Showing posts with label Udhayanidhi Stalin. Show all posts
Showing posts with label Udhayanidhi Stalin. Show all posts

Monday, April 18, 2022

Manithan - Aval

 படம் : மனிதன் (2016)

இசை : சந்தோஷ் நாராயணன்

பாடியவர்கள் : ப்ரதீப் குமார், ப்ரியா ஹிமேஷ்

பாடல்வரிகள் : விவேக்


Download this MP3

அவள் குழல் உதிர்த்திடும்

இலை எனை துளைத்திடும்

இடைவெளி முளைத்திடும்

நேரம் உயிர் நனைத்திடும்


அவள் இதழ் திரட்டிடும்

மழை என்னில் தெரித்திடும்

சுழல் என சுழற்றிடும்

நெஞ்சைச் சுருட்டிடும்


அழகழகா 

அவ தெரிவா

உயிர் உரிவா

மெது மெதுவா

விரி விரிவா

விழி எறிவா


எனக்கானவளே நீதான் கிட்ட வறியா

தெரிஞ்சா செஞ்சே மன்னிப்பே கிடையாதா

உடனே என்ன உதறிப்போனா சரியா

இனிமே நானும் உயிரும் அட தனியா


என் சொகமே... என் மொகமே...

எங்கேயோ... தொலைஞ்சவளே...

என் வரமே... என் நிறமே...

ஏழாக வளைஞ்சவளே...



காலம் போகுதே கடிகாரம் ஓடுதே

உன்ன மாத்திக்கும் நேரம் எப்போ

வாதம் பண்ணுனா பிடிவாதம் பண்ணுற

திருந்தாத நான்தான் தப்போ



படபடக்கும் கண்ணால

என மிரட்டிக் கொஞ்சம் மாத்திட்ட

மனசுடைஞ்சு போகாத

உன் விரல் புடிச்சு நானும் கரை ஏறுவேன்


என் சொகமே... என் மொகமே...

எங்கேயோ... தொலைஞ்சவளே...

என் வரமே... என் நிறமே...

ஏழாக வளைஞ்சவளே...


அழகழகா...

அவ தெரிவா...

உயிர் உரிவா...

மெது மெதுவா...

விரி விரிவா...

விழி அறிவா...


உடனே என்ன உதறிப்போனா சரியா

இனிமே நானும் உயிரும் அட தனியா

என் வரமே என் நிறமே...

ஏழாக வளைஞ்சவளே...

Thursday, February 8, 2018

Nimir - Nenjil Maamazhai

ப‌டம்: நிமிர் (2018)
இசை: B. அஜனீஷ் லோக்நாத், தர்பூகா சிவா
பாடியவர்கள்: ஹரி சரண், ஸ்வேதா மோகன்
பாடல் வரிகள்: தாமரை

Image result for nimir mp3 free download






நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை
தந்து வானம் கூத்தாட 
கொஞ்சும் தாமரை கொஞ்சும் தாமரை
வந்து எங்கும் பூத்தாட

எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது
எட்டி நின்று எட்டி நின்று காய்வது 
கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது 
கண் மூடி கண் மூடி காதோரம் பாடுது

நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை
தந்து வானம் கூத்தாட 
கொஞ்சும் தாமரை கொஞ்சும் தாமரை
வந்து எங்கும் பூத்தாட


வானத்தில் எத்தனை நாள் பார்ப்பது 
அன்றாடம் வந்து பார்க்க ஏங்குது
வாராமல் போகும் நாட்கள் வீணே என 
வம்பாக சண்டை போட வாய்க்குது

சொல்லப் போனால்  என் நாட்களை
வண்ணம் பூசி தந்தவளும் நீதான் 
துள்ளல் இல்லா என் பார்வையில்
தூண்டில் மீனாய் வந்தவளும் நீதான்

எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது
எட்டி நின்று எட்டி நின்று காய்வது 
கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது 
கண் மூடி கண் மூடி காதோரம் பாடுது
நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை
தந்து வானம் கூத்தாட 



பாசாங்கு செய்ததெல்லாம் போதுமே
ராசாவை தேடி கண்கள் ஓடுமே
ரோசாப்பூ மாலை ரெண்டு வேண்டுமே 
பேசாமல் மாற்றிக் கொள்ள தோன்றுமே

பெண்கள் இல்லா என் வீட்டிலே 
பாதம் வைத்து நீயும் வர வேண்டும் 
தென்றல் இல்லா என் தோட்டத்தில்
உன்னால் தானே காற்று வரும் மீண்டும்

எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது
எட்டி நின்று எட்டி நின்று காய்வது 
கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது 
கண் மூடி கண் மூடி காதோரம் பாடுது

நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை
தந்து வானம் கூத்தாட 
கொஞ்சும் தாமரை கொஞ்சும் தாமரை
வந்து எங்கும் பூத்தாட

எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது
எட்டி நின்று எட்டி நின்று காய்வது 
கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது 
கண் மூடி கண் மூடி காதோரம் பாடுது

Sunday, May 14, 2017

Saravanan Irukka Bayamaen - Yembuttu Irukkuthu Aasai

படம்: சரவணன் இருக்க பயமேன் (2016)
இசை: D.இமான்
பாடியவர்: ஷான் ரோல்டன், கல்யாணி நாயர்
பாடல்வரிகள்: யுகபாரதி


Image result for Saravanan Irukka Bayamaen




எம்புட்டு இருக்குது ஆச உம்மேல
அதக்காட்டப் போறேன்

அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட
கொடியேத்த வாரேன்

உள்ளத்த கொடுத்தவன் ஏங்கும்போது
உம்முன்னு இருக்குறியே

செல்லத்த எடுத்துக்க கேட்க வேணாம்
அம்மம்மா அசத்துறியே

கொட்டிக்கவுக்குற ஆளையே இந்தாடி


எம்புட்டு இருக்குது ஆச உம்மேல
அதக்காட்டப் போறேன்

அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட
கொடியேத்த வாரேன்


கள்ளம் கபடம் இல்ல ஒனக்கு
என்ன இருக்குது மேலும் பேச

பள்ளம் அறிஞ்சி வெள்ளம் வடிய
சொக்கிக் கெடக்குறேன் தேகம் கூச

தொட்டு கலந்திட நீ துணிஞ்சா
மொத்த ஒலகையும் பார்த்திடலாம்

சொல்லி கொடுத்திட நீ இருந்தால்
சொர்க்க கதவையும் சாய்த்திடலாம்

முன்னப் பாக்காதத‌ இப்போ நீ காட்டிட
வெசம் போல ஏறுதே... சந்தோசம்
எம்புட்டு இருக்குது ஆச உம்மேல
அதக் காட்டப் போறேன்.

அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட
கொடியேத்த வாரேன்


ஒத்த லயிட்டும் ஒன்ன நெனச்சி
குத்து வெளக்கென மாறிப் போச்சி

கண்ண கதுப்பு என்ன‌ பறிக்க
நெஞ்சுக்குழி  அதும் மேடு ஆச்சு

பத்து தல கொண்ட இராவணனா
ஒன்ன இரசிக்கனும் தூக்கிவந்து

மஞ்சக்கயிரொன்னு போட்டு புட்டு
என்ன இருட்டிலும் நீ அருந்து

சொல்லக் கூடாதத சொல்லி ஏன் காட்டுற
மல ஏற ஏங்குறேன்... உங்கூட‌
எம்புட்டு இருக்குது ஆச உம்மேல
அதக்காட்டப் போறேன்

அம்புட்டு அழகையும் நீங்க தாலாட்ட
கொடியேத்த வாரேன்

Monday, June 30, 2014

இது கதிர்வேலன் காதல் - அன்பே அன்பே

படம்: இது கதிர்வேலன் காதல் (2014)
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஹாரிஸ் ராகவேந்திரா, ஹரிணி
பாடல்வரிகள்: யுகபாரதி




அன்பே அன்பே எல்லாம் அன்பே
உனக்காக வந்தேன் இங்கே
சிரித்தாலே போதும் என்பேன்
மழை காலம் கண்ணில் மட்டும் வேண்டாம் என்பேன்
பனிக்கால போர்வை கொண்டு வந்தேன்

ஓ… அன்பே அன்பே எல்லாம் அன்பே
உனக்காக வந்தேன் இங்கே
சிரித்தாலே போதும் என்பேன்
மழை காலம் கண்ணில் மட்டும் வேண்டாம் என்பேன்
பனிக்கால போர்வை கொண்டு வந்தேன்

என் மேஜை மீது பூங்கொத்தை...
என் மேஜை மீது பூங்கொத்தை வைத்தது நீ தானே
நான் வானம் பார்க்க வழி செய்த சாரலும் நீ தானே
என் இதயம் மெல்ல சிதையில் தள்ள
நீ தான் நிலாவைக் காட்டித் தேற்றினாய்

அன்பே அன்பே எல்லாம் அன்பே
உனக்காக வந்தேன் இங்கே
சிரித்தாலே போதும் என்பேன்
மழை காலம் கண்ணில் மட்டும் வேண்டாம் என்பேன்
பனிக்கால போர்வை கொண்டு வந்தேன்


தூக்கம் கண்ணில் வரவில்லை
சொப்பனம் காண வழி இல்லை
எங்கோ பாடல் கேட்டாலும்
நெஞ்சில் உன் போல் தீ இல்லை
தூக்கம் கண்ணில் வரவில்லை
சொப்பனம் காண வழி இல்லை
எங்கோ பாடல் கேட்டாலும்
நெஞ்சில் உன் போல் தீ இல்லை

வழி தரும் கார்முகிலே
நீ மிதந்திடும் மயில் இறகே
இதம் தரும் இன்னிசையே
நீ ஒளி தரும் என் திசையே

இருப்பது ஓர் உயிரே
அது உருகியே கரைகிறதே
நினைவுகள் கொல்வதனால்
மனம் மறுபடி சரிகிறதே

ஓ... அன்பே அன்பே எல்லாம் அன்பே
உனக்காக வந்தேன் இங்கே
சிரித்தாலே போதும் என்பேன்
மழை காலம் கண்ணில் மட்டும் வேண்டாம் என்பேன்
பனிக்கால போர்வை கொண்டு வந்தேன்


உன்னைப் பார்க்க கூடாது என
கண்ணை மூடிக் கொண்டாலும்
கண்ணை பிரித்து நீ வந்தாய்
இமைகளின் இடையில் நீ நின்றாய்

உன்னிடம் சொல்வதற்கு
என் கதை பல காத்திருக்கு
இரு கண்களின் தந்திகளால்
அதை கடத்திட சொல் எதற்கு

உடைகளின் நேர்த்தியினால்
இந்த உலகினை வென்றவள் நீ
சிறு உதட்டினில் புன்னகையால்
என் இதயத்தில் நின்றவள் நீ

ஓ... அன்பே அன்பே எல்லாம் அன்பே


Wednesday, January 9, 2013

ஒரு கல் ஒரு கண்ணாடி - அழகே அழகே

படம் : ஒரு கல் ஒரு கண்ணாடி (2012)
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள் : முகேஷ், மதுமிதா
பாடல்வரிகள் : நா. முத்துக்குமார்




அழகே அழகே அழகின் அழகே நீயடி
உன் அருகே அருகே அழகாய் தொலைந்தேன் நானடி
ஐந்தே நிமிடம் ஐந்தே நிமிடம் தானடி
என் ஆசை நெஞ்சில் பற்றிக்கொண்டது தீயடி
நான் என்ன என்னவோ கனவுகள் கண்டேன்
என்னை உன்னிடம் தந்திட வந்தேன்
வந்த வேகத்தில் தயக்கம் கொண்டேன்
நீ தூண்டில் காரனை தின்றிடும் மீனா
வேட்டையாளனை வென்றிடும் மானா
உன்னை நேசித்த காதலன் நானா

வா கனியே.. முக்கனியே தீயோடும் பனியே
வாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே
வா கனியே.. முக்கனியே தீயோடும் பனியே
உனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே
அழகே அழகே அழகின் அழகே நீயடி
உன் அருகே அருகே அழகாய் தொலைந்தேன் நானடி


சுடச்சுட நெருப்பென பார்த்தாய்
குளிர்ந்திட மறுபடி பார்த்தாய்
கண்கள் இரண்டும் காதல் சொல்லும் இருந்தும் நடித்தாய்
அடிக்கடி முள்ளென தைத்தாய்
ஆயினும் பூவென பூப்பாய்
இதயக்கதவை இரக்கம் கொண்டு எனக்காய் திறப்பாய்
இந்த காதல் என்பது ஒரு மழலை போன்றது
அது சிணுங்க சிணுங்கத்தான் கவனம் பிறக்கும்
உன்னை கெஞ்சி கேட்கிறேன்
என்னை கொஞ்ச கேட்கிறேன்
நீ கேட்க மறுக்கிறாய் தொடர்ந்து நடிக்கிறாய்
உனக்கும் எனக்கும் நடுவில் காதல் வலம் வர

கனியே முக்கனியே தீயோடும் பனியே
வாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே
வா கனியே முக்கனியே தீயோடும் பனியே
உனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே


பலப்பல கனவுகள் இருக்கு
அதை ஏன் சொல்லணும் உனக்கு.
மனசுவிட்டு பேச நீயும்.. நண்பனா எனக்கு
பார்த்ததும் பிடித்தது உனக்கு
பழகிட தோனணும் எனக்கு
கானல் நீரில் மீனைத்தேடி அலைவது எதற்கு

நீ கோயில் தேரடி மரக்கிளையும் நானடி
என்னை கடந்து போகையில் நொறுங்குது நெஞ்சம்

நீ காதல் கஜினியா பகல் கனவில் பவனியா
ஏன் துரத்தி வருகிறாய் நெருங்க நினைக்கிறாய்
உனக்கும் எனக்கும் எதற்கு காதல் வலம் வர
கனியே முக்கனியே தீயோடும் பனியே

வாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே
வா கனியே முக்கனியே தீயோடும் பனியே
உனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே

அழகே அழகே அழகின் அழகே நீயடி
உன் அருகே அருகே அழகாய் தொலைந்தேன் நானடி
ஐந்தே நிமிடம் ஐந்தே நிமிடம் தானடி
என் ஆசை நெஞ்சில் பற்றிக்கொண்டது தீயடி
நான் என்ன என்னவோ கனவுகள் கண்டேன்
என்னை உன்னிடம் தந்திட வந்தேன்
வந்த வேகத்தில் தயக்கம் கொண்டேன்
நீ தூண்டில் காரனை தின்றிடும் மீனா
வேட்டையாளனை வென்றிடும் மானா
உன்னை நேசித்த காதலன் நானா

வா கனியே.. முக்கனியே தீயோடும் பனியே
வாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே
வா கனியே.. முக்கனியே தீயோடும் பனியே
உனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே

வா கனியே.. முக்கனியே தீயோடும் பனியே
வாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே
வா கனியே.. முக்கனியே தீயோடும் பனியே
உனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே


Saturday, March 31, 2012

ஒரு கல் ஒரு கண்ணாடி - வேணாம் மச்சான்


படம் : ஒரு கல் ஒரு கண்ணாடி (2012)
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்: நரேஷ் அய்யர், வேல் முருகன்
பாடல் வரி: நா. முத்துகுமார்




(Right click & Save Link As)


வஞ்சரம் மீனு வவ்வாளு...கெடைச்சா கெளுத்தி வெராலு...
இருக்கு மீசை ஏராலு...இறங்கி கலக்கு கோபாலு...

வஞ்சரம் மீனு வவ்வாளு...கெடைச்சா கெளுத்தி வெராலு...
இருக்கு மீசை ஏராலு...இறங்கி கலக்கு கோபாலு...

வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுக காதலு
அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவாடரு

வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுக காதலு
அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவாட்ட‌ரு
கடல போல காதல் ஒரு சால்ட் வாட்ட‌ரு
அது கொஞ்சம் கரிக்கும் போதே நீ தூக்கி போட்டுடு...

மம்மி சொன்ன பொண்ண கட்டுனா டார்ச்ச‌ர் இல்லடா
நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டினா டவுசர் அவுருண்டா...
மம்மி சொன்ன பொண்ண கட்டுனா டார்ச்ச‌ர் இல்லடா
நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டினா டவுசர் அவுருண்டா...
கண்ண கலங்க வைக்கும் ஃபிகரு வேணான்டா...
நமக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும் நண்பன் போதுண்டா...

வஞ்சரம் மீனு வவ்வாளு...கெடைச்சா கெளுத்தி வெராலு...
இருக்கு மீசை ஏராலு...இறங்கி கலக்கு கோபாலு...

வஞ்சரம் மீனு வவ்வாளு...கெடைச்சா கெளுத்தி வெராலு...
இருக்கு மீசை ஏராலு...இறங்கி கலக்கு கோபாலு...

பைக்குல‌ தினமும் ஒண்ணா போனோம்...
பேக்குல‌ இப்போ அவள‌ காணோம்...
பீச்சுல சொகமா கடல போட்டோம்...
கடலுக்கும் இப்போ கண்ணீர் மூட்டும்...
பைக்குல‌ தினமும் ஒண்ணா போனோம்...
பேக்குல‌ இப்போ அவள‌ காணோம்...
பீச்சுல சொகமா கடல போட்டோம்...
கடலுக்கும் இப்போ கண்ணீர் மூட்டும்...

காதலிக்கும் போது அட கண்ணு தெரியாது...
உன் கண்ணு முழிச்சுக்கிட்டா அங்க காதல் கிடையாது...
அவ போனாளே போனா தண்ணீர விட்டு மீனா
நா காயம் பட்ட மைனா இப்போ பாடுறேன் கானா...

பிகரு சுகரு மாதிரி

ஜனக்கு ஜனக்கு வவ்வாலு

நட்பு தடுப்பு ஊசிடா

ஜனக்கு ஜானு கோபாலு

பிகரு சுகரு மாதிரி பசங்க ஒடம்ப‌ உருக்கிடும்...
நட்பு தடுப்பு ஊசிடா ஒடஞ்ச மனச தேத்திடும்...

வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுக காதலு
அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவாட்ட‌ரு
கடல போல காதல் ஒரு சால்ட் வாட்ட‌ரு
அது கொஞ்சம் கரிக்கும் போதே நீ தூக்கி போட்டுடு...

பாதியில் வந்த பொண்ண நம்பி
ஆதியில் வளர்ந்த நட்ப விட்டேன்...
தேதிய போல கிழிச்சிப்புட்டா
தேவதை அவளை நம்பி கெட்டேன்...

தோலு மட்டும் வெள்ள
உன்ன கவுட்துப்புட்டா மெல்ல
என்ன பண்ணி என்ன
அட அப்பவே நான் சொன்னேன்...
அவ போட்டாளே போட்டா
நல்ல திண்டுகல்லு பூட்டா
ஒரு சாவி கொண்டு வாடா
என்ன தொறந்து விடேண்டா...

கண்ணுல மைய்ய வெப்பாடா...
அதுல பொய்ய வெப்பாடா...
உதட்டில் சாயம் வெப்பாடா...
உனக்கு காயம் வெப்பாடா...
கண்ணுல மைய்ய வெப்பாடா...

அதுல பொய்யோ பொய்யையோ...

உதட்டில் சாயம் வெப்பாடா...

உனக்கு கையோ கையையோ...

வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுங்க காதலு
அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவாட்ட‌ரு
கடல போல காதல் ஒரு சால்ட் வாட்ட‌ரு
அது கொஞ்சம் கரிக்கும் போதே நீ தூக்கி போட்டுடு...

மம்மி சொன்ன பொண்ண கட்டுனா டார்ச்ச‌ர் இல்லடா
நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டினா டவுசர் அவுருண்டா...
மம்மி சொன்ன பொண்ண கட்டுனா டார்ச்ச‌ர் இல்லடா
நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டினா டவுசர் அவுருண்டா...
கண்ண கலங்க வைக்கும் ஃபிகரு வேணான்டா...
என‌க்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும் நண்பன் போதுண்டா...

ஒரு கல் ஒரு கண்ணாடி - அடடா ஒரு தேவதை


படம் : ஒரு கல் ஒரு கண்ணாடி (2012)
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்: கார்த்திக்
பாடல் வரி: நா. முத்துகுமார்





(Right click & Save  Link As)


அடடா ஒரு தேவதை வந்து போகுதே இந்த வழியில்
புதிதாய் இவள் தேகத்தை யார் நெய்ததோ பட்டு தறியில்
பெரிதாய் ஒரு பேரலை வந்து தாக்குதே இரு விழியில்
வலியா இது இன்பமா என்ன ஆகுமா இவள் யாரோ யாரோ
உயிரே....

உயிரே.... உயிரே...
உயிரே உயிரே எங்கோ பறக்க  வச்ச
அடி சொந்தம் பந்தம் உறவ மறக்க வச்ச
உயிரே உயிரே புதுசா பொறக்க வச்ச
அடி எனக்குள் நானே பேசி சிரிக்க வச்ச... வச்ச... வச்ச...

அடடா ஒரு தேவதை வந்து போகுதே இந்த வழியில்
புதிதாய் இவள் தேகத்தை யார் நெய்ததோ பட்டு தறியில்
பெரிதாய் ஒரு பேரலை வந்து தாக்குதே இரு விழியில்
வலியா இது இன்பமா என்ன ஆகுமா இவள் யாரோ யாரோ

உயிரே உயிரே எங்கோ பறக்க வச்ச வச்ச
அடி சொந்தம் பந்தம் உறவ மறக்க வச்ச
உயிரே உயிரே புதுசா பொறக்க வச்ச
அடி எனக்குள் நானே பேசி சிரிக்க வச்ச

இவள் யாரிவள் இந்திரன் மகளா
இந்த பூமியில் சந்திரன் நகலா
இந்த சந்திரன் வருவது பொதுவாய் பகலா
அலைபாய்ந்திடும் கூந்தலும் முகிலா
அதில் வீசிடும் வாசனை அகிலா
இவள் பார்பது ஆண்டவன் செயலா
யாரோ யாரோ இவள்
தீயாகவே வந்தாள் இவள்
திண்டாடவே செய்தாள்  இவள்
காற்றாகவே வந்தாள் இவள்
உன் சுவாசத்தில் சென்றாள் இவள்

உயிரே உயிரே எங்கோ பறக்க வச்ச வச்ச
அடி சொந்தம் பந்தம் உறவ மறக்க வச்ச
உயிரே உயிரே புதுசா பொறக்க வச்ச
அடி எனக்குள்  நானே பேசி சிரிக்க வச்ச

Popular Posts