Showing posts with label Ranjitha. Show all posts
Showing posts with label Ranjitha. Show all posts

Tuesday, April 28, 2020

Chinna Vathiyar - En Kanmaniye

படம் : சின்ன வாத்தியார் (1995)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : S.P.பாலசுப்ரமணியன், ரோகிணி
பாடல்வரிகள் : வாலி


Chinna Vathiyar (1995) Tamil Movie mp3 Songs Download - Music By ...



டாக்சி... டாக்சி....
ஹேய் டாக்சி... டாக்சி....
ச் சே... சமயதுக்கு ஒரு டாக்சி கூட கெடைக்காதே

ஹேய் லுக் அரவிந்த் டொண்ட் டச் மீ

டாக்சி... டாக்சி....

கண்மணியே கண்மணியே 
சொல்லுவதை கேளு

ஷட்ட‌ப்... டொண்ட் டாக் டூ மீ
ஹேய்... டாக்சி டாக்சி டாக்சி

என் பொன்மணிக்கு கோபம் 
வந்தா மின்னும் பனிபூவு

எவளாவது ஏமாந்தவ காதுல பூ வெச்சிருப்பா
அவக்கிட்ட போய் சொல்லு

சிந்துதடி சிந்துதடி முத்து மழை பூவு

அடடா என் கவியரசர் கம்பா

உன் பொன்னுடம்புல் ஈரம் பட
வந்துவிடும் நோவு

ஆஆஹா... ஆடு நனையுதுனு 
ஓணாய் அழுததாம்

வீண் கோபம் ஏன்?

ஜஜஜ்ஜஜஜஜா

ஆண் பாவம் ஏன்?

ஹேய்... பப்பரப்பப்பா

ஐ லவ் யூ... ஐ லவ் யூ... 

ஓ... நோ
  
நீ எங்கு செல்ல கூடும் என்னை மீறி
என் கண்மணியே கண்மணியே 
சொல்லுவதை கேளு

கேட்க முடியாது போய் 
தொலையுரியா அய்யோ...

என் பொன்மணிக்கு கோபம் 
வந்தா மின்னும் பனிபூவு

அதே பழைய பல்லவியை 
திருப்பி சொல்லாத‌ போய்யா



எட்டி எட்டி சென்று வெட்டும் 
பார்வை கொண்டு
சிற்றிளம் பூவும் யாரை தேடுது

ஆங்... சிற்றிளம் பூ 
ஆட்டோ தேடுது  டாக்சி தேடுது
இன்னொரு ஜோடிக்கு ஆள கூட தேடும்

சொல் ஏன் இப்படி ஏன் அம்மணி நாடகம்

ஆமா...நாடகம்..திருநாவகரசி
சொல்ல வந்துடாரு திருநாவுகரசர்

நித்தம் நித்தம் என்னை சுற்றி சுற்றி வந்து
வட்டமே போட்ட மோகம் தீர்ந்ததா?

ஆமாம்... தீர்ந்து போச்சு 
எம்டியா சுத்திகிட்டு இருக்கேன்
அய்யா போய்ட்டு வாரீங்களா

ஒ... சிங்காரியே இங்கேனடி ஆத்திரம்

ஆத்திரமா சும்மா இருய்யா
வயிரு பத்திகிட்டு எரியுது
ஃபயர் இஞ்சின்...

நீ இல்லாமல் நானா என் பூங்கொடி

ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா

நான் இல்லாமல் நீயும் இங்கேதடி

இதோ இருக்கேனே 
நல்லதானே இருக்கேன் பாரு

பூந்தென்றலே என் செல்வமே
ரபப்பா... ரபபபா...
ஐ லவ் யூ... ஐ லவ் யூ...
நீ எங்கு செல்ல கூடும் என்னை மீறி
என் கண்மணியே கண்மணியே சொல்லுவதை கேளு

ஸ்டாப் இட் மேன்... 
கேட்டு கேட்டு புளிச்சு போச்சு... பா

என் பொன்மணிக்கு கோபம் 
வந்தா மின்னும் பனிபூவு

இந்த சினிமா டயலாக்கு 
எல்லாம் சொல்லி என்னை 
போர் அடிக்காதே போய்யா

வீண் கோபம் ஏன்?

வெவெவெவ்வவவவே

ஆண் பாவம் ஏன்?

பாவம்... மை ஃபூட்...

ஐ லவ் யூ... ஐ லவ் யூ...
நீ எங்கு செல்ல கூடும் என்னை மீறி
என் கண்மணியே கண்மணியே 
சொல்லுவதை கேளு

ஹலோ கேன் யூ கிவ் மீ லிஃப்ட்...  தாங் யூ

என் பொன்மணிக்கு கோபம் 
வந்தா மின்னும் பனிபூவு


சுட்டும் விழி சுடர் என்று 
ஒரு பொய் கொண்டு பாடினால் 
ஆஹா ஒஹோ என்கிறாய்

அது பாரதியார் பாட்டுயா
அவன் அவன் டூயுன‍‍ தான் திருடுறான்னா 
நீ பாட்டையே திருடுற...

பொய் பாட்டில் சொன்னால் 
கவி என்கிறாய் கண்மணி

அட பாவி... பாரதியார் 
பாட்டையே பொய்யுங்கிறியா

உன் மேல் ஆசை வைத்து நான் 
ஒரு பொய்யை சொன்னால்
சீறிடும் தென்றலாகி போகிறாய்

யெஸ் உனக்காக மையம் கொண்ட இந்த புயல்
இப்போ கரையை கடந்துருச்சு போ

மெய் பாட்டில் சொல்வேன் 
ஏற்றுகொள்வாய் கண்மணி

நீ பொய்யிலே பொற‌ந்து 
பொய்யிலே வளர்ந்தவன்
உன்கிட்ட ஏதுயா மெய்?

தேனை போன்ற காதல் வேம்பாகுமா?

ஆஹ் காதலாவது கத்திரிகாய்யாவது

தேவி என்னை சேர வீம்பாகுமா

டொண்ட் ஃபலோ மீ

என் நெஞ்சிலே உன் மந்திரம்
ரபப்பா... ரபபபா...
ஐ லவ் யூ... ஐ லவ் யூ...
நீ எங்கு செல்ல கூடும் என்னை மீறி
என் கண்மணியே கண்மணியே சொல்லுவதை கேளு

நீ அடிபட்டு ஹாஸ்பிட்டல இருக்கனு தெரிஞ்சதும்
எவ்வளவு துடிச்சு போய் ஓடி வந்தேன் தெரியுமா
பெரிய ஃபூட்பால் பிளேய‌ராம்
உனக்கு ஃபூட்பால் மட்டும்தான்ய்யா தெரியும்
எனக்கு என்ன‌ல்லாம் தெரியும் தெரியுமா
மியூசிக், டான்ஸ், ட்ராமா, செஸ், 
கேர‌ம், கபடி, பல்லாங்குழி, மங்காத்தா
எல்லாம் தெரியும்
இதெல்லாம் கத்துகிட்டு வந்தாலும்
ஒன்னை நான் கட்டிக்க மாட்டேன்
டாக்சி... டாக்சி....

Monday, November 26, 2018

Nadodi Thendral - Yelamalai Kaatukulle

ப‌டம் : நாடோடி தென்றல் (1992)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன்
பாடல்வரிகள் : இளையராஜா


Image result for Nadodi Thendral



ஏழமலை காட்டுக்குள்ள... ...
எட்டெடுக்கு கூட்டுக்குள்ள... ...
சோலகுயில் பாட்டு சத்தம் கேக்கவில்லையோ
தேடிவச்சு மூடிவச்சு நாடிவந்து தேதி வச்சு 
பாக்கவில்லையோ ஹோ... கேக்கவில்லையோ
சேக்கவில்லையோ ஹோ... தெய்வமில்லையோ
ஏழமலை காட்டுக்குள்ள... ...
எட்டெடுக்கு கூட்டுக்குள்ள... ...
சோலகுயில் பாட்டு சத்தம்
கேக்கவில்லையோ ஹோ... கேக்கவில்லையோ


மூச்சடக்கி கடலுக்குள்ள 
முங்கி முங்கி முத்து எடுத்தேன்... ...
முத்தெடுத்த மறுநிமிசம் 
பத்து நூறு முத்தம் கொடுத்தேன்... ...
இஷ்டப்பட்ட ஜாதிமுத்து 
எனக்குன்னு நெனச்சிருந்தேன்... ...
இன்னொருத்தன் கைகளிலே 
கண்டு மனம் துடிச்சிருந்தேன்... ...
அத்த‌ம வயசு புள்ள முத்துமணி கழுத்து புள்ள‌
முத்து மின்னுமோ ஹோ... விட்டு செல்லுமோ
ஒத்து வருமோ ஹோ... முத்தம் தருமோ

ஏழமலை காட்டுக்குள்ள... ...
எட்டெடுக்கு கூட்டுக்குள்ள... ...
சோலகுயில் பாட்டு சத்தம் 
கேக்கவில்லையோ ஹோ... கேக்கவில்லையோ


ஆசப்பட்டு நேசப்பட்டு 
வாங்கி வச்ச கூரப்பட்டு... ...
அங்க தொட்டு இங்க தொட்டு 
அழகா ஏத்தி கட்டு... ...
மணக்கும் குங்குமப்பொட்டு 
சிரிக்கும் செண்பக சிட்டு... ...
அணைச்சி மாமன கட்டு 
அடியே மல்லிக மொட்டு... ...
பாவப்பட்டு பாவப்பட்டு 
கெறங்குது மனசு கெட்டு
ஆச கிளியே ஹோ... அன்ன கிளியே
அள்ளி கொள்ளவா ஹோ... ஆச முல்லையே

ஏழமலை காட்டுக்குள்ள... ...
எட்டெடுக்கு கூட்டுக்குள்ள... ...
சோலகுயில் பாட்டு சத்தம் கேக்கவில்லையோ
தேடிவச்சு மூடிவச்சு நாடிவந்து தேதி வச்சு 
பாக்கவில்லையோ ஹோ... கேக்கவில்லையோ
சேக்கவில்லையோ ஹோ... தெய்வமில்லையோ
ஏழமலை காட்டுக்குள்ள... ...
எட்டெடுக்கு கூட்டுக்குள்ள... ...
சோலகுயில் பாட்டு சத்தம் 
கேக்கவில்லையோ ஹோ... கேக்கவில்லையோ


Nadodi Thendral - Oru Kanam

படம் : நாடோடி தென்றல் (1992)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : இளையராஜா, S.ஜானகி
பாடல்வரிகள் : இளையராஜா

Image result for Nadodi Thendral



ஓஓஓஓ... ஆஆஆஆ... 
ஓஓஓ... ஓஓ... ஓஓஓ...

ஒரு கணம் ஒரு யுகமாக ஏன் தோன்ற வேண்டுமோ
தினம் தினம் உனை எதிர்பார்த்து மனம் ஏங்க வேண்டுமோ

ஒரு கணம் ஒரு யுகமாக ஏன் தோன்ற வேண்டுமோ
தினம் தினம் உனை எதிர்பார்த்து மனம் ஏங்க வேண்டுமோ
தென்றலும் உனை பாடுதே வெண்மதி உனை தேடுதே
இது காதல் ராகமே புரியாத மோகமே
ஒரு கணம் ஒரு யுகமாக ஏன் தோன்ற வேண்டுமோ


வான் மீது விண்மீன்கள் வேடிக்கை பார்க்கின்றதே
உன் தூது வாராமல் நெஞ்சுக்குள் வேர்க்கின்றதே
நெஞ்சுக்குள் நீ போட்ட மூக்குத்தி மின்னல்களே
வஞ்சிக்குள் உன் காதல் எண்ணத்தின் பின்னல்களே
ஓஓ... ஓ... இது காதல் ராகமே புரியாத மோகமே

ஒரு கணம் ஒரு யுகமாக ஏன் தோன்ற வேண்டுமோ

வானமும் பூந்தென்றலும் வாழ்த்துதே மலர் தூவுதே
இது காதல் ராகமே புரியாத மோகமே


மேகத்தில் ஈரம் போல் கண்ணுக்குள் நீர் ஏனம்மா
பூமிக்குள் வைரம் போல் நெஞ்சத்தில் நீ தானம்மா
சோகங்கள் சொல்லாமல் ஓடட்டும் காதல் பெண்ணே
சொந்தங்கள் போகாமல் கூடட்டும் ஊடல் பெண்ணே
ஓஓ... ஓ... இது காதல் ராகமே புரியாத மோகமே

ஒரு கணம் ஒரு யுகமாக ஏன் தோன்ற வேண்டுமோ
தினம் தினம் உனை எதிர்பார்த்து மனம் ஏங்க வேண்டுமோ

வானமும் பூந்தென்றலும்  வாழ்த்துதே மலர் தூவுதே

இது காதல் ராகமே புரியாத மோகமே

ஒரு கணம் ஒரு யுகமாக ஏன் தோன்ற வேண்டுமோ

Nadodi Thendral - Sandhana Marbilae

படம் : நாடோடி தென்றல் (1992)
இசை : இளையராஜா
பாடியவர்கள்: மனோ, S.ஜானகி
பாடல்வரிகள் : இளையராஜா

Image result for Nadodi Thendral



சந்தன மார்பிலே குங்குமம் சேர்ந்ததே

ஓ மதி... ஓ மதி...

மங்கள நேரமே இங்கொரு யாகமே

ஓ மதி... ஓ மதி...

நாதங்கள் சாட்சி வேதங்கள் சாட்சி ஓ...

சந்தன மார்பிலே குங்குமம் சேர்ந்ததே

ஓ மதி... ஓ மதி...

மங்கள நேரமே இங்கொரு யாகமே

ஓ மதி... ஓ மதி...


பல உலகம் போகும் யாத்திரை
நில‌வுல‌கில் நேர்ந்ததே

கனவுலகில் விழுந்த ஓர் திரை
நினைவுல‌கில் விலகுதே

வேள்வி வேள்வி காம‌ தேவனே
தோல்வி தோல்வி காதல் போரிலே
வேள்வி வேள்வி காம‌ தேவனே
தோல்வி தோல்வி காதல் போரிலே

நாதங்கள் சாட்சி வேதங்கள் சாட்சி ஓ...

சந்தன மார்பிலே குங்குமம் சேர்ந்ததே

ஓ மதி... ஓ மதி...

மங்கள நேரமே இங்கொரு யாகமே

ஓ மதி... ஓ மதி...



அலைஅலையாய் காதல் சங்கொலி 
நடு இரவில் முழங்குதே

மணிமணியாய் நாத கிங்கிணி
புது கவிதை பொழியுதே

வேதம் வேதம் காதல் வேதமே
ஓது ஓது காம‌ தேவனே
வேதம் வேதம் காதல் வேதமே
ஓது ஓது காம‌ தேவனே

நாதங்கள் சாட்சி வேதங்கள் சாட்சி ஓ...

சந்தன மார்பிலே குங்குமம் சேர்ந்ததே

ஓ மதி... ஓ மதி...

மங்கள நேரமே இங்கொரு யாகமே

ஓ மதி... ஓ மதி...

நாதங்கள் சாட்சி வேதங்கள் சாட்சி ஓ...

சந்தன மார்பிலே குங்குமம் சேர்ந்ததே

ஓ மதி... ஓ மதி...

மங்கள நேரமே இங்கொரு யாகமே

ஓ மதி... ஓ மதி...

Nadodi Thendral - Maniyae Mani Kuyilae

ப‌டம் : நாடோடி தென்றல் (1992)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : மனோ, S.ஜானகி
பாடல்வரிகள் : இளையராஜா

Image result for Nadodi Thendral



மணியே மணிக்குயிலே 
மாலை இளங்கதிரழகே
கொடியே கொடிமலரே 
கொடியிடையின் நடையழகே
தொட்ட இடம் பூமணக்கும் 
துளிர்க்கரமோ தொட இனிக்கும்
பூமரப் பாவை நீயடி ‍‍ இங்கு
நான் பாடும் பாமரப்பாடல் கேளடி

ஓஓஓஓ... 
மணியே மணிக்குயிலே 
மாலை இளங்கதிரழகே

கொடியே கொடிமலரே 
கொடியிடையின் நடையழகே



பொன்னில் வடித்த சிலையே 
பிரம்மன் படைத்தான் உனையே
வண்ணமயில் போலவந்த பாவையே

எண்ண இனிக்கும் நிலையே 
இன்பம் கொடுக்கும் கலையே
உன்னை எண்ணி வாழும் எந்தன் ஆவியே

கண்ணிமையில் தூண்டிலிட்டு 
காதல்தனை தூண்டிவிட்டு
எண்ணி எண்ணி ஏங்கவைக்கும் ஏந்திழையே

பெண்ணிவளை ஆதரித்து 
பேசித்தொட்டுக் காதலித்து
இன்பம்கொண்ட காரணத்தால் தூங்கலையே

சொல்லிச் சொல்லி ஆசை வைத்தேன் 
துடியிடையில் பாசம் வைத்தேன்
பூமரப் பாவை நீயடி இங்கு 
நான் பாடும் பாமரப் பாடல் கேளடி

ஓஓஓஓ... 
மணியே மணிக்குயிலே 
மாலை இளங்கதிரழகே

கொடியே கொடிமலரே 
கொடியிடையின் நடையழகே

தொட்ட இடம் பூமணக்கும் 
துளிர்க்கரமோ தொட இனிக்கும்

பூமரப் பாவை நீயடி இங்கு 
நான் பாடும் பாமரப் பாடல் கேளடி



கண்ணிமைகளை வருத்தி
கனவுகளைத் துரத்தி
மென்மனதினால் முடித்த மூக்குத்தி

என்னுயிரிலே ஒருத்தி
கண்டபடி எனைத் துரத்தி
அம்மனவள் வாங்கிக்கொண்ட மூக்குத்தி

கோடிமணி ஓசைநெஞ்சில் 
கூடிவந்துதான் ஒலிக்க
ஓடிவந்து கேட்க வரும் தேவதைகள்

சூடமலர் மாலை கொண்டு 
தூபமிட்டு தூண்டிவிட்டு
கூடவிட்டு வாழ்த்த வரும் வானவர்கள்

அந்தி வரும் நேரமம்மா
ஆசை விளக்கேற்றுதம்மா

பூமரப் பாவை நீயடி இங்கு
நான் பாடும் பாமரப் பாடல் கேளடி

ஓஓஓஓ... 
மணியே மணிக்குயிலே 
மாலை இளங்கதிரழகே
மணியே மணிக்குயிலே 
மாலை இளங்கதிரழகே
தொட்ட இடம் பூமணக்கும் 
துளிர்க்கரமோ தொட இனிக்கும்

பூமரப் பாவை நீயடி இங்கு 
நான் பாடும் பாமரப்பாடல் கேளடி

ஓஓஓஓ...  நானன 
ஓஓஓஓ... நானன ன 

Nadodi Thendral - Yaarum Vilaiyaadum

படம் : நாடோடி தென்றல் (1992)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : மனோ, K.S.சித்ரா
பாடல்வரிகள் : இளையராஜா


Image result for Nadodi Thendral



யாரும் விளையாடும் தோட்டம்
தினம்தோறும் ஆட்டம் பாட்டம்
போட்டாலும் பொறுத்துக்கொண்டு

பொன்னு தரும் சாமி
இந்த மண்ணு நம்ம பூமி
பொன்னு தரும் சாமி
இந்த மண்ணு நம்ம பூமி

கோபங்கள் வேண்டாம் கொஞ்சம் ஆறப்போடு
ஆறோடும் ஊரை பார்த்து டேரா போடு

யாரும் விளையாடும் தோட்டம்
தினம்தோறும் ஆட்டம் பாட்டம்
போட்டாலும் பொறுத்துக்கொண்டு

பொன்னு தரும் சாமி
இந்த மண்ணு நம்ம பூமி
பொன்னு தரும் சாமி
இந்த மண்ணு நம்ம பூமி



கூடமும் மணி மாடமும் நல்ல வீடும் உண்டு
வேடவோ பள்ளு பாடவும் பள்ளிக்கூடம் உண்டு
பாசமும் நல்ல நேசமும் வந்து கூடும் இங்கு
பூசலும் சிறு ஏசலும் தினம்தோறும் உண்டு
அன்பில்லா ஊருக்குள்ளே இன்பம் இல்லை

ஓ... ஹோ... ஹோய்

வம்பில்லா வாழ்க்கை என்றால் துன்பம் இல்லை

ஓ... ஹோ... ஹோய்

கோபங்கள் வேண்டாம் கொஞ்சம் ஆறப்போடு
ஆறொடும் ஊரை பார்த்து டேரா போடு

ஆத்தி இது வாத்துக்கூட்டம்
ஆத்தி இது வாத்துக்கூட்டம்
பார்த்தா இவ ஆளு மட்டம்
போட்டா ஒரு ஆட்டம் பாட்டம்
சொல்லுறதைக் கேளு
நீ வேற ஊரை பாரு
நான் சொல்லுறதைக் கேளு
கொஞ்சம் வேற ஊரை பாரு
டேராவை பார்த்து போடு ஓலத்தோடு
வேறுரு போய்ச்சேரு நேரத்தோடு

ஆத்தி இது வாத்துக்கூட்டம்
பார்த்தா இவ ஆளு மட்டம்
போட்டா ஒரு ஆட்டம் பாட்டம்
சொல்லுறதை கேளு
நீ வேற ஊரை பாரு
நான் சொல்லுறதை கேளு
கொஞ்சம் வேற ஊரை பாரு



ஆவியாகி போன நீரோ மேகமாச்சு
மேக நீரும் கீழ வந்து ஏரியாச்சு
ஆறு என்ன ஏரி என்ன நீரு ஒண்ணு
வீடு என்ன காடு என்ன பூமி ஒண்ணு
கடலுக்குள் சேரும் தண்ணி உப்பாகுது

ஓ... ஹோ... ஹோய்

சிப்பிக்குள் கூடும் தண்ணி முத்தாகுது

ஓ... ஹோ... ஹோய்

சேராத தாமரைப்பூ தண்ணி போலே
மாறாத எங்கள் வாழ்வு வானம் போலே

யாரும் விளையாடும் தோட்டம்
தினம்தோறும் ஆட்டம் பாட்டம்
போட்டாலும் பொறுத்துக்கொண்டு

பொன்னு தரும் சாமி
இந்த மண்ணு நம்ம பூமி
பொன்னு தரும் சாமி
இந்த மண்ணு நம்ம பூமி

Popular Posts