Showing posts with label Bharani. Show all posts
Showing posts with label Bharani. Show all posts

Wednesday, March 18, 2020

Periyanna - Thanthane Thamara Poo

படம் : பெரியண்ணா (1999)
இசை : பரணி
பாடியவர்கள் : S.P. பால சுப்ரமணியம், K.S.சித்ரா
பாடல்வரிகள் : பரணி


Periyanna 1999 Poster.jpg



ஏய்... தன்னானே தாமரைப்பூ 
மாமா தள்ளாடும் தண்ணியில
ஏய்... தாமர பூத்திருச்சே
மாமா தாவணி வாங்கி வாங்க
ஊரெல்லாம் கூட்டிகிட்டு
வந்திடுங்க மேளம் கொட்டி

ஏய்... தன்னானே தாமரைப்பூ 
புள்ள தள்ளாடும் தண்ணியில
ஏய்... தாமர பூத்திருச்சே
புள்ள தாவணி வாங்கிவாறேன்



கொட்டுற பனியில நானும் உனக்கு
கொடையா மாறட்டுமா?
உன் வெட்டுற விழியில மூட்டுற நெருப்புல 
குளிரும் காயட்டுமா?

உனக்கும் எனக்கும் மனசு இப்ப
வக்கப் பிரியாச்சி
ஒளிவா மறவா பேசி சிரிக்க
ஓட தொண‌யாட்சி

கையில அணைக்கிற போது
நீ துள்ளி குதிக்கிற மானு

ஆத்துல குளிக்கிற போது
நீ ஆள கடிக்கிற மீனு

 உன் இடுப்பு சேல நழுவ
அத எடுத்து எடுத்து தழுவ

ஏய்... தன்னானே தாமரைப்பூ 
மாமா தள்ளாடும் தண்ணியில

ஏய்... தாமர பூத்திருச்சே
புள்ள தாவணி வாங்கிவாறேன்



தெனமும் என்ன தொரத்துதைய்யா
உங்க பெருமூச்சி
ஆத்தி பூத்த மாயம் போல
மாமா உன் பேச்சு

கண்ணே உனக்கு மின்மினி புடுச்சி
வெளக்கா ஏத்தட்டுமா?
விடியிற வரைக்கும் மடியில சாஞ்சி
வெசயம் சொல்லட்டுமா?

மாமன் தரனும் சீரு
ரெண்டு மாங்கா தட்டு தோடு

நீ சிரிக்கிற தங்கத்தேரு
உன் தேவை என்ன கேளு

வெடல புள்ள நானும் 
ஒரு வெவரம் கேட்க வேணும்

ஏய்... தன்னானே தாமரைப்பூ 
புள்ள தள்ளாடும் தண்ணியில

ஏய்... தாமர பூத்திருச்சே
மாமா தாவணி வாங்கிவாங்க

ஊரெல்லாம் கூட்டிகிட்டு
வந்திடுங்க மேளம் கொட்டி

ஏய்... தன்னானே தாமரைப்பூ 
மாமா தள்ளாடும் தண்ணியில

ஏய்... தாமர பூத்திருச்சே
புள்ள தாவணி வாங்கிவாறேன்

Saturday, May 18, 2013

Parvai Ondre Podhume - Ye Asainthadum

படம்: பார்வை ஒன்றே போதுமே (2001)
இசை: பரணி
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், S.ஜானகி
பாடல்வரிகள்: பா.விஜய்







ஹா... ஹாஹா... ஹா ஹா ஹா...
ஹா ஹா ஹா... ஹா ஹா ஹா...
ஹா ஹா ஹா...  ஹா ஹா ஹா...
லலல... லலல... லலல... லா....

ஏ... அசைந்தாடும் காற்றுக்கும் 
அழகான பூவுக்கும் காதலா... காதலா...
ஏ... அலையாடும் கடலுக்கும் 
அது சேரும் மணலுக்கும் காதலா... காதலா...

கொஞ்சம் இனிக்கும் கொஞ்சம் கரைக்கும்
மொத்த சுவைக்குள் மூழ்கவா
இச்சை இருந்தும் கச்சை அணைந்தேன்
சர்ச்சைகள் செய்திடவா

ஏ... அசைந்தாடும் காற்றுக்கும் 
அழகான பூவுக்கும் காதலா... காதலா...
ஏ... அலையாடும் கடலுக்கும் 
அது சேரும் மணலுக்கும் காதலா... காதலா...



ஏ... தீப்போன்ற உன் மூச்சோடு
ம்ம்ம்... என் தோள் சேரு
உச்சவம் போது ஜஜஜம்... ஜஜஜம்... 
உச்சியை கோது

ஏ... வாயோடு உந்தன் வாய் சேர்த்து
உன் மார்போடு மெல்ல கூர்பார்த்து
கைகளில் ஏந்து ஜஜஜம்... ஜஜஜம்... 
பொய்கையில் நீந்து

நான் வேர் வேராய் அட வேர்த்தேனே
ஒரு பால் பார்வை உன்னை பார்த்தேனே

சிற்றின்பம் என்றிதை யார் இங்கு சொன்னது
பேரின்ப தாமரை தாழ் திறக்க
ஐந்தடி உடல் நிலை மெய் மறக்க


ஏ... அசைந்தாடும் காற்றுக்கும் 
அழகான பூவுக்கும் காதலா... காதலா...
ஏ... அலையாடும் கடலுக்கும் 
அது சேரும் மணலுக்கும் காதலா... காதலா...



நீ ஆராய்ச்சி இனி பண்ணாதே
என் பூந்தேகம் அது தாங்காதே
கொப்புழில் தாகம் ஜஜஜம்... ஜஜஜம்... 
பொன் கைகள் வேகம்

உன் கண் கொண்டு என்னை கொய்யாதே
உன் தீ மூச்சால் என்னை கொல்லாதே
முத்தங்கள் போட்டு ஜஜஜம்... ஜஜஜம்... 
வித்தைகள் காட்டு

நீ கீழ் மேலாய் என்னை கிள்ளாதே
நீ மேல் கீழாய் என்னை அள்ளாதே

பெண்ணே நீ பெண்ணல்ல அட்சைய பாத்திரம்
பெண்னென்ற கோப்பைக்குள் நான் விழுந்தேன்
ஆரோடு தேன் கொண்டு வாய் கலந்தேன்


ஏ... அசைந்தாடும் காற்றுக்கும் 
அழகான பூவுக்கும் காதலா... காதலா...
ஏ... அலையாடும் கடலுக்கும் 
அது சேரும் மணலுக்கும் காதலா... காதலா...

கொஞ்சம் இனிக்கும் கொஞ்சம் கரைக்கும்
மொத்த சுவைக்குள் மூழ்கவா
இச்சை இருந்தும் கச்சை அணைந்தேன்
சர்ச்சைகள் செய்திடவா

ஏ... அசைந்தாடும் காற்றுக்கும் 
அழகான பூவுக்கும் காதலா... காதலா...
ஏ... அலையாடும் கடலுக்கும் 
அது சேரும் மணலுக்கும் காதலா... காதலா...


பார்வை ஒன்றே போதுமே - துளி துளியாய்

படம்: பார்வை ஒன்றே போதுமே (2001)
இசை: பரணி
பாடியவர்கள்: ஹரிஹரன், ஸ்வர்ணலதா




துளி துளியாய் கொட்டும் மழை துளியாய்
என் இதயத்தை இதயத்தை நனைத்து விட்டாய்
பார்வையிலே உன் பார்வையிலே
ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்

ஒளி ஒளியாய் வெட்டும் மின்னல் ஒளியாய்
என் ரகசிய ஸ்தலங்களை ரசித்துவிட்டாய்
ரசித்ததையே நீ ரசித்ததையே
என் அனுமதி இல்லாமல் ருசித்து விட்டாய்

பூவென நீ இருந்தால் இளம் தென்றலைப்போல் வருவேன்
நிலவென நீ இருந்தால் உன் வானம் போலிருப்பேன்

துளி துளியாய் கொட்டும் மழை துளியாய்
என் இதயத்தை இதயத்தை நனைத்து விட்டாய்
பார்வையிலே உன் பார்வையிலே
ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்


பூமியெங்கும் பூப்பூத்த பூவில் நான் பூட்டி கொண்டே இருப்பேன்

பூக்களுக்குள் நீ பூட்டிக் கொண்டால் நான் காற்று போல திறப்பேன்

மேகம் உள்ளே வாழ்ந்திருக்கும் தூறல் போலவே
நானும் அந்த மேகம் அதில் வாழ்கிறேன்

காற்றழுத்தம் போல வந்து நானும் உன்னை தான்
முத்தம் இட்டு முத்தம் இட்டு போகிறேன்

ஒருவரை ஒருவர் அடிக்கடி தேடி
ஆனந்த மழைதனில் நனைந்திட நனைந்திட

துளி துளியாய் கொட்டும் மழை துளியாய்
என் இதயத்தை இதயத்தை நனைத்து விட்டாய்
பார்வையிலே உன் பார்வையிலே
ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்


நீலவானில் அட நீயும் வாழ ஒரு வீடு கட்டி தரவா

நீலவானில் என் கால் நடந்தால் விண்மீன்கள் குத்தும் தலைவா

ஓர கண்ணில் போதை கொண்டு நீயும் பார்க்கிறாய்
மேல் உதட்டை கீழ் உதட்டை அசைக்கிறாய்

பூவனத்தை பூவனத்தை கொய்து போகிறாய்
பெண் இனத்தை பெண் இனத்தை ரசிக்கிறாய்

கனவுகள் வருதே கனவுகள் வருதே காதலியே
உன்னை தழுவிட தழுவிட
துளி துளியாய் கொட்டும் மழை துளியாய்
என் இதயத்தை இதயத்தை நனைத்து விட்டாய்
பார்வையிலே உன் பார்வையிலே
ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்

ஒளி ஒளியாய் வெட்டும் மின்னல் ஒளியாய்
என் ரகசிய ஸ்தலங்களை ரசித்துவிட்டாய்
ரசித்ததையே நீ ரசித்ததையே
என் அனுமதி இல்லாமல் ருசித்து விட்டாய்

பூவென நீ இருந்தால் இளம் தென்றலைப்போல் வருவேன்
நிலவென நீ இருந்தால் உன் வானம் போலிருப்பேன்

துளி துளியாய் கொட்டும் மழை துளியாய்
என் இதயத்தை இதயத்தை நனைத்து விட்டாய்
பார்வையிலே உன் பார்வையிலே
ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்


Paarvai Ondre Podhume - Thirumba Thirumba

படம்: பார்வை ஒன்றே போதுமே (2001)
இசை: பரணி
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், ஹரிணி
பாடல்வரிகள்: பா.விஜய்




திரும்ப திரும்ப பார்த்து பார்த்து
திரும்ப திரும்ப பேசி பேசி
திரும்ப திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா

திரும்ப திரும்ப கடிதம் போட்டு
திரும்ப திரும்ப இதயம் கேட்டு
திரும்ப திரும்ப உயிரை கொல்லும் நினைவு காதலா

இமைக்கும்போது உன் முகம் 
தெரிவதில்லை வாடினேன்
இமைகள் ரெண்டும் நீங்கிடும் 
மருத்துவங்கள் தேடினேன்

உயிரை கொண்டு உன்னை மூடினேன் 
ஆஆ... ஆஆ...ஆ...

திரும்ப திரும்ப பார்த்து பார்த்து
திரும்ப திரும்ப பேசி பேசி
திரும்ப திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா



உந்தன் வண்ண சேலையை 
காற்று கொண்டு போனதோ
காற்று கொண்டு போனதை 
மேகம் வாங்கி கொண்டதோ
வாங்கி கொண்ட சேலைதான் 
வானவில் ஆனதோ

முத்தம் வைத்து கொல்வதை 
வானம் என்னை எண்ணுதோ
எண்ணி வைத்த புள்ளிகள் 
நட்சத்திரம் ஆனதோ
உந்தன் பேரை சொல்வதில் 
கோடி இன்பம் கூடுதோ

காதலித்து பார்க்கையில் 
இதயம் நின்று போகுமே

இதயம் நின்று போயிடும் 
ரத்த ஓட்டம் ஓடுமே

பிறப்பு போல இறப்பு போல
ஒரு முறைதான் காதல் தோன்றுமே 
ஆஆ... ஆஆ...ஆ...


திரும்ப திரும்ப பார்த்து பார்த்து
திரும்ப திரும்ப பேசி பேசி
திரும்ப திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா



கவிஞன் மனச போல நீ 
துருவி துருவி பார்க்கிறாய்
கிராம மண்ணின் தென்றலாய் 
உரசி உரசி கேட்கிறாய்
இந்த மென்மை ஆண்மை 
உன்னை எண்ணி ஈர்க்குது

மேஜை விளக்கு போல நீ 
தலை குனிந்து போகிறாய்
ஓடை கால மேகமாய் 
கொஞ்சம் கொஞ்சம் பேசுறாய்
இந்த தன்மை தானடி 
என்னை உன்னை கோர்த்தது

இதய துடிப்பு என்பதே 
நிமிஷத்துக்கு என்பது

உன்னை பார்க்கும்போதுதான்
நூறு மடங்கு கூடுது

வெட்கம் பாதி சொர்க்கம் பாதி 
மாறி மாறி வந்து போனது 
ஆஆ... ஆஆ...ஆ...


திரும்ப திரும்ப பார்த்து பார்த்து
திரும்ப திரும்ப பேசி பேசி
திரும்ப திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா

திரும்ப திரும்ப கடிதம் போட்டு
திரும்ப திரும்ப இதயம் கேட்டு
திரும்ப திரும்ப உயிரை கொல்லும் நினைவு காதலா


இமைக்கும்போது உன் முகம் 
தெரிவதில்லை வாடினேன்
இமைகள் ரெண்டும் நீங்கிடும் 
மருத்துவங்கள் தேடினேன்

உயிரை கொண்டு உன்னை மூடினேன் 
ஆஆ... ஆஆ...ஆ...

திரும்ப திரும்ப பார்த்து பார்த்து
திரும்ப திரும்ப பேசி பேசி
திரும்ப திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா


பார்வை ஒன்றே போதுமே - திருடிய இதயத்தை

படம்: பார்வை ஒன்றே போதுமே (2001)
இசை: பரணி
பாடியவர்கள்: ஹரீஷ் ராகவேந்திரா, K.S.சித்ரா




திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு
காதலா என் காதலா என் காதலா
வருடிய காற்றுக்கு வார்த்தை சொல்லிவிடு
காதலா என் காதலா என் காதலா

சிரிக்கிற சிரிப்பை நிறுத்திவிடு
பார்க்கிற பார்வையை மறந்துவிடு
பேசுற பேச்சை நிறுத்திவிடு
பெண்ணே என்னை மறந்துவிடு
உயிரே மறந்துவிடு உறவே மறந்துவிடு
அன்பே விலகிவிடு என்னை வாழ விடு
திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு
காதலா என் காதலா என் காதலா


கண்கள் மோதலா இது வந்த காதலா
நினைத்தேனே நான் நினைத்தேனே
ஊசி தூரலா நீ பேசு காதலா
தவித்தேனே நான் தவித்தேனே
காற்றாய் மாறி காதலிக்கிறேன்
கண்ணே ஒரு முறை சுவாசம் கொள்
நானும் உன்னை சம்மதிக்கிறேன்
என்றே இங்கொரு வார்த்தை சொல்
மன்னவனே மன்னவனே
உயிரில் உயிராய் கலந்தவனே
திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு
காதலா என் காதலா என் காதலா


நேற்று பொழுதில நான் கண்ட கனவுல
பார்த்தேனே உன்னை பார்த்தேனே
காதல் வயசில நான் ஏதோ நினைப்புல
துடித்தேனே நான் துடித்தேனே
இதயத்தோடு இதயம் சேர்த்து
ஒரு முறையாவது பூட்டிக்கொள்
கண்களோடு கண்கள் வைத்து
ஒரு முறையாவது பார்த்துக்கொள்
காதலனே காதலனே
வாழ்வே உனக்கென வாழ்கிறேனே

திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு
காதலா என் காதலா என் காதலா
வருடிய காற்றுக்கு வார்த்தை சொல்லிவிடு
காதலா என் காதலா என் காதலா

சிரிக்கிற சிரிப்பை நிறுத்திவிடு
பார்க்கிற பார்வையை மறந்துவிடு
பேசுற பேச்சை நிறுத்திவிடு
பெண்ணே என்னை மறந்துவிடு
உயிரே மறந்துவிடு உறவே மறந்துவிடு
அன்பே விலகிவிடு என்னை வாழ விடு

திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு
காதலா என் காதலா என் காதலா


Wednesday, May 8, 2013

Charlie Chaplin - Mudhalaam Sandhippil

படம் : சார்லி சாப்ளின் (2002)
இசை : பரணி
பாடியவர்கள் : உன்னி கிருஷ்ணன், சுவர்ணலதா
பாடல்வரிகள்: பழனி பாரதி





முதலாம் சந்திப்பில் நான் அறிமுகம் ஆனேனே
இரண்டாம் சந்திப்பில் என் இதயம் கொடுத்தேனே
மூன்றாம் சந்திப்பில் முகத்தை மறைத்தேன்
நான்காம் சந்திப்பில் நகத்தை கடித்தேன்
காதல் வந்தது காதல் வந்தது காதல் வந்ததடா
அட காதல் வந்தது காதல் வந்தது காதல் வந்ததடா

ஐந்தாம் சந்திப்பில் நான் ஐக்கியம் ஆனேனே
ஆறாம் சந்திப்பில் நான் பைத்தியம் ஆனேனே
ஏழாம் சந்திப்பில் எட்டி பிடித்தேன்
எட்டாம் சந்திப்பில் கட்டி பிடித்தேன்
காதல் வந்தது காதல் வந்தது காதல் வந்ததடி
அடி காதல் வந்தது காதல் வந்தது காதல் வந்ததடி
இன்னும் கோடி கோடி ஆசை நெஞ்சில் உள்ளே உள்ளதடி

முதலாம் சந்திப்பில் நான் அறிமுகம் ஆனேனே
இரண்டாம் சந்திப்பில் என் இதயம் கொடுத்தேனே


அதிகாலை நேரத்திலே கோலங்கள் நீயும் போட
தொலைவாக நான் நின்று உன்னை சந்திப்பேன்
பால் வாங்கும் நேரத்தில் பக்கத்தில் சந்திப்பேன் (MP3 only)

நூறாண்டு வயதான உள்ளூரு நூலகத்தில்
மறைவாக மறைவாக தினம் சந்திப்போம்
பேருந்துக்குள்ளே தான் பெரு மூச்சால் சந்திப்போம்

காலை நேரத்தில் உன் கடிதம் சந்திப்பேன்
மாலை நேரத்தில் உன் மடியில் சந்திப்பேன்

சாயங்காலம் சாலை ஒரம் நீயும் நானும் பிரியும் நேரம்
இருவரும் கூடி இமைகளை மூடி இதழால் சந்திப்போம்

முதலாம் சந்திப்பில் நான் அறிமுகம் ஆனேனே
இரண்டாம் சந்திப்பில் என் இதயம் கொடுத்தேனே 
(MP3 only)


இ.பி.கோ. சட்டம் போட்டு ஊர் அடங்க செய்தாலும்
ஓடோடி ஒரு நொடியில் உனை சந்திப்பேன்
மண்வாசம் நீ ஆனால் மழையாகி சந்திப்பேன் 
(MP3 only)

இரு கையில் ஆணி வைத்து சிலுவைக்குள் அரைந்தாலும்
உயிர் நீர்த்து உடன் வந்து உன்னை சந்திப்பேன்
பூவாக நீ ஆனால் காற்றாகி சந்திப்பேன்

போதிமரமாக நீ மாறி போனாலும்
புத்தமதமாகி நான் உன்னை சந்திப்பேன்

ஆயுள் உள்ள காலம் வரை அன்பே நாமும் கூடி வாழ
நம்மை பெற்ற அம்மா அப்பா இருவரை சந்திப்போம்

முதலாம் சந்திப்பில் நான் அறிமுகம் ஆனேனே
இரண்டாம் சந்திப்பில் என் இதயம் கொடுத்தேனே
மூன்றாம் சந்திப்பில் முகத்தை மறைத்தேன்
நான்காம் சந்திப்பில் நகத்தை கடித்தேன்
காதல் வந்தது காதல் வந்தது காதல் வந்ததடா
அட காதல் வந்தது காதல் வந்தது காதல் வந்ததடா 
(MP3 only)
இன்னும் கோடி கோடி ஆசை நெஞ்சில் உள்ளே உள்ளதடா



சார்லி சாப்ளின் - வார்த்தை தவறி

படம்: சார்லி சாப்ளின் (2002)
இசை: பரணி
பாடியவர்: ஹரீஷ் ராகவேந்திரா






வார்த்தை தவறி போனதனாலே
வாழ்க்கை தவறி போனது பாரு
நேற்று பொழுது திரும்ப வராது
அதற்கு பூமி அனுமதிக்காது
பூவை பெண்ணாய் சொன்னவன் யாரு
மலரை அறுத்து மருத்துவம் பாரு
வானம் தொலைவா இல்லை வாழ்க்கை தொலைவா
இங்கு வாழும் மனிதா உண்மை புரியலையே
வார்த்தை தவறி போனதனாலே
வாழ்க்கை தவறி போனது பாரு


மின்னலுக்கும் மின்மினிக்கும் தகறாரா
கண்ணீருக்கு கன்னங்கள் தான் வரலாறா
பூக்கள் எல்லாம் சந்தேகித்தால் சருகாகும்
போதிமரம் கூட இங்கு விறகாகும்
இறைவனை ஒரு முறை வரவழைத்து
இல்லறம் நடத்திட சொல்ல வேண்டும்
மங்கையரின் மனதினை கண்டு பிடிக்க
மற்றுமொரு கொலம்பஸ் இங்கு வேண்டும்
முதல் முறையா இல்லை முடிவுறையா
கரையே இல்லாத கடற்கரையா
வானம் தொலைவா இல்லை வாழ்க்கை தொலைவா
இங்கு வாழும் மனிதா உண்மை புரியலையே


Friday, January 4, 2013

சார்லி சாப்ளின் - வார்த்தை தவறி


படம் : சார்லி சாப்ளின் (2002)
இசை : பரணி
பாடியவர் : ஹரீஷ் ராகவேந்திரா
பாடல் வரி : கபிலன்





வார்த்தை தவறி போனதனாலே
வாழ்க்கை தவறி போனது பாரு
நேற்று பொழுது திரும்ப வராது
அதற்கு பூமி அனுமதிக்காது
பூவை பெண்ணாய் சொன்னவன் யாரு
மலரை அறுத்து மருத்துவம் பாரு

வானம் தொலைவா இல்லை வாழ்க்கை தொலைவா
இங்கு வாழும் மனிதா உண்மை புரியலையே
வார்த்தை தவறி போனதனாலே
வாழ்க்கை தவறி போனது பாரு

மின்னலுக்கும் மின்மினிக்கும் தகராறா
கண்ணீருக்கு கன்னங்கள் தான் வரலாறா
பூக்கள் எல்லாம் சந்தேகித்தால் சருகாகும்
போதிமரம் கூட இங்கு விறகாகும்
இறைவனை ஒரு முறை வரவழைத்து
இல்லறம் நடத்திட சொல்ல வேண்டும்
மங்கையரின் மனதனை கண்டு பிடிக்க
மற்றுமொரு கொலம்பஸ் இங்கு வேண்டும்
முதல் முறையா இல்லை முடிவுரையா
கரையே இல்லாத கடற்கரையா

வானம் தொலைவா இல்லை வாழ்க்கை தொலைவா
இங்கு வாழும் மனிதா உண்மை புரியலையே

Friday, January 21, 2011

ஸ்டைல் - காதலித்தால் ஆனந்தம்



படம் : ஸ்டைல் (2002)
இசை : பரணி

பாடியவர் :  ஹரிஹரன்

பாடல் வரி : பா.விஜய்



காதலித்தால் ஆனந்தம் கண்ணடித்தால் ஆனந்தம் 
சத்தமின்றி முத்தம் தந்தால் ரொம்ப ரொம்ப ஆனந்தம் 
பார்த்துக்கொண்டால் ஆனந்தம் பேசிக்கொண்டால் ஆனந்தம் 
அங்கங்கே தீண்டும்போது கோடி கோடி ஆனந்தம் 
கை பிடித்தால் ஆனந்தம் கட்டி அணைத்தால் ஆனந்தம் 
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் தம் தம் தம் தம் 


காதலித்தால் ஆனந்தம் கண்ணடித்தால் ஆனந்தம் 
சத்தமின்றி முத்தம் தந்தால் ரொம்ப ரொம்ப ஆனந்தம் 


கடவுள் பிறக்கும் முன்னாலே
இங்கு காதல் பிறந்தது தன்னாலே 
இனியவளே இனியவளே இனியவளே ஹோ
பெண்கள் பிறந்த பின்னாலே
இன்ப அவஸ்தை பிறந்தது தன்னாலே 
என்னவளே என்னவளே என்னவளே ஹோ 


பூக்களிலே மிக பெரிய பூவேன வந்தவள் நீ தான் 
நதிகளிலே மிக சிறிய நதியேன வந்தவள் நீதான் 
கனவுகளின் ஹோய்..ஹோய்.. 
முகவரி நீ ஹோய்...ஹோய்.. 
கவிதைகளின் தாய் மொழி நீ எனக்கேன ஹோய்.. 



காதலித்தால் ஆனந்தம் கண்ணடித்தால் ஆனந்தம் 
சத்தமின்றி முத்தம் தந்தால் ரொம்ப ரொம்ப ஆனந்தம் 
பார்த்துக்கொண்டால் ஆனந்தம் பேசிக்கொண்டால் ஆனந்தம் 
அங்கங்கே தீண்டும்போது கோடி கோடி ஆனந்தம் 
கை பிடித்தால் ஆனந்தம் கட்டி அணைத்தால் ஆனந்தம் 
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் தம் தம் தம் தம் 

Popular Posts