Showing posts with label Ananya Bhat. Show all posts
Showing posts with label Ananya Bhat. Show all posts

Wednesday, March 15, 2023

Viduthalai Part 1 - Kaattumalli

படம் : விடுதலை (2023)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : இளையராஜா, அநன்யா பட்
பாடல்வரிகள் : இளையராஜா



வழி நெடுக காட்டுமல்லி
யாரும் அத பாக்கலியே
எனக்கா பூத்தது காட்டுக்குள்ள
வருமா? வருமா? வீட்டுக்குள்ள
காடே மணக்குது வாசத்துல
என்னோட கலக்குது நேசத்துல
வழி நெடுக காட்டுமல்லி...

வழி நெடுக காட்டுமல்லி
கண்பார்த்தும் கவனமில்ல
பூக்குற நேரம் தெரியாது
காத்திருப்பேன் நான் சலிக்காது
பூ மணம் புதுசா தெரியுத‌ம்மா
எம் மனம் கரும்பா இனிக்குதம்மா
வழி நெடுக காட்டுமல்லி...


கனவெனக்கு வந்ததில்லை
இது நெசமா கனவு இல்ல

கனவா போனது வாழ்க்க இல்ல
வாழ்க்கைய நெனச்சி வாழ்ந்தில்ல

மஞ்சு மூட்டமா மனசுக்குள்ள
போகுற வருகிற நெனைவுகளே

ஒறங்குது உள்ளே ஒரு விசயம்
ஒறக்கம் கலஞ்சா நெசம் தெரியும்

காத்திருப்பேன் நான் திரும்பி வர
காட்டுமல்லியில அரும்பெடுக்க

வழி நெடுக காட்டுமல்லி
கண்பார்த்தும் கவனமில்ல

காடே மணக்குது வாசத்துல
என்னோட கலக்குது நேசத்துல


கிட்ட வரும் நேரத்துல
எட்டி போற தூரத்துல

நீ இருக்க உள்ளுக்குள்ள
உன்ன விட்டு போவதில்ல

ஒலகத்தில் எங்கோ மூலையில
இருக்கிற இருண்ட காட்டுக்குள்ள

இருசிறு உசுரு துடிக்கிறது
நெசமா யாருக்கும் தெரியாது

சாட்சி சொல்லும் இந்தக் காடறியும்
காட்டுல வீசிடும் காத்தறியும்
வழி நெடுக காட்டுமல்லி
கண் பார்த்தும் கவனமில்லை

எனக்கா பூத்தது காட்டுக்குள்ள
வருமா? வருமா? வீட்டுக்குள்ள

பூ மணம் புதுசா தெரியுதம்மா
என் மனம் கரும்பா இனிக்குதம்மா

வழி நெடுக காட்டுமல்லி.....

Viduthalai Part 1 - Onnoda Nadandhaa

படம் : விடுதலை (2023)

இசை : இளையராஜா

பாடியவர்கள் : தனுஷ், அநன்யா பட்

பாடல்வரிகள் : சுகா


Download this MP3


ஒன்னோட நடந்தா... கல்லான காடு...

ஒன்னோட நடந்தா கல்லான காடு

பூத்தாடும் பூவனம் ஆகிடுமே!


நீ போகும் பாத பூங்கால்களாலே

பொன்னான வழியாய் மாறிடுமே!


ஒன்னோட நடந்தா கல்லான காடு

பூத்தாடும் பூவனம் ஆகிடுமே!

நீ போகும் பாத பூங்கால்களாலே

பொன்னான வழியாய் மாறிடுமே!


ராசாவே உன்னால ஆகாசம் விடியம்

லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே!


ராசாத்தி ஆகாசம் உன்னால விடியும்

லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே!


சொல்லாத மாயங்கள் உன்னால் நடக்குதே


ஒன்னோட நடந்தா கல்லான காடு

பூத்தாடும் பூவனம் ஆகிடுமே!



காத்தில் வரும் புழுதியப்போல்

நம்ம தூத்துகிற ஊரு இது

துக்கத்தில துவண்டிருந்தா

அது தூக்கிவிட நெனைக்காது


முன்னேறிப்போக முட்டுக்கட்டை ஏது

பின் திரும்பி பாக்காதே

ஒந்துணைக்கு நாந்தான் எந்துணைக்கு நீதான்

என்றும் இது மாறாதே


நல்வாக்கு ஊர் சொல்லும் காலம் வரும்

அல்லல் இருளை விரட்டும் விடியல் வரும்


கல்லான காடு ஒன்னோட நடந்தா

பூத்தாடும் பூவனம் ஆகிடுமே


பூத்தாடும் பூவனம் ஆகிடுமே


ஆராரிராரோ ஆராரிராரோ

ஆராரிராரோ ஆராரிராரோ

ஆராரிராரி ராரிராரோ

ஆராரிராரி ராரிராரோ


ஏத்தி வச்ச தீபமொண்ணு

எந்த சாமிகளும் பாக்கலியே

சேத்து வச்ச கனவுகள

நிறைவேத்தி விட யாருமில்லையே


நிக்காத காலம் நேராக ஓடும்

எப்போதும் மாறாது

இல்லார்க்கும் ஏற்றம் என்றேனும் கொடுக்கும்

இல்லாமல் போகாது

நம்பிக்கை கொண்டார்க்கு நாளை உண்டு

நம் வாழ்வில் என்றென்றும்

சந்தோஷம் பொங்கி வரும்


கல்லான காடு ஒன்னோட நடந்தா

பூத்தாடும் பூவனம் ஆகிடுமே

ராசாவே உன்னால ஆகாசம் விடியம்

லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே


ராசாத்தி ஆகாசம் உன்னால விடியும்

லேசாக என் நெஞ்சம் பூக்கின்றதே


சொல்லாத மாயங்கள் உன்னால் நடக்குதே


ஒன்னோட நடந்தா கல்லான காடு

பூத்தாடும் பூவனம் ஆகிடுமே

பூத்தாடும் பூவனம் ஆகிடுமே

Saturday, December 9, 2017

Karuppan - Usure Usure

பட‌ம்: கருப்பன் (2017)
இசை: D. இமான்
பாடியவர்கள்: அனன்யா பட்
பாடல்வரிகள்: யுகபாரதி


Image result for karuppan tamil movie



உசுரே... உசுரே... நாந்தானே
முழுசா ஓடஞ்சே... போனேனே
அழ‌வே தெரியாதனா பொழுதும் விழி நீருல‌
நனைஞ்ச வெறாக கெடக்கேன்
திமிரும் புலி வாலையும் புடிக்கும் ஒரு ஆம்பள
பொலம்பும் புழுவா இருக்கேன்
செலந்தி கூட செதஞ்ச வீடா
இடி வாங்கி துடிச்சேனே வலியோட நா...

உசுரே... உசுரே... நாந்தானே
முழுசா ஓடஞ்சே... போனேனே


கொழந்தய போல மடியில போட்டு
தூங்காம நீ என்ன தாலாட்டுவ
மெது மெதுவா நா உறங்கிட பாத்தா
தாயா நீ உன் கையால் சோறூட்டுவ
பசியே இல்லனு பல வாட்டி சொல்ல
ஒழுங்கா திண்ணுனு கொனங்காட்டுவ

பொடவ பொட்டுன்னு எதயும் கேக்காம
புடிடா அன்பன்னு பொற ஏத்துவ
குலசாமி தந்துட்ட பூவ
வணங்காம வச்சிட்டேன் நோவ
ஒழுங்கா நா ஆவ... நீதான் தேவ

உசுரே... உசுரே... நாந்தானே
முழுசா ஓடஞ்சே... போனேனே


இடி விழுந்தாலும் சிரிக்கிறேன் நானும்
நீ போன நாள் தொட்டு பூச்சூடல
விடிஞ்ச பின்னாலும் உறங்குற ஆளு
சேதாரம் நீ செய்ய கண் மூடல

உன‌ நான் நெஞ்சுக்குள் அட காத்து வெச்சேன்
 நீ பொயின்னா மனம் தாங்கல
உலகே கண் வைக்கும் ஓற‌வான உன்ன‌
ஒதுங்க என்னைக்கும் இவ ஏங்கல
விதியால சம்பங்கி மால
வெழங்காம இன்னைக்கி கீழ
விழுந்தேனே ஏனோ பாவம் போல

உசுரே... உசுரே... நாந்தானே
முழுசா ஓடஞ்சே... போனேனே
அழ‌வே தெரியாதனா பொழுதும் விழி நீருல‌
நனைஞ்ச வெறாக கெடக்கேன்
திமிரும் புலி வாலையும் புடிக்கும் ஒரு ஆம்பள
பொலம்பும் புழுவா இருக்கேன்
செலந்தி கூட செதஞ்ச வீடா
இடி வாங்கி துடிச்சேனே வலியோட நா...

உசுரே... உசுரே...

Popular Posts