Sunday, September 16, 2018

Ninaive Oru Sangeetham - Eduthu Vacha Paalum (Sad)

படம்: நினைவே ஒரு சங்கீதம் (1987)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: S.P. பாலசுப்பிரமணியம்
பாடல்வரிகள்: கங்கை அமரன்


Image result for Ninaive Oru Sangeetham



எடுத்து வச்ச பாலும் 
விரிச்சு வச்ச பாயும் 
வீணாகத்தான் போகுது
அந்த வெள்ளி நெலா காயுது

எடுத்து வச்ச பாலும் விரிச்சு வச்ச பாயும்
வீணாகத்தான் போகுது
அந்த வெள்ளி நெலா காயுது
அடி பூங்காற்றே மனம் வாடாதே
சிறு ஊதாப்பூவே 
அடி நீதான் எந்தன் வாழ்வே
எடுத்து வச்ச பாலும் விரிச்சு வச்ச பாயும்
வீணாகத்தான் போகுது
அந்த வெள்ளி நெலா காயுது


நாடோடி மன்னன் நீ பாத்து வந்த
நம்மூரு தியேட்டருல
அத நான் இன்னும் மறக்க‌வில்ல
தூங்காதே தம்பி பாட்டொன்ன சொல்லி
தூங்காம பண்ணலையா
அத நீ இப்ப எண்ணலையா
தூங்கினா தாங்குமா மாமன் நெஞ்சம்
நான்படும் வேதன கேளு கொஞ்சம்
என் ஜீவன் நீதான் உன் தேவன் நாந்தான்

எடுத்து வச்ச பாலும் விரிச்சு வச்ச பாயும்
வீணாகத்தான் போகுது
அந்த வெள்ளி நெலா காயுது


சொல்லாம நானே திண்டாடுறேனே
சிங்கார பூந்தேனே
என் சம்சாரம் நீதானே
நீ வச்ச பாசம் நீங்காத நேசம்
நா வைத்து நாளாச்சு
அதில் என் பாவம் என்றாச்சு
எண்ணினா கண்ணுதான் ஈரமாச்சு
என்னவோ நெஞ்சுல பாரமாச்சு
அந்தி நேரம் ஆனா இந்த பாட்டுதானா

எடுத்து வச்ச பாலும் விரிச்சு வச்ச பாயும்
வீணாகத்தான் போகுது
அந்த வெள்ளி நெலா காயுது
அடி பூங்காற்றே மனம் வாடாதே
சிறு ஊதாப்பூவே 
அடி நீதான் எந்தன் வாழ்வே
எடுத்து வச்ச பாலும் விரிச்சு வச்ச பாயும்
வீணாகத்தான் போகுது
அந்த வெள்ளி நெலா காயுது

Popular Posts