Showing posts with label Sulochana. Show all posts
Showing posts with label Sulochana. Show all posts

Saturday, May 16, 2020

Aayiram Nilave Vaa - Devathai Ilam

படம்: ஆயிரம் நிலவே வா (1983)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: S.Pபாலசுப்ரமணியம்
பாடல்வரிகள்: வைரமுத்து




Aayiramnilavaevaa.png



தேவதை இளம் தேவி
உன்னைச் சுற்றும் ஆவி
காதலான கண்ணீர் காணவில்லையா
ஓ... நீயில்லாமல் நானா

தேவதை இளம் தேவி 
உன்னைச் சுற்றும் ஆவி
காதலான கண்ணீர் காணவில்லையா
ஓ... நீயில்லாமல் நானா


ஏரிக்கரை பூவெல்லாம் 
எந்தன் பெயர் சொல்லாதோ
பூ வசந்தமே நீ மறந்ததேன்
ஆற்று மணல் மேடெங்கும்
நான் வரைந்த கோலங்கள்
தேவமுல்லையே காணவில்லையே
காதல் சோதனை 
இரு கண்ணில் வேதனை
ஒரு வானம்பாடி தேகம் வாடி
பாடும் சோகம் கோடி

தேவதை இளம் தேவி
உன்னைச் சுற்றும் ஆவி
காதலான கண்ணீர் காணவில்லையா
ஓ... நீயில்லாமல் நானா


எந்தனது கல்லறையில்
வேறொருவன் தூங்குவதா
விதி என்பதா சதி என்பதா
சொந்தமுள்ள காதலியே
வற்றிவிட்ட காவிரியே
உந்தன் ஆவியை நீ வெறுப்பதா
இது கண்ணீர் ராத்திரி
என் கண்ணே ஆதரி
இவன் தேயும் தேதி கண்ணீர் ஜாதி
நீ தான் எந்தன் பாதி

தேவதை இளம் தேவி
உன்னைச் சுற்றும் ஆவி
காதலான கண்ணீர் காணவில்லையா
ஓ... நீயில்லாமல் நானா
ஓ... நீயில்லாமல் நானா

ஓ... நீயில்லாமல் நானா

Wednesday, July 24, 2013

Thooral Ninnu Pochu - Bhoopalam Isaikkum

படம்: தூறல் நின்னு போச்சு (1982)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: K.J.யேசுதாஸ், உமா ரமணன்
பாடல் வரிகள்: முத்துலிங்கம்

Image result for Thooral Ninnu Pochchu



பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்

பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே

பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்

இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்


மாலை அந்திமாலை இந்த வேளை மோகமே

மாலை அந்திமாலை இந்த வேளை மோகமே

நாயகன் ஜாடை நூதனமே

நாணமே பெண்ணின் சீதனமே

மேகமழை நீராட தோகை மயில் வாராதோ


தித்திக்கும் இதழ் முத்தங்கள் அது... நநநநநநந


பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்

இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்


பூவை எந்தன் சேவை உந்தன் தேவை அல்லவோ

பூவை எந்தன் சேவை உந்தன் தேவை அல்லவோ

மன்மதன் கோயில் தோரணமே

மார்கழி திங்கள் பூமுகமே

நாளும் இனி சங்கீதம்

பாடும் இவள் பூந்தேகம்

அம்மம்மா அந்த சொர்க்கத்தில் சுகம்... நநநநநநந


பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்

இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே

பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்


Tuesday, July 2, 2013

Thooral Ninnu Pochu - En Soga Kathaya

படம்: தூறல் நின்னு போச்சு (1982)
இசை: இளையராஜா
பாடியவர்: மலேசியா வாசுதேவன்
பாடல்வரிகள்: கங்கைஅமரன்


Image result for Thooral Ninnu Pochchu
பங்கஜ வள்ளி அம்புஜனே ஸ்ரீ
பங்கஜ வள்ளி அம்புஜனே ஸ்ரீ
பார்வதி தாயே பணிந்தேன் நானே
பங்கஜ வள்ளி அம்புஜனே ஸ்ரீ


மன்னாதி மன்னனை எல்லாம் பாத்தவன் நான்
அந்த மதுரை வீரனையே எதிர்த்தவன் நான்
அப்பேற்பட்ட என்ன பஞ்சாயத்துல நிறுத்திட்டானுகளே
படுபாவி பசங்க

ஆமாம்...

என் அருமை என்ன பெருமை என்ன  அந்தஸ்தென்ன

ஆமாம்...

என் குஸ்தி என்ன பஸ்கி என்ன தண்டால் என்ன

ஆமாம்...

இத நான் எங்க சொல்வேன் என்ன செய்வேன்
மாப்ள இதுக்கு மேல நீயே பாடுரா

அட உன் கதை எனக்கு எதுக்கு மாமா
என் சோக கதைய கேளு தாய்க்குலமே

ஆமா தாய்க்குலமே

நம்ம தாய்க்குலமே

நம்ம தாய்க்குலமே

அத கேட்டாக்க தாங்காதம்மா உங்க மனமே

ஆமா உங்க மனமே

ஆமா உங்க மனமே
இந்த ஊரு பொண்ண நம்பி எம்மனச தொறந்து வச்சேன்
சொந்த ஊரு சாதி சனம் அத்தனையும் மறந்து வந்தேன்
என் சோக கதைய கேளு தாய்க்குலமே

ஆமா தாய்க்குலமே

நம்ம தாய்க்குலமே


ஆத்தங்கரை தோப்புக்குள்ள ஓடி விளையான்டதும்
யாருமில்லா சமயத்துல ஜாடையில சிரிச்சதும்
தோட்டத்துல வரப்புக்குள்ள தொட்டு தொட்டு புடிச்சதும்
தூண்டில் போட்டு மீனை சுட்டு ரெண்டு பேரும் கடிச்சதும்

அத்தனையும் மறந்துபுட்டு இவன் நெஞ்ச வதைக்கிறா
அப்பனோட பேச்ச மட்டும் பெருசாக நினைக்குறா
ஆசைப்பட்ட மாப்பிள்ளையோ அம்போன்னு முழிக்குறான்

ஆசைப்பட்ட மாப்பிள்ளையோ அம்போன்னு முழிக்குறான்

என் சோக கதைய கேளு தாய்க்குலமே

ஆமா தாய்க்குலமே

நம்ம தாய்க்குலமே...

நம்ம தாய்க்குலமே

அத கேட்டாக்க தாங்காதம்மா உங்க மனமே

ஆமா உங்க மனமே

ஆமா உங்க மனமே



ஆசை வச்ச ஆம்பிளை நான் ஆண்டியா அலையுறேன்
அல்லும்பகல் உன்ன எண்ணி தெருவுல திரியுறேன்
நேத்துவரை நடந்ததெல்லாம் தெய்வம் செஞ்ச சோதனை
நீ மட்டும் மனசு வச்சா தீந்திவிடும் வேதனை

நான் மட்டும் இல்லையினா சன்யாசம் வாங்கிருப்பான்
காசி முதல் ராமேஸ்வரம் காவி கட்டி போயிருப்பான்
மங்களத்த பெத்தவனே உம்மனச மாத்திக்கடா

மங்களத்த பெத்தவனே உம்மனச மாத்திக்கடா

என் சோக கதைய கேளு தாய்க்குலமே

ஆமா தாய்க்குலமே

நம்ம தாய்க்குலமே

நம்ம தாய்க்குலமே

அத கேட்டாக்க தாங்காதம்மா உங்க மனமே

ஆமா உங்க மனமே

ஆமா உங்க மனமே
இந்த ஊரு பொண்ண நம்பி எம்மனச தொறந்து வச்சேன்
சொந்த ஊரு சாதி சனம் அத்தனையும் மறந்து வந்தேன்

என் சோக கதைய கேளு தாய்க்குலமே
ஆமா தாய்க்குலமே
நம்ம தாய்க்குலமே
அத கேட்டாக்க தாங்காதம்மா உங்க மனமே
ஆமா உங்க மனமே
ஆமா உங்க மனமே


Thooral Ninnu Pochchu - Yerikara Poongatre

படம்: தூறல் நின்னு போச்சு (1982)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: K.J.யேசுதாஸ்
பாடல்வரிகள்: சிதம்பரநாதன்



Image result for Thooral Ninnu Pochchu



ஏரிக்கரை பூங்காற்றே
நீ போற வழி தென்கிழக்கோ
தென்கிழக்கு வாசமல்லி
என்னைத் தேடி வர தூது சொல்லு


ஏரிக்கரை பூங்காற்றே

நீ போற வழி தென்கிழக்கோ
தென்கிழக்கு வாசமல்லி
என்னைத் தேடி வர தூது சொல்லு
ஏரிக்கரை பூங்காற்றே



பாதமலர் நோகுமுன்னு

நடக்கும் பாதைவழி பூவிரிச்சேன் மயிலே
பாதமலர் நோகுமுன்னு
நடக்கும் பாதைவழி பூவிரிச்சேன் மயிலே
ஓடம் போல் ஆடுதே மனசு
கூடித் தான் போனதே வயசு
காலத்தின் கோலத்தால் நெஞ்சம் வாடுது
அந்த பொன்னான நினைவுகள் கண்ணீரில் கரையுது

ஏரிக்கரை பூங்காற்றே
நீ போற வழி தென்கிழக்கோ
தென்கிழக்கு வாசமல்லி
என்னைத் தேடி வர தூது சொல்லு


ஓடிச்செல்லும் வான்மேகம்

நிலவ மூடி கொள்ள பார்க்குதடி அடியே
ஓடிச்செல்லும் வான்மேகம்

நிலவ மூடி கொள்ள பார்க்குதடி அடியே
சாமத்தில் பாடுறேன் தனியா
ராகத்தில் சேரனும் துணையா
நேரங்கள் கூடினால் மாலை சூட்டுவேன்
அந்த ராசாங்கம் வரும்வரை ரோசாவே காத்திரு


ஏரிக்கரை பூங்காற்றே

நீ போற வழி தென்கிழக்கோ
தென்கிழக்கு வாசமல்லி
என்னைத் தேடி வர தூது சொல்லு
ஏரிக்கரை பூங்காற்றே
நீ போற வழி தென்கிழக்கோ
தென்கிழக்கு வாசமல்லி


Sunday, January 20, 2013

Indru Nee Nalai Naan - Mottu Vitta Mullai Kodi

படம் : இன்று நீ நாளை நான் (1983)
இசை : இளையராஜா
பாடகர்கள் : S. ஜானகி, S.P.சைலஜா
பாடல்வரிகள் :  வைரமுத்து

Image result for Indru Nee Naalai Naan




மொட்டு விட்ட முல்ல கொடி
மச்சான் தொட்ட மஞ்ச கிளி

மொட்டு விட்ட முல்ல கொடி

மச்சான் தொட்ட மஞ்ச கிளி வெட்க பட்டு சொக்கி நிக்குது
இந்த அல்லி தண்டு என்ன கண்டு தண்ணிகுள்ள விக்கி நிக்குது
வள்ளி பொண்ணே நானிருக்கேன் அச்சம் என்ன உனக்கு
அந்த நாளை நெஞ்சில் வச்சு எண்ணி சொல்லு கணக்கு

மொட்டு விட்ட முல்ல கொடி

மச்சான் தொட்ட மஞ்ச கிளி வெட்க பட்டு சொக்கி நிக்குது
இந்த அல்லி தண்டு என்ன கண்டு தண்ணிகுள்ள விக்கி நிக்குது


உன் கேலி போதுமடி.... மாங்கா திங்கும் மாதமடி

உன் கேலி போதுமடி.... ஒளிஞ்சிருந்து மாங்கா திங்கும் மாதமடி
அடி பெண்ணே வயிரு வரும் முன்னே நீயும் சுமந்து தள்ளாட வேணுமடி
நெஞ்சுகுள்ளே ஏதோ ஆசை யார பாத்து நானும் பேச
அலபாயுது வாலிப மனசு ஆச வயசு

மொட்டு விட்ட முல்ல கொடி

மச்சான் தொட்ட மஞ்ச கிளி வெட்க பட்டு சொக்கி நிக்குது
இந்த அல்லி தண்டு என்ன கண்டு தண்ணிகுள்ள விக்கி நிக்குது
வள்ளி பொண்ணே நானிருக்க அச்சம் என்ன உனக்கு
அந்த நாளை நெஞ்சில் வச்சு எண்ணி சொல்லு கணக்கு

மொட்டு விட்ட முல்ல கொடி

மச்சான் தொட்ட மஞ்ச கிளி வெட்க பட்டு சொக்கி நிக்குது
இந்த அல்லி தண்டு என்ன கண்டு தண்ணிகுள்ள விக்கி நிக்குது


ஒன் வீட்டு தூலியடி என் வீட்டில் ஆடுமடி

என் வீட்டு தூலியடி பறந்து வந்து ஒன் வீட்டில் ஆடுமடி
அந்த சுட்டி வளரும் தங்க கட்டி இவள் மடியில் சங்கீதம் பாடுமடி
ரோசா பூவும் மஞ்ச பூசும் பாத்துபுட்ட கண்ணும் கூசும்
உனக்கும் ஒரு கிளி வந்து பொறக்கும் பூவா சிரிக்கும்

ஹே... மொட்டு விட்ட முல்ல கொடி

மச்சான் தொட்ட மஞ்ச கிளி வெட்க பட்டு சொக்கி நிக்குது
இந்த அல்லி தண்டு என்ன கண்டு தண்ணிகுள்ள விக்கி நிக்குது
வள்ளி பொண்ணே நானிருக்கேன் அச்சம் என்ன உனக்கு
அந்த நாளை நெஞ்சில் வச்சு எண்ணி சொல்லு கணக்கு

மொட்டு விட்ட முல்ல கொடி

மச்சான் தொட்ட மஞ்ச கிளி வெட்க பட்டு சொக்கி நிக்குது
இந்த அல்லி தண்டு என்ன கண்டு தண்ணிகுள்ள விக்கி நிக்குது

Popular Posts