Showing posts with label Namitha Pramod. Show all posts
Showing posts with label Namitha Pramod. Show all posts

Thursday, February 8, 2018

Nimir - Nenjil Maamazhai

ப‌டம்: நிமிர் (2018)
இசை: B. அஜனீஷ் லோக்நாத், தர்பூகா சிவா
பாடியவர்கள்: ஹரி சரண், ஸ்வேதா மோகன்
பாடல் வரிகள்: தாமரை

Image result for nimir mp3 free download






நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை
தந்து வானம் கூத்தாட 
கொஞ்சும் தாமரை கொஞ்சும் தாமரை
வந்து எங்கும் பூத்தாட

எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது
எட்டி நின்று எட்டி நின்று காய்வது 
கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது 
கண் மூடி கண் மூடி காதோரம் பாடுது

நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை
தந்து வானம் கூத்தாட 
கொஞ்சும் தாமரை கொஞ்சும் தாமரை
வந்து எங்கும் பூத்தாட


வானத்தில் எத்தனை நாள் பார்ப்பது 
அன்றாடம் வந்து பார்க்க ஏங்குது
வாராமல் போகும் நாட்கள் வீணே என 
வம்பாக சண்டை போட வாய்க்குது

சொல்லப் போனால்  என் நாட்களை
வண்ணம் பூசி தந்தவளும் நீதான் 
துள்ளல் இல்லா என் பார்வையில்
தூண்டில் மீனாய் வந்தவளும் நீதான்

எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது
எட்டி நின்று எட்டி நின்று காய்வது 
கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது 
கண் மூடி கண் மூடி காதோரம் பாடுது
நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை
தந்து வானம் கூத்தாட 



பாசாங்கு செய்ததெல்லாம் போதுமே
ராசாவை தேடி கண்கள் ஓடுமே
ரோசாப்பூ மாலை ரெண்டு வேண்டுமே 
பேசாமல் மாற்றிக் கொள்ள தோன்றுமே

பெண்கள் இல்லா என் வீட்டிலே 
பாதம் வைத்து நீயும் வர வேண்டும் 
தென்றல் இல்லா என் தோட்டத்தில்
உன்னால் தானே காற்று வரும் மீண்டும்

எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது
எட்டி நின்று எட்டி நின்று காய்வது 
கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது 
கண் மூடி கண் மூடி காதோரம் பாடுது

நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை
தந்து வானம் கூத்தாட 
கொஞ்சும் தாமரை கொஞ்சும் தாமரை
வந்து எங்கும் பூத்தாட

எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது
எட்டி நின்று எட்டி நின்று காய்வது 
கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது 
கண் மூடி கண் மூடி காதோரம் பாடுது

Popular Posts