Sunday, September 16, 2018

Ninaive Oru Sangeetham - Yethamaiyaa Yetham

படம்: நினைவே ஒரு சங்கீதம் (1987)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன், K.S.சித்ரா
பாடல்வரிகள்: இளையராஜா

Image result for Ninaive Oru Sangeetham



முந்தி முந்தி விநாயகரே
முப்பத்து முக்கோடி தேவர்களே
நீர் கொடுத்த நீரையெல்லாம் 
நீர் கொடுத்த நிலத்துக்கே பாய்ச்ச போறேன்
சீராக ஏரோட்டி பார் முழுக்க
சோரு கொடுத்து காக்க போறேன்
ஆதரிக்க வேணுமையா

ஏத்தமையா ஏத்தம் 
ஏலோலங்கடி ஏத்தமையா ஏத்தம் 
ஏத்தமையா ஏத்தம் 
ஏலோலங்கடி ஏத்தமையா ஏத்தம் 
எங்கப்பன் உன்பாட்டன் 
முப்பாட்டன் சொத்து இது
ஏத்தமையா ஏத்தம் 
ஏலோலங்கடி ஏத்தமையா ஏத்தம் 
ஏலோலங்கடி ஏத்தமையா ஏத்தம் 

ஏலோலங்கடி ஏத்தமையா ஏத்தம்
உனக்கு ரொம்ப ஏத்தமையா ஏத்தம் 
ஏத்தமையா ஏத்தம்
உனக்கு ரொம்ப ஏத்தமையா ஏத்தம் 


கோவணத்தில் ஒரு காசிருந்தா 
கோழி கூவ ஒரு பாட்டு வரும்
பாட்டு படிக்கிற என் மாமா 
உன் கோவணத்தில் ஒரு காசிருக்கா
கோவணத்தில் ஒரு காசிருந்தா 
கோழி கூவ ஒரு பாட்டு வரும்
பாட்டு படிக்கிற என் மாமா 
உன் கோவணத்தில் ஒரு காசிருக்கா

கோவணமுமில்ல கையில் காசுமில்ல
பாட்டு வருதே என்னபுள்ள
கோயில் சிலைபோல உன்ன கண்டதால்
ஏத்தம் கேடுதே கன்னிபுள்ள

சேலைய பார்த்தாலே 
சொக்கி போகுற என் மாமா
வேலைய பார் மாமா
அந்த வெட்டி பேச்சு ஏன்மா

காஞ்ச வயலுல தண்ணிய பாய்ச்சனும்
பஞ்சத்த தீக்கணும் பசி தாகம் போக்கணும்

ஏத்தமையா ஏத்தம் உனக்கு 
ரொம்ப ஏத்தமையா ஏத்தம்
ஏத்தமையா ஏத்தம் உனக்கு 
ரொம்ப ஏத்தமையா ஏத்தம்


ஸ்சுட்சி ஒன்னதட்டி உட்டுபுட்டா 
பம்பு செட்டுல தண்ணி கொட்டிபுடும்
வ‌ச்சு வேல செய்ய வக்கில்லையே 
இங்கு வக்கணபேச்சு ஏன்மாமா
ஸ்சுட்சி ஒன்னதட்டி உட்டுபுட்டா 
பம்பு செட்டுல தண்ணி கொட்டிபுடும்
வ‌ச்சு வேல செய்ய வக்கில்லையே 
இங்கு வக்கணபேச்சு ஏன்மாமா

எந்திரம் வச்சு வேல செய்யலாம்
நாமென்ன செய்ய பூமியிலே
மண்ணோட மனுஷன் மனசு இணையும்
மகத்துவம் வருமா சொல்லுபுள்ள

மண்ணு விளைஞ்சாலே
அது வேணாங்குதா மாமா
கையில் பொன்னு நிறைஞ்சாலே
அது பொல்லாததா மாமா

விஞ்ஞான காலத்தில் எல்லாமே மெஷின்
மனுஷன் மனசுகூட மெஷின் ஆச்சு போபுள்ள

ஏத்தமையா ஏத்தம் உனக்கு
ரொம்ப ஏத்தமையா ஏத்தம்
ஏத்தமையா ஏத்தம் உனக்கு 
ரொம்ப ஏத்தமையா ஏத்தம்
எங்கப்பன் உன்பாட்டன் 
முப்பாட்டன் சொத்திருக்கு
ஏத்தமையா ஏத்தம் 
ஏலோலங்கடி ஏத்தமையா ஏத்தம் 
ஏலோலங்கடி ஏத்தமையா ஏத்தம் 

ஏலோலங்கடி ஏத்தம் ரொம்ப ஏத்தம்
உனக்கும்கூட ஏத்தம் ரொம்ப ஏத்தம்
ஏத்தம் ரொம்ப ஏத்தம்
உனக்கும்கூட ஏத்தம் ரொம்ப ஏத்தம்

Popular Posts