படம்: டெடி (2020)
இசை: D.இமான்
பாடியவர்கள்: அனிருத்
பாடல்வரிகள்: மதன் கார்க்கி
எந்தன் நண்பியே... நண்பியே...
எனை திறக்கும் அன்பியே...
எந்தன் நண்பியே... நண்பியே...
எனை இழுக்கும் இன்பியே...
பப்பப்ப... பப்ப பப்ப... ப...
பப்பப்ப... பப்ப பப்ப... ப...
எந்தன் முகம் காட்டும்
புன்னகைகள் தீட்டும்
மனதின் கண்ணாடி நீயே
என்னை என்னை போலே
ஏற்றுகொண்டதாலே
எதிரொலியாகிடுவாயே
கண்டதை பாடவும்
கண்மூடி ஆடவும்
என் துணை ஆக்கிட வந்தாயே
சண்டைகள் போடவும்
பின் வந்து கூடவும்
ஆயிரம் கரணம் தந்தாயே
வண்ணங்கள் நானே நீ தூரிகையே
எந்தன் நண்பியே... நண்பியே...
எனை திறக்கும் அன்பியே...
எந்தன் நண்பியே... நண்பியே...
எனை இழுக்கும் இன்பியே...
எந்தன் மனம் பார்க்க
சொல்வதெல்லாம் கேக்க
கிடைத்த ஓர் உயிர் துணை நீயே
நீயே...
என் சிரிப்பில் பாதி
என் துயரில் பாதி
பகிர்ந்து நீ அருந்துகிறாயே
அருந்துகிறாயே...
எல்லாமே பொய்யென
நீ மட்டும் மெய்யென
என் அச்சம் யாவையும் கொன்றாயே
கொன்றாயே...
நான் இங்கு உண்மையா
உன் கையில் பொம்மையா
யார் இந்த நான் என சொன்னாயே
செவ்வானம் நானே நீ அவந்திகையே
எந்தன் நண்பியே... நண்பியே...
எனை திறக்கும் அன்பியே...
எந்தன் நண்பியே... நண்பியே...
எனை இழுக்கும் இன்பியே...
இன்பியே... ஹோ ஹோ ஒ...
நண்பியே... ஹோ ஹோ ஒ...
மெய் நிகராட்டகள் ஆடிடும் போது
ஆயிரம் எதிரிகள் போர்களம் மீது
எந்தன் படையில் நீயும் இருந்தால்
அந்த வெற்றி எந்தன் காலடியில்
இணைய தொடரை இணைத்தே
மெய் காண்போமே
அழுதால் உடனே நீ துடைப்பாய்
மனதில் நினைத்து ஒரு சொல்
சொல்லும்போதே
தொடங்கும் எதையும் நீ முடிப்பாய்
நீயும் எந்தன் தனிமையே
அதை விட இனிமையே
இதய சுவரில் இறைவன்
வரையும் குறுநகையே
எந்தன் நண்பியே நண்பியே
நண்பியே...
எனை திறக்கும் அன்பியே
நண்பியே...
எந்தன் நண்பியே நண்பியே
நண்பியே...
எனை இழுக்கும் இன்பியே
இன்பியே.....
நண்பியே... நண்பியே...
நண்பியே... நண்பியே...