Showing posts with label Karthick. Show all posts
Showing posts with label Karthick. Show all posts

Saturday, May 16, 2020

Aayiram Nilave Vaa - Devathai Ilam

படம்: ஆயிரம் நிலவே வா (1983)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: S.Pபாலசுப்ரமணியம்
பாடல்வரிகள்: வைரமுத்து




Aayiramnilavaevaa.png



தேவதை இளம் தேவி
உன்னைச் சுற்றும் ஆவி
காதலான கண்ணீர் காணவில்லையா
ஓ... நீயில்லாமல் நானா

தேவதை இளம் தேவி 
உன்னைச் சுற்றும் ஆவி
காதலான கண்ணீர் காணவில்லையா
ஓ... நீயில்லாமல் நானா


ஏரிக்கரை பூவெல்லாம் 
எந்தன் பெயர் சொல்லாதோ
பூ வசந்தமே நீ மறந்ததேன்
ஆற்று மணல் மேடெங்கும்
நான் வரைந்த கோலங்கள்
தேவமுல்லையே காணவில்லையே
காதல் சோதனை 
இரு கண்ணில் வேதனை
ஒரு வானம்பாடி தேகம் வாடி
பாடும் சோகம் கோடி

தேவதை இளம் தேவி
உன்னைச் சுற்றும் ஆவி
காதலான கண்ணீர் காணவில்லையா
ஓ... நீயில்லாமல் நானா


எந்தனது கல்லறையில்
வேறொருவன் தூங்குவதா
விதி என்பதா சதி என்பதா
சொந்தமுள்ள காதலியே
வற்றிவிட்ட காவிரியே
உந்தன் ஆவியை நீ வெறுப்பதா
இது கண்ணீர் ராத்திரி
என் கண்ணே ஆதரி
இவன் தேயும் தேதி கண்ணீர் ஜாதி
நீ தான் எந்தன் பாதி

தேவதை இளம் தேவி
உன்னைச் சுற்றும் ஆவி
காதலான கண்ணீர் காணவில்லையா
ஓ... நீயில்லாமல் நானா
ஓ... நீயில்லாமல் நானா

ஓ... நீயில்லாமல் நானா

Monday, November 26, 2018

Nadodi Thendral - Yelamalai Kaatukulle

ப‌டம் : நாடோடி தென்றல் (1992)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன்
பாடல்வரிகள் : இளையராஜா


Image result for Nadodi Thendral



ஏழமலை காட்டுக்குள்ள... ...
எட்டெடுக்கு கூட்டுக்குள்ள... ...
சோலகுயில் பாட்டு சத்தம் கேக்கவில்லையோ
தேடிவச்சு மூடிவச்சு நாடிவந்து தேதி வச்சு 
பாக்கவில்லையோ ஹோ... கேக்கவில்லையோ
சேக்கவில்லையோ ஹோ... தெய்வமில்லையோ
ஏழமலை காட்டுக்குள்ள... ...
எட்டெடுக்கு கூட்டுக்குள்ள... ...
சோலகுயில் பாட்டு சத்தம்
கேக்கவில்லையோ ஹோ... கேக்கவில்லையோ


மூச்சடக்கி கடலுக்குள்ள 
முங்கி முங்கி முத்து எடுத்தேன்... ...
முத்தெடுத்த மறுநிமிசம் 
பத்து நூறு முத்தம் கொடுத்தேன்... ...
இஷ்டப்பட்ட ஜாதிமுத்து 
எனக்குன்னு நெனச்சிருந்தேன்... ...
இன்னொருத்தன் கைகளிலே 
கண்டு மனம் துடிச்சிருந்தேன்... ...
அத்த‌ம வயசு புள்ள முத்துமணி கழுத்து புள்ள‌
முத்து மின்னுமோ ஹோ... விட்டு செல்லுமோ
ஒத்து வருமோ ஹோ... முத்தம் தருமோ

ஏழமலை காட்டுக்குள்ள... ...
எட்டெடுக்கு கூட்டுக்குள்ள... ...
சோலகுயில் பாட்டு சத்தம் 
கேக்கவில்லையோ ஹோ... கேக்கவில்லையோ


ஆசப்பட்டு நேசப்பட்டு 
வாங்கி வச்ச கூரப்பட்டு... ...
அங்க தொட்டு இங்க தொட்டு 
அழகா ஏத்தி கட்டு... ...
மணக்கும் குங்குமப்பொட்டு 
சிரிக்கும் செண்பக சிட்டு... ...
அணைச்சி மாமன கட்டு 
அடியே மல்லிக மொட்டு... ...
பாவப்பட்டு பாவப்பட்டு 
கெறங்குது மனசு கெட்டு
ஆச கிளியே ஹோ... அன்ன கிளியே
அள்ளி கொள்ளவா ஹோ... ஆச முல்லையே

ஏழமலை காட்டுக்குள்ள... ...
எட்டெடுக்கு கூட்டுக்குள்ள... ...
சோலகுயில் பாட்டு சத்தம் கேக்கவில்லையோ
தேடிவச்சு மூடிவச்சு நாடிவந்து தேதி வச்சு 
பாக்கவில்லையோ ஹோ... கேக்கவில்லையோ
சேக்கவில்லையோ ஹோ... தெய்வமில்லையோ
ஏழமலை காட்டுக்குள்ள... ...
எட்டெடுக்கு கூட்டுக்குள்ள... ...
சோலகுயில் பாட்டு சத்தம் 
கேக்கவில்லையோ ஹோ... கேக்கவில்லையோ


Nadodi Thendral - Oru Kanam

படம் : நாடோடி தென்றல் (1992)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : இளையராஜா, S.ஜானகி
பாடல்வரிகள் : இளையராஜா

Image result for Nadodi Thendral



ஓஓஓஓ... ஆஆஆஆ... 
ஓஓஓ... ஓஓ... ஓஓஓ...

ஒரு கணம் ஒரு யுகமாக ஏன் தோன்ற வேண்டுமோ
தினம் தினம் உனை எதிர்பார்த்து மனம் ஏங்க வேண்டுமோ

ஒரு கணம் ஒரு யுகமாக ஏன் தோன்ற வேண்டுமோ
தினம் தினம் உனை எதிர்பார்த்து மனம் ஏங்க வேண்டுமோ
தென்றலும் உனை பாடுதே வெண்மதி உனை தேடுதே
இது காதல் ராகமே புரியாத மோகமே
ஒரு கணம் ஒரு யுகமாக ஏன் தோன்ற வேண்டுமோ


வான் மீது விண்மீன்கள் வேடிக்கை பார்க்கின்றதே
உன் தூது வாராமல் நெஞ்சுக்குள் வேர்க்கின்றதே
நெஞ்சுக்குள் நீ போட்ட மூக்குத்தி மின்னல்களே
வஞ்சிக்குள் உன் காதல் எண்ணத்தின் பின்னல்களே
ஓஓ... ஓ... இது காதல் ராகமே புரியாத மோகமே

ஒரு கணம் ஒரு யுகமாக ஏன் தோன்ற வேண்டுமோ

வானமும் பூந்தென்றலும் வாழ்த்துதே மலர் தூவுதே
இது காதல் ராகமே புரியாத மோகமே


மேகத்தில் ஈரம் போல் கண்ணுக்குள் நீர் ஏனம்மா
பூமிக்குள் வைரம் போல் நெஞ்சத்தில் நீ தானம்மா
சோகங்கள் சொல்லாமல் ஓடட்டும் காதல் பெண்ணே
சொந்தங்கள் போகாமல் கூடட்டும் ஊடல் பெண்ணே
ஓஓ... ஓ... இது காதல் ராகமே புரியாத மோகமே

ஒரு கணம் ஒரு யுகமாக ஏன் தோன்ற வேண்டுமோ
தினம் தினம் உனை எதிர்பார்த்து மனம் ஏங்க வேண்டுமோ

வானமும் பூந்தென்றலும்  வாழ்த்துதே மலர் தூவுதே

இது காதல் ராகமே புரியாத மோகமே

ஒரு கணம் ஒரு யுகமாக ஏன் தோன்ற வேண்டுமோ

Nadodi Thendral - Sandhana Marbilae

படம் : நாடோடி தென்றல் (1992)
இசை : இளையராஜா
பாடியவர்கள்: மனோ, S.ஜானகி
பாடல்வரிகள் : இளையராஜா

Image result for Nadodi Thendral



சந்தன மார்பிலே குங்குமம் சேர்ந்ததே

ஓ மதி... ஓ மதி...

மங்கள நேரமே இங்கொரு யாகமே

ஓ மதி... ஓ மதி...

நாதங்கள் சாட்சி வேதங்கள் சாட்சி ஓ...

சந்தன மார்பிலே குங்குமம் சேர்ந்ததே

ஓ மதி... ஓ மதி...

மங்கள நேரமே இங்கொரு யாகமே

ஓ மதி... ஓ மதி...


பல உலகம் போகும் யாத்திரை
நில‌வுல‌கில் நேர்ந்ததே

கனவுலகில் விழுந்த ஓர் திரை
நினைவுல‌கில் விலகுதே

வேள்வி வேள்வி காம‌ தேவனே
தோல்வி தோல்வி காதல் போரிலே
வேள்வி வேள்வி காம‌ தேவனே
தோல்வி தோல்வி காதல் போரிலே

நாதங்கள் சாட்சி வேதங்கள் சாட்சி ஓ...

சந்தன மார்பிலே குங்குமம் சேர்ந்ததே

ஓ மதி... ஓ மதி...

மங்கள நேரமே இங்கொரு யாகமே

ஓ மதி... ஓ மதி...



அலைஅலையாய் காதல் சங்கொலி 
நடு இரவில் முழங்குதே

மணிமணியாய் நாத கிங்கிணி
புது கவிதை பொழியுதே

வேதம் வேதம் காதல் வேதமே
ஓது ஓது காம‌ தேவனே
வேதம் வேதம் காதல் வேதமே
ஓது ஓது காம‌ தேவனே

நாதங்கள் சாட்சி வேதங்கள் சாட்சி ஓ...

சந்தன மார்பிலே குங்குமம் சேர்ந்ததே

ஓ மதி... ஓ மதி...

மங்கள நேரமே இங்கொரு யாகமே

ஓ மதி... ஓ மதி...

நாதங்கள் சாட்சி வேதங்கள் சாட்சி ஓ...

சந்தன மார்பிலே குங்குமம் சேர்ந்ததே

ஓ மதி... ஓ மதி...

மங்கள நேரமே இங்கொரு யாகமே

ஓ மதி... ஓ மதி...

Nadodi Thendral - Maniyae Mani Kuyilae

ப‌டம் : நாடோடி தென்றல் (1992)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : மனோ, S.ஜானகி
பாடல்வரிகள் : இளையராஜா

Image result for Nadodi Thendral



மணியே மணிக்குயிலே 
மாலை இளங்கதிரழகே
கொடியே கொடிமலரே 
கொடியிடையின் நடையழகே
தொட்ட இடம் பூமணக்கும் 
துளிர்க்கரமோ தொட இனிக்கும்
பூமரப் பாவை நீயடி ‍‍ இங்கு
நான் பாடும் பாமரப்பாடல் கேளடி

ஓஓஓஓ... 
மணியே மணிக்குயிலே 
மாலை இளங்கதிரழகே

கொடியே கொடிமலரே 
கொடியிடையின் நடையழகே



பொன்னில் வடித்த சிலையே 
பிரம்மன் படைத்தான் உனையே
வண்ணமயில் போலவந்த பாவையே

எண்ண இனிக்கும் நிலையே 
இன்பம் கொடுக்கும் கலையே
உன்னை எண்ணி வாழும் எந்தன் ஆவியே

கண்ணிமையில் தூண்டிலிட்டு 
காதல்தனை தூண்டிவிட்டு
எண்ணி எண்ணி ஏங்கவைக்கும் ஏந்திழையே

பெண்ணிவளை ஆதரித்து 
பேசித்தொட்டுக் காதலித்து
இன்பம்கொண்ட காரணத்தால் தூங்கலையே

சொல்லிச் சொல்லி ஆசை வைத்தேன் 
துடியிடையில் பாசம் வைத்தேன்
பூமரப் பாவை நீயடி இங்கு 
நான் பாடும் பாமரப் பாடல் கேளடி

ஓஓஓஓ... 
மணியே மணிக்குயிலே 
மாலை இளங்கதிரழகே

கொடியே கொடிமலரே 
கொடியிடையின் நடையழகே

தொட்ட இடம் பூமணக்கும் 
துளிர்க்கரமோ தொட இனிக்கும்

பூமரப் பாவை நீயடி இங்கு 
நான் பாடும் பாமரப் பாடல் கேளடி



கண்ணிமைகளை வருத்தி
கனவுகளைத் துரத்தி
மென்மனதினால் முடித்த மூக்குத்தி

என்னுயிரிலே ஒருத்தி
கண்டபடி எனைத் துரத்தி
அம்மனவள் வாங்கிக்கொண்ட மூக்குத்தி

கோடிமணி ஓசைநெஞ்சில் 
கூடிவந்துதான் ஒலிக்க
ஓடிவந்து கேட்க வரும் தேவதைகள்

சூடமலர் மாலை கொண்டு 
தூபமிட்டு தூண்டிவிட்டு
கூடவிட்டு வாழ்த்த வரும் வானவர்கள்

அந்தி வரும் நேரமம்மா
ஆசை விளக்கேற்றுதம்மா

பூமரப் பாவை நீயடி இங்கு
நான் பாடும் பாமரப் பாடல் கேளடி

ஓஓஓஓ... 
மணியே மணிக்குயிலே 
மாலை இளங்கதிரழகே
மணியே மணிக்குயிலே 
மாலை இளங்கதிரழகே
தொட்ட இடம் பூமணக்கும் 
துளிர்க்கரமோ தொட இனிக்கும்

பூமரப் பாவை நீயடி இங்கு 
நான் பாடும் பாமரப்பாடல் கேளடி

ஓஓஓஓ...  நானன 
ஓஓஓஓ... நானன ன 

Nadodi Thendral - Yaarum Vilaiyaadum

படம் : நாடோடி தென்றல் (1992)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : மனோ, K.S.சித்ரா
பாடல்வரிகள் : இளையராஜா


Image result for Nadodi Thendral



யாரும் விளையாடும் தோட்டம்
தினம்தோறும் ஆட்டம் பாட்டம்
போட்டாலும் பொறுத்துக்கொண்டு

பொன்னு தரும் சாமி
இந்த மண்ணு நம்ம பூமி
பொன்னு தரும் சாமி
இந்த மண்ணு நம்ம பூமி

கோபங்கள் வேண்டாம் கொஞ்சம் ஆறப்போடு
ஆறோடும் ஊரை பார்த்து டேரா போடு

யாரும் விளையாடும் தோட்டம்
தினம்தோறும் ஆட்டம் பாட்டம்
போட்டாலும் பொறுத்துக்கொண்டு

பொன்னு தரும் சாமி
இந்த மண்ணு நம்ம பூமி
பொன்னு தரும் சாமி
இந்த மண்ணு நம்ம பூமி



கூடமும் மணி மாடமும் நல்ல வீடும் உண்டு
வேடவோ பள்ளு பாடவும் பள்ளிக்கூடம் உண்டு
பாசமும் நல்ல நேசமும் வந்து கூடும் இங்கு
பூசலும் சிறு ஏசலும் தினம்தோறும் உண்டு
அன்பில்லா ஊருக்குள்ளே இன்பம் இல்லை

ஓ... ஹோ... ஹோய்

வம்பில்லா வாழ்க்கை என்றால் துன்பம் இல்லை

ஓ... ஹோ... ஹோய்

கோபங்கள் வேண்டாம் கொஞ்சம் ஆறப்போடு
ஆறொடும் ஊரை பார்த்து டேரா போடு

ஆத்தி இது வாத்துக்கூட்டம்
ஆத்தி இது வாத்துக்கூட்டம்
பார்த்தா இவ ஆளு மட்டம்
போட்டா ஒரு ஆட்டம் பாட்டம்
சொல்லுறதைக் கேளு
நீ வேற ஊரை பாரு
நான் சொல்லுறதைக் கேளு
கொஞ்சம் வேற ஊரை பாரு
டேராவை பார்த்து போடு ஓலத்தோடு
வேறுரு போய்ச்சேரு நேரத்தோடு

ஆத்தி இது வாத்துக்கூட்டம்
பார்த்தா இவ ஆளு மட்டம்
போட்டா ஒரு ஆட்டம் பாட்டம்
சொல்லுறதை கேளு
நீ வேற ஊரை பாரு
நான் சொல்லுறதை கேளு
கொஞ்சம் வேற ஊரை பாரு



ஆவியாகி போன நீரோ மேகமாச்சு
மேக நீரும் கீழ வந்து ஏரியாச்சு
ஆறு என்ன ஏரி என்ன நீரு ஒண்ணு
வீடு என்ன காடு என்ன பூமி ஒண்ணு
கடலுக்குள் சேரும் தண்ணி உப்பாகுது

ஓ... ஹோ... ஹோய்

சிப்பிக்குள் கூடும் தண்ணி முத்தாகுது

ஓ... ஹோ... ஹோய்

சேராத தாமரைப்பூ தண்ணி போலே
மாறாத எங்கள் வாழ்வு வானம் போலே

யாரும் விளையாடும் தோட்டம்
தினம்தோறும் ஆட்டம் பாட்டம்
போட்டாலும் பொறுத்துக்கொண்டு

பொன்னு தரும் சாமி
இந்த மண்ணு நம்ம பூமி
பொன்னு தரும் சாமி
இந்த மண்ணு நம்ம பூமி

Monday, April 25, 2016

Spirit Of Chennai - Manithan - Humanity Universal

ஆல்பம்: மனிதம் (Spirit of Chennai | Humanity Universal) 2016
இசை: C. கிரிநாத்
பாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம், சங்கர் மகாதேவன், ஹரிஹரன், அருணா சாய்ராம், சுஜாதா, விஜய் பிரகாஷ், கார்த்திக், மாணிக்க விநாயகம், S.P.சரண், சின்மயி,  ஹரிசரண், நரேஷ் ஐயர்,  ஸ்வேதா மோகன், தர்ஷணா, சுசீத்ரா, சக்தி கோபாலன், விஜய் கோபால், கோபால் ராவ், கானா பாலா, அந்தோணிதாசன், மரண கானா விஜி, தேவநாத் பாஸ்கரா, துர்வ், அக்‌ஷிதா,   ரா.பார்த்திபன், சியான் விக்ரம், சித்தார்த்,காக்கா முட்டை ரமேஷ் & கஷீரா, பாலாஜி வேணுகோபால்
பாடல் வரிகள்: மதன் கார்கி, ரோகேஷ், கானா பாலா









மக்கள் பொக்கிஷமாக காப்பாத்தின பல விஷயங்கள்
மழை வெள்ளம் அடித்து சென்றுவிட்டது
அதில் ஜாதி மதமும் ஒன்று
தயுவு செய்து யாரும்
அதை தேடி தந்துவிடாதீர்கள்

ஒரு நாள் புயலாய் வீசுமே
ஒன்னா சேர்ந்து எதிர்த்திடுவோம்

ஒரு நாள் அலைகள் சீறுமே
விழுந்தால் உடனே எழுந்திடுவோம்


ஒரு நாள் புயல்கள் தாக்குமே
எதிர்த்தே நாங்கள் பூத்திடுவோம்
ஒரு நாள் அலைகள் சீறுமே
இணைந்தே எம்மை காத்திடுவோம்

தன்னைபின் வைத்து இவ்வுரே தன் உறவுகள் என்று
என்னும் உணர்வே சென்னை
சாதி மதம் தாண்டி தெரு நாயை செடி கொடியை கூட
காக்கும் துணிவே சென்னை
என் சென்னை இது ஊரல்ல
எந்தன் மூச்சாகும்
என் சென்னை இது பேரல்ல
எந்தன் கொண்டாட்டம்
என் சென்னை இது ஊரல்ல
எந்தன் மூச்சாகும்
என் சென்னை இது பேரல்ல
எந்தன் கொண்டாட்டம்


அனாத ஆனமத்தா யாருமில்ல
டவுட்டு வருமுனு பேச்சேயில்ல
ஏடிம் மெஷினுக்குள்ளே காசே இல்ல
ஏழையா ஆனோமடா நிமிஷத்துல

ஐடி பில்டு சேவையை செய்ய
பேட்டி எடுத்த நியூஸ் சேனல் எந்த மொழின்னு தெரியல
யூத் கைஸ்ம் போலீஸ் பாயிசும் வீட்டுக்கு தான் போகல
நைட் பகலும் உழைச்சாங்க எங்களுக்கு மழையில

சீனாச்சு சீன் ஆச்சு
மச்சான் பக்காவா சரியாச்சு மக்களோட மனசாச்சு
கோளாச்சு ஏழாச்சு
இப்போ சாமிக்கும் பூமிக்கும் சாதி மதம் மறந்து போச்சுடா

குப்பத்துல கூவத்துல ஜனங்களதான் செப்டி பண்ண
பிஷ்சர்மெனு சோக்கு மாமு
வீட்டுக்குள்ள மாட்டிகினா புள்ளதாச்சி பொண்ணு ஒன்ன
காப்பாதின ஆர்மி டீமு

வந்த மழையால வளந்தது நேசம்
ஆனாலும் இங்கோ பல உயிர்களோ நாசம்
காக்க வந்த நல் உள்ளமெல்லாம்
மண்ணுக்குள்ள அத என்ன சொல்ல
மனம் சோகத்துல சொல்ல வார்த்தயில்ல


ஒரு நாள் புயலாய் வீசுமே
ஒன்னா சேர்ந்து எதிர்த்திடுவோம்

ஒரு நாள் புயலாய் வீசுமே
ஒன்னா சேர்ந்து எதிர்த்திடுவோம்
ஒரு நாள் அலையாய் சீறுமே
விழுந்தால் உடனே எழுந்திடுவோம்

தன்ன பின்ன வச்சி இந்த ஊரே என் சொந்தமென்னு
நினைக்கும் உணர்வே சென்னை
சாதி மதம் தாண்டி தெரு நாய செடி கொடிய கூட
காக்கும் மனசே சென்னை


காலர தூக்குடா தோழா
சென்னை நாமேடா
ஹய் பைய் போடு நீ தோழி
சென்னை நாமேதான்


மழை பெய்தால் மரம் வளரும்
இங்கு மழை பெய்து மனிதம் வளர்கிறது

ஒரு கார்கில், ஒரு பூகம்பம், 
ஒரு சுனாமி, ஒரு மழை வெள்ளம்
இதில் ஏதாவது ஒன்னு  வந்தா தான் 
நாம் ஒன்னு சேரணுமா

Wednesday, July 24, 2013

Sandhitha Velai - Pen Kiliye Pen Kiliye

படம்: சந்தித்த வேளை (2000)
இசை: தேவா
பாடியவர்கள்: உன்னிகிருஷ்ணன், சுஜாதா
பாடல்வரிகள்: வைரமுத்து






தீப தீப தீப தீப தீப தீபபப... கார்த்திகை
தீப தீப தீப தீப தீப தீபபப...
தீப தீப தீப தீப தீப தீபபப...கார்த்திகை
தீப தீப தீப தீப தீப தீபபப...

பெண்கிளியே பெண்கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு
என்  பாட்டு வரி பிடித்திருந்தால்
உன் சிறகால் பச்சைக்கொடி காட்டு
பெண்கிளியே பெண்கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு
என்  பாட்டு வரி பிடித்திருந்தால்
உன் சிறகால் பச்சைக்கொடி காட்டு

வாய்மொழி எல்லாமே வாய்மை சொல்லாது
உள்மனம் பேசாமல் உண்மை தோன்றாது

வாய்மொழி எல்லாமே வாய்மை சொல்லாது
பெண்கிளி பொய் சொன்னால் ஆண்கிளி தூங்காது

ஆண்கிளியே ஆண்கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு
பாட்டு வரி புரிந்து கொண்டால்
உன் பல்லவியை நீ மாற்று


பெண் கண்களே நாடகம் ஆடுமா
பெண் நெஞ்சமே பூடகம் ஆகுமா

யார் சொல்லியும் பெண் மனம் கேட்க்குமா
கை தட்டினால் மொட்டுக்கள் பூக்குமா

விடை கேட்டேன் கேள்வி தந்தாய்
இது புதிரான புதிர் அல்லவா

கேள்விக்குள்ளே பதில் தேடு
அது சுவையான சுவை அல்லவா

உள்ளத்தின் வண்ணம் என்ன தெரியவில்லை
உடைத்து சொல்லும் வரை புரிவதில்லை

மூடாத பூவுக்குள் என்றும் தேன் இல்லை

பெண்கிளியே பெண்கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு
என்  பாட்டு வரி பிடித்திருந்தால்
உன் சிறகால் பச்சைக்கொடி காட்டு


என் நெஞ்சிலே ஆயிரம் ஓசைகள்
 உன்  காதிலே கேட்கவே இல்லையா

நீ ஆழி போல் அலைகளை ஏவினாய்
நான் கரையைப்போல் மௌனமாய் நேவினேன்

நெஞ்சில் பாசம் கண்ணில் வேஷம்
இது பெண் பூசும் அறிதாரமா

உண்மை காண வன்மை இல்லை
உங்கள் விழி என் மேல் பழி போடுமா

நிலவை பிழிவதற்கு வலிமை உண்டு
உன் நெஞ்சை புரிவதற்கு வலிமை இல்லை

கானல் நீர் தேடாதே அங்கே மீன் இல்லை
ஆண்கிளியே ஆண்கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு
பாட்டு வரி புரிந்து கொண்டால்
உன் பல்லவியை நீ மாற்று

பெண்கிளியே பெண்கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு
என்  பாட்டு வரி பிடித்திருந்தால்
உன் சிறகால் பச்சைக்கொடி காட்டு


Popular Posts