Showing posts with label Vijayakanth. Show all posts
Showing posts with label Vijayakanth. Show all posts

Monday, April 25, 2022

Thavasi - Thanthana Thanthana

 படம் : தவசி (2001)

இசை : வித்யா சாகர்

பாடியவர்கள் : K.J.யேசுதாஸ், சாதனா சர்கம்

பாடல்வரிகள் : பழனி பாரதி





இரு விழி இரு விழி 

இமை கொட்டி அழைக்குது 

உயிர் தட்டி திறக்குது

ரெக்கை கட்டி பறக்குதம்மா

ரெக்கை கட்டி பறக்குதம்மா


இரு மனம் இரு மனம் 

விட்டு விட்டு துடிக்குது

விண்ணை தொட்டு மிதக்குது

வெட்கம் விட்டு இணைந்ததம்மா



தந்தன தந்தன தை மாசம் 

அது தந்தது தந்தது உன்ன தான்


சந்தன சந்தன மல்லி வாசம் 

தேன் சிந்துது சிந்துது இப்ப தான்


என்னது என்னது இந்த நாணம் 

மெல்ல கொல்லுது கொல்லுது என்ன தான்


தொட்டது தொட்டது இப்ப போதும் 

அட மத்தது மத்தது எப்பதான்


ஆத்தாடி ஆத்தாடி

என் நெஞ்சில் காத்தாடி


அய்யா உன் முகம் பார்க்க 

என் கண்ணே கண்ணாடி


தந்தன தந்தன தை மாசம் 

அது தந்தது தந்தது உன்ன தான்


சந்தன சந்தன மல்லி வாசம் 

தேன் சிந்துது சிந்துது இப்ப தான்



ஆண் யாரோ பெண் யாரோ 

தெரிய வேண்டுமா நீ சொல்


யார் மீது யார் யாரோ 

புரிய வேண்டுமா நீ சொல்


என் காது ரெண்டும் கூச 

வாய் சொன்னதென்ன நீ சொல்


அந்த நேரம் என்ன பேச 

அறியாது போனேன் நீ சொல்


ஒரு பூவும் அறியாமல் 

தேன் திருடிய ரகசியம் நீயே சொல்


இனி என்ன நான் செய்ய 

இதழோரம் சொல்வாயா


இடைவேளை நீ தந்து 

இமை தூங்க செல்வாயா


தந்தன தந்தன தை மாசம் 

அது தந்தது தந்தது உன்ன தான்


சந்தன சந்தன மல்லி வாசம் 

தேன் சிந்துது சிந்துது இப்ப தான்



 



ஆகாயம் போதாதே

உனது புகழையும் தீட்ட


அன்பே உன் கண் போதும் 

எனது உயிரையும் பூட்ட


உன் கண்களோடு நானும் 

முகம் பார்த்து வாழ வேண்டும்


உன்னை பார்த்து பார்த்து வாழ 

நக கண்ணில் பார்வை வேண்டும்


உன் கையில் உயிர் வாழ்ந்தேன் 

இது தவமா வரமா புரியவில்லை


உன்னோடு என் சொந்தம் 

ஈரெழு ஜென்மங்கள்


உன் வார்த்தை இது போதும் 

வேண்டாமே சொர்கங்கள்


தந்தன தந்தன தை மாசம் 

அது தந்தது தந்தது உன்ன தான்


சந்தன சந்தன மல்லி வாசம் 

தேன் சிந்துது சிந்துது இப்ப தான்


என்னது என்னது இந்த நாணம் 

மெல்ல கொல்லுது கொல்லுது என்ன தான்


தொட்டது தொட்டது இப்ப போதும் 

அட மத்தது மத்தது எப்பதான்


ஆத்தாடி ஆத்தாடி

என் நெஞ்சில் காத்தாடி


அய்யா உன் முகம் பார்க்க 

என் கண்ணே கண்ணாடி


Thursday, May 28, 2020

Thirumoorthy - Senguruvi Senguruvi

படம்: திருமூர்த்தி (1995)
இசை: தேவா
பாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம், S. ஜானகி
பாடல்வரிகள்: வாலி

Thirumoorthy tamil Movie - Overview



சிறுவாணி தண்ணியபோல்
சிளுசிளுனு சிரித்திருக்கும்

கடையாணி சக்கரம் போல்
கண்ணிரெண்டும் சுத்திவரும்
மருதானி சிவப்பாட்டம்
மணிகண்ணம் மின்னி வரும்
மகராசி அழகை எல்லாம்
மலர்காத்து பாடி வரும்...


செங்குருவி செங்குருவி
காரமட செங்குருவி
சேலகட்டி மாமனுக்கு
மாலையிட்ட செங்குருவி

செங்குருவி செங்குருவி
காரமட செங்குருவி
சேலகட்டி மாமனுக்கு
மாலையிட்ட செங்குருவி

ஒத்திகைக்குப் போவமா
ஒத்துமையா ஆவமா

முத்திரைய போடம்மா
முத்தமிட்டு பாடம்மா

வெக்கமெல்லாம் மூட்டகட்டி
வச்சா என்ன ஓரமா

செங்குருவி செங்குருவி
காரமட செங்குருவி
சேலகட்டி மாமனுக்கு
மாலையிட்ட செங்குருவி



வெண் பருத்தி நூலெடுத்து
வாய் வெடிச்ச பூவெடுத்து
நான் அணிஞ்சிட தொடுத்துவச்ச
நளினமான மாலையிது

தன தனன‌னா தனன‌னா
தன தனன‌னா தனன‌னா

சென்னிமல தேனெடுத்து
செங்கரும்பின் சாறெடுத்து
நீ பருகிட கலந்து வச்ச
நெருக்கமான வேளையிது

தன தனன‌னா தனன‌னா
தன தனன‌னா தனன‌னா

ஆஆ... ராசாத்தி ஒடம்பிருக்கும்
ரவிக்க துணி நானாக

ஹா...

அன்னாடம் சூடிக்கொள்ள
ஆச வச்சா ஆகாதா

ஆத்தாடி மறைஞ்சிருக்கும்
அழகையெல்லாம் நீ பாத்தா
ஏம்மானம் ரெக்க கட்டி
எட்டுத்திக்கும் போகாதா

அடி சீனி சக்கரையே

ஆ... ஹா...

எட்டி நீயும் நிக்கிறியே

ஆ...

நான் ஏங்கி ஏங்கி பாக்குறப்போ
ராங்கு பண்ணுறியே

செங்குருவி செங்குருவி
காரமட செங்குருவி
சேலகட்டி மாமனுக்கு
மாலையிட்ட செங்குருவி



கள்ளழகர் வைகையிலே
கால் பதிக்கும் வேளையிலே
பால் நிலவில் படுத்திகிட்டு
பருவராகம் பாடணுமே

தன தனன‌னா தனன‌னா
தன தனன‌னா தனன‌னா

சொக்கனுக்குப் பக்கத்திலே
சோடி என்று வந்தவளே
நூல் பொடவையில் ஒளிஞ்சுகிட்டு
நெனச்ச தாளம் போடணுமே

தன தனன‌னா தனன‌னா
தன தனன‌னா தனன‌னா

ஆனாலும் உனக்கு ரொம்ப
அவசரம்தான் மாமாவே

ஆ...

ஒண்ணாக கூடும்போது
ஊர் முழுக்கப் பாக்காதா

ஆ... பாத்தாலும் தவறு இல்ல
பனி உறங்கும் ரோசாவே
முன்னால சோத்த வச்சா
மூக்குலதான் வேக்காதா

என்ன வாட்ட எண்ணுறியே

ஆ... ஆ

கைய கோத்து பின்னுறியே

ஆ... ஆ

உன் பாட்டப் பாடி பலவிதமா
சேட்ட பண்ணுறியே


செங்குருவி செங்குருவி
காரமட செங்குருவி
சேலகட்டி மாமனுக்கு
மாலையிட்ட செங்குருவி

செங்குருவி செங்குருவி
காரமட செங்குருவி
சேலகட்டி மாமனுக்கு
மாலையிட்ட செங்குருவி

ஒத்திகைக்குப் போவமா
ஒத்துமையா ஆவமா

முத்திரைய போடலாம்
முத்தமிட்டு பாடலாம்

வெக்கமெல்லாம் மூட்டகட்டி
வச்சா என்ன ஓரமா

செங்குருவி செங்குருவி
காரமட செங்குருவி
சேலகட்டி மாமனுக்கு
மாலையிட்ட செங்குருவி

Wednesday, March 18, 2020

Periyanna - Thanthane Thamara Poo

படம் : பெரியண்ணா (1999)
இசை : பரணி
பாடியவர்கள் : S.P. பால சுப்ரமணியம், K.S.சித்ரா
பாடல்வரிகள் : பரணி


Periyanna 1999 Poster.jpg



ஏய்... தன்னானே தாமரைப்பூ 
மாமா தள்ளாடும் தண்ணியில
ஏய்... தாமர பூத்திருச்சே
மாமா தாவணி வாங்கி வாங்க
ஊரெல்லாம் கூட்டிகிட்டு
வந்திடுங்க மேளம் கொட்டி

ஏய்... தன்னானே தாமரைப்பூ 
புள்ள தள்ளாடும் தண்ணியில
ஏய்... தாமர பூத்திருச்சே
புள்ள தாவணி வாங்கிவாறேன்



கொட்டுற பனியில நானும் உனக்கு
கொடையா மாறட்டுமா?
உன் வெட்டுற விழியில மூட்டுற நெருப்புல 
குளிரும் காயட்டுமா?

உனக்கும் எனக்கும் மனசு இப்ப
வக்கப் பிரியாச்சி
ஒளிவா மறவா பேசி சிரிக்க
ஓட தொண‌யாட்சி

கையில அணைக்கிற போது
நீ துள்ளி குதிக்கிற மானு

ஆத்துல குளிக்கிற போது
நீ ஆள கடிக்கிற மீனு

 உன் இடுப்பு சேல நழுவ
அத எடுத்து எடுத்து தழுவ

ஏய்... தன்னானே தாமரைப்பூ 
மாமா தள்ளாடும் தண்ணியில

ஏய்... தாமர பூத்திருச்சே
புள்ள தாவணி வாங்கிவாறேன்



தெனமும் என்ன தொரத்துதைய்யா
உங்க பெருமூச்சி
ஆத்தி பூத்த மாயம் போல
மாமா உன் பேச்சு

கண்ணே உனக்கு மின்மினி புடுச்சி
வெளக்கா ஏத்தட்டுமா?
விடியிற வரைக்கும் மடியில சாஞ்சி
வெசயம் சொல்லட்டுமா?

மாமன் தரனும் சீரு
ரெண்டு மாங்கா தட்டு தோடு

நீ சிரிக்கிற தங்கத்தேரு
உன் தேவை என்ன கேளு

வெடல புள்ள நானும் 
ஒரு வெவரம் கேட்க வேணும்

ஏய்... தன்னானே தாமரைப்பூ 
புள்ள தள்ளாடும் தண்ணியில

ஏய்... தாமர பூத்திருச்சே
மாமா தாவணி வாங்கிவாங்க

ஊரெல்லாம் கூட்டிகிட்டு
வந்திடுங்க மேளம் கொட்டி

ஏய்... தன்னானே தாமரைப்பூ 
மாமா தள்ளாடும் தண்ணியில

ஏய்... தாமர பூத்திருச்சே
புள்ள தாவணி வாங்கிவாறேன்

Thursday, November 22, 2018

Sendhoorapandi - Senthoora Pandikoru

ப‌டம் : செந்தூரபாண்டி (1993)
இசை : தேவா
பாடியவர்கள் :  S.P. பாலசுப்ரமணியம், K.S.சித்ரா
பாடல்வரிகள் : வாலி

Related image



தந்தான தந்தனன தந்தன தந்தனன
தந்தான தந்தனன தந்தனன தந்தனன
தனதந்தானா... தனதந்தானா...

செந்தூர பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட
சோளக்கருது போல தோளத்தொட்டு தோளத்தொட்டு ஆட
செந்தூர பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட
சோளக்கருது போல தோளத்தொட்டு தோளத்தொட்டு ஆட
காதல் பாட்டு எடுக்கும் வயசு இது கேட்டு கிறுகிறுக்கும் மனசு இது
பொறுத்திரு மானே பசுமரத்தேனே நெனச்சது நெறவேறும்

நாள செந்தூர பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட
சோளக்கருது போல தோளத்தொட்டு தோளத்தொட்டு ஆட


உச்சிமேலே முடிஞ்சு வெச்ச மரிக்கொழுந்து வாசம்
உன்னுடைய பேரைச் சொல்லி தெச முழுக்க வீசும்

கல்லு மேல செதுக்கி வச்ச கவிதை இந்த நேசம்
இப்பிறப்பும் எப்பிறப்பும் தொடரும் இந்த பாசம்

சோறும் குடிநீரும் வேணாம் மாமா உன்னை பாத்தாலே

ஆரும் பசியாரும் தானா ஆச மொழி கேட்டாலே

உன்னை பிரிஞ்சிருக்க தன்னந்தனிச்சிருக்க
அம்மம்மாடி அப்பப்பாடி எம்மனசு ஒத்துக்காது

செந்தூர பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட

சோளக்கருது போல தோளத்தொட்டு தோளத்தொட்டு ஆட


உன்னைச்சேர பொறப்பெடுத்து உருகும் இந்த மாது
தெக்குதிசை தென்றலிட‌ம் தினமும் விடு தூது

அம்மன் கோயில் செலயெழுந்து அசஞ்சி வரும் போது
உள்மனசு தத்தளிக்கும் உறக்கமென்பதெது

நீதான் என்னை தீண்ட தீண்ட ஏதோ ஒரு நோயாச்சு

நான்தான் உன்னை சீண்டி சீண்டி பாத்து ரொம்ப நாளாச்சு

கொஞ்சம் இடம் கொடுத்தா பச்சை கொடி புடிச்சா
எத்தனையோ வித்தைகள இப்பவே நீ காட்டிடுவே

செந்தூர பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட

தந்தன தந்தன்னா

சோளக்கருது போல தோளத்தொட்டு தோளத்தொட்டு ஆட

தந்தன தந்தன்னா

காதல் பாட்டு எடுக்கும் வயசு இது கேட்டு கிறுகிறுக்கும் மனசு இது

பொறுத்திரு மானே பசுமரத்தேனே நெனச்சது நெறவேறும்

நாள செந்தூர பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட

சோளக்கருது போல தோளத்தொட்டு தோளத்தொட்டு ஆட

Tuesday, October 30, 2018

Ponmana Selvan - Nee Pottu

ப‌டம்: பொன்மன செல்வன் (1989)
இசை:  இளையராஜா
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், K.S. சித்ரா, மனோ
பாடல்வரிகள்: கங்கை அமரன்




நீ பொட்டு வச்ச தங்ககுடம்
ஊருக்கு நீ மகுடம்
நாங்க தொட்டு தொட்டு இழுத்து வரும்
ஜோரான தங்க ரதம்

அட நீ தங்ககட்டி சிங்ககுட்டி
தன‌த தன‌த தன‌த தனத்தா
இனி உம்பேர சொல்லும் பட்டி தொட்டி
தன‌த தன‌த தன‌த தனத்தா

நீ பொட்டு வச்ச தங்ககுடம்
ஊருக்கு நீ மகுடம்
நாங்க தொட்டு தொட்டு இழுத்து வரும்
ஜோரான தங்க ரதம்


ஆ... பெத்தவங்க செஞ்ச புண்ணியம் தான்
பிள்ளைகள வந்து சேருமையா
உத்தமரு ரொம்ப ஒசந்தவரு
என்ன பெத்தவரு இந்த பெரியவரு
அவர போல இங்காருமில்ல‌
அலசி பாரு நீ ஒலகத்துல‌

அண்ணனுனா அண்ணனையா... ஹோய் ஹோய்
அன்பு உள்ள மன்னனையா... ஹோய் ஹோய்

அண்ணனுனா அண்ணனையா... ஹோய் ஹோய்
அன்பு உள்ள மன்னனையா... ஹோய் ஹோய்

ஊரெல்லாம் கொண்டாடும் உன் பேரையா

அட நீ தங்ககட்டி சிங்ககுட்டி

தன‌த தன‌த தன‌த தனத்தா

நீ பொட்டு வச்ச தங்ககுடம்
ஊருக்கு நீ மகுடம்
நாங்க தொட்டு தொட்டு இழுத்து வரும்
ஜோரான தங்க ரதம்



வெற்றி எல்லாம் உங்க‌ கூட வரும்
நீங்க போற இடம் நல்ல பெரும பெறும்

சத்தியத்த தெனம் காத்து வரும்
அந்த சாமி தரும் பல நூறு வரம்

மனசு எல்லாமே கோவிலையா
அதுல நீ தானே சாமியையா
நல்லவன்தான் இவன் வல்லவன்தான்... ஹோய் ஹோய்
நல்லதெல்லாம் இங்க சொல்ல வந்தான்... ஹோய் ஹோய்

நல்லவன்தான் இவன் வல்லவன்தான்... ஹோய் ஹோய்
நல்லதெல்லாம் இங்க சொல்ல வந்தான்... ஹோய் ஹோய்

நாடெல்லாம் நாளெல்லாம் வெல்ல வந்தான்

அட நீ தங்ககட்டி சிங்ககுட்டி

தன‌த தன‌த தன‌த தனத்தா

நீ பொட்டு வச்ச தங்ககுடம்
ஊருக்கு நீ மகுடம்
நாங்க தொட்டு தொட்டு இழுத்து வரும்
ஜோரான தங்க ரதம்

அட நீ தங்ககட்டி சிங்ககுட்டி
தன‌த தன‌த தன‌த தனத்தா
இனி உம்பேர சொல்லும் பட்டி தொட்டி
தன‌த தன‌த தன‌த தனத்தா
தந்தானனா தந்தானனா தந்தான தான‌ன‌னா
தந்தானனா தந்தானனா தந்தான தான‌ன‌னா

Sunday, September 16, 2018

Ninaive Oru Sangeetham - Eduthu vacha paalum

படம்: நினைவே ஒரு சங்கீதம் (1987)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: S. ஜானகி
பாடல்வரிகள்: கங்கை அமரன்

Image result for Ninaive Oru Sangeetham



எடுத்து வச்ச பாலும் விரிச்சு வச்ச பாயும் 
வீணாகத்தான் போகுது
அந்த வெள்ளி நெலா காயுது

எடுத்து வச்ச பாலும் விரிச்சு வச்ச பாயும்
வீணாகத்தான் போகுது
அந்த வெள்ளி நெலா காயுது
அட வா மாமா
கொஞ்ச வா மாமா
அட வா வா மாமா
கொஞ்ச வா வா வா வா மாமா
எடுத்து வச்ச பாலும் விரிச்சு வச்ச பாயும்
வீணாகத்தான் போகுது
அந்த வெள்ளி நெலா காயுது

நாடோடி மன்னன் நான் பார்த்து வந்தேன்
நம்மூரு தியேட்டருல
அத நீ பார்த்தும் திருந்தவில்ல
தூங்காதே தம்பி தூங்காதே பாட்டு 
ஒன் காதில் கேக்கலியா
அத கேட்டாலும் தூங்குறியா
தூங்கினா தாங்குமா ஆச மேனி
தாங்கவா வாங்கவா ஏந்த‌வா நீ
என் ஹீரோ நீதான் ஒன் ஜோடி நாந்தான்

எடுத்து வச்ச பாலும் விரிச்சு வச்ச பாயும்
வீணாகத்தான் போகுது
அந்த வெள்ளி நெலா காயுது


உன்னாலே தானே பெண்ணானேன் நானே
கண் தூங்கி நாளாச்சு
சின்ன பெண் மேனி நூலாச்சு
முன்னால வாயேன் ஒன்னாச்சும் தாயேன்
நான் கேட்டு பார்த்தாச்சு
இன்னும் ஏதேதோ போலாச்சு
தேகமோ நொகுது தேடும் போது
ஜாமமோ ஆகுது வாடும் போது
சின்னப்பூவு வாசம் உன்ன தானே தேடும்

எடுத்து வச்ச பாலும் விரிச்சு வச்ச பாயும்
வீணாகத்தான் போகுது
அந்த வெள்ளி நெலா காயுது
அட வா மாமா
கொஞ்ச வா மாமா
அட வா வா மாமா
கொஞ்ச வா வா வா வா மாமா
எடுத்து வச்ச பாலும் விரிச்சு வச்ச பாயும்
வீணாகத்தான் போகுது
அந்த வெள்ளி நெலா காயுது

Ninaive Oru Sangeetham - Eduthu Vacha Paalum (Sad)

படம்: நினைவே ஒரு சங்கீதம் (1987)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: S.P. பாலசுப்பிரமணியம்
பாடல்வரிகள்: கங்கை அமரன்


Image result for Ninaive Oru Sangeetham



எடுத்து வச்ச பாலும் 
விரிச்சு வச்ச பாயும் 
வீணாகத்தான் போகுது
அந்த வெள்ளி நெலா காயுது

எடுத்து வச்ச பாலும் விரிச்சு வச்ச பாயும்
வீணாகத்தான் போகுது
அந்த வெள்ளி நெலா காயுது
அடி பூங்காற்றே மனம் வாடாதே
சிறு ஊதாப்பூவே 
அடி நீதான் எந்தன் வாழ்வே
எடுத்து வச்ச பாலும் விரிச்சு வச்ச பாயும்
வீணாகத்தான் போகுது
அந்த வெள்ளி நெலா காயுது


நாடோடி மன்னன் நீ பாத்து வந்த
நம்மூரு தியேட்டருல
அத நான் இன்னும் மறக்க‌வில்ல
தூங்காதே தம்பி பாட்டொன்ன சொல்லி
தூங்காம பண்ணலையா
அத நீ இப்ப எண்ணலையா
தூங்கினா தாங்குமா மாமன் நெஞ்சம்
நான்படும் வேதன கேளு கொஞ்சம்
என் ஜீவன் நீதான் உன் தேவன் நாந்தான்

எடுத்து வச்ச பாலும் விரிச்சு வச்ச பாயும்
வீணாகத்தான் போகுது
அந்த வெள்ளி நெலா காயுது


சொல்லாம நானே திண்டாடுறேனே
சிங்கார பூந்தேனே
என் சம்சாரம் நீதானே
நீ வச்ச பாசம் நீங்காத நேசம்
நா வைத்து நாளாச்சு
அதில் என் பாவம் என்றாச்சு
எண்ணினா கண்ணுதான் ஈரமாச்சு
என்னவோ நெஞ்சுல பாரமாச்சு
அந்தி நேரம் ஆனா இந்த பாட்டுதானா

எடுத்து வச்ச பாலும் விரிச்சு வச்ச பாயும்
வீணாகத்தான் போகுது
அந்த வெள்ளி நெலா காயுது
அடி பூங்காற்றே மனம் வாடாதே
சிறு ஊதாப்பூவே 
அடி நீதான் எந்தன் வாழ்வே
எடுத்து வச்ச பாலும் விரிச்சு வச்ச பாயும்
வீணாகத்தான் போகுது
அந்த வெள்ளி நெலா காயுது

Ninaive Oru Sangeetham - Yethamaiyaa Yetham

படம்: நினைவே ஒரு சங்கீதம் (1987)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், K.S.சித்ரா
பாடல்வரிகள்: இளையராஜா

Image result for Ninaive Oru Sangeetham



முந்தி முந்தி விநாயகரே
முப்பத்து முக்கோடி தேவர்களே
நீர் கொடுத்த நீரையெல்லாம் 
நீர் கொடுத்த நிலத்துக்கே பாய்ச்ச போறேன்
சீராக ஏரோட்டி பார் முழுக்க
சோரு கொடுத்து காக்க போறேன்
ஆதரிக்க வேணுமையா

ஏத்தமையா ஏத்தம் 
ஏலோலங்கடி ஏத்தமையா ஏத்தம் 
ஏத்தமையா ஏத்தம் 
ஏலோலங்கடி ஏத்தமையா ஏத்தம் 
எங்கப்பன் உன்பாட்டன் 
முப்பாட்டன் சொத்து இது
ஏத்தமையா ஏத்தம் 
ஏலோலங்கடி ஏத்தமையா ஏத்தம் 
ஏலோலங்கடி ஏத்தமையா ஏத்தம் 

ஏலோலங்கடி ஏத்தமையா ஏத்தம்
உனக்கு ரொம்ப ஏத்தமையா ஏத்தம் 
ஏத்தமையா ஏத்தம்
உனக்கு ரொம்ப ஏத்தமையா ஏத்தம் 


கோவணத்தில் ஒரு காசிருந்தா 
கோழி கூவ ஒரு பாட்டு வரும்
பாட்டு படிக்கிற என் மாமா 
உன் கோவணத்தில் ஒரு காசிருக்கா
கோவணத்தில் ஒரு காசிருந்தா 
கோழி கூவ ஒரு பாட்டு வரும்
பாட்டு படிக்கிற என் மாமா 
உன் கோவணத்தில் ஒரு காசிருக்கா

கோவணமுமில்ல கையில் காசுமில்ல
பாட்டு வருதே என்னபுள்ள
கோயில் சிலைபோல உன்ன கண்டதால்
ஏத்தம் கேடுதே கன்னிபுள்ள

சேலைய பார்த்தாலே 
சொக்கி போகுற என் மாமா
வேலைய பார் மாமா
அந்த வெட்டி பேச்சு ஏன்மா

காஞ்ச வயலுல தண்ணிய பாய்ச்சனும்
பஞ்சத்த தீக்கணும் பசி தாகம் போக்கணும்

ஏத்தமையா ஏத்தம் உனக்கு 
ரொம்ப ஏத்தமையா ஏத்தம்
ஏத்தமையா ஏத்தம் உனக்கு 
ரொம்ப ஏத்தமையா ஏத்தம்


ஸ்சுட்சி ஒன்னதட்டி உட்டுபுட்டா 
பம்பு செட்டுல தண்ணி கொட்டிபுடும்
வ‌ச்சு வேல செய்ய வக்கில்லையே 
இங்கு வக்கணபேச்சு ஏன்மாமா
ஸ்சுட்சி ஒன்னதட்டி உட்டுபுட்டா 
பம்பு செட்டுல தண்ணி கொட்டிபுடும்
வ‌ச்சு வேல செய்ய வக்கில்லையே 
இங்கு வக்கணபேச்சு ஏன்மாமா

எந்திரம் வச்சு வேல செய்யலாம்
நாமென்ன செய்ய பூமியிலே
மண்ணோட மனுஷன் மனசு இணையும்
மகத்துவம் வருமா சொல்லுபுள்ள

மண்ணு விளைஞ்சாலே
அது வேணாங்குதா மாமா
கையில் பொன்னு நிறைஞ்சாலே
அது பொல்லாததா மாமா

விஞ்ஞான காலத்தில் எல்லாமே மெஷின்
மனுஷன் மனசுகூட மெஷின் ஆச்சு போபுள்ள

ஏத்தமையா ஏத்தம் உனக்கு
ரொம்ப ஏத்தமையா ஏத்தம்
ஏத்தமையா ஏத்தம் உனக்கு 
ரொம்ப ஏத்தமையா ஏத்தம்
எங்கப்பன் உன்பாட்டன் 
முப்பாட்டன் சொத்திருக்கு
ஏத்தமையா ஏத்தம் 
ஏலோலங்கடி ஏத்தமையா ஏத்தம் 
ஏலோலங்கடி ஏத்தமையா ஏத்தம் 

ஏலோலங்கடி ஏத்தம் ரொம்ப ஏத்தம்
உனக்கும்கூட ஏத்தம் ரொம்ப ஏத்தம்
ஏத்தம் ரொம்ப ஏத்தம்
உனக்கும்கூட ஏத்தம் ரொம்ப ஏத்தம்

Sunday, July 8, 2018

Poonthotta Kaavalkaaran - Paaramal Paartha

படம்: பூந்தோட்ட காவல்காரன் (1988)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ, K.S. சித்ரா
பாடல்வரிகள்: கங்கைஅமரன்




ம்ம்ம்ம்ம்... ம்ம்ம்ம்ம்...  
ம்ம்ம்ம்ம்ம்... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்..... 
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....

பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம்ச்சஜம்சம் ஜம்
போடாமல் போட்ட மஞ்சம் ஜம்ச்சஜம்சம் ஜம்  
இரு பார்வை அது பாடட்டும் 
இரு பார்வை பாடட்டும் ராகங்கள்
பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம்ச்சஜம்சம் ஜம் 
போடாமல் போட்ட மஞ்சம் ஜம்ச்சஜம்சம் ஜம் 


நித்திரை கெட்டது கண்ணே என் சித்திர பெண்ணே

முத்திரை கண்டது முன்னே நீ தொட்டதன் பின்னே 

நித்திரை கெட்டது கண்ணே என் சித்திர பெண்ணே 

முத்திரை கண்டது முன்னே நீ தொட்டதன் பின்னே 

பூபாளம் கேட்டேனே பெண் மானை பார்த்தேனே 

பேசாமல் நின்றேனே பெண் என்று ஆனேனே 

கட்டளை இட்டதும் பட்டதும் தொட்டதும் கற்பனை அல்ல 
இல வெற்றிலை என்றொரு வெற்றிலை கண்டது அற்புதம் அல்ல 

நீ பட்டதும் சுட்டது பட்டுடை விட்டது நானும் சொல்ல 


பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம்ச்சஜம்சம் ஜம் 
போடாமல் போட்ட மஞ்சம் ஜம்ச்சஜம்சம் ஜம்

இரு பார்வை அது பாடட்டும் 
இரு பார்வை பாடட்டும் ராகங்கள் 

பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம்ச்சஜம்சம் ஜம் 
போடாமல் போட்ட மஞ்சம் ஜம்ச்சஜம்சம் ஜம்


மெல்லிய மல்லிகை பூவே புது மெல்லிசை பாடு 

வள்ளியின் மெல்லிடை மேலே ஒரு சங்கதி போடு

மெல்லிய மல்லிகை பூவே புது மெல்லிசை பாடு

வள்ளியின் மெல்லிடை மேலே ஒரு சங்கதி போடு

பூந்தேகம் தாங்காது என் தேவன் ஏந்தாது 

ஆறாது தீராது நீ வந்து சேராது 

பெண் இவள் மேனியில் கண் இமை மூடிடும் காவியம் கண்டு 
நான் பண்ணிய புண்ணியம் உன்னுடன் கூடிடும் என் மனம் இன்று 

புவி மண்ணிலும் விண்ணிலும் பொன்கவி பாடிடும் மேகம் ஒன்று 

பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம்ச்சஜம்சம் ஜம் 
போடாமல் போட்ட மஞ்சம் ஜம்ச்சஜம்சம் ஜம் 

இரு பார்வை அது பாடட்டும் 
இரு பார்வை பாடட்டும் ராகங்கள் 

பாராமல் பார்த்த நெஞ்சம் ஜம்ச்சஜம்சம் ஜம் 
போடாமல் போட்ட மஞ்சம் ஜம்ச்சஜம்சம் ஜம் 

ம்ம்ம்ம்ம்... ம்ம்ம்ம்ம்...  
ம்ம்ம்ம்ம்ம்... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.....

Tuesday, July 3, 2018

Chinna Gounder - Koondukulla Enna

படம்: சின்னக் கவுண்டர் (1992)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம், S.ஜானகி
பாடல் வரிகள்: R.V.உதயகுமார்




கூண்டுக்குள்ள  என்ன  வச்சி  கூடி  நின்ன  ஊர  விட்டு
கூண்டுக்குள்ள  போனதென்ன  கோலக்கிளியே

கூண்டுக்குள்ள  என்ன  வச்சி  கூடி  நின்ன  ஊர  விட்டு
கூண்டுக்குள்ள  போனதென்ன  கோலக்கிளியே
அடி  மானே  மானே  ஒன்னத்தானே 
எண்ணி  நானும்  நாளும்  தவிச்சேனே 
அடி  மானே  மானே  ஒன்னத்தானே 
எண்ணி  நானும்  நாளும்  தவிச்சேனே 
கூண்டுக்குள்ள  என்ன  வச்சி  கூடி  நின்ன  ஊர  விட்டு
கூண்டுக்குள்ள  போனதென்ன  கோலக்கிளியே



கண்ணு  வல‌துகண்ணு  தானா  துடிச்சுதுன்னா 
ஏதோ  நடக்குமின்னு  பேச்சு

மானம்  கொரையுமின்னு  மாசு  படியுமின்னு 
வீணா  கதைமுடிஞ்சு  போச்சு

ஈசான  மூலையில  லேசான  பல்லி  சத்தம் 
மாமன்  பேரை  சொல்லி  பேசுது 

ஆறாத  சோகம்தன்னை  தீராம  சேத்து வச்சு 
ஊரும்  சேந்து  என்னை  ஏசுது

மாமா  மாமா  ஒன்னத்தானே 
எண்ணி  நானும்  நாளும்  தவிச்சேனே 

கூண்டுக்குள்ள  என்ன  வச்சி  கூடி  நின்ன  ஊர  விட்டு
கூண்டுக்குள்ள  போனதென்ன  கோலக்கிளியே

கூண்டுக்குள்ள  உன்ன  வச்சி  கூடி  நின்ன  ஊர  விட்டு 
கூண்டுக்குள்ள  வந்ததிந்த  கோலக்கிளியே 



தென்னங்கிளையும்  தென்றல்  காத்தும் குயிலும் 
அடி மானே  உன்னை  தினம்  பாடும்

கஞ்சி  மடிப்பும்  கரை வேட்டி  துணியும் 
இந்த  மாமன்  கதையை  தினம்  பேசும்

பொள்ளாச்சி  சந்தையிலே  கொண்டந்த  சேலையிலே 
சாயம்  இன்னும்  விட்டு  போகல

பன்னாரி  கோயிலுக்கு  முந்தான ஓரத்திலே 
நேர்ந்து  முடிச்ச  கடன்  தீரல

மானே  மானே  ஒன்னத்தானே 
எண்ணி  நானும்  நாளும்  தவிச்சேனே 

கூண்டுக்குள்ள  உன்ன  வச்சி  கூடி  நின்ன  ஊர  விட்டு 
கூண்டுக்குள்ள  வந்ததிந்த  கோலக்கிளியே

கூண்டுக்குள்ள  என்ன  வச்சி  கூடி  நின்ன  ஊர  விட்டு
கூண்டுக்குள்ள  போனதென்ன  கோலக்கிளியே

யென் மாமா  மாமா  ஒன்னத்தானே 
எண்ணி  நானும்  நாளும்  தவிச்சேனே 

அடி  மானே  மானே  ஒன்னத்தானே 
எண்ணி  நானும்  நாளும்  தவிச்சேனே 
கூண்டுக்குள்ள  என்ன  வச்சி  கூடி  நின்ன  ஊர  விட்டு
கூண்டுக்குள்ள  போனதென்ன  கோலக்கிளியே

Popular Posts