி பாதுக்காத்திடு நம் மொழியை
உலகிற்கே பரப்பு செம்மொழியை
கீழடி காலடி மறைந்தாலும்
செந்தமிழர் சருகாய் சரிந்தாலும்
தமிழ் உள்ளவரை நம் இனம் வாழும்
தமிழ் உள்ளவரை நம் இனம் வாழும்
தமிழ் உள்ளவரை நம் இனம் வாழும்
தமிழ் உள்ளவரை நம் இனம் வாழும்

தமிழே... என் தமிழே

மனிதனாய் இருந்தால் ஒரு வேளை 
தமிழனாய் இருப்பாய்
நீ தமிழனாய் இருந்தால் நண்பா 
ஒரு மனிதனாய் இறப்பாய் 

Sunday, March 22, 2020

Asuran - Kathari Poovazhagi

படம் : அசுரன் (2019)
இசை : G.V. பிரகாஷ் குமார்
பாடியவர் : வேல்முருகன், ராஜலக்ஷ்மி, நெப்போலியா
பாடல்வரிகள் : K.ஏகாதேசி 


Image result for Asuran



தன்னே நன்னானே... தன்னே நன்னானே...
தன்னே நன்னானே... தன்னே நன்னானே...
தன்னே நன்னானே... தன்னே நன்னானே...
தன்னே நன்னானே... தன்னே நன்னானே...

கத்தரி பூவழகி கரையா பொட்டழகி
கலரு சுவையாட்டம் உன்னோட நெனப்பு அடியே
சொட்டாங்கல்லு ஆடையில புடிக்குது கிறுக்கு

வரப்பு மீசைக்காரா வத்தாத ஆசைக்காரா
உன்ன நான் கட்டிக்குறேன் ஊரு முன்னால
அட வெக்கப்பட வேணா என்ன பாரு கண்ணால

தன்னே நன்னானே... தன்னே நன்னானே...
தன்னே நன்னானே... தன்னே நன்னானே...
தன்னே நன்னானே... தன்னே நன்னானே...



மையால கண்ணெழுதி
என் வாலிபத்த மயக்குறியே

காத்தாடி போல நானும்
உன்ன நிக்காம சுத்துறேனே

கழுதை போலத்தான் அழக சுமக்காத
எனக்கு தாயேண்டி கொஞ்ச வேணும் நானும்
அருவா போல நீ மொறப்பா நடக்குறியே
திருடா மொரடா இருப்பேன் உன்னோடதான்

ஹேய்... கத்தரி பூவழகி கரையா பொட்டழகி
கலரு சுவையாட்டம் உன்னோட நெனப்பு அடியே
சொட்டாங்கல்லு ஆடையில புடிக்குது கிறுக்கு

ஹான்... ஹான்... ஆன்...
வரப்பு மீசைக்காரா வத்தாத ஆசைக்காரா
உன்ன நான் கட்டிக்குறேன் ஊரு முன்னால
அட வெக்கப்பட வேணா என்ன பாரு கண்ணால

தன்னே நன்னானே... தன்னே நன்னானே...
தன்னே நன்னானே... தன்னே நன்னானே..


கரகாட்டம் ஆடுது நெஞ்சு
உன்ன கண்டாலே தெருவுல நின்னு

நான் குளிக்கும் தாமிரபரணி
கண் தூங்காம வாங்குன வரம் நீ

ஆலம் விழுதாட்டம் அடடா தலமயிரு
தூளி ஆடிடத்தான் தோது செஞ்சு தாடி
இலவம் பஞ்சுல நீ ஏத்துற விளக்கு திரி
பத்திக்கும் தித்திக்கும் அணைச்சா நிக்காதடி



Asuran - Blood Bath

படம் : அசுரன் (2019)
இசை : G.V. பிரகாஷ் குமார்
பாடியவர் : அருண்ராஜா காமராஜ் & குழுவினர் 
பாடல்வரிகள் : அருண்ராஜா காமராஜ் 


Image result for Asuran



வா எதிரில் வா எதிர்படும்
நொடியில் தலைகள் சிதற
வா விரட்டி வா விரட்டிடும்
விரட்டில் பகைகள் கதற

வா அழிக்க வா ஒழிக்க வா
தீயவர் குலைகள் நடுங்க
வா நெறிக்க வா முறிக்க வா
கொடிய குருதி தெறிக்க

அச்சம் துறந்திடு துச்சம் அறிந்திடு
உச்சம் கிளர்ந்திடு மிச்சம் என்று எதுவும் இன்றி
உந்தன் ஆயுதம் என்னவென்பதை
உந்தன் கைகளில் ஏந்தி நிற்கிறாய்
அந்த ஆயுதம் என்ன செய்திடும்
அச்ச கூச்சல் அடங்கும் முன்னே
மொத்தம் கிள்ளி வீசிடு

வா எதிரில் வா எதிர்படும்
நொடியில் தலைகள் சிதற
வா விரட்டி வா விரட்டிடும்
விரட்டில் பகைகள் கதற

வா அழிக்க வா ஒழிக்க வா
தீயவர் குலைகள் நடுங்க
வா நெறிக்க வா முறிக்க வா
கொடிய குருதி தெறிக்க



ஏலம் போட்டு பிரிக்குது
ஓரம் கட்டி அடைக்குது
பேத பார்வை வேர்வை போல
ஊறி போன உலகிது

இறுகி போன மனமிது
இளகி போக மறுக்குது
பழகி பழகி கெடுக்க நினைக்கும்
கலைகள் களையும் வரம் இது

ஓலம் பரவிடும் அந்த ராகம் கொடியது
காலம் காலமாய் இங்கு துன்ப மேகம் பொழியுது
ஏற்க மறுத்திடு துரோக தீயை அறிந்திடு
பார்க்கும் அனைத்தையும் வீழ்த்த மீதி வாளை வீசிடு

வா எதிரில் வா எதிர்படும்
நொடியில் தலைகள் சிதற
வா விரட்டி வா விரட்டிடும்
விரட்டில் பகைகள் கதற

வா அழிக்க வா ஒழிக்க வா
தீயவர் குலைகள் நடுங்க
வா நெறிக்க வா முறிக்க வா
கொடிய குருதி தெறிக்க



குருதி தாகம் அடிக்குது
பலியை தீர்க்க துடிக்குது
பழைய பகையின் மழையில் நனைய
அசுர வேட்டை நடக்குது

எதுக்கு மண்ணில் பொறக்கிறோம்
வெறுப்ப ஊட்ட தவிக்கிறோம்
மனுஷ பயலின் அரக்க மனசில்
உறக்கம் கெட்டு கொதிக்கிறோம்

நீதி எதுவென இன்று நீயும் கூறிடு
ஆதி எதுவென கொஞ்சம் நீயும் தேடி ஓடிடு
வீதி வெளியிலே உந்தன் கோபம் காட்டிடு
மீதி குருதியை அள்ளி தீர்த்தமாக மாற்றிடு

வா அசுரா வா அசுரா வா
அசுர தலைகள் சிதற
வா அசுரா வா அசுரா வா
அசுர பகைகள் கதற

வா அசுரா வா அசுரா வா
அசுர பலிகள் கொடுக்க
வா அசுரா வா அசுரா வா
அசுர ரத்தம் தெறிக்க

Asuran - Kannazhagu Rathiname

படம் : அசுரன் (2019)
இசை : G.V. பிரகாஷ் குமார்
பாடியவர் : தனுஷ்
பாடல்வரிகள் : யுகபாரதி 


Image result for Asuran



கண்ணழகு ரத்தினமே
கை அசையும் பொற்சிலையே
காணலையே கண்ணே
உன்ன காணலையே

கையும் காலும்
உன்ன எண்ணி ஓடலையே
பொன்னழகு பெட்டகமே
பூ முடிஞ்ச கட்டடமே
காணலையே தங்கம்
உன்ன காணலையே
ஆடும் மாடும்
உன்ன எண்ணி மேயலையே

Asuran - Polladha Boomi

படம் : அசுரன் (2019)
இசை : G.V. பிரகாஷ் குமார்
பாடியவர் : தனுஷ், G.V.பிரகாஷ் குமார், கென் கருணாஸ், டி ஜே
பாடல்வரிகள் : K.ஏகாதேசி 


Image result for Asuran



பொல்லாதபூமி பொலிப்போடும் ஆள
முன்னால போனா நறுக்காதோ கால
அன்போட நின்னா தல வணங்கும் ஊரு
ஆவேசம் ஆனா உயிரெடுக்கும் பாரு

வீராப்புத்தான் வேணாம்மய்யா
வீட்டோட இரு நீ தொணையாக
சூலாயுதம் நீ தூக்குனா
வில்லங்கம் வருமே வெனையாக

உன் மீச முறுக்கால கொடி ஏத்து ஏத்து
முப்பாட்டன் கொலம் காக்க வரலாற மாத்து
உன் மீச முறுக்கால கொடி ஏத்து ஏத்து
முப்பாட்டன் கொலம் காக்க வரலாற மாத்து


ஆகாசமா நின்னா நம
அண்ணாந்து பாக்கும் ஜில்லாவே
அப்பாவியா தள்ளாடுனா
மல்லாந்து போவோம் மண்ணாவே

ஓட்டாண்டியா ஆனாலுமே
உள்ளூர வேணும் ஒரு தில்லு
ஏமாத்துற ஆள எல்லாம்
என்கூட மோத வர சொல்லு

ஆத்தாடி என் மவன் தானே அசகாய சூரன்
காட்டேரி வந்தாலும் கலங்காத வீரன்
கொம்பேறி மூக்கன் உன் கூட்டு
கூட்டாவே சேரும் என் பாட்டு
கும்மாளாம் போட நானும்
சேர்ந்தே வாரேன் ஒகே ஆல் ரைட்

உன் மீச முறுக்கால கொடி ஏத்து ஏத்து
முப்பாட்டன் கொலம் காக்க வரலாற மாத்து
உன் மீச முறுக்கால கொடி ஏத்து ஏத்து
முப்பாட்டன் கொலம் காக்க வரலாற மாத்து

Thursday, March 19, 2020

Asuran - Ellu Vaya Pookalaye

படம் : அசுரன் (2019)
இசை : G.V. பிரகாஷ் குமார்
பாடியவர் : சைந்தவி
பாடல்வரிகள் : யுகபாரதி


Image result for Asuran




எள்ளு வய பூக்கலையே
ஏறெடுத்தும் பாக்கலையே
ஆலால ஒன் சிரிப்பு கொத்துதய்யா
அச்சறுந்த ராட்டினம் போல சுத்துதய்யா

கொல்லையில வாழ எல
கொட்டடியில் கோழி குஞ்சு
அத்தனையும் உன் மொகத்த சொல்லுதய்யா
ஆடும் மாடும் வெறும் வாய மெள்ளுதய்யா

காத்தோட ஒன் வாசம் காடெல்லாம் ஒம் பாசம்
ஊத்தாட்டம் ஒன் நெனப்பே ஊறுதய்யா
சால்சாப்பு வேணாம் வந்து நில்லய்யா
சாவையும் கூறு போட்டு கொல்லய்யா


கல்லாக நின்னாயோ கால் நோக நின்னாயோ
கண்ணே நீ திரும்பி வரணும் வீட்டுக்கு
மல்லாந்து போனாலும் மண்ணோடு சாஞ்சாலும்
அய்யா நீ பெருமை சாதி சனத்துக்கு

தலைச்சம் புள்ளை இல்லாம சரிஞ்சது எத்தன ஆட்சி
நீயே எங்க ராசா வா வா களத்துக்கு
தாயோட பாரம் மாசம் பத்தய்யா
தாங்காம நீயும் போனா தப்பய்யா

எள்ளு வய பூக்கலையே
ஏறெடுத்தும் பாக்கலையே
ஆலால ஒன் சிரிப்பு கொத்துதய்யா
அச்சறுந்த ராட்டினம் போல சுத்துதய்யா


வாள் ஏந்தி வந்தாலும் வாழாம செத்தாலும்
கம்பீரம் கொறைஞ்சிடாத நெருப்பு நீ
அய்யோன்னு போனாலும் ஆகாசம் போனாலும்
தண்ணீர கொளத்தில் சேர்க்கும் வரப்பு நீ

உழைக்க எண்ணுற ஆள உதைச்சி தள்ளுற ஊர
கைய கால வெட்டி வீசும் கருப்பு நீ
காட்டேரி உன்னை கண்டா ஓடாதோ
காப்பாத்த தெய்வம் வந்து சேராதோ

எள்ளு வய பூக்கலையே
ஏறெடுத்தும் பாக்கலையே
ஆலால ஒன் சிரிப்பு கொத்துதய்யா
அச்சறுந்த ராட்டினம் போல சுத்துதய்யா

கொல்லையில வாழ எல
கொட்டடியில் கோழி குஞ்சு
அத்தனையும் உன் மொகத்த சொல்லுதய்யா
ஆடும் மாடும் வெறும் வாய மெள்ளுதய்யா

Friday, March 13, 2020

Namma Veettu Pillai - Unkoodave Porakkanum

படம் : நம்ம வீட்டு பிள்ளை (2019)
இசை : D. இமான்
பாடியவர் : சித் ஸ்ரீராம்
பாடல் வரிகள் : GKP


Image result for Namma Veettu Pillai




உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே
உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
தாய் போல நான் காக்கணும் எப்போதுமே

என் வாழ்க்க வரமாக அட நீயும் பொறந்தாயே
என் உயிரே உறவாக என் நெஞ்சில் கரைஞ்சாயே
பசி தூக்கத்த மறந்து நீயும் அடி பாசத்த பொழிஞ்சாயே
தெனம் உன் முகம் பார்த்து பூக்கும் புது விடியலும் தந்தாயே
நீ எனக்கு சாமி இந்த பூமி அட எல்லாம் நீ தானே
உன் சிரிப்பு போதும் நீ கேட்டா என் உசுர தாரேனே

உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே
உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
தாய் போல நான் காக்கணும் எப்போதுமே

உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே
உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
தாய் போல நான் காக்கணும் எப்போதுமே


அஞ்சு விரல்கள கோர்த்து நாம பத்து விரலா ஆனோம்
மணகோலத்தில் பார்த்தா அந்த சின்ன பொண்ண காணோம்
சில நாளில் நீ என் தாயே சில நாளில் நீ என் சேயே
நீ மடிமேல் சாயும்போது அந்த வானம் விரிக்கும் பாயே
எப்போதுமே என்கூடத்தான் நேற்று நெனைச்சேன்
இப்போ நீ போகும் போது செத்து பொலச்சேன்
நீதானே கொலசாமி ஒரு வரமும் தாயேன்
மகளாக பொறப்பேன்னு நீ சொல்லி போயேன்

உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே
உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
தாய் போல நான் காக்கணும் எப்போதுமே

உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
உனக்காக நான் இருக்கனும் எப்போதுமே
உன் கூடவே பொறக்கணும்
உன் கூடவே பொறக்கணும்
தாய் போல நான் காக்கணும் எப்போதுமே

Saturday, June 15, 2019

Thadam - Inayae

படம் : தடம் (2019)
இசை : அருண் ராஜ்
பாடியவர்கள் : சித் ஸ்ரீராம், பத்மலதா
பாடல்வரிகள் : மதன் கார்க்கி

Image result for thadam tamil movie



இணையே என் உயிர் துணையே 
உன் இமை திறந்தால் 
நான் உறைவது ஏனடி 
அழகே என் முழு உலகம் 
உன் விழிகளிலே 
கண் உறங்குது பாரடி

அருகே நீ இருந்தால்
என் கைப்பேசி வாய் மூடுமே
தலை சாய்த்து நீ சிரித்தாயெனில்
என் தேநீரில் தேன் கூடுமே

துணையே என் உயிர் துணையே 
உன் இனிமையிலே நான் கரைவது ஏனடா 
யுகமாய் கை விரல் பிடித்து 
நாம் நடப்பது போல் நான் உணர்வது ஏனடா
இணையே...


மையல் காதலாய் மாறிய புள்ளி
என்றோ மனம் கேட்குதே 

காதல் காமமாய் உருகொண்ட தருணம்
நினைக்கையில் உயிர் வேர்க்குதே

உடல் மேல் பூக்கும் நீரோடு நீராட்டியே
சில நாள் என்னை சுத்தம் செய்தாய்

எந்தன் சேவைகள் எல்லாமே பாராட்டியே
எந்தன் ஆடைகள் மீண்டும் தந்தாய்

இணையே என் உயிர் துணையே 
உன் இனிமையிலே நான் கரைவது ஏனடி

யுகமாய் கை விரல் பிடித்து 
நாம் நடப்பது போல் நான் உணர்வது ஏனடா

அருகே நீ இருந்தால்
என் கைப்பேசி வாய் மூடுமே
தலை சாய்த்து நீ சிரித்தாயெனில்
என் தேநீரில் தேன் கூடுமே

இணையே என் உயிர் துணையே 
உன் இனிமையிலே நான் கரைவது ஏனடி

யுகமாய் உன் விரல் பிடித்து 
நாம் நடப்பது போல் நான் உணர்வது ஏனடி

இணையே...

Popular Posts