Showing posts with label Madan Karky. Show all posts
Showing posts with label Madan Karky. Show all posts

Thursday, May 12, 2022

Iravin Nizhal - Maayava Thooyava

 படம் : இரவின் நிழல் (2022)

இசை : A.R.ரஹ்மான்

பாடியவர்கள் : ஸ்ரேயா கோஷல்

பாடல்வரிகள்: மதன் கார்க்கி




ஆஆஆ... ஆஆ... ஆ...ஆ......

ஆஆஆ... ஆஆ... ஆ...ஆ......

ஆஆ... ஆஆஆ... 

ஆ...... ஆ... 


மாயவா தூயவா மலர் சூட வா

மழையாகி எனில் வீழ வா

மாதவா யாதவா குழல் ஊதவா

இதழோடு இசையாக வா


உன் மார்பே என் மாகாணம்

உன் பார்வை என் பூங்கானம்

எந்தன் வாயில் தீந்தேன் ஊறுதே

என் நாவா... உன் நாவா... கண்ணா வா...


மாயவா தூயவா மலர் சூட வா

மழையாகி எனில் வீழ வா...



 ஆ... ஆ...ஆரா 

ஆஆஆ.... 

ஆஆஆஆநா... ஆநா...

ஆஆஆ... ஆஆஆ...


பூக்களை கோர்க்கின்ற சரங்களிலே

ஏக்கங்கள் கோர்திவள் காத்திருக்க

யாக்கையில் அணிந்திட வா...

ஆநிரை தூங்கிடும் இரவினிலே

அதிராமல் ஆடிட வா...

உதிராமல் சூடிட வா...


மாயவா தூயவா மலர் சூட வா

மழையாகி எனில் வீழ வா...

மாதவா யாதவா குழல் ஊதவா

இதழோடு இசையாக வா


உன் மார்பே என் மாகாணம்

உன் பார்வை என் பூங்கானம்

எந்தன் வாயில் தீந்தேன் ஊறுதே

என் நாவா... உன் நாவா... கண்ணா வா...


மாயவா தூயவா மலர் சூட வா

மழையாகி எனில் வீழ வா...

Thursday, July 29, 2021

Teddy - En Iniya Thanimaye

 படம்: டெடி (2020)

இசை: இமான்

பாடியவர்கள்: சித் ஸ்ரீராம்

பாடல்வரிகள்: மதன் கார்க்கி




என் இனிய தனிமையே...

என் இனிய தனிமையே...

என் இனிய தனிமையே........ஏஏ..ஏ..

என் இனிய தனிமையே....


புதிதான அதிகாலையோ

புகைசூடும் நெடுஞ்சாலையோ

உன்னோடு நான் நடந்தால்

எல்லாம் பேரழகு


மழை வீழும் இளமாலையோ

இசையில்லா இடைவேளையோ

என்னோடு நீ நடந்தால்

இன்பம் என் உலகு


உன்னோடு மட்டும்தான்

என் நேரம் எனது

உன்னோடு மட்டும்தான்

மெய் பேசும் மனது


மனிதரின் மொழி கேட்டு

கேட்டு இதயம் பழுதாய்

தமைதியில் தானே

ஆனேன் முழுமுழுதாய்


என் இனிய தனிமையே...

என் இனிய தனிமையே...

என் இனிய தனிமையே........ஏஏ..ஏ...

என் இனிய தனிமையே....



அலை மோதும் கரை மீதிலோ

மணல் பாதம் சுடும் போதிலோ

உன்னோடு நான் நடந்தால்

மண்ணே பூச்சிறகு


கரைகின்ற அடி வானமோ

குறையாத பெருந்தூரமோ

என்னோடு நீ நடந்தால்

இன்பம் என் உலகு


என் தாயின் கருவில்

என்னோடு பிறந்தாய்

என் வாழ்வின் முடிவில்

என்னோடு இருப்பாய்


உறவுகள் வந்து சேரும் 

நீங்கும் நீதான் நிலையாய்

அதற்கு உக்கொரு நன்றி

சொன்னேன் முதல் முறையாய்


என் இனிய தனிமையே...

என் இனிய தனிமையே...ஏஏ..ஏ...

என் இனிய தனிமையே...ஏஏ..ஏ...

என் இனிய தனிமையே....



இதுவரை கற்கா கலைகள் எல்லாம்

உன்னுடன் கற்கும் வேளையிலே

என்னுயிர் தோழி நீயென்பேன் நீயென்பேன்

இதுவரை காணா காட்சிகளை

உன்னுடன் காணும் வேளையிலே

எந்தன் காதல் நீயென்பேன் நீயென்பேன்


ஒரு சிலர் என்னை நெருங்க

என்னிடம் பேச தொடங்க

சிறு ஊடல் கொண்டு

நீங்கி போகின்றாய்


கவலைகள் என்னை வருத்த

உன்னிடம் என்னை துரத்த

உன் மடியை தந்து

தாயாய் ஆகின்றாய்


எனை துயிலென அணைத்திடு தனிமையே...

என் கனவிலும் தொடர்ந்திடு தனிமையே...

கண் விழிக்கையில் இருந்திடு தனிமையே...

தனிமையே...


என் இனிய தனிமையே...

என் இனிய தனிமையே...ஏஏ..ஏ...

என் இனிய தனிமையே...ஏஏ..ஏஏ...

என் இனிய தனிமையே....

என் இனிய தனிமையே...ஓஹ்ஹோ

என் இனிய தனிமையே... ஏஏ..ஏஏ...

என் இனிய தனிமையே...

Teddy - Nanbiye

 படம்: டெடி (2020)

இசை: D.இமான்

பாடியவர்கள்: அனிருத்

பாடல்வரிகள்: மதன் கார்க்கி




எந்தன் நண்பியே... நண்பியே...

எனை திறக்கும் அன்பியே...

எந்தன் நண்பியே... நண்பியே...

எனை இழுக்கும் இன்பியே...


பப்பப்ப... பப்ப பப்ப... ப...

பப்பப்ப... பப்ப பப்ப... ப...


எந்தன் முகம் காட்டும்

புன்னகைகள் தீட்டும்

மனதின் கண்ணாடி நீயே

என்னை என்னை போலே

ஏற்றுகொண்டதாலே

எதிரொலியாகிடுவாயே


கண்டதை பாடவும்

கண்மூடி ஆடவும்

என் துணை ஆக்கிட வந்தாயே

சண்டைகள் போடவும்

பின் வந்து கூடவும்

ஆயிரம் கரணம் தந்தாயே

வண்ணங்கள் நானே நீ தூரிகையே


எந்தன் நண்பியே... நண்பியே...

எனை திறக்கும் அன்பியே...

எந்தன் நண்பியே... நண்பியே...

எனை இழுக்கும் இன்பியே...


எந்தன் மனம் பார்க்க

சொல்வதெல்லாம் கேக்க

கிடைத்த ஓர் உயிர் துணை நீயே

நீயே...

என் சிரிப்பில் பாதி

என் துயரில் பாதி

பகிர்ந்து நீ அருந்துகிறாயே

அருந்துகிறாயே...


எல்லாமே பொய்யென

நீ மட்டும் மெய்யென

என் அச்சம் யாவையும் கொன்றாயே

கொன்றாயே...


நான் இங்கு உண்மையா

உன் கையில் பொம்மையா

யார் இந்த நான் என சொன்னாயே

செவ்வானம் நானே நீ அவந்திகையே


எந்தன் நண்பியே... நண்பியே...

எனை திறக்கும் அன்பியே...

எந்தன் நண்பியே... நண்பியே...

எனை இழுக்கும் இன்பியே...


இன்பியே... ஹோ ஹோ ஒ...

நண்பியே... ஹோ ஹோ ஒ...


மெய் நிகராட்டகள் ஆடிடும் போது

ஆயிரம் எதிரிகள் போர்களம் மீது

எந்தன் படையில் நீயும் இருந்தால்

அந்த வெற்றி எந்தன் காலடியில்


இணைய தொடரை இணைத்தே

மெய் காண்போமே

அழுதால் உடனே நீ துடைப்பாய்

மனதில் நினைத்து ஒரு சொல் 

சொல்லும்போதே

தொடங்கும் எதையும் நீ முடிப்பாய்


நீயும் எந்தன் தனிமையே

அதை விட இனிமையே

இதய சுவரில் இறைவன் 

வரையும் குறுநகையே


எந்தன் நண்பியே நண்பியே

நண்பியே...

எனை திறக்கும் அன்பியே

நண்பியே...

எந்தன் நண்பியே நண்பியே

நண்பியே...

எனை இழுக்கும் இன்பியே

இன்பியே.....


நண்பியே... நண்பியே...

நண்பியே... நண்பியே...

Teddy - Marandhaye

படம்: டெடி (2020)

இசை: D.இமான்

பாடியவர்கள்: ப்ரதீப் குமார், ஜோனிதா காந்தி

பாடல்வரிகள்: மதன் கார்க்கி




Download this MP3


ஹா..ஆஅஆஅ..ஆ...

ஹா..ஆஅஆஅ..ஆ...

ஹா..ஆஅஆஅ..ஆ...

ஹா..ஆஅஆஅ..ஆ...


மறந்தாயே மறந்தாயே

பெண்ணே என்னை ஏன் மறந்தாய்

கடந்தேதான் நடந்தாயே

யாரோ என்று ஏன் கடந்தாய்

நினைவுகள் யாவும் நீங்கி போனால்

நான் யார்? மறதியா அவதியா சகதியா

நிகழ்ந்தவை எல்லாம் பொய்யாய் ஆனால்

நீ யார்? ஜனனமா சலனமா மரணமா

தனியாய் நான் வாழ்ந்தேனே

வானாய் நீ ஆனாய்

உனில் ஏற பார்த்தேனே

காணாமல் போனாய்

யாரடி... யாரடி... நான் இனி யாரடி...

நான் இனி வாழ ஓர் காரணம் கூறடி


யாரடி யாரடி... பாவி நீ யாரடி...

ஓர் துளி ஞாபகம் ஊறுதா பாரடி


மறந்தாயே மறந்தாயே

பெண்ணே என்னை ஏன் மறந்தாய்

கடந்தேதான் நடந்தாயே

யாரோ என்று ஏன் கடந்தாய்



முகிலுமில்லை புயலுமில்லை மழைவருமா

இதயத்திலே இனம் புரியா கலவரமா

விதியுமில்லை உரமுமில்லை மரம் வருமா

நினைவுகளில் கிளை விரித்தே சுகம் தருமா

இதுவரை அறியா ஒருவனை விரும்பி

இதயம் இதயம் துடி துடித்திடுமா

தொலைவொரு பிறவி அறுபட்ட உறவு

பிறவியை கடந்துமே எனை தொடர்ந்திடுமா


ஜென்மம் உண்மை இல்லை உன் வேர் என்ன

காதல் கொண்டேன் உன்மேல் உன் பேர் என்ன

அணுவெல்லாம் அணுவெல்லாம் 

நினைவென நிறைந்தாய்


மறந்தாயே மறந்தாயே

பெண்ணே என்னை ஏன் மறந்தாய்


நிறைந்தாயே நிறைந்தாயே

நெஞ்சம் எல்லாம் நீ நிறைந்தாய்


தனிமையும் நானும்

மீண்டும் ஒன்றாய் ஆனோம்

மறுபடி சுருங்கிடும் உலகிலே


ஆ... சுரங்கத்தை போலே

என்னுள் போக போக

பெருகிடும் பெருகிடும் நினைவிலே


உனை காணா உலகத்தில்

எதுவும் மெய்யில்லை


உலகெல்லாம் பொய்

இந்த காதல் பொய் இல்லை


யாரடி...  ஹா...

யாரடி... ஹா...

நான் இனி யாரடி...  ஹா...

ஓர் துளி....  ஹா...

ஞாபகம்...  ஹா...

ஊறுதா பாரடி...  ஹாஆஆ...


யாரடா யாரடா... நீ என்னுள் யாரடா...

பேரலை போலே நீ பாய்கிறாய் பாரடா...


மறந்தாயே மறந்தாயே...


Saturday, June 15, 2019

Pakkiri - Engleesu Lovesu

படம் : பக்கிரி (2019)
இசை : அமித் திரிவேதி
பாடியவர்கள் : தனுஷ்
பாடல்வரிகள் : மதன் கார்க்கி

Related image



ஏ... காத்தே எதிர்காத்தே
உன் வாசங்கொஞ்சம் மாத்தேன்
ஏ... நேத்தே என் நேத்தே
உன் வாசல நீ சாத்தேன்
 
ஆத்து அல வீசத்தேன்
காத்து நிக்குறேன்
வார்த்த ஒண்ணு நீ எம்மேல வீச
இங்லீசு லவ்சுதேன்
இங்லீசு லவ்சுதேன்


பேசு நீ பேசுடி
சுத்தம் ஆவேனடி
அத்தம் கித்தமெல்லாம்
ஏ... வேணாடி
ஓ... ஆச ஓராசதேன்
கேக்க பேராசதேன்
வாழ்க்க பூராவுமே
நா ஒங்கூடத்தேன்
 
ஏ... புள்ள பரவால்ல
ஒரு அன்னந்தண்ணி வேணா
நீ வந்தாப் பரவால்ல
ஏ... மூச்சுக்காத்தும் வேணா
உன்னப் பாத்துக்கிருந்தா
சொர்கம் அதுதேன்
வார்த்த ஒண்ணு நீ எம்மேல வீச
இங்லீசு லவ்சுதேன்
இங்லீசு லவ்சுதேன்
இங்லீசு லவ்சுதேன்
இங்லீசு லவ்சுதேன்

Saturday, February 17, 2018

Ulaviravu - Thoorathu Kaadhal

ஆல்பம்: உலவிரவு (2018)
இசை: கார்த்திக்
பாடியவர்கள்: கார்த்திக்
பாடல் வரிகள்: ம‌தன் கார்க்கி


Image result for Ulaviravu




தூரத்து காதல் என் கோப்பை தேநீர் அல்ல
மின் முத்தம் ஏதும் உன் மெய் முத்தம் போலே அல்ல
நேரில் நீ நிற்பாயா? என் ஆசை எல்லாமே கேட்பாயா?
என் கை கோர்ப்பாயா?
ஒ... ஹோஹோ... காதலி... நீ என்னோடு வா உலவிரவு
ஒ... ஹோஹோ... காதலி... நீ என்னோடு வா உலவிரவு

காலத்தை கொஞ்சம் ஹே... பின்னோக்கி ஓட சொல்லு
வேகங்கள் வேண்டாம் ஹே... பெண்ணே நீ கொஞ்சம் நில்லு
என் கண்ணை பார்ப்பாயா? என் காதல் கோரிக்கை கேட்பாயா?
என் கை கோர்ப்பாயா?
ஒ... ஹோஹோ... காதலி நீ என்னோடு வா உலவிரவு
ஒ... ஹோஹோ... காதலி நீ என்னோடு வா உலவிரவு


பேருந்தில் ஏறி பெருந்தூரம் சென்று
தெரியாத ஊரில் நடப்போமே இன்று
நமக்கு பிடிக்கா கலைகள் ரசித்து
வேதியல், இயற்பியல், கணிதம் படித்து
திரியில் சுடர் ஆட...  ஒலி நாடா பாட
உன் விழியில் நானும்... என் வாழ்க்கையினை தேட
ஒ...ஒ...ஒ... காதலி நீ என்னோடு வா உலவிரவு
ஒ... ஹோஹோ... காதலி நீ என்னோடு வா உலவிரவு


கூடாரம் போட்டு குளிர் காய்ந்த பின்னே
விண்மீன்கள் எண்ணி துயில்வோம் வா பெண்ணே
கொட்டும் அருவியில் கட்டிக்கொண்டே குளிப்போம்
நீர் வாழை பிடித்து தீயில் வாட்டி சமைப்போம்
குறும் பார்வை வேண்டும்... குறும் செய்தி அல்ல
கைபேசி வீசி... நாம் கை வீசி செல்ல
ஒ... ஹோஹோ... காதலி நீ என்னோடு வா உலவிரவு
ம்ம்ம்.... காதலி நீ என்னோடு வா உலவிரவு

தூரத்து காதல் என் கோப்பை தேநீர் அல்ல
மின் முத்தம் ஏதும் உன் மெய் முத்தம் போலே அல்ல
நேரில் நீ நிற்பாயா? என் ஆசை எல்லாமே கேட்பாயா?
என் கை கோர்ப்பாயா? என் கை கோர்ப்பாயா? 
என் கை கோர்ப்பாயா? என் கை கோர்ப்பாயா?


Thursday, February 8, 2018

Maa - Ennuyire

ஆல்பம்: மா (2018)
இசை: சுந்தரமூர்த்தி KS
பாடியவர்கள்: பத்மப்ரியா ராகவன், சுந்தரமூர்த்தி KS
பாடல் வரிகள்: ம‌தன் கார்க்கி

Image result for maa tamil short film lyrics




நீ... யாரின் தவறோ?
நான்... யாரின் தவறோ?
விடை தேடிக்கொண்டே கரைகிறோம்
விடை காணும் முன்னே கலைந்து போகும்
கனவு தான் இவ்வாழ்க்கையோ?
கனவு தான் இவ்வாழ்க்கையோ?
கனவு தான் இவ்வாழ்க்கையோ?


என்னுயிரே... என் உயிரே...
என்னுயிரே...
என்னுயிரே... என் உயிரே...
என்னுயிரே...
என்னுயிரே... என் உயிரே...
என்னுயிரே...
என்னுயிரே... என் உயிரே...
என்னுயிரே...


உயிரே... உயிரே...
என் உயிரே... உயிரே...
என்னுயிரே... என் உயிரே... 
என்னுயிரே... என் உயிரே...
என்னுயிரே...

Koovai - Koova Koova

ஆல்பம்: கூவை (2018)
இசை: கார்த்திக்
பாடியவர்கள்: சின்னபொன்னு
பாடல் வரிகள்: ம‌தன் கார்க்கி


Image result for koovai mp3 album




ராவெல்லாம் தூக்கங்கெட்டு நீ கெடக்குதியோ?
உசுரெல்லாம் அத நெனச்சுட்டு இருக்குதியோ?
ராவெல்லாம் தூக்கங்கெட்டு நீ கெடக்குதியோ?
உசுரெல்லாம் அத நெனச்சுட்டு இருக்குதியோ?

கூவ... கூவ... முட்டாக்கூவ... ஆக்கங்கெட்ட 
கூவ... கூவ... முட்டாக்கூவ... ஆக்கங்கெட்ட 
கூ... கூ... கூவ... முட்டாக்கூவ... ஆக்கங்கெட்ட
கூவ... கூவ... முட்டாக்கூவ... 


ஒண்டி மனசச் சாத்தி ஒரு கொண்டிப் பூட்டப் பூட்டி
தொறவா தூக்கிப் போட்டு அட பொறவ தேடிப் போற
ஒண்டி மனசச் சாத்தி ஒரு கொண்டிப் பூட்டப் பூட்டி
தொறவா தூக்கிப் போட்டு அட பொறவ தேடிப் போற

கூவ... கூவ... முட்டாக்கூவ... ஆக்கங்கெட்ட 
கூவ... கூவ... முட்டாக்கூவ... ஆக்கங்கெட்ட 
கூ... கூ... கூவ... முட்டாக்கூவ... ஆக்கங்கெட்ட
கூவ... கூவ... முட்டாக்கூவ... 


நீ யாருன்னுதான் முட்டிக்கிட்டு கேட்டு நிக்க...
ஏன் வாழுதன்னு காரணம் நீ பாத்து நிக்க...
ரா... தீராமத்தான் வானமொன்னு இங்கிருக்கா?

நொஞ்ச கம்பளமா... நெஞ்சில் நொம்பலமா...
நாலஞ்சு நாளா நீ கெடக்க... கெடக்க...
ஒக்காந்து அழுதா மக்கித்தான் முடிவ
வா இன்னும் இருக்கு ந‌டக்க ஹே...

கூவ... கூவ... முட்டாக்கூவ... ஆக்கங்கெட்ட 
கூவ... கூவ... முட்டாக்கூவ... ஆக்கங்கெட்ட 
கூ... கூ... கூவ... முட்டாக்கூவ... ஆக்கங்கெட்ட
கூவ... கூவ... முட்டாக்கூவ... 

Wednesday, February 7, 2018

Tik Tik Tik - Kurumba (Father's Love)

ப‌டம்: டிக் டிக் டிக் (2018)
இசை: D. இமான்
பாடியவர்கள்: சித் ஸ்ரீராம்
பாடல் வரிகள்: ம‌தன் கார்க்கி


Image result for tik tik tik




குறும்பா... குறும்பா...
குறும்பா... குறும்பா...

உயரம் குறைந்தேன் உன்னால் 
மணலில் வரைந்தேன் உன்னால் 
கடலில் கரைந்தேன் உன்னாலே

சிறகாய் விரிந்தேன் உன்னால் 
தரையில் பறந்தேன் உன்னால் 
நிறங்கள் நிறைந்தேன் உன்னாலே

ஒற்றை கிரையோன் ரெண்டாய் 
உடைத்து கிறுக்கிடுவோம் 
உருளை சீவல் பையை 
வெடித்து நொறுக்கிடுவோம்... நொறுக்கிடுவோம்

குறும்பா... என் உலகே நீதான்டா 
குறும்பா... என் உயிரே நீதான்டா

குறும்பா... என் உலகே நீதான்டா 
குறும்பா... என் உயிரே நீதான்டா



விண்வெளி மீன்களில் எல்லாம்
உன் விழிதானே பார்ப்பேன்
வெண்ணிலா உந்தன் காலில் சேர்ப்பேன்

வெற்றிகள் ஆயிரம் வந்தால் 
புன்னகையோடே ஏற்பேன் 
உன்னிடம் மட்டும் தானே தோற்பேன்

ஆட்டம் போடும் போதெல்லாம் 
உலகே அழகாய் மாறும் 
வீட்டு பாடம் செய்தாலோ 
ரத்த அழுத்தம் ஏறும்

உந்தன் குறும்பு மரபணு 
எவ்வழி கொண்டாய் எனக்கு தெரியாதா

குறும்பா... என் உலகே நீதான்டா 
குறும்பா... என் உயிரே நீதான்டா

குறும்பா... என் உலகே நீதான்டா 
குறும்பா... என் உயிரே நீதான்டா

உளறல் மொழிகள் உன்னால் 
கார்ட்டூன் கனவும் உன்னால் 
கிறுக்காய் ஆனேன் உன்னாலே

எறும்போடெறும்பாய் சில நாள் 
பூனை நாயாய் சில நாள் 
மனிதன் ஆனேன் உன்னாலே

விந்தை என்று கையில் வந்தாயே 
என் மனம் குளிர 
தந்தை என்று பட்டம் தந்தாயே 
நான் தலை நிமிர.... தலை நிமிர...

குறும்பா... என் உலகே நீதான்டா 
குறும்பா... என் உயிரே நீதான்டா

குறும்பா... என் உதிரம் நீதான்டா 
குறும்பா... என் விடியல் நீதான்டா

Monday, April 25, 2016

Spirit Of Chennai - Manithan - Humanity Universal

ஆல்பம்: மனிதம் (Spirit of Chennai | Humanity Universal) 2016
இசை: C. கிரிநாத்
பாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம், சங்கர் மகாதேவன், ஹரிஹரன், அருணா சாய்ராம், சுஜாதா, விஜய் பிரகாஷ், கார்த்திக், மாணிக்க விநாயகம், S.P.சரண், சின்மயி,  ஹரிசரண், நரேஷ் ஐயர்,  ஸ்வேதா மோகன், தர்ஷணா, சுசீத்ரா, சக்தி கோபாலன், விஜய் கோபால், கோபால் ராவ், கானா பாலா, அந்தோணிதாசன், மரண கானா விஜி, தேவநாத் பாஸ்கரா, துர்வ், அக்‌ஷிதா,   ரா.பார்த்திபன், சியான் விக்ரம், சித்தார்த்,காக்கா முட்டை ரமேஷ் & கஷீரா, பாலாஜி வேணுகோபால்
பாடல் வரிகள்: மதன் கார்கி, ரோகேஷ், கானா பாலா









மக்கள் பொக்கிஷமாக காப்பாத்தின பல விஷயங்கள்
மழை வெள்ளம் அடித்து சென்றுவிட்டது
அதில் ஜாதி மதமும் ஒன்று
தயுவு செய்து யாரும்
அதை தேடி தந்துவிடாதீர்கள்

ஒரு நாள் புயலாய் வீசுமே
ஒன்னா சேர்ந்து எதிர்த்திடுவோம்

ஒரு நாள் அலைகள் சீறுமே
விழுந்தால் உடனே எழுந்திடுவோம்


ஒரு நாள் புயல்கள் தாக்குமே
எதிர்த்தே நாங்கள் பூத்திடுவோம்
ஒரு நாள் அலைகள் சீறுமே
இணைந்தே எம்மை காத்திடுவோம்

தன்னைபின் வைத்து இவ்வுரே தன் உறவுகள் என்று
என்னும் உணர்வே சென்னை
சாதி மதம் தாண்டி தெரு நாயை செடி கொடியை கூட
காக்கும் துணிவே சென்னை
என் சென்னை இது ஊரல்ல
எந்தன் மூச்சாகும்
என் சென்னை இது பேரல்ல
எந்தன் கொண்டாட்டம்
என் சென்னை இது ஊரல்ல
எந்தன் மூச்சாகும்
என் சென்னை இது பேரல்ல
எந்தன் கொண்டாட்டம்


அனாத ஆனமத்தா யாருமில்ல
டவுட்டு வருமுனு பேச்சேயில்ல
ஏடிம் மெஷினுக்குள்ளே காசே இல்ல
ஏழையா ஆனோமடா நிமிஷத்துல

ஐடி பில்டு சேவையை செய்ய
பேட்டி எடுத்த நியூஸ் சேனல் எந்த மொழின்னு தெரியல
யூத் கைஸ்ம் போலீஸ் பாயிசும் வீட்டுக்கு தான் போகல
நைட் பகலும் உழைச்சாங்க எங்களுக்கு மழையில

சீனாச்சு சீன் ஆச்சு
மச்சான் பக்காவா சரியாச்சு மக்களோட மனசாச்சு
கோளாச்சு ஏழாச்சு
இப்போ சாமிக்கும் பூமிக்கும் சாதி மதம் மறந்து போச்சுடா

குப்பத்துல கூவத்துல ஜனங்களதான் செப்டி பண்ண
பிஷ்சர்மெனு சோக்கு மாமு
வீட்டுக்குள்ள மாட்டிகினா புள்ளதாச்சி பொண்ணு ஒன்ன
காப்பாதின ஆர்மி டீமு

வந்த மழையால வளந்தது நேசம்
ஆனாலும் இங்கோ பல உயிர்களோ நாசம்
காக்க வந்த நல் உள்ளமெல்லாம்
மண்ணுக்குள்ள அத என்ன சொல்ல
மனம் சோகத்துல சொல்ல வார்த்தயில்ல


ஒரு நாள் புயலாய் வீசுமே
ஒன்னா சேர்ந்து எதிர்த்திடுவோம்

ஒரு நாள் புயலாய் வீசுமே
ஒன்னா சேர்ந்து எதிர்த்திடுவோம்
ஒரு நாள் அலையாய் சீறுமே
விழுந்தால் உடனே எழுந்திடுவோம்

தன்ன பின்ன வச்சி இந்த ஊரே என் சொந்தமென்னு
நினைக்கும் உணர்வே சென்னை
சாதி மதம் தாண்டி தெரு நாய செடி கொடிய கூட
காக்கும் மனசே சென்னை


காலர தூக்குடா தோழா
சென்னை நாமேடா
ஹய் பைய் போடு நீ தோழி
சென்னை நாமேதான்


மழை பெய்தால் மரம் வளரும்
இங்கு மழை பெய்து மனிதம் வளர்கிறது

ஒரு கார்கில், ஒரு பூகம்பம், 
ஒரு சுனாமி, ஒரு மழை வெள்ளம்
இதில் ஏதாவது ஒன்னு  வந்தா தான் 
நாம் ஒன்னு சேரணுமா

Popular Posts