Showing posts with label Manivannan. Show all posts
Showing posts with label Manivannan. Show all posts

Tuesday, January 22, 2019

Poomagal Oorvalam - Antha Vannukku Rendu

படம் : பூமகள் ஊர்வலம் (1999)
இசை : சிவா
பாடியவர்கள் : உன்னி கிருஷ்ணன்
பாடல்வரிகள் : வைரமுத்து

Image result for Poomagal Oorvalam



அந்த வானுக்கு ரெண்டு தீபங்கள்
அவை சூரிய சந்திரரே
என் வாழ்வுக்கு ரெண்டு தீபங்கள்
என் தாயோடு தந்தையரே

அந்த வானின் தீபம் ரெண்டும் இல்லையென்றால்
இந்த மண்ணில் உயிர்கள் இல்லையே
என் பாசதீபம் ரெண்டும் இல்லையென்றால்
என் வாழ்வில் ஒளியும் இல்லையே
ஒரு தாய்தந்தை போலே உலகில் உறவில்லையே
தாய் தானே... அன்புக்கு ஆதாரம்
தந்தை தானே... அறிவுக்கு ஆதாரம்

அந்த வானுக்கு ரெண்டு தீபங்கள்
அவை சூரிய சந்திரரே..



நூறு தெய்வங்கள் ஒன்றாகக் கூடி
தாய்க்கு பூஜைகள் செய்க
இமய மலைகளும் ஏழு கடல்களும்
தந்தை நாமமே சொல்க

இவர் கோபங்கள் நானும் பார்த்ததில்லை
ஒரு சுடுசொல்லைக் கூட கேட்டதில்லை
ஒரு ஏழை தாய்போல் உலகில் செல்வமில்லை
தாய் தானே... அன்புக்கு ஆதாரம்
தந்தை தானே... அறிவுக்கு ஆதாரம்
அந்த வானுக்கு ரெண்டு தீபங்கள்
அவை சூரிய சந்திரரே...



தந்தை காலடி தாயின் திருவடி
நல்ல மகனுக்குக் கோயில்
அன்பின் முகவரி என்ன என்பதை
கண்டுகொள்கிறேன் தாயில்

நான் உறவென்ற தீபம் ஏற்றிவைப்பேன்
அதில் உயிர் என்ற எண்ணெய் ஊற்றிவைப்பேன்
நான் என்றும் கண்ணில் இருவரை சுமந்திருப்பேன்
தாய் தானே... அன்புக்கு ஆதாரம்
தந்தை தானே... அறிவுக்கு ஆதாரம்

Popular Posts