Tuesday, July 2, 2013

Thooral Ninnu Pochu - En Soga Kathaya

படம்: தூறல் நின்னு போச்சு (1982)
இசை: இளையராஜா
பாடியவர்: மலேசியா வாசுதேவன்
பாடல்வரிகள்: கங்கைஅமரன்


Image result for Thooral Ninnu Pochchu
பங்கஜ வள்ளி அம்புஜனே ஸ்ரீ
பங்கஜ வள்ளி அம்புஜனே ஸ்ரீ
பார்வதி தாயே பணிந்தேன் நானே
பங்கஜ வள்ளி அம்புஜனே ஸ்ரீ


மன்னாதி மன்னனை எல்லாம் பாத்தவன் நான்
அந்த மதுரை வீரனையே எதிர்த்தவன் நான்
அப்பேற்பட்ட என்ன பஞ்சாயத்துல நிறுத்திட்டானுகளே
படுபாவி பசங்க

ஆமாம்...

என் அருமை என்ன பெருமை என்ன  அந்தஸ்தென்ன

ஆமாம்...

என் குஸ்தி என்ன பஸ்கி என்ன தண்டால் என்ன

ஆமாம்...

இத நான் எங்க சொல்வேன் என்ன செய்வேன்
மாப்ள இதுக்கு மேல நீயே பாடுரா

அட உன் கதை எனக்கு எதுக்கு மாமா
என் சோக கதைய கேளு தாய்க்குலமே

ஆமா தாய்க்குலமே

நம்ம தாய்க்குலமே

நம்ம தாய்க்குலமே

அத கேட்டாக்க தாங்காதம்மா உங்க மனமே

ஆமா உங்க மனமே

ஆமா உங்க மனமே
இந்த ஊரு பொண்ண நம்பி எம்மனச தொறந்து வச்சேன்
சொந்த ஊரு சாதி சனம் அத்தனையும் மறந்து வந்தேன்
என் சோக கதைய கேளு தாய்க்குலமே

ஆமா தாய்க்குலமே

நம்ம தாய்க்குலமே


ஆத்தங்கரை தோப்புக்குள்ள ஓடி விளையான்டதும்
யாருமில்லா சமயத்துல ஜாடையில சிரிச்சதும்
தோட்டத்துல வரப்புக்குள்ள தொட்டு தொட்டு புடிச்சதும்
தூண்டில் போட்டு மீனை சுட்டு ரெண்டு பேரும் கடிச்சதும்

அத்தனையும் மறந்துபுட்டு இவன் நெஞ்ச வதைக்கிறா
அப்பனோட பேச்ச மட்டும் பெருசாக நினைக்குறா
ஆசைப்பட்ட மாப்பிள்ளையோ அம்போன்னு முழிக்குறான்

ஆசைப்பட்ட மாப்பிள்ளையோ அம்போன்னு முழிக்குறான்

என் சோக கதைய கேளு தாய்க்குலமே

ஆமா தாய்க்குலமே

நம்ம தாய்க்குலமே...

நம்ம தாய்க்குலமே

அத கேட்டாக்க தாங்காதம்மா உங்க மனமே

ஆமா உங்க மனமே

ஆமா உங்க மனமே



ஆசை வச்ச ஆம்பிளை நான் ஆண்டியா அலையுறேன்
அல்லும்பகல் உன்ன எண்ணி தெருவுல திரியுறேன்
நேத்துவரை நடந்ததெல்லாம் தெய்வம் செஞ்ச சோதனை
நீ மட்டும் மனசு வச்சா தீந்திவிடும் வேதனை

நான் மட்டும் இல்லையினா சன்யாசம் வாங்கிருப்பான்
காசி முதல் ராமேஸ்வரம் காவி கட்டி போயிருப்பான்
மங்களத்த பெத்தவனே உம்மனச மாத்திக்கடா

மங்களத்த பெத்தவனே உம்மனச மாத்திக்கடா

என் சோக கதைய கேளு தாய்க்குலமே

ஆமா தாய்க்குலமே

நம்ம தாய்க்குலமே

நம்ம தாய்க்குலமே

அத கேட்டாக்க தாங்காதம்மா உங்க மனமே

ஆமா உங்க மனமே

ஆமா உங்க மனமே
இந்த ஊரு பொண்ண நம்பி எம்மனச தொறந்து வச்சேன்
சொந்த ஊரு சாதி சனம் அத்தனையும் மறந்து வந்தேன்

என் சோக கதைய கேளு தாய்க்குலமே
ஆமா தாய்க்குலமே
நம்ம தாய்க்குலமே
அத கேட்டாக்க தாங்காதம்மா உங்க மனமே
ஆமா உங்க மனமே
ஆமா உங்க மனமே


Popular Posts