Showing posts with label Pradeep Kumar. Show all posts
Showing posts with label Pradeep Kumar. Show all posts

Monday, April 18, 2022

Manithan - Aval

 படம் : மனிதன் (2016)

இசை : சந்தோஷ் நாராயணன்

பாடியவர்கள் : ப்ரதீப் குமார், ப்ரியா ஹிமேஷ்

பாடல்வரிகள் : விவேக்


Download this MP3

அவள் குழல் உதிர்த்திடும்

இலை எனை துளைத்திடும்

இடைவெளி முளைத்திடும்

நேரம் உயிர் நனைத்திடும்


அவள் இதழ் திரட்டிடும்

மழை என்னில் தெரித்திடும்

சுழல் என சுழற்றிடும்

நெஞ்சைச் சுருட்டிடும்


அழகழகா 

அவ தெரிவா

உயிர் உரிவா

மெது மெதுவா

விரி விரிவா

விழி எறிவா


எனக்கானவளே நீதான் கிட்ட வறியா

தெரிஞ்சா செஞ்சே மன்னிப்பே கிடையாதா

உடனே என்ன உதறிப்போனா சரியா

இனிமே நானும் உயிரும் அட தனியா


என் சொகமே... என் மொகமே...

எங்கேயோ... தொலைஞ்சவளே...

என் வரமே... என் நிறமே...

ஏழாக வளைஞ்சவளே...



காலம் போகுதே கடிகாரம் ஓடுதே

உன்ன மாத்திக்கும் நேரம் எப்போ

வாதம் பண்ணுனா பிடிவாதம் பண்ணுற

திருந்தாத நான்தான் தப்போ



படபடக்கும் கண்ணால

என மிரட்டிக் கொஞ்சம் மாத்திட்ட

மனசுடைஞ்சு போகாத

உன் விரல் புடிச்சு நானும் கரை ஏறுவேன்


என் சொகமே... என் மொகமே...

எங்கேயோ... தொலைஞ்சவளே...

என் வரமே... என் நிறமே...

ஏழாக வளைஞ்சவளே...


அழகழகா...

அவ தெரிவா...

உயிர் உரிவா...

மெது மெதுவா...

விரி விரிவா...

விழி அறிவா...


உடனே என்ன உதறிப்போனா சரியா

இனிமே நானும் உயிரும் அட தனியா

என் வரமே என் நிறமே...

ஏழாக வளைஞ்சவளே...

Thursday, July 29, 2021

Teddy - Marandhaye

படம்: டெடி (2020)

இசை: D.இமான்

பாடியவர்கள்: ப்ரதீப் குமார், ஜோனிதா காந்தி

பாடல்வரிகள்: மதன் கார்க்கி




Download this MP3


ஹா..ஆஅஆஅ..ஆ...

ஹா..ஆஅஆஅ..ஆ...

ஹா..ஆஅஆஅ..ஆ...

ஹா..ஆஅஆஅ..ஆ...


மறந்தாயே மறந்தாயே

பெண்ணே என்னை ஏன் மறந்தாய்

கடந்தேதான் நடந்தாயே

யாரோ என்று ஏன் கடந்தாய்

நினைவுகள் யாவும் நீங்கி போனால்

நான் யார்? மறதியா அவதியா சகதியா

நிகழ்ந்தவை எல்லாம் பொய்யாய் ஆனால்

நீ யார்? ஜனனமா சலனமா மரணமா

தனியாய் நான் வாழ்ந்தேனே

வானாய் நீ ஆனாய்

உனில் ஏற பார்த்தேனே

காணாமல் போனாய்

யாரடி... யாரடி... நான் இனி யாரடி...

நான் இனி வாழ ஓர் காரணம் கூறடி


யாரடி யாரடி... பாவி நீ யாரடி...

ஓர் துளி ஞாபகம் ஊறுதா பாரடி


மறந்தாயே மறந்தாயே

பெண்ணே என்னை ஏன் மறந்தாய்

கடந்தேதான் நடந்தாயே

யாரோ என்று ஏன் கடந்தாய்



முகிலுமில்லை புயலுமில்லை மழைவருமா

இதயத்திலே இனம் புரியா கலவரமா

விதியுமில்லை உரமுமில்லை மரம் வருமா

நினைவுகளில் கிளை விரித்தே சுகம் தருமா

இதுவரை அறியா ஒருவனை விரும்பி

இதயம் இதயம் துடி துடித்திடுமா

தொலைவொரு பிறவி அறுபட்ட உறவு

பிறவியை கடந்துமே எனை தொடர்ந்திடுமா


ஜென்மம் உண்மை இல்லை உன் வேர் என்ன

காதல் கொண்டேன் உன்மேல் உன் பேர் என்ன

அணுவெல்லாம் அணுவெல்லாம் 

நினைவென நிறைந்தாய்


மறந்தாயே மறந்தாயே

பெண்ணே என்னை ஏன் மறந்தாய்


நிறைந்தாயே நிறைந்தாயே

நெஞ்சம் எல்லாம் நீ நிறைந்தாய்


தனிமையும் நானும்

மீண்டும் ஒன்றாய் ஆனோம்

மறுபடி சுருங்கிடும் உலகிலே


ஆ... சுரங்கத்தை போலே

என்னுள் போக போக

பெருகிடும் பெருகிடும் நினைவிலே


உனை காணா உலகத்தில்

எதுவும் மெய்யில்லை


உலகெல்லாம் பொய்

இந்த காதல் பொய் இல்லை


யாரடி...  ஹா...

யாரடி... ஹா...

நான் இனி யாரடி...  ஹா...

ஓர் துளி....  ஹா...

ஞாபகம்...  ஹா...

ஊறுதா பாரடி...  ஹாஆஆ...


யாரடா யாரடா... நீ என்னுள் யாரடா...

பேரலை போலே நீ பாய்கிறாய் பாரடா...


மறந்தாயே மறந்தாயே...


Friday, July 9, 2021

Konjam Pesu

படம்: கொஞ்சம் பேசு (2021)

இசை: நரேன்

பாடியவர்கள்: ப்ரதீப் குமார், நித்யஸ்ரீ வெங்கடரமணன்

பாடல்வரிகள்: யுகபாரதி

தயாரிப்பு: ராஜு முருகன்





ஒ...ஒ...ஒ...ஒ...

ஒ...ஒ...ஒ...ஒ...
ஒ...ஒ...ஒ...ஒ...
ஒ......

ஒற்றை நிலா தேய்ந்துவிட்டது
அன்பே நீயில்லை
ஜன்னல் மழை ஒய்ந்துவிட்டது
நீ ஏன் இல்லை

எச்சில் முத்தம் காய்ந்துவிட்டது
செல்லம் நீயில்லை
நெஞ்சில் இசை தீர்ந்துவிட்டது
நீ ஏன் இல்லை

கண் ரெண்டில் நான் 
கண்டேன் ஆயிரம் இரவு
உன் மார்பில் சாயாமல் 
ஏன் இந்த பிரிவு

உன்பாடு நான் 
இன்று பேசிய உதடு
மெளனத்தில் கொன்றாலே 
சாவது இனிது

கொஞ்சம் பேசு கோபம் என்ன
தூங்க கண்கள் தா...
நானே என்னை தேற்றிக்கொள்ள
வார்த்தை கொஞ்சம் தா...


பூமரங்களில் மின்மினிகளும்
தீக்காற்று வீசும்
நாள் முழுவதும் உன் நினைவுகள் 
ஒயாமல் பேசும்


முதல்முறை பழகிய தெரு இங்கே
பலமுறை பருகிய இதழ் எங்கே
உயிர் நிழல் தழுவிய அறை இங்கே
இருதயம் நிரம்பிய உறவேங்கே
ஆசை முகம்மறந்திட
கண்ணால் முடியுமா
காதல் காற்றில் உதிருமா

தூரம் தரும் வலிகளை
சொன்னால் புரியுமா
ஈரம் நதியே விலகுமா

மரித்திடும் நொடியிலும் 
உனது அன்பு உயிர்த்தரும்
சிரித்திட ஒருமுறை வா வா அன்பே


கொஞ்சம் பேசு கோபம் என்ன
தூங்க கண்கள் தா...
நானே என்னை தேற்றிக்கொள்ள
வார்த்தை கொஞ்சம் தா...

கண்ணே இன்னும் காயம் என்ன
கையில் தூங்க...வா
வார்த்தை ஒன்றும் தேவையில்லை
வாரி கொள்வேன் வா


Source: https://www.youtube.com/watch?v=O18c0dhb7Y0

Mehandi Circus - Kodi Aruvi

படம்: மெஹந்தி சர்க்கஸ் (2019)

இசை: ஷான் ரோல்டன்

பாடியவர்கள்: ப்ரதீப் குமார், நித்யஸ்ரீ

பாடல்வரிகள்: யுகபாரதி





கோடி அருவி கொட்டுதே அடி என் மேல

அது தேடி உசுர முட்டுதே நெதம் உன்னால

கோடி அருவி கொட்டுதே அடி என் மேல

அது தேடி உசுர முட்டுதே நெதம் உன்னால

மலை கோவில் விளக்காக ஒளியா வந்தவளே

மனசோடு தொலைபோட்டு என்னையே கண்டவளே


கண்ண மூடி கண்ட கனவே

பல ஜென்மம் தாண்டி வந்த உறவே

கண்ண மூடி கண்ட கனவே

பல ஜென்மம் தாண்டி வந்த உறவே


கோடி அருவி கொட்டுதே


அட என் மேல


அது தேடி உசுர முட்டுதே


நெதம் உன்னால



நள்ளிரவும் ஏங்க 

நம்ம இசைஞானி

மெட்டமைச்ச பாட்டா

பொங்கி வழிஞ்ச


பொட்டலுல வீசும்

உச்சி மலை காத்த

புன்னகையில் ஏன்டா

என்ன புழிஞ்ச


சாராயம் இல்லாம

சாஞ்சேன்டி கண்ணால

கூழாங்கல் சேராதோ செங்கல்ல


அடகாத்து உன்னை நானும்

சுகமா வெச்சுகிறேன்

உன்னை சேர பொறந்தேன்னு

என்ன நான் மெச்சிகிறேன்


கண்ண மூடி கண்ட கனவே

பல ஜென்மம் தாண்டி வந்த உறவே

கண்ண மூடி கண்ட கனவே

பல ஜென்மம் தாண்டி வந்த உறவே...


கோடி அருவி கொட்டுதே


அட என் மேல


அது தேடி உசுர முட்டுதே


நெதம் உன்னால


கோடி அருவி கொட்டுதே டி என் மேல

அது தேடி உசுர முட்டுதே நெதம் உன்னால

மலை கோவில் விளக்காக ஒளியா வந்தவளே

மனசோடு தொலைபோட்டு என்னையே கண்டவளே


கண்ண மூடி கண்ட கனவே...

பல ஜென்மம் தாண்டி வந்த உறவே...

தன்னா நானா... தன்னா நானா...

தன்னா நானா... தன்னா நானா...


Saturday, June 15, 2019

96 - The Life of Ram

படம் : 96 (2018)
இசை : கோவிந் வசந்தா
பாடியவர்கள் : ப்ரதீப் குமார்
பாடல்வரிகள் : கார்த்திக் நேத்தா

Related image




கரை வந்த பிறகே பிடிக்குது கடலை
நரை வந்த பிறகே புரியுது உலகை

நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே
இன்றை இப்போதே அர்த்தம் ஆக்குதே 
இன்றின் இப்போதின் இன்பம் யாவுமே
நாளை ஓர் அர்த்தம் காட்டுமே

வாழா என் வாழ்வை வாழவே
தாளாமல் மேலே போகிறேன்
தீரா உள்ஊற்றை தீண்டவே
இன்றே இங்கே மீள்கிறேன் 
இங்கே இன்றே ஆழ்கிறேன்

யாரோப்போல் நான் என்னை பார்க்கிறேன்
ஏதும் இல்லாமலே 
இயல்பாய் சுடர் போல் தெளிவாய்

நானே இல்லாத ஆழத்தில் நான் வாழ்கிறேன்
கண்ணாடியாய் பிறந்தே 
காண்கின்ற எல்லாமும் நான் ஆகிறேன்

இரு காலின் இடையிலே உரசும் பூனையாய்
வாழ்க்கை போதும் அடடா
எதிர் காணும் யாவுமே தீண்ட தூண்டும் அழகா

நானே நானாய் இருப்பேன் 
நாளில் பூராய் வசிப்பேன்
போலே வாழ்ந்தே சலிக்கும் 
வாழ்வை மறக்கிறேன்
வாகாய் வாகாய் வாழ்கிறேன் 
பாகாய் பாகாய் ஆகிறேன்

ஓ... காற்றோடு வல்லூறு தான் போகுதே
பாதை இல்லாமலே 
அழகாய் நிகழே அதுவாய்

நீரின் ஆழத்தில் போகின்ற கல் போலவே
ஓசை எல்லாம் திறந்தே
காண்கின்ற காட்சிக்குள் நான் மூழ்கினேன்

திமிலெரி காளை மேல் தூங்கும் காகமே
பூமி மீது இருப்பேன்
புவி போகும் போக்கில் கை கோர்த்து
நானும் நடப்பேன்

ஏதோ ஏக்கம் ழுதே ஆஹா ஆழம் தருதே
தாய் போல் வாழும் கணமே ஆரோ பாடுதே
ஆரோ ஆரிராரிரோ ஆரோ ஆரிராரிரோ

கரை வந்த பிறகே பிடிக்குது கடலை
நரை வந்த பிறகே புரியுது உலகை

நேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே
இன்றை இப்போதை அர்த்தம் ஆகுதே
இன்றின் இப்போதின் இன்பம் யாவுமே
நாளை ஓர் அர்த்தம் காட்டுமே

Wednesday, January 23, 2019

Gypsy - Very very bad

படம் : ஜிப்சி  (2019)
இசை : சந்தோஷ் நாராயணன்
பாடியவர்கள் : சந்தோஷ் நாராயணன், ப்ரதீப்குமார்
பாடல்வரிகள் : யுகபாரதி


Related image



Very very bad...
Bad to the core...
Very very bad...
Bad to the core...

காக்கி கலரு... காக்கி கலரு
எதுக்கு எங்கள அடிக்கிற‌
ஹோய்... காக்கி கலரு...  காக்கி கலரு
கழுத்த புடிச்சி நெரிக்குற‌

செத்து போன ஆளுக்கெல்லாம்
சிலைய நீயும் தொறக்குற‌
இத்து போன எங்கள ஏன்டா
திரும்ப திரும்ப ஒதைக்குற‌
ஸ்டேஷன்‍ல ஏன்டா 
கட்ட பஞ்சாயத்து நடத்துற‌
ஏவி விட்ட டாக்கெல்லாம் 
எலும்பு துண்ட பொறுக்குற‌
பதவி வெறி அக்யூஸ்ட் எல்லாம் 
பண்ணுறியே ஊழியம்
எங்கள போட்டு மிதிக்கிறியே
இதா ஜனநாயகம்

Very very bad... Very very bad
Bad to the core... Bad to the core
Very very bad.... Oh no…
Bad to the core


கேங் ரேப் செஞ்சவனும்
போறான் போறான் காருல‌
நாலு மர்டர் செஞ்சவன
பார்த்தேன் ஷாப்பிங் மாலுல‌
கொள்ள அடிச்ச மந்திரி மாரு
வாரான் ஹெலிபேடுல‌
பொறுக்கிகெல்லாம் படா சைஸ்
பேனர் இந்த ஊருல‌
அவன எல்லாம் கூண்டுல ஏத்த‌
உனக்கு இருக்கா தைரியம்
எங்கள போட்டு மிதிக்கிறியே
இதா ஜனநாயகம்


Very very bad... Very very bad
Bad to the core
Oh yeah yeah yeah yeah
Very very bad... It’s too bad ya
Bad to the core
Very… Charge…
Very very… Hands up…
Very… Very very…
You’re under arrest…


செயின் அருத்த பேர்வழி தான்
செல்பி எடுத்து அனுப்புறான்
கூலி பட தலைவனும் தான்
உனக்கு கேக் ஊட்டுறான்
சாதி கொலகாரன் எல்லாம்
டிவி பெட்டி கொடுக்குறான்
நீதிய விக்கும் திருடனெல்லாம்
இ.பி.கோ‍-வ‌  கிழிக்கிறான்
அவன எல்லாம் கூண்டுல ஏத்த‌
உனக்கு இருக்கா தைரியம்
எங்கள போட்டு மிதிக்கிறியே
இதா ஜனநாயகம்

Very very bad
Very very… very very
Bad to the core... Hey…
Very very bad...
Bad to the core


நாங்க வெதச்ச நெலத்துல‌
எத்துன எத்துன பில்டிங்
ஊர விட்டு தொரத்துரியே
எங்க போச்சி என் பங்கு
எங்க மண்ணை புடுங்குனவன்
ஏரோப்ளேனில் பறக்குறான்
சொந்த ஜனங்க சுருண்டு படுக்க‌
ஜெயில் கதவ தொறக்குறான்
என்னானு கேட்டாக்க 
குண்டாசுல ஒதுக்குறான்

Very very bad...
Bad to the core
Very very bad...
Bad to the core

Very very bad…

காக்கி காக்கி... காக்கி கலரு
காக்கி காக்கி... காக்கி கலரு
காக்கி காக்கி... காக்கி கலரு
காக்கி காக்கி... காக்கி கலரு

Very very bad…

Thursday, May 10, 2018

Meyaadha Maan - Nee Mattum Podhum

ப‌டம்: மேயாத மான் (2017)
இசை: ப்ரதீப்குமார்
பாடியவர்கள்: சித் ஸ்ரீராம், தர்சனா KT
பாடல்வரிகள்: மிர்ச்சி விஜய்


Related image



Download this MP3


காத்துல அசையும் தாமரையே
பாத்ததும் பனியா உருகிறேனே

கூண்டுல இருந்த பூங்கிளி நான்
உன் கூடவே சேர்ந்தே பறக்குறேனே

உன் கால சுத்தி ஓடவா
உன் கைப்புடிச்சி ஆடவா

கண்ணால கட்டிப் போடவா
திண்டாட விட்டுப் பாக்கவா
நீ மட்டும் போதும் போதும்

வேறென்ன வேணும் வேணும்

நீ மட்டும் போதும் போதும்
வேறென்ன வேணும் வேணும்

காத்துல அசையும் தாமரையே
உன் கூடவே சேர்ந்தே பறக்குறேனே



நீயும் நானும் வேற வேற இல்ல
கொஞ்ச நாளா நானே நானா இல்லடி
கால நேரம்... தாண்டி போவோமடி

வீடு வாசல் கூட தேவ இல்ல
சொந்த பந்தம் ஒன்னும் தேவ இல்லடா
காதல் செய்ய... காத்திருக்கேனடா


நெஞ்ஜோர‌ம் என்ன செஞ்ச‌

கெஞ்சாத என்ன கொஞ்ச‌
நீ மட்டும் போதும் போதும்
வேறென்ன வேணும் வேணும்
நீ மட்டும் போதும் போதும்
வேறென்ன வேணும் வேணும்

ஓ... நீ மட்டும் போதும் போதும்
வேறென்ன வேணும் வேணும்
நீ மட்டும் போதும் போதும்
வேறென்ன வேணும் வேணும்


Wednesday, May 9, 2018

Kaala - Thanga Sela

ப‌டம்: காலா (2018)
இசை: சந்தோஷ் நாராயணன்
பாடியவர்கள்: சங்கர் மகாதேவன், ப்ரதீப் குமார், அனந்து
பாடல்வரிகள்: அருண்ராஜா காமராஜ்


Image result for kaala tamil movie mp3 free download



வாடி என் தங்க செல‌
நீ இல்லாட்டி நான் ஒன்னுமில்ல‌
அடி வாடி என் தங்க செல‌
நீ இல்லாட்டி நான் ஒன்னுமில்ல‌
என் ஜோடியா நீ நிக்கயில‌
வேறென்ன வேணும் வாழ்க்கையில‌
ஒத்த தல ராவணன் பச்சபுள்ள ஆவுறேன்
கக்கத்துல தூக்கிக்க வரீயா
பட்டாக்கத்தி வீசினேன் பட்டாம்பூச்சி ஆக்குன
முட்டக்கண்ணு மயக்கின சரியா

தில்லாத்டாங்கு டாங்கு
சும்மா திருப்பி போட்டு வாங்கு
தில்லாத்டாங்கு டாங்கு
சும்மா திருப்பி போட்டு வாங்கு

வாடி என் தங்க செல‌
நீ இல்லாட்டி நான் ஒன்னுமில்ல‌
என் ஜோடியா நீ நிக்கயில‌
வேறென்ன வேணும் வாழ்க்கையில‌


நெத்தி பொட்டு மத்தியில‌
என்ன தொட்டு வச்சவளே - நீ
மஞ்ச பூசி முன்னே வந்தா
கண்ணு கூசுமடி
பேட்டைகுள்ள பொல்லாதவன்
ஹோய்.. பேட்டைகுள்ள பொல்லாதவன் - ‍‍‍நீ
போட்ட கோட்ட தாண்டாதவன் ‍‍- என்
வீரத்தெல்லாம் மூட்டய‌க்கட்டி
உம் பின்னாடி தள்ளாடி வந்தேனடி
சோகத்தெல்லாம் மூட்டக்கட்டி
கொண்டாட வந்தாயடி

வாடி என் தங்க செல‌
வாடி என் தங்க செல‌
நீ இல்லாட்டி நான் ஒன்னுமில்ல‌
என் ஜோடியா நீ நிக்கயில‌
வேறென்ன வேணும் வாழ்க்கையில‌


தில்லாத்டாங்கு டாங்கு
சும்மா திருப்பி போட்டு வாங்கு

தில்லாத்டாங்கு டாங்கு
சும்மா திருப்பி போட்டு வாங்கு


திருப்பி... திருப்பி... திருப்பி...
அன்பக்கொட்ட நட்பு உண்டு
பாசம் கொட்ட சொந்தம் உண்டு
அட ரத்த பந்தம் ஏதும் இல்ல‌
ஊரே சொந்தமடா
சேட்டையெல்லாம் செய்யாதவன்...
சேட்டையெல்லாம் செய்யாதவன்
பல வேட்டைக்கெல்லாம் சிக்காதவன் - நீ
வீட்டையெல்லாம் ஆளுற அழகுல‌
பெண்ணே நான் திண்டாடி போறேனடி
ஹே... கோட்டையெல்லாம் ஆளுற வயசுல‌
கண்ணே உன் கண் போதுமடி

வாடி...
வாடி என் தங்க செல‌
நீ இல்லாட்டி நான் ஒன்னுமில்ல‌
என் ஜோடியா நீ நிக்கயில‌
வேறென்ன வேணும் வாழ்க்கையில‌
ஒத்த தல ராவணன் பச்சபுள்ள ஆவுறேன்
கக்கத்துல தூக்கிக்க வரீயா
பட்டாக்கத்தி வீசினேன் பட்டாம்பூச்சி ஆக்குன
முட்டக்கண்ணு மயக்கின சரியா

தொட்டா பறக்கும் தூளு
கண்ணு பட்டா கலக்கும் பாரு
ஹே...
தில்லாத்டாங்கு டாங்கு
சும்மா திருப்பி போட்டு வாங்கு
தில்லாத்டாங்கு டாங்கு
சும்மா திருப்பி போட்டு வாங்கு
தில்லாத்டாங்கு டாங்கு
சும்மா திருப்பி போட்டு வாங்கு
தில்லாத்டாங்கு டாங்கு
சும்மா திருப்பி போட்டு வாங்கு
தில்லாத்டாங்கு டாங்கு
சும்மா திருப்பி போட்டு வாங்கு
தில்லாத்டாங்கு டாங்கு
சும்மா திருப்பி போட்டு வாங்கு
தில்லாத்டாங்கு டாங்கு
சும்மா திருப்பி போட்டு வாங்கு

Kaala - Kannammaa

ப‌டம்: காலா(2018)
இசை: சந்தோஷ் நாராயணன்
பாடியவர்கள்: ப்ரதீப் குமார், தீ, அனந்து
பாடல்வரிகள்: உமா தேவி


Image result for kaala tamil movie mp3 free download



பூவாக என் காதல் தேனுறுதோ
தேனாக தேனாக வானுறுதோ
கண்ணம்மா... கண்ணம்மா...
கண்ணிலே என்னம்மா

ஆகாயம் சாயாம தூவானமேது
ஆறாம ஆறாம காயங்களேது
கண்ணம்மா... கண்ணம்மா...
கண்ணிலே என்னம்மா

உன் காதல் வாசம் என் தேகம் பூசும்
காலங்கள் பொய்யானதே
தீராத காதல் தீயாக மோத‌
தூரங்கள் மடை மாறுமோ
வான் பார்த்து ஏங்கும் சிறு புல்லின் தாகம்
கானல்கள் நிறைவேற்றுமோ
நீரின்றி மீனும் சேறுண்டு வாழும்
வாழ்விங்கு வாழ்வாகுமோ
ஆ... ஆ... ஆ...

கண்ணம்மா... கண்ணம்மா...
கண்ணிலே என்னம்மா
ஆகாயம் சாயாம தூவானமேது
ஆறாம ஆறாம காயங்களேது


மீட்டாத வீணை தருகின்ற ராகம்
கேட்காது பூங்காந்தலே
பூட்டாத தாயின் கன‌க்கின்ற பால்போல்
என் காதல் கிடக்கின்றதே
காயங்கள் ஆற்றும் தலை கோதி தேற்றும்
காலங்கள் கை கூடுதே
தொடுவானம் இன்று நெடுவானம் ஆகி
தொடும் நேரம் தொலைவாகுதே

கண்ணம்மா... கண்ணம்மா...
கண்ணிலே என்னம்மா
ஆகாயம் சாயாம தூவானமேது
ஆறாம ஆறாம காயங்களேது
கண்ணம்மா... கண்ணம்மா...
கண்ணிலே என்னம்மா

Saturday, December 9, 2017

Karuppan - Azhagazhaga

பட‌ம்: கருப்பன் (2017)
இசை: D. இமான்
பாடியவர்கள்: ப்ரதீப் குமார்
பாடல்வரிகள்: யுகபாரதி



Image result for karuppan tamil movie



அழகழகா தொடுகிறதே மலக்காத்து
அடி மரமும் அசஞ்சிடுதே அதப்பாத்து
கருங்கல்லான போதிலுமே
சிலை என்றாகும் காதலிலே
சிறுப்புல் ஒன்று வாழ்ந்திடவே
மழை சிந்தாதோ மேகங்களே
என்ன ஆனாலுமே இந்த ஏகாந்தமே
தொட்டு தொடர்ந்து தொடர்ந்து வருமே

அழகழகா தொடுகிறதே மலக்காத்து
அடி மரமும் அசஞ்சிடுதே அதப்பாத்து


வெண்ணிலவென்பது வானை நீங்க எண்ணிடுமோ
எத்தனை ஜென்மங்கள் ஆன போதும் மங்கிடுமோ
யாரது வாசல் என்பதை பார்த்து சேருமோ அதிகாலை
காத‌லை சேர ஜாதகம் கேட்க ஓடுமோ அந்திமாலை
கடவுள் பேசும் மொழியே காதல்
அதுதானே உலகின் மொழியே

அழகழகா தொடுகிறதே மலக்காத்து
அடி மரமும் அசஞ்சிடுதே அதப்பாத்து


அன்பதை நெஞ்சினில் ஏந்தும் போது உண்மையிலே
அத்தனை இன்பமும் சேர்ந்திடாதோ கைகளிலே
தாயவள் பாசம் தந்தையின் நேசம் சேர்ந்ததால் கருவானோம்
ஆசையில் பூக்கும் பூவென தானே யாருமே உருவானோம்
மனம் போல் வாழ உறவே ஊஞ்சல்
கயிராக அசையும் உயிரே

அழகழகா தொடுகிறதே மலக்காத்து
அடி மரமும் அசஞ்சிடுதே அதப்பாத்து
கருங்கல்லான போதிலுமே
சிலை என்றாகும் காதலிலே
சிறுப்புல் ஒன்று வாழ்ந்திடவே
மழை சிந்தாதோ மேகங்களே
என்ன ஆனாலுமே இந்த ஏகாந்தமே
தொட்டு தொடர்ந்து தொடர்ந்து வருமே

Wednesday, August 30, 2017

Gemini Ganeshanum Suruli Raajanum - Ammukuttiye

படம்: ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் (2017)
இசை: D. இமான்
பாடியவர்: ப்ரதீப் குமார்
பாடல் வரிகள்:  யுகபாரதி


Image result for Gemini Ganeshanum Suruli Raajanum



அம்முகுட்டியே அடியே உன்ன‌ எண்ணி கலஞ்சேன்டி
குட்டி குட்டியா கவித சொல்லி கட்டு கொலஞ்சென்டி
உன்ன‌ பெத்த தாய காட்டடி கும்பிட்டுப் போக நான் ரெடி

செல்லக்குட்டி நீயும் பேச சீனி மூட்ட கொட்டுதடி
கன்னுக்குட்டி போல ஆச காதல் பாட்ட‌ கட்டுதடி
அம்முகுட்டியே அடியே உன்ன‌ எண்ணி கலஞ்சேன்டி
குட்டி குட்டியா கவித சொல்லி கட்டு கொலஞ்சென்டி


தங்க செல போல மங்கிடாம என்ன ஓரசி போகுற‌
அங்கம் அழகாக செல்லம் நீயும் எங்க அரிசி வாங்குற
ஒட்டுமொத்த ஊரும் அண்ணாந்து பாக்க சிட்டாகுற‌
முத்தம் ஒண்ணு கேட்டா மின்சாரம் போல கட்டாகுற‌
பொங்க வைக்கும் நீ பால் நொற நெஞ்ச தொட்ட மூணாம்பிற
சொகமா... உசுர... கவ்வுற...

அம்முகுட்டியே அடியே உன்ன‌ எண்ணி கலஞ்சேன்டி
குட்டி குட்டியா கவித சொல்லி கட்டு கொலஞ்சென்டி


எத்தனையோ பேர‌ தள்ளி போனு சொல்லி ஜெயிச்ச ஆம்பள
உன்னுடைய பார்வ கொக்கி போட கண்ணு முழியும் தூங்கல
தள்ளுவண்டி போல முன்னால நானும் தள்ளாடல...
முன்ன வந்து நீயும் கிக்காக‌ பேச உக்காரல‌
ஒண்டி கட்ட நான் வீட்டுல ஒட்டிக்கிட்ட நீ மூச்சுல
நெசமா... கதையும்... சொல்லல...

அம்முகுட்டியே அடியே உன்ன‌ எண்ணி கலஞ்சேன்டி
குட்டி குட்டியா கவித சொல்லி கட்டு கொலஞ்சென்டி
உன்ன‌ பெத்த தாய காட்டடி கும்பிட்டுப் போக நான் ரெடி
செல்லக்குட்டி நீயும் பேச சீனி மூட்ட கொட்டுதடி
கண்ணுக்குட்டி போல ஆச காதல் பாட்ட‌ கட்டுதடி...

Popular Posts