Tuesday, January 22, 2019

Poomagal Oorvalam - Malare Oru Varthai

படம் : பூமகள் ஊர்வலம் (1999)
இசை : சிவா
பாடியவர்கள் : ஹரிஹரன், சித்ரா & சுஜாதா
பாடல்வரிகள் : வைரமுத்து


Image result for Poomagal Oorvalam



மலரே ஒரு வார்த்தை பேசு
இப்படிக்கு பூங்காற்று
மலரே ஒரு வார்த்தை பேசு
இப்படிக்கு பூங்காற்று
காற்று வந்து காது கடித்தும்
இன்னும் என்ன மௌனமோ
மோதி வந்து முத்தமிட்டால்
மௌனம் தீருமோ
அச்சம்தான் உன் ஆடையோ
வெட்கம் தான் முந்தானையோ
மௌனம் தான் உன் வேலியோ
செம்பூவே வா... வா..வா..வா...

விழியே ஒரு வார்த்தையானால்
மொழி என்பது வேண்டாமே



வார்த்தையாடி பார்த்தபோது
காதல் வரவில்லை
காதல் வந்து சேர்ந்தபோது
வார்த்தை வரவில்லை

நான்கு கண்கள் பேசும்போது
தாய்மொழிக்கு இடமில்லை
மௌனம் பாடும் பாடல் போலே
மனதுக்கு சுகமில்லை

மலர்களை எரிப்பது முறையில்லை
மௌனத்தை உடைப்பது சரியில்லை
மௌனத்தின் ஓசைகள் கேளாமல்
வார்த்தைகள் புரிவது எளிதில்லை

கண்ணில் ஆசை துடிக்குதே 
அன்பே... அன்பே...
நெஞ்சு பிடிக்குது முல்லை
வெளியில் சொல்லவில்லை

வெட்க படாத பூக்களை 
வண்டுகள் தொடாதடி
முத்தம் தராமல் வெட்கம்
சாயம் போகாதடி
மலரே... ஒரு வார்த்தை பேசு
இப்படிக்கு பூங்காற்று



பெண்ணிடத்தில் உள்ளதெல்லாம்
பெண்ணுக்கு தெரியாது
ஓர் ஆணின் கைகள் தீண்டமட்டும்
அவசியம் புரியாது

காதல் மங்கை சொன்ன வார்த்தை
கவிதையில் கிடையாது
அட காதலிக்கும் ஆட்கள் போலே
கவிஞர்கள் கிடையாது

இரவிலே தாமரை மலராது
பகலிலே அல்லியும் அவிழாது
இதயப்பூ எப்போதும் மலரும் என்று
இதுவரை சொன்னவர் கிடையாது

ஏய்... ராஜமோகினி 
ரம்பா... ரம்பா...
உன் எடைக்கெடை தங்கம்
தரத்துடிக்கும் நெஞ்சம்

கைகள் தொடாமல் கண்களால்
நெஞ்சை பந்தாடினாய்
ரத்தம் வராமல் பார்வையால்
என்னை துண்டாடினாய்

மலரே ஒரு வார்த்தை பேசு
இப்படிக்கு பூங்காற்று
மலரே ஒரு வார்த்தை பேசு
இப்படிக்கு பூங்காற்று
காற்று வந்து காது கடித்தும்
இன்னும் என்ன மௌனமோ
மோதி வந்து முத்தமிட்டால்
மௌனம் தீருமோ
அச்சம்தான் உன் ஆடையோ
வெட்கம் தான் முந்தானையோ
மௌனம் தான் உன் வேலியோ
செம்பூவே வா வா வா வா

மலரே ஒரு வார்த்தை பேசு
இப்படிக்கு பூங்காற்று

Popular Posts