Showing posts with label Tanya. Show all posts
Showing posts with label Tanya. Show all posts

Saturday, December 9, 2017

Karuppan - Usure Usure

பட‌ம்: கருப்பன் (2017)
இசை: D. இமான்
பாடியவர்கள்: அனன்யா பட்
பாடல்வரிகள்: யுகபாரதி


Image result for karuppan tamil movie



உசுரே... உசுரே... நாந்தானே
முழுசா ஓடஞ்சே... போனேனே
அழ‌வே தெரியாதனா பொழுதும் விழி நீருல‌
நனைஞ்ச வெறாக கெடக்கேன்
திமிரும் புலி வாலையும் புடிக்கும் ஒரு ஆம்பள
பொலம்பும் புழுவா இருக்கேன்
செலந்தி கூட செதஞ்ச வீடா
இடி வாங்கி துடிச்சேனே வலியோட நா...

உசுரே... உசுரே... நாந்தானே
முழுசா ஓடஞ்சே... போனேனே


கொழந்தய போல மடியில போட்டு
தூங்காம நீ என்ன தாலாட்டுவ
மெது மெதுவா நா உறங்கிட பாத்தா
தாயா நீ உன் கையால் சோறூட்டுவ
பசியே இல்லனு பல வாட்டி சொல்ல
ஒழுங்கா திண்ணுனு கொனங்காட்டுவ

பொடவ பொட்டுன்னு எதயும் கேக்காம
புடிடா அன்பன்னு பொற ஏத்துவ
குலசாமி தந்துட்ட பூவ
வணங்காம வச்சிட்டேன் நோவ
ஒழுங்கா நா ஆவ... நீதான் தேவ

உசுரே... உசுரே... நாந்தானே
முழுசா ஓடஞ்சே... போனேனே


இடி விழுந்தாலும் சிரிக்கிறேன் நானும்
நீ போன நாள் தொட்டு பூச்சூடல
விடிஞ்ச பின்னாலும் உறங்குற ஆளு
சேதாரம் நீ செய்ய கண் மூடல

உன‌ நான் நெஞ்சுக்குள் அட காத்து வெச்சேன்
 நீ பொயின்னா மனம் தாங்கல
உலகே கண் வைக்கும் ஓற‌வான உன்ன‌
ஒதுங்க என்னைக்கும் இவ ஏங்கல
விதியால சம்பங்கி மால
வெழங்காம இன்னைக்கி கீழ
விழுந்தேனே ஏனோ பாவம் போல

உசுரே... உசுரே... நாந்தானே
முழுசா ஓடஞ்சே... போனேனே
அழ‌வே தெரியாதனா பொழுதும் விழி நீருல‌
நனைஞ்ச வெறாக கெடக்கேன்
திமிரும் புலி வாலையும் புடிக்கும் ஒரு ஆம்பள
பொலம்பும் புழுவா இருக்கேன்
செலந்தி கூட செதஞ்ச வீடா
இடி வாங்கி துடிச்சேனே வலியோட நா...

உசுரே... உசுரே...

Karuppan - Azhagazhaga

பட‌ம்: கருப்பன் (2017)
இசை: D. இமான்
பாடியவர்கள்: ப்ரதீப் குமார்
பாடல்வரிகள்: யுகபாரதி



Image result for karuppan tamil movie



அழகழகா தொடுகிறதே மலக்காத்து
அடி மரமும் அசஞ்சிடுதே அதப்பாத்து
கருங்கல்லான போதிலுமே
சிலை என்றாகும் காதலிலே
சிறுப்புல் ஒன்று வாழ்ந்திடவே
மழை சிந்தாதோ மேகங்களே
என்ன ஆனாலுமே இந்த ஏகாந்தமே
தொட்டு தொடர்ந்து தொடர்ந்து வருமே

அழகழகா தொடுகிறதே மலக்காத்து
அடி மரமும் அசஞ்சிடுதே அதப்பாத்து


வெண்ணிலவென்பது வானை நீங்க எண்ணிடுமோ
எத்தனை ஜென்மங்கள் ஆன போதும் மங்கிடுமோ
யாரது வாசல் என்பதை பார்த்து சேருமோ அதிகாலை
காத‌லை சேர ஜாதகம் கேட்க ஓடுமோ அந்திமாலை
கடவுள் பேசும் மொழியே காதல்
அதுதானே உலகின் மொழியே

அழகழகா தொடுகிறதே மலக்காத்து
அடி மரமும் அசஞ்சிடுதே அதப்பாத்து


அன்பதை நெஞ்சினில் ஏந்தும் போது உண்மையிலே
அத்தனை இன்பமும் சேர்ந்திடாதோ கைகளிலே
தாயவள் பாசம் தந்தையின் நேசம் சேர்ந்ததால் கருவானோம்
ஆசையில் பூக்கும் பூவென தானே யாருமே உருவானோம்
மனம் போல் வாழ உறவே ஊஞ்சல்
கயிராக அசையும் உயிரே

அழகழகா தொடுகிறதே மலக்காத்து
அடி மரமும் அசஞ்சிடுதே அதப்பாத்து
கருங்கல்லான போதிலுமே
சிலை என்றாகும் காதலிலே
சிறுப்புல் ஒன்று வாழ்ந்திடவே
மழை சிந்தாதோ மேகங்களே
என்ன ஆனாலுமே இந்த ஏகாந்தமே
தொட்டு தொடர்ந்து தொடர்ந்து வருமே

Karuppan - Karuva Karuva

ப‌டம்: கருப்பன் (2017)
இசை: D. இமான்
பாடியவர்கள்: சங்கர் மகாதேவன், ஷாஷா திருப்பதி 
பாடல்வரிகள்: யுகபாரதி


Image result for karuppan tamil movie



கருவா கருவா பயலே எனை கேக்காம 
தொடுவாயா சூட்ட ஏத்தாம

வரவா வரவா புயலே உன்ன தாக்காம
விடமாட்டேன் ஆட்டம் பாக்காம‌

என்னவென்னா என்ன நீயும் செஞ்சுக்கோயா
நிதம் பூக்குறேன் தாமரையா

இப்ப பாரு உன்ன‌ நானும் முட்டப் போறேன்
அடி ஆத்தி நீ தாங்குவியா

நெருப்பா... என்ன ஆக்குறியே செவப்பா
கருவா கருவா பயலே எனை கேக்காம
தொடுவாயா சூட்ட ஏத்தாம



வெளஞ்ச காட்ட வெறிக்கும் மாட்ட
வெரட்ட நெனச்சா பாயும் உம் மேல

கொதிக்கும் சூட்ட நெதக்கும் ஆத்த
துணிஞ்சி வருவேன் ஆட்டாத‌ வால‌

வெச‌ காத்த மோதாத மூச்சோட

வெறி ஏறும் வரேனே கூத்தாட

வெடக்கோழி ருசி ஏத்தி
விருந்து போடேன்டி நா சாப்பிட

கருவா கருவா பயலே எனை கேக்காம 
தொடுவாயா சூட்ட ஏத்தாம


அடுக்கு பான‌ முருக்கு போல
எனையும் நொறுக்கு நேரம் பாக்காத‌

அலுப்பு தீர அணைக்க போறேன்
ஒடம்பு வலிச்சா ஊர கூட்டாத

கருப்பா... வா... பேசாத வாயால

அடி... போடி... பாப்பேன்டி நூறாளா

பொலி காள ஓனநானே 
அடக்க போறேனே மார‌ப்புல
கருவா கருவா பயலே எனை கேக்காம 
தொடுவாயா சூட்ட ஏத்தாம

வரவா வரவா புயலே உன்ன தாக்காம
விடமாட்டேன் ஆட்டம் பாக்காம‌

என்னவென்னா என்ன நீயும் செஞ்சுக்கோயா
நிதம் பூக்குறேன் தாமரையா

இப்ப பாரு உன்ன‌ நானும் முட்டப் போறேன்
அடி ஆத்தி நீ தாங்குவியா

நெருப்பா... என்ன ஆக்குறியே செவப்பா

Popular Posts