Showing posts with label 1999. Show all posts
Showing posts with label 1999. Show all posts

Tuesday, March 31, 2020

Sangamam - Sowkiyama Kanne

படம் : சங்கமம் (1999)
இசை : A.R. ரஹ்மான்
பாடியவர்கள் : நித்யஸ்ரீ
பாடல்வரிகள் : வைரமுத்து

Tamil songs, Ringtones, Wallpapers free dowloads: Sangamam tamil ...



ஜல்ஜல்ஜல் தனனன ஜம்ஜம்
ஜல்ஜல்ஜல் தனனன ஜம்ஜம்
ஜல்ஜல்ஜல் தனனன ஜம்ஜம்
சகரிச.... நிச‌தநி....
ஜல்ஜல்ஜல் தனனன ஜம்ஜம்
சகரிச.... நிச‌தநி....
ஜல்ஜல்ஜல் தனனன ஜம்ஜம்

சகரிச.... நிச‌தநி....

தனதோம் ததீம் ததோம் ததீம்
தனதனதோம் தனதோம் - திருகிரு திருகிரு
தனதனதோம் தனதோம் - தகு திகு
தனதனதோம் தனதோம்

சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா...
சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா... சௌக்கியமா...

தனதோம் ததீம் ததோம் ததீம்
தனதனதோம் தனதோம் - திருகிரு திருகிரு
தனதனதோம் தனதோம் - தகு திகு
தனதனதோம் தனதோம்
தனதோம்தோம் ததீம்தீம் ததோம்தோம் தீம் என
விழிகளில் நடனமி்ட்டாய் பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய்
மெல்ல மெல்ல என்னுயிரைப் பறித்துக்கொண்டாய்
மனதை தழுவும் ஒரு அம்பானாய்
மனதை தழுவும் ஒரு அம்பானாய்
பருவம் கொத்திவிட்டு பறவை ஆனாய்
பருவம் கொத்திவிட்டு பறவை ஆனாய்
ஜணுததீம் ஜணுததீம் ஜணுததீம்
சலங்கையும் ஏங்குதே அது கிடக்கட்டும் நீ.....
சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா...



சூரியன் வந்து வாவெனும் போது
சூரியன் வந்து வாவெனும் போது
சூரியன் வந்து வாவெனும் போது
என்ன செய்யும் பனியின் துளி
என்ன செய்யும் பன்யின் துளி
கோடிக் கையில் என்னைக் கொள்ளையிடு
கோடி கையில் என்னை அள்ளி எடு
கோடி கையில் என்னை கொள்ளையிடு
கோடி் கையில் என்னை அள்ளி எடு
அன்பு நாதனே அணிந்த மோதிரம் 
வளையலாகவே துரும்பென இளைத்தேன்
அந்த மோதிரம் ஒட்டியாணமாய் 
ஆகுமுன்னமே அன்பே அழைத்தேன்
என் காற்றில் சுவாசம் இல்லை
என் காற்றில் சுவாசம் இல்லை
என் காற்றில் சுவாசம் இல்லை
என் காற்றில் சுவாசம் இல்லை
அது கிடக்கட்டும் விடு உனக்கென ஆச்சு

சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
தனதோம் ததீம் ததோம் ததீம்
தனதனதோம் தனதோம் - திருகிரு திருகிரு
தனதனதோம் தனதோம் - தகு திகு
தனதனதோம் தனதோம்
தனதோம்தோம் ததீம்தீம் ததோம்தோம் தீம் என
விழிகளில் நடனமி்ட்டாய் பின்பு இதயத்தில் இறங்கிவிட்டாய்
மெல்ல மெல்ல என்னுயிரைப் பறித்துக்கொண்டாய்
மனதை தழுவும் ஒரு அம்பானாய்
மனதை தழுவும் ஒரு அம்பானாய்
பருவம் கொத்திவிட்டு பறவை ஆனாய்
பருவம் கொத்திவிட்டு பறவை ஆனாய்
ஜணுததீம் ஜணுததீம் ஜணுததீம்
சலங்கையும் ஏங்குதே அது கிடக்கட்டும் நீ......
சௌக்கியமா கண்ணே.... சௌக்கியமா....
சௌக்கியமா..... 
சௌக்கியமா... சௌக்கியமா... சௌக்கியமா...
சௌக்கியமா... சௌக்கியமா... சௌக்கியமா...
சௌக்கியமா...

Wednesday, March 18, 2020

Periyanna - Thanthane Thamara Poo

படம் : பெரியண்ணா (1999)
இசை : பரணி
பாடியவர்கள் : S.P. பால சுப்ரமணியம், K.S.சித்ரா
பாடல்வரிகள் : பரணி


Periyanna 1999 Poster.jpg



ஏய்... தன்னானே தாமரைப்பூ 
மாமா தள்ளாடும் தண்ணியில
ஏய்... தாமர பூத்திருச்சே
மாமா தாவணி வாங்கி வாங்க
ஊரெல்லாம் கூட்டிகிட்டு
வந்திடுங்க மேளம் கொட்டி

ஏய்... தன்னானே தாமரைப்பூ 
புள்ள தள்ளாடும் தண்ணியில
ஏய்... தாமர பூத்திருச்சே
புள்ள தாவணி வாங்கிவாறேன்



கொட்டுற பனியில நானும் உனக்கு
கொடையா மாறட்டுமா?
உன் வெட்டுற விழியில மூட்டுற நெருப்புல 
குளிரும் காயட்டுமா?

உனக்கும் எனக்கும் மனசு இப்ப
வக்கப் பிரியாச்சி
ஒளிவா மறவா பேசி சிரிக்க
ஓட தொண‌யாட்சி

கையில அணைக்கிற போது
நீ துள்ளி குதிக்கிற மானு

ஆத்துல குளிக்கிற போது
நீ ஆள கடிக்கிற மீனு

 உன் இடுப்பு சேல நழுவ
அத எடுத்து எடுத்து தழுவ

ஏய்... தன்னானே தாமரைப்பூ 
மாமா தள்ளாடும் தண்ணியில

ஏய்... தாமர பூத்திருச்சே
புள்ள தாவணி வாங்கிவாறேன்



தெனமும் என்ன தொரத்துதைய்யா
உங்க பெருமூச்சி
ஆத்தி பூத்த மாயம் போல
மாமா உன் பேச்சு

கண்ணே உனக்கு மின்மினி புடுச்சி
வெளக்கா ஏத்தட்டுமா?
விடியிற வரைக்கும் மடியில சாஞ்சி
வெசயம் சொல்லட்டுமா?

மாமன் தரனும் சீரு
ரெண்டு மாங்கா தட்டு தோடு

நீ சிரிக்கிற தங்கத்தேரு
உன் தேவை என்ன கேளு

வெடல புள்ள நானும் 
ஒரு வெவரம் கேட்க வேணும்

ஏய்... தன்னானே தாமரைப்பூ 
புள்ள தள்ளாடும் தண்ணியில

ஏய்... தாமர பூத்திருச்சே
மாமா தாவணி வாங்கிவாங்க

ஊரெல்லாம் கூட்டிகிட்டு
வந்திடுங்க மேளம் கொட்டி

ஏய்... தன்னானே தாமரைப்பூ 
மாமா தள்ளாடும் தண்ணியில

ஏய்... தாமர பூத்திருச்சே
புள்ள தாவணி வாங்கிவாறேன்

Tuesday, January 22, 2019

Poomagal Oorvalam - Malare Oru Varthai

படம் : பூமகள் ஊர்வலம் (1999)
இசை : சிவா
பாடியவர்கள் : ஹரிஹரன், சித்ரா & சுஜாதா
பாடல்வரிகள் : வைரமுத்து


Image result for Poomagal Oorvalam



மலரே ஒரு வார்த்தை பேசு
இப்படிக்கு பூங்காற்று
மலரே ஒரு வார்த்தை பேசு
இப்படிக்கு பூங்காற்று
காற்று வந்து காது கடித்தும்
இன்னும் என்ன மௌனமோ
மோதி வந்து முத்தமிட்டால்
மௌனம் தீருமோ
அச்சம்தான் உன் ஆடையோ
வெட்கம் தான் முந்தானையோ
மௌனம் தான் உன் வேலியோ
செம்பூவே வா... வா..வா..வா...

விழியே ஒரு வார்த்தையானால்
மொழி என்பது வேண்டாமே



வார்த்தையாடி பார்த்தபோது
காதல் வரவில்லை
காதல் வந்து சேர்ந்தபோது
வார்த்தை வரவில்லை

நான்கு கண்கள் பேசும்போது
தாய்மொழிக்கு இடமில்லை
மௌனம் பாடும் பாடல் போலே
மனதுக்கு சுகமில்லை

மலர்களை எரிப்பது முறையில்லை
மௌனத்தை உடைப்பது சரியில்லை
மௌனத்தின் ஓசைகள் கேளாமல்
வார்த்தைகள் புரிவது எளிதில்லை

கண்ணில் ஆசை துடிக்குதே 
அன்பே... அன்பே...
நெஞ்சு பிடிக்குது முல்லை
வெளியில் சொல்லவில்லை

வெட்க படாத பூக்களை 
வண்டுகள் தொடாதடி
முத்தம் தராமல் வெட்கம்
சாயம் போகாதடி
மலரே... ஒரு வார்த்தை பேசு
இப்படிக்கு பூங்காற்று



பெண்ணிடத்தில் உள்ளதெல்லாம்
பெண்ணுக்கு தெரியாது
ஓர் ஆணின் கைகள் தீண்டமட்டும்
அவசியம் புரியாது

காதல் மங்கை சொன்ன வார்த்தை
கவிதையில் கிடையாது
அட காதலிக்கும் ஆட்கள் போலே
கவிஞர்கள் கிடையாது

இரவிலே தாமரை மலராது
பகலிலே அல்லியும் அவிழாது
இதயப்பூ எப்போதும் மலரும் என்று
இதுவரை சொன்னவர் கிடையாது

ஏய்... ராஜமோகினி 
ரம்பா... ரம்பா...
உன் எடைக்கெடை தங்கம்
தரத்துடிக்கும் நெஞ்சம்

கைகள் தொடாமல் கண்களால்
நெஞ்சை பந்தாடினாய்
ரத்தம் வராமல் பார்வையால்
என்னை துண்டாடினாய்

மலரே ஒரு வார்த்தை பேசு
இப்படிக்கு பூங்காற்று
மலரே ஒரு வார்த்தை பேசு
இப்படிக்கு பூங்காற்று
காற்று வந்து காது கடித்தும்
இன்னும் என்ன மௌனமோ
மோதி வந்து முத்தமிட்டால்
மௌனம் தீருமோ
அச்சம்தான் உன் ஆடையோ
வெட்கம் தான் முந்தானையோ
மௌனம் தான் உன் வேலியோ
செம்பூவே வா வா வா வா

மலரே ஒரு வார்த்தை பேசு
இப்படிக்கு பூங்காற்று

Poomagal Oorvalam - Antha Vannukku Rendu

படம் : பூமகள் ஊர்வலம் (1999)
இசை : சிவா
பாடியவர்கள் : உன்னி கிருஷ்ணன்
பாடல்வரிகள் : வைரமுத்து

Image result for Poomagal Oorvalam



அந்த வானுக்கு ரெண்டு தீபங்கள்
அவை சூரிய சந்திரரே
என் வாழ்வுக்கு ரெண்டு தீபங்கள்
என் தாயோடு தந்தையரே

அந்த வானின் தீபம் ரெண்டும் இல்லையென்றால்
இந்த மண்ணில் உயிர்கள் இல்லையே
என் பாசதீபம் ரெண்டும் இல்லையென்றால்
என் வாழ்வில் ஒளியும் இல்லையே
ஒரு தாய்தந்தை போலே உலகில் உறவில்லையே
தாய் தானே... அன்புக்கு ஆதாரம்
தந்தை தானே... அறிவுக்கு ஆதாரம்

அந்த வானுக்கு ரெண்டு தீபங்கள்
அவை சூரிய சந்திரரே..



நூறு தெய்வங்கள் ஒன்றாகக் கூடி
தாய்க்கு பூஜைகள் செய்க
இமய மலைகளும் ஏழு கடல்களும்
தந்தை நாமமே சொல்க

இவர் கோபங்கள் நானும் பார்த்ததில்லை
ஒரு சுடுசொல்லைக் கூட கேட்டதில்லை
ஒரு ஏழை தாய்போல் உலகில் செல்வமில்லை
தாய் தானே... அன்புக்கு ஆதாரம்
தந்தை தானே... அறிவுக்கு ஆதாரம்
அந்த வானுக்கு ரெண்டு தீபங்கள்
அவை சூரிய சந்திரரே...



தந்தை காலடி தாயின் திருவடி
நல்ல மகனுக்குக் கோயில்
அன்பின் முகவரி என்ன என்பதை
கண்டுகொள்கிறேன் தாயில்

நான் உறவென்ற தீபம் ஏற்றிவைப்பேன்
அதில் உயிர் என்ற எண்ணெய் ஊற்றிவைப்பேன்
நான் என்றும் கண்ணில் இருவரை சுமந்திருப்பேன்
தாய் தானே... அன்புக்கு ஆதாரம்
தந்தை தானே... அறிவுக்கு ஆதாரம்

Saturday, September 15, 2018

Ninaivirukkum Varai - Santhiya Santheeya

படம் : நினைவிருக்கும் வரை (1999)
இசை : தேவா 
பாடகர்கள் : உன்னி கிருஷ்ணன்
பாடல்வரிகள் : பழனிபாரதி

Image result for ninaivirukkum varai songs



சந்தியா... சந்தியா...
சம்மதம் சொல்வாயா
சந்தியா... சந்தியா...
சஞ்சலம் கொள்வாயா
என் நெஞ்சின் ஆசை சொல்லவா
ஓஓஓஓ... ஓஓஓஓ...
நெஞ்சோடு மூடி கொள்ளவா
சந்தியா... சந்தியா...
சம்மதம் சொல்வாயா
என் நெஞ்சின் ஆசை சொல்லவா



கங்கையா நீ காணலா
இது காதலா வெறும் நேச‌மா
வேர்களா நீ பூக்களா
என் வெண்ணிலா பதில் பேசுமா
சொல்லாத சொல்லுக்கு
பொருள் ஒன்று கிடையாது
நான் கொண்ட நேசத்தின்
திறன் என்ன தெரியாது
ஓஓஓஓ... ஓஓஓஓ...
சந்தியா... சந்தியா...
சம்மதம் சொல்வாயா
என் நெஞ்சின் ஆசை சொல்லவா


காதலே என் காதலே
ஒரு ஊமையாய் என்னை மாற்றினாய்
மேகமாய் நான் வாழ்ந்தவன்
தனி தீவிலே என்னை பூட்டினாய்
விடிகாலை நேரத்தில்
குயிலுக்கு உற்சாகம்
எதிர் கூவல் கேளாமல்
என் நெஞ்சில் ஒரு சோகம்
ஓஓஓஓ... ஓஓஓஓ...

சந்தியா... சந்தியா...
சம்மதம் சொல்வாயா
சந்தியா... சந்தியா...
சஞ்சலம் கொள்வாயா
என் நெஞ்சின் ஆசை சொல்லவா
ஓஓஓஓ... ஓஓஓஓ...
நெஞ்சோடு மூடி கொள்ளவா

Ninaivirukkum Varai - Thirupathi Ezhumalai

படம் : நினைவிருக்கும் வரை (1999)
இசை : தேவா 
பாடகர்கள் : மனோ, கிருஷ்ணராஜ், சபேஷ்
பாடல்வரிகள் : K. சுபாஷ்


Image result for ninaivirukkum varai songs




ஜானி... ஓஹோ...
சந்தியா.. ஆஹா...
ஜானி சந்தியா சந்தியா ஜானி
ஆஹா... ஓஹோ...
சந்தியாவின் காரு என்ன பங்களா என்ன 
நம்ம ஆளுகிட்ட இருப்பது வெறும் கடல் தானே 
நோ ப்ரோப்ளம்...அதவுற்று...
சந்தியாவின் கலர் என்ன பிள்ள நம்மாளு கருப்பு 
இருந்தாலும் பரவால்ல கருப்பும் வெள்ளையும் 
சேர்ந்து தானே பழைய எம்.ஜி.ஆர் 
படமெல்லாம் பாத்தோம்... அட ஆமா...
சந்தியா பெரும் பணக்காரி சாரு ஏழ 
ரெண்டு பெரும் கட்டிகிட்டா 
சாரு பணக்காரர் ஆவாரு 
அவரால நாம பெரியாளாவோம் 
நம்ம ஆனா எல்லாரும் ஆனா மாறி தானே
அதுக்கு

திருப்பதி ஏழுமலை வெங்கடேசா 
பையன் காதலுக்கு பச்சைகொடி காட்டுலேசா 
திருப்பதி ஏழுமலை வெங்கடேசா 
பையன் காதலுக்கு பச்சைகொடி காட்டுலேசா 
மலை ஏறி வாரோம் தலைமுடிய தாரோம் 
கெட்டி மேளம் கொட்டிடுசுன்னா

எதுக்கு 
திருப்பதி ஏழுமலை வெங்கடேசா 
பசங்க சொல்லுறதில் உண்மையில்ல சீனிவாசா 
பணக்கார பொன்னுயா... ஓ ஓ ஓ 
பரதேசி நானையா... ஓ ஓ ஓ 
ஏணி வச்சாலும் எட்டாதையா

அதுக்கு
திருப்பதி ஏழுமலை வெங்கடேசா 
பையன் காதலுக்கு பச்சைகொடி காட்டுலேசா


காத்தவராயன் காதலிச்சான்
வழுக்கு மரத்துல மூச்சவிட்டான் 
காத்தவராயன் காதலிச்சான்
வழுக்கு மரத்துல மூச்சவிட்டான் 
வீரன் பொம்மி காதலுக்கு
வ‌ந்த முடிவு நமக்கு நெனப்பிருக்கு 
நம்ம லைலா மஜ்னு... ஓஓ ஓஓ
கதை என்ன ஆச்சு... ஓஓ ஓஓ 
நம்ம லைலா மஜ்னு கதை என்ன ஆச்சு 
காலபோக்கில் கல்லறையாச்சு 
காதல் நமக்கெதுக்கு?

அதுக்கு
திருப்பதி ஏழுமலை வெங்கடேசா 
பையன் காதலுக்கு பச்சை கொடி காட்டு லேசா


காதல் இல்லாம ஒலகம் இல்லே 
காதலிக்காத கடவுள் இல்லே 
காதல் இல்லாம ஒலகம் இல்லே 
காதலிக்காத கடவுள் இல்லே 
கொறத்திய வேலன் மணக்கலையா 
அந்த ராமனும் வில்ல ஒடக்கலையா 
அட ராமா ராமா... ஓஓ ஓஓ
ஜானகி ராமா... ஓஓ ஓஓ
அட ராமா ராமா ஜானகி ராமா 
சந்தியா உனக்கே சந்தேகம் ஏன்மா?
சூடம் ஏத்தி அணைக்கட்டுமா

எதுக்கு 
திருப்பதி ஏழுமலை வெங்கடேசா 
பசங்க சொல்லுறதில் உண்மையில்ல சீனிவாசா 
பணக்கார பொன்னுயா... ஓ ஓ ஓ
பரதேசி நானையா... ஓ ஓ ஓ

அட சும்மா நீ ட்ரை பண்ணுயா

ஏய்... 

போடி...

Friday, July 20, 2018

Sangamam - Margazhi Thingal

படம் : சங்கமம் (1999)
இசை : A.R.ரஹ்மான்
பாடியவர்கள் : உன்னி கிருஷ்ணன், S. ஜானகி
பாடல்வரிகள்: வைரமுத்து





மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏராந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்...

மார்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா
இது கண்ணன் வரும் பொழுதல்லவா
ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால்
விடை பெறும் உயிரல்லவா

மார்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா 
இது கண்ணன் வரும் பொழுதல்லவா
ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால்
விடை பெறும் உயிரல்லவா
ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால்
விடை பெறும் உயிரல்லவா 
வருவாய்... தலைவா... வாழ்வே வெறும் கனவா...

மார்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா 
இது கண்ணன் வரும் பொழுதல்லவா


இதயம் இதயம் எரிகின்றதே 
இறங்கிய கண்ணீர் அணைக்கின்றதே
உள்ளங்கையில் ஒழுகும் நீர்போல் 
என்னுயிரும் கரைவதென்ன
இருவரும் ஒருமுறை காண்போமா 
இல்லை நீ மட்டும் என்னுடல் காண்பாயா
கலையென்ற ஜோதியில் காதலை எரிப்பது
சரியா... பிழையா... விடை நீ சொல்லய்யா...

மார்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா 
இது கண்ணன் வரும் பொழுதல்லவா
ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால்
விடை பெறும் உயிரல்லவா
ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால்
விடை பெறும் உயிரல்லவா
வருவாய்... தலைவா... வாழ்வே வெறும் கனவா...


சூடித்தந்த சுடர்க்கொடியே சோகத்தை நிறுத்திவிடு
நாளை வரும் மாலையென்று நம்பிக்கை வளர்த்துவிடு
நம்பிக்கை வளர்த்துவிடு
நம் காதல் ஜோதி கலையும் ஜோதி 
கலைமகள் மகளே... வா வா... ஆஆஆ...
காதல் ஜோதி கலையும் ஜோதி...ஆஆஆ... 
ஜோதி எப்படி ஜோதியை எரிக்கும்
ஜோதி எப்படி ஜோதியை எரிக்கும் வா...

மார்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா 
இது கண்ணன் வரும் பொழுதல்லவா

மார்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா 
இது கண்ணன் வரும் பொழுதல்லவா

Monday, July 16, 2018

Sangamam - Varaha Nadhikarai

படம் : சங்கமம் (1999)
இசை : A.R.ரஹ்மான்
பாடியவர்கள் : ச‌ங்கர் மகாதேவன்
பாடல்வரிகள்: வைரமுத்து





ஓ... ஓஓ.... ஏஏ....ஏஏஏஏ.....
கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும்
காணாத ன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும்

வராக நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பார்வை பார்த்தேன்
புறாவே நில்லுனு சொன்னேன் கனாவாய் ஓடி மறஞ்ச
வராக நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பார்வை பார்த்தேன்
புறாவே நில்லுனு சொன்னேன் கனாவாய் ஓடி மறஞ்ச

கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும்
காணாத ன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும்
கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும்
காணாத ன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும்

கண்ணு தக்கு தக்கு தக்குங்குது... ஓஓஓ
உள்ள திக்கு திக்கு திக்குங்குது... ஓஓஓ
நெஞ்சு ஜல்லு ஜல்லு ஜல்லுங்குது... ஓஓஓ
சொல்லு சொல்லு சொல்லு சொல்லுங்குது

வராக நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பார்வை பார்த்தேன்
புறாவே நில்லுனு சொன்னேன் கனாவாய் ஓடி மறஞ்ச


பஞ்சவர்ணக்கிளி நீ பறந்த பின்னாலும்
அஞ்சு வர்ணம் நெஞ்சில் இருக்கு
பஞ்சவர்ணக்கிளி நீ பறந்த பின்னாலும்
அஞ்சு வர்ணம் நெஞ்சில் இருக்கு
பறந்துவந்து... ம்ம்ம் விருந்து கொடு... ம்ம்ம்
மனசுக்குள்ள சடுகுடு சடுகுடு
மயக்கத்துக்கு மருந்தொன்னு குடு குடு
ஓஓஓ... காவேரிக்கரையில் மரமாயிருந்தால் வேருக்கு யோகமடி
என் கை ரெண்டும் தாவணியானால் காதல் பழுக்குமடி

கண்ணு தக்கு தக்கு தக்குங்குது... ஓஓஓ
உள்ள திக்கு திக்கு திக்குங்குது... ஓஓஓ
நெஞ்சு ஜல்லு ஜல்லு ஜல்லுங்குது... ஓஓஓ
சொல்லு சொல்லு சொல்லு சொல்லுங்குது

வராக நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பார்வை பார்த்தேன்
புறாவே நில்லுனு சொன்னேன் கனாவாய் ஓடி மறஞ்ச

கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும்
காணாத ன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும்
கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும்
காணாத ன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும்


நீ என்ன கடந்து போகயிலே 
உன் நிழல பிடிச்சுகிட்டேன்
நீ என்ன கடந்து போகயிலே 
உன் நிழல பிடிச்சுகிட்டேன்
நிழலுக்குள்ள... ம்ம்ம் குடியிருக்கேன்... ம்ம்ம்
ஒடம்பவிட்டு உசிர் மட்டும் தள்ளி நிக்க
கிழிஞ்ச நெஞ்ச எதக்கொண்டு நானும் தைக்க
ஓஓஓ... ஒத்த விழிப்பார்வை ஊடுருவப் பார்த்து 
தாப்பா தெறிச்சிடுச்சு தாப்பா தெறிச்சிடுச்சு

கண்ணு தக்கு தக்கு தக்குங்குது... ஓஓஓ
உள்ள திக்கு திக்கு திக்குங்குது... ஓஓஓ
நெஞ்சு ஜல்லு ஜல்லு ஜல்லுங்குது... ஓஓஓ
சொல்லு சொல்லு சொல்லு சொல்லுங்குது

வராக நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பார்வை பார்த்தேன்
புறாவே நில்லுனு சொன்னேன் கனாவாய் ஓடி மறஞ்ச
வராக நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பார்வை பார்த்தேன்
புறாவே நில்லுனு சொன்னேன் கனாவாய் ஓடி மறஞ்ச

கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும்
காணாத ன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும்
கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும்
காணாத ன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும்

Sangamam - Mazhai Thulli

படம் : சங்கமம் (1999)
இசை : A.R.ரஹ்மான்
பாடியவர்கள் : ஹரிஹரன், M.S.விஸ்வநாதன்
பாடல்வரிகள்: வைரமுத்து




ஓ.... ஓ... ஓஓ...... ஓஒ....ஒ...
மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
உடல்பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்
மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
உடல்பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்

ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க 
என்ன ஆடாம ஆட்டிவைச்ச வணக்கமுங்க
என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம்
என் கால் நடமாடுமய்யா உம்ம கட்டளைங்க வெல்லும் வரைக்கும்
என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம்
என் கால் நடமாடுமய்யா உம்ம கட்டளைங்க வெல்லும் வரைக்கும்
நீ உண்டு உண்டு என்ற போதும் அட இல்லை இல்லை என்ற போதும்
சபை ஆடிய பாதமிது நிக்காது ஒருபோதும்

ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க
என்ன ஆடாம ஆட்டிவைச்ச வணக்கமுங்க


மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
உடல்பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்
மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
உடல்பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்


தண்ணியில மீன் அழுதா கரைக்கொரு தகவலும் வருவதில்ல
எனக்குள்ள நான் அழுதா துடைக்கவே எனக்கொரு நாதியில்ல
என் கண்ணீரு ஒவ்வொரு சொட்டும் வைரம் வைரம் ஆகுமே
சபதம் சபதம் என்றே சலங்கை சலங்கை பாடுமே
ஓ...ஓ...ஓ..ஒ.ஓஓஓஓஓ.....
மனமே மனமே சபதம் வெல்லும் மட்டும் சாயாதிரு
விழியே விழியே இமையே தீயும்போதும் கலங்காதிரு
நதி நதி அத்தனையும் கடலில் சங்கமம்
நட்சத்திரம் அத்தனையும் பகலில் சங்கமம்
கலைகளின் வெகுமதி உன்னிடத்தில் சங்கமம் சங்கமம்
மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
உடல்பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்

ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க
என்ன ஆடாம ஆட்டிவைச்ச வணக்கமுங்க


மழைக்காகத்தான் மேகம் அட கலைக்காகத்தான் நீயும்
உயிர் கலந்தாடுவோம் நாளும் மகனே வா...
நீ சொந்தக்காலிலே நில்லு தலை சுற்றும் பூமியை வெல்லு
இது அப்பன் சொல்லிய சொல்லு மகனே வா... மகனே வா...
ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்
தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான்
புலிகள் அழுவது ஏது அட பறவையும் அழ அறியாது
போர்க்களம் நீ புகும்போது முள் தைப்பது கால் அறியாது
மகனே... மகனே... 
காற்றுக்கு ஓய்வென்பதேது... அட ஏது
கலைக்கொரு தோல்வி கிடையாது... கிடையாது...


ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க

என்ன ஆடாம ஆட்டிவைச்ச வணக்கமுங்க

என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம்

என் கால் நடமாடுமய்யா நம்ம‌ கட்டளைங்க வெல்லும் வரைக்கும்

நீ உண்டு உண்டு என்ற போதும் அட இல்லை இல்லை என்ற போதும்

நீ உண்டு உண்டு என்ற போதும் அட இல்லை இல்லை என்ற போதும்
சபை ஆடிய பாதமய்யா அது நிக்காது ஒருபோதும்

மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
உடல்பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்
மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
உடல்பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்

மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
உடல்பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்
மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்
உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்
உடல்பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம்

Sunday, July 8, 2018

Nee Varuvai Ena - Oru Devathai

ப‌டம் : நீ வருவாய் என (1999)
இசை : S.A. ராஜ்குமார்
பாடியவர் : K.S.சித்ரா






தேவதை வந்துவிட்டாள் உன்னை தேடியே
வண்ண மாலைகள் சூட வந்தாள் தங்க தேரிலே

ஒரு தேவதை வந்துவிட்டாள் உன்னை தேடியே
வண்ண மாலைகள் சூட வந்தாள் தங்க தேரிலே
நூறு நூறு ஜென்மம் வாழ்ந்திருக்க
நூலில் பூவை போல சேர்ந்திருக்க
தீபம் ஏற்றிவைத்து தேரிழுக்க
சேலை சோலை கொண்டு சேர்த்தணைக்க
புன்னகையில் பூப்பறிக்க
ஒரு தேவதை வந்துவிட்டாள் உன்னை தேடியே


பூக்கும் செடியை எல்லாம் சிரிக்கும் பூவை எல்லாம்
உன் பெயரை கேட்டு இருந்தார்
எட்டு திசையும் சேர்த்து ஒற்றை திசையை மாற்றி
உன் வரவாய் பார்த்திருந்தார்
கண்ணுக்குள் கண்ணுக்குள் உன்னை வைத்து
நெஞ்சுக்குள் நெஞ்சுக்குள் அன்பை வைத்து
உள்ளத்தை உள்ளத்தை அள்ளி தந்து
உன்னிடும் உன்னிடும் தன்னை தந்து
உன் நிழலில் வாழ்ந்திருக்க
உன் உயிரில் சேர்ந்திருக்க
ஒரு தேவதை வந்துவிட்டாள் உன்னை தேடியே


கொஞ்சும் கிளியே உன்னை நெஞ்சில் உறங்கசொல்லி
தென்றல் என்னும் பாடிசைப்பார்
நெஞ்சம் நோகும் என்றால் மேகம் கொண்டு வந்து
மெத்தை செய்து பூ விரிப்பார்
வானத்து வானத்து நட்சத்திரம்
வாசலில் வாசலில் புள்ளி வைக்க
வானவில் வானவில் கொண்டு வந்து
வண்ணத்தில் கோலங்கள் இட்டு வைக்க
உள்ளங்கையில் பச்சை குத்தி
உன் பெயரை உச்சரிக்க

ஒரு தேவதை வந்துவிட்டாள் உன்னை தேடியே
வண்ண மாலைகள் சூட வந்தாள் தங்க தேரிலே
நூறு நூறு ஜென்மம் வாழ்ந்திருக்க
நூலில் பூவை போல சேர்ந்திரிக்க
தீபம் ஏற்றிவைத்து தேரிழுக்க
சேலை சோலை கொண்டு சேர்த்தணைக்க
புன்னகையில் பூப்பறிக்க
ஒரு தேவதை வந்துவிட்டாள் உன்னை தேடியே
வண்ண மாலைகள் சூடவந்தாள் தங்க தேரிலே

Popular Posts