Showing posts with label Sivakumar. Show all posts
Showing posts with label Sivakumar. Show all posts

Tuesday, June 22, 2021

Kadavul Amaitha Medai - Mayile Mayile

படம்: கடவுள் அமைத்த மேடை (1979)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: S.P. பாலசுப்ரமணியம், ஜென்ஸி
பாடல்வரிகள்: வாலி



மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
குளிர் காலமல்லவோ தனிமையில் விடலாமோ
தளிர் உடல் தொடலாமோ...
மயிலே மயிலே... மயிலே மயிலே...


மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
ஒரு சொந்தமில்லையோ உறவுகள் வளராதோ
நினைவுகள் மலராதோ...
மயிலே மயிலே... மயிலே மயிலே



தென்றல் தாலாட்ட தென்னை இருக்க
அது தன்னை மறக்க
தென்றல் தாலாட்ட தென்னை இருக்க
அது தன்னை மறக்க

நீ அணைக்க நான் இருக்க
நாள் முழுக்க தேன் அளக்க

கனிவாய் மலரே பலநாள் நினைவே..
வரவா தரவா பெறவா... நான் தொடவா ..

மயிலே மயிலே உன் தோகை இங்கே

ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே

ஒரு சொந்தமில்லையோ உறவுகள் வளராதோ
நினைவுகள் மலராதோ

மயிலே மயிலே... மயிலே மயிலே



மஞ்சள் மாங்கல்யம் மன்னன் வழங்க
கெட்டி மேளம் முழங்க
மஞ்சள் மாங்கல்யம் மன்னன் வழங்க
கெட்டி மேளம் முழங்க

பூங்குழலில் தேனருவி
தோளிரண்டும் நான் தழுவி

வரும் நாள் ஒரு நாள் அதுதான் திருநாள்
உறவாய் உயிராய் நிழலாய்... நான் வருவேன்

மயிலே மயிலே உன் தோகை இங்கே

ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே

குளிர் காலமல்லவோ தனிமையில் விடலாமோ
தளிர் உடல் தொடலாமோ

மயிலே மயிலே...
மயிலே மயிலே...
மயிலே மயிலே...

Tuesday, May 12, 2020

Thangaikoru Geetham - Thatti parthen Kottankuchi

படம்: தங்கையோர் கீதம் (1983)
இசை: T. ராஜேந்தர்
பாடியவர்கள்: T. ராஜேந்தர்
பாடல்வரிகள்: T. ராஜேந்தர்


Thangaikor Geetham Songs | Listen to Thangaikor Geetham Audio ...




தட்டிப் பார்த்தேன் கொட்டாங்கச்சி
தாளம் வந்தது பாட்ட வச்சி

தட்டிப் பார்த்தேன் கொட்டாங்கச்சி
தாளம் வந்தது பாட்ட வச்சி
தூக்கி வளர்த்த அன்பு தங்கச்சி
தூக்கி வளர்த்த அன்பு தங்கச்சி
தூக்கி எறிஞ்சா கண்ணு குளம் ஆச்சு
தூக்கி எறிஞ்சா கண்ணு குளம் ஆச்சு

தேனாக நினைச்சு தான் உன்ன வளர்த்தேன்
நீயும் தேளாக கொட்டி விட நானும் துடிச்சேன்
தேனாக நினைச்சு தான் உன்ன வளர்த்தேன்
நீயும் தேளாக கொட்டி விட நானும் துடிச்சேன்

தட்டிப் பார்த்தேன் கொட்டாங்கச்சி
தாளம் வந்தது பாட்ட வச்சி
தூக்கி வளர்த்த அன்பு தங்கச்சி
தூக்கி எறிஞ்சா கண்ணு குளம் ஆச்சு


தோள் மீது தொட்டில் கட்டி தாலாட்டினேன்
தாய் போல் நான் தானே சீர் ஆட்டினேன்
தோள் மீது தொட்டில் கட்டி தாலாட்டினேன்
தாய் போல் நான் தானே சீர் ஆட்டினேன்
யார் என்று நீ கேட்க ஆளாகினேன்
யார் என்று நீ கேட்க ஆளாகினேன்
போ என்று நீ விரட்டும் நாய் ஆகினேன்
போ என்று நீ விரட்டும் நாய் ஆகினேன்
மலராக நினைச்சி தான் உன்ன‌ வளர்த்தேன்
நீயும் முள்ளாக தைச்சு விட நானும் தவிச்சேன்

தட்டிப் பார்த்தேன் கொட்டாங்கச்சி
தாளம் வந்தது பாட்ட வச்சி
தூக்கி வளர்த்த அன்பு தங்கச்சி
தூக்கி எறிஞ்சா கண்ணு குளம் ஆச்சு


பாதில வந்த சொந்தம் பெரிசு என்று
ஆதி முதல் வளர்த்த என்னை வெறுத்து விட்ட
பாதில வந்த சொந்தம் பெரிசு என்று
ஆதி முதல் வளர்த்த என்னை வெறுத்து விட்ட
பாசம் வச்ச என் நெஞ்சு புண் ஆகவே
பாசம் வச்ச என் நெஞ்சு புண் ஆகவே
புருஷன் பக்கம் பேசி விட்ட தங்கச்சியே
புருஷன் பக்கம் பேசி விட்ட தங்கச்சியே
கிளியாக நினைச்சி தான் உன்ன வளர்த்தேன்
நீயும் கொத்தி விட வலிபட்டு நானும் துடிச்சேன்

தட்டிப் பார்த்தேன் கொட்டாங்கச்சி
தாளம் வந்தது பாட்ட வச்சி
தூக்கி வளர்த்த அன்பு தங்கச்சி
தூக்கி எறிஞ்சா கண்ணு குளம் ஆச்சு

ஆராரி ராராரி ராராரிரோ...
ஆராரி ராராரி ராராரிரோ...
ஆராரி ராராரி ராராரிரோ...
ஆராரி ராராரி ராராரிரோ...

Wednesday, March 20, 2013

சிந்து பைரவி - கலைவாணியே...

படம் : சிந்து பைரவி (1985)
இசை : இளையராஜா
பாடியவர் : K.J. ஜேசுதாஸ்
பாடல்வரிகள்: வைரமுத்து





கலைவாணியே... கலைவாணியே...
உனைத்தானே அழைத்தேன்... உயிர்த்தீயை வளர்த்தேன்..
வர வேண்டும் வரம் வேண்டும்
துடித்தேன் தொழுதேன் பலமுறை
நினைத்தேன் அழுதேன் இசை தரும் கலைவாணியே...
உனைத்தானே அழைத்தேன்... உயிர்த்தீயை வளர்த்தேன்..
வர வேண்டும் வரம் வேண்டும்
துடித்தேன் தொழுதேன் பலமுறை
நினைத்தேன் அழுதேன் இசை தரும் கலைவாணியே...


சுரம் பாடி சிரித்தாய் சிரிப்பாலே எரித்தாய்
மடிமீது மரித்தேன் மறுஜென்மம் கொடுத்தாய்
சிறு விரல்களில் தலைகோதி மடிதனில் எனை வளர்த்தாய்
இசை எனும் வரம் வரும் நேரம் திசை சொல்லவில்லை மறந்தாய்
முகம் காட்ட மறுத்தாய்.. ஆ.... ஆ.... ஆ....
முகம் காட்ட மறுத்தாய்.. முகவரியை மறைத்தாய்
நீ முன் வந்து பூச்சிந்து விழித்துளிகள்
தெரிக்கிறது துடைத்துவிடு.. கலைவாணியே..

உனைத்தானே அழைத்தேன்... உயிர்த்தீயை வளர்த்தேன்..
வர வேண்டும் வரம் வேண்டும்
துடித்தேன் தொழுதேன் பலமுறை
நினைத்தேன் அழுதேன் இசை தரும் கலைவாணியே...


உள்ளம் அழுதது உன்னை தொழுதது
உனது உயிரில் இவன் பாதி
கங்கை தலையினில் மங்கை இடையினில்
சிவனும் இவனும் ஒரு ஜாதி
ராமன் ஒருவகை கண்ணன் ஒருவகை
இரண்டும் உலகில் சமநீதி
அங்கே திருமகள் இங்கே கலைமகள்
அவளும் இவளும் சரிபாதி
கண்ணீர் பெருகியதே... ஆ.... ஆ.... ஆ....
ஆ.... ஆ.... ஆ.... ஆ.... ஆ....
கண்ணீர் பெருகிய கண்ணில் உன்முகம் அழகிய நிலவென மிதக்கும்
உயிரே உயிரின் உயிரே
அழகே அழகின் அழகே
இனி அழ வலுவில்லை விழிகளில் துளியில்லை
இனியொரு பிரிவில்லை துயர் வர வழியில்லை.. வருவாய்..


Sunday, January 20, 2013

Indru Nee Naalai Naan - Pon Vaanam Panneer

படம் : இன்று நீ நாளை நான் (1983)
இசை : இளையராஜா
பாடகர்கள் : S. ஜானகி
பாடல்வரிகள் :  வைரமுத்து

Image result for Indru Nee Naalai Naan




ஹா ஆ ஆ ஆ ஆ
ஹா ஆ ஆ ஆ ஆ ஆ
ஹா ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்
பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்
அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம்
பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்


ஹா ஆ ஆ.... ஹா ஆ ஆ....

ஹா ஆ ஆ.... ஹா ஆ ஆ ஆ ஆ....
ஹா ஆ ஆ.... ஹா ஆ ஆ ஆ ஆ....
லல் லல் லல லல... லல் லல் லல லல...
மழை பூக்களே ஒதுங்க இடம் பார்க்குதே
மலர் அம்புகள் உயிர் வரைக்கும் தாக்குதே
மழை செய்யும் கோளாரு கொதிக்குதே பாலாறு
மழை செய்யும் கோளாரு கொதிக்குதே பாலாறு
இது காதல் ஆசைக்கும் காமன் பூஜைக்கும் நேரமா
இது காதல் ஆசைக்கும் காமன் பூஜைக்கும் நேரமா
இந்த ஜோடி வண்டுகள் கோடு தாண்டிடுமா...
பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்

லல் லல் லல லல... லல் லல் லல லல...
லல் லல் லல லல... லல் லல் லல லல...
தங்க தாமரை மலர்ந்த பின்னும் மூடுமோ
பட்டு பூங்கொடி படற இடம் தேடுமோ
மலர்கணை பாயாதோ மது குடம் சாயாதோ
மலர்கணை பாயாதோ மது குடம் சாயாதோ
இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானமா
இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானமா
மழை காமன் காட்டில் பெய்யும் காலம்மம்மா…



பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்
அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம்
பொன் வானம் பன்னீர் தூவுது இன்னேரம்


Indru Nee Nalai Naan - Mottu Vitta Mullai Kodi

படம் : இன்று நீ நாளை நான் (1983)
இசை : இளையராஜா
பாடகர்கள் : S. ஜானகி, S.P.சைலஜா
பாடல்வரிகள் :  வைரமுத்து

Image result for Indru Nee Naalai Naan




மொட்டு விட்ட முல்ல கொடி
மச்சான் தொட்ட மஞ்ச கிளி

மொட்டு விட்ட முல்ல கொடி

மச்சான் தொட்ட மஞ்ச கிளி வெட்க பட்டு சொக்கி நிக்குது
இந்த அல்லி தண்டு என்ன கண்டு தண்ணிகுள்ள விக்கி நிக்குது
வள்ளி பொண்ணே நானிருக்கேன் அச்சம் என்ன உனக்கு
அந்த நாளை நெஞ்சில் வச்சு எண்ணி சொல்லு கணக்கு

மொட்டு விட்ட முல்ல கொடி

மச்சான் தொட்ட மஞ்ச கிளி வெட்க பட்டு சொக்கி நிக்குது
இந்த அல்லி தண்டு என்ன கண்டு தண்ணிகுள்ள விக்கி நிக்குது


உன் கேலி போதுமடி.... மாங்கா திங்கும் மாதமடி

உன் கேலி போதுமடி.... ஒளிஞ்சிருந்து மாங்கா திங்கும் மாதமடி
அடி பெண்ணே வயிரு வரும் முன்னே நீயும் சுமந்து தள்ளாட வேணுமடி
நெஞ்சுகுள்ளே ஏதோ ஆசை யார பாத்து நானும் பேச
அலபாயுது வாலிப மனசு ஆச வயசு

மொட்டு விட்ட முல்ல கொடி

மச்சான் தொட்ட மஞ்ச கிளி வெட்க பட்டு சொக்கி நிக்குது
இந்த அல்லி தண்டு என்ன கண்டு தண்ணிகுள்ள விக்கி நிக்குது
வள்ளி பொண்ணே நானிருக்க அச்சம் என்ன உனக்கு
அந்த நாளை நெஞ்சில் வச்சு எண்ணி சொல்லு கணக்கு

மொட்டு விட்ட முல்ல கொடி

மச்சான் தொட்ட மஞ்ச கிளி வெட்க பட்டு சொக்கி நிக்குது
இந்த அல்லி தண்டு என்ன கண்டு தண்ணிகுள்ள விக்கி நிக்குது


ஒன் வீட்டு தூலியடி என் வீட்டில் ஆடுமடி

என் வீட்டு தூலியடி பறந்து வந்து ஒன் வீட்டில் ஆடுமடி
அந்த சுட்டி வளரும் தங்க கட்டி இவள் மடியில் சங்கீதம் பாடுமடி
ரோசா பூவும் மஞ்ச பூசும் பாத்துபுட்ட கண்ணும் கூசும்
உனக்கும் ஒரு கிளி வந்து பொறக்கும் பூவா சிரிக்கும்

ஹே... மொட்டு விட்ட முல்ல கொடி

மச்சான் தொட்ட மஞ்ச கிளி வெட்க பட்டு சொக்கி நிக்குது
இந்த அல்லி தண்டு என்ன கண்டு தண்ணிகுள்ள விக்கி நிக்குது
வள்ளி பொண்ணே நானிருக்கேன் அச்சம் என்ன உனக்கு
அந்த நாளை நெஞ்சில் வச்சு எண்ணி சொல்லு கணக்கு

மொட்டு விட்ட முல்ல கொடி

மச்சான் தொட்ட மஞ்ச கிளி வெட்க பட்டு சொக்கி நிக்குது
இந்த அல்லி தண்டு என்ன கண்டு தண்ணிகுள்ள விக்கி நிக்குது

Wednesday, January 9, 2013

சிந்து பைரவி - தண்ணி தொட்டி


படம் : சிந்து பைரவி (1985)
இசை : இளையராஜா
பாடியவர் : K.J. ஜேசுதாஸ்
பாடல்வரிகள் : வைரமுத்து






ஓ... தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
ஓ... தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
இந்த சூரியன் வழுக்கி சேத்தில் விழுந்தது மாமி
என் கண்ணை கட்டி காட்டுல விட்டது சாமி சாமி சாமி
சாராயத்தை ஊத்து ஜன்னலைத்தான் சாத்து
சாராயத்தை ஊத்து ஜன்னலைத்தான் சாத்து

ஓ... தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
ஓ... தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்


புட்டி தொட்டதால புத்தி கெட்டு போனேன்
ஊருகாய கொண்டா உன்னையும் தொட்டுக்கறேன்
புட்டி தொட்டதால புத்தி கெட்டு போனேன்
ஊறுகாய கொண்டா உன்னையும் தொட்டுக்கறேன்
அடடா ரம்மு வந்தா ராகம் வரும் கொண்டா
இதுவும் பத்தாதம்மா கொண்டாடி அண்டா
அடடா ரம்மு வந்தா ராகம் வரும் கொண்டா
இதுவும் பத்தாதம்மா கொண்டாடி அண்டா
மகராஜா பிச்சைகேட்டு இங்கு பாடுறான்
என்ன பாத்து கோப்பை தள்ளாடும்
காசு தீர்ந்தாலே கண்ணீரும் கள்ளாகும்

தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
ஓ... தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
இந்த சூரியன் வழுக்கி சேத்தில் விழுந்தது மாமி
ஏ... கண்ணை கட்டி காட்டுல விட்டது சாமி சாமி சாமி
சாராயத்தை ஊத்து ஜன்னலைத்தான் சாத்து
சாராயத்தை ஊத்து ஜன்னலைத்தான் சாத்து
ஓ...  தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
ஓ...  தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்


இன்னும் கொஞ்சம் ஊத்து சுதி கொஞ்சம் ஏத்து
மூக்கு வழி வந்தா ஊத்துறத நிறுத்து
இன்னும் கொஞ்சம் ஊத்து சுதி கொஞ்சம் ஏத்து
மூக்கு வழி வந்தா ஊத்துறத நிறுத்து
எனக்கு ராகமெல்லாம் தண்ணி பட்ட பாரு
இன்னிக்கு டப்பாங்குத்து கச்சேரி கேளு
எனக்கு ராகமெல்லாம் தண்ணி பட்ட பாரு
இன்னிக்கு டப்பாங்குத்து கச்சேரி கேளு
ஒரு ராகம் திசை மாறி இசை மாறுது
மானம் போச்சு ஞானம் போகாது
ரோஷம் பார்த்தாலே போதை தான் ஏறாது

தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
இந்த சூரியன் வழுக்கி சேத்தில் விழுந்தது மாமி
என் கண்ணை கட்டி காட்டுல விட்டது சாமி சாமி சாமி
சாரயத்தை ஊத்து உன் ஜன்னலைத்தான் சாத்து
சாரயத்தை ஊத்து உன் ஜன்னலைத்தான் சாத்து
தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
தண்ணி தொட்டி தேடி வந்த கண்ணுகுட்டி நான்
இந்த சூரியன் வழுக்கி சேத்தில் விழுந்தது மாமி
என் கண்ணை கட்டி காட்டுல விட்டது சாமி சாமி சாமி சாமி சாமி


Tuesday, December 11, 2012

சிந்து பைரவி - மனதில் உறுதி


படம் : சிந்து பைரவி (1985)
இசை : இளையராஜா
பாடியவர் :  K.J. ஜேசுதாஸ்
பாடல் வரிகள் : பாரதியார்






மனதில் உறுதி வேண்டும்

மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
மனதில் உறுதி வேண்டும்

கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்
கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே  பெருமை வேண்டும்
மனதில் உறுதி வேண்டும்

கண் திறந்திட வேண்டும்
காரியத்தில் உறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்
மண் பயனுற  வேண்டும்
மண் பயனுற  வேண்டும்
வானகமிங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்
ஓம்.... ஓம்.... ஓம்.... ஓம்....



Friday, October 19, 2012

Aanandha Raagam - Megam Karukuthu

படம்: ஆனந்த ராகம் (1982)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: K.J. ஜேசுதாஸ், S. ஜானகி
பாடல் வரி: வைரமுத்து


Related image




மாமரச்சோலையும் பூ மழ தேடுது
மழை மேகம் வர வேணும்
சில்லுன்னு காத்தாடிச்சா சந்தோஷம் சேருது...
சில்லுன்னு காத்தாடிச்சா சந்தோஷம் சேருது...

மேகம் கருக்குது மழை வரை பார்க்குது

வீசியடிக்குது காத்து... காத்து...

மேகம் கருக்குது மழை வரை பார்க்குது
வீசியடிக்குது காத்து... காத்து மழை காத்து

மேகம் கருக்குது மழை வரை பார்க்குது
வீசியடிக்குது காத்து... காத்து மழை காத்து


காத்து... மழை காத்து...

மேகம் கருக்குது மழை வரை பார்க்குது
வீசியடிக்குது காத்து.. காத்து மழை காத்து

ஒயிலாக மயிலாடும் அலை போல மனம் பாடும்

மேகம் கருக்குது மழை வரை பார்க்குது
வீசியடிக்குது காத்து... காத்து மழை காத்து...


தொட்டு தொட்டு பேசும் சிட்டு

துள்ளி துள்ளி ஓடுவதென்ன

தொட்டு தொட்டு பேசும் சிட்டு

துள்ளி துள்ளி ஓடுவதென்ன
தென்றல் பட்டு ஆடும் மொட்டு
அள்ளி வந்த வாசம் என்ன
ஏதோ நெஞ்சில் ஆசை வந்து...
ஏதோ நெஞ்சில் ஆசை... வந்து...

ஏதோ நெஞ்சில் ஆசை வந்து

என்னனம்மோ ஆகிப்போச்சு

சேராமல் தீராது

வாடைக் குளிரில் வாடுது மனசு


மேகம் கருக்குது மழை வரை பார்க்குது
வீசியடிக்குது காத்து... காத்து மழை காத்து


பூவுக்குள்ள 

வாசம் வச்சான்


பாலுக்குள்ள 


நெய்யை வச்சான்



பூவுக்குள்ள 

வாசம் வச்சான்


பாலுக்குள்ள 


நெய்யை வச்சான்



கண்ணுக்குள்ள என்ன வச்சான்
பொங்குதடி என் மனசு


கண்ணுக்குள்ள என்ன வச்சான்
பொங்குதடி என் மனசு

பார்த்த கண்ணு சொக்கி சொக்கி
பைத்தியம்தான் ஆகிப்போச்சு யே.......

நீ வாடி நீ வாடி
ஆசை மயக்கம் போடுற வயசு



மேகம் கருக்குது மழை வரை பார்க்குது
வீசியடிக்குது காத்து.. காத்து மழை காத்து


ஒயிலாக மயிலாடும் அலை போல மனம் பாடும்

மேகம் கருக்குது மழை வரை பார்க்குது
வீசியடிக்குது காத்து...

காத்து மழை காத்து...




Sunday, October 14, 2012

உனக்காகவே வாழ்கிறேன் - கண்ணா உனைத் தேடுகிறேன்


படம்: உனக்காகவே வாழ்கிறேன் (1986)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம் & S.ஜானகி
பாடல் வரி: வைரமுத்து







கண்ணா... கண்ணா... கண்ணா...

கண்ணா உனைத் தேடுகிறேன் வா...
கண்ணீர்க் குயில் பாடுகிறேன் வா...
உன்னோடுதான் வாழ்க்கை
உள்ளே ஒரு வேட்கை
கண்ணீர் இன்னும் ஓயவில்லை
கன்னங்களும் காயவில்லை
கண்ணா உனைத் தேடுகிறேன் வா...
கண்ணீர்க் குயில் பாடுகிறேன் வா...

ஏனிந்த காதலென்னும் எண்ணம் தடை போடுமா
என் பாடல் கேட்ட பின்னும் இன்னும் பிடிவாதமா
என்ன நான் சொல்வது இன்று வந்த சோதனை
மௌனமே கொல்வதால் தாங்கவில்லை வேதனை
உன்னைத் தேடி வந்தேன் உண்மை சொல்ல வேண்டும்
இந்த சோகம் கொள்ள என்ன காரணம்

கண்ணா உனைத் தேடுகிறேன் வா...
கண்ணீர்க் குயில் பாடுகிறேன் வா...

கண்ணே உனைத் தேடுகிறேன் வா...
காதல் குயில் பாடுகிறேன் வா...
உன்னோடுதான் வாழ்க்கை
உள்ளே ஒரு வேட்கை
காதல் என்றும் தீர்வதில்லை
கண்ணே இனி சோகமில்லை
கண்ணே உனைத் தேடுகிறேன் வா...
காதல் குயில் பாடுகிறேன் வா...

சோகத்தின் பாஷையென்ன சொன்னால் அது தீருமா
கங்கை நீர் காயக்கூடும் கண்ணீர் அது காயுமா

சோதனை நேரலாம் பாசம் என்ன போகுமா
மேகங்கள் போய்விடும் வானம் என்ன போகுமா

ஈரமுள்ள கண்ணில் தூக்கமில்லை பெண்ணே
தோகை வந்த பின்னே சோகமில்லையே
கண்ணே உனைத் தேடுகிறேன் வா...
காதல் குயில் பாடுகிறேன் வா...

உன்னோடுதான் வாழ்க்கை
உள்ளே ஒரு வேட்கை

காதல் என்றும் தீர்வதில்லை
கண்ணே இனி சோகமில்லை

கண்ணா உனைத் தேடுகிறேன் வா...
காதல் குயில் பாடுகிறேன் வா...

Popular Posts