Showing posts with label 2021. Show all posts
Showing posts with label 2021. Show all posts

Wednesday, February 23, 2022

Galatta Kalyaanam - Kaadhalai Solla Mudiyaadha

 படம்: கலாட்டா கல்யாணம் (2021)

இசை : A.R ரஹ்மான்

பாடியவர்கள் : யஷின் நிஷார், சாஷா த்ரிபதி

பாடல்வரிகள்: கபிலன்





காதல் போயின் காதல்

யாதும் உன் ஆளாதோ

கனவே கனவே

கண்ணை கடனாக தருவாயோ

அடியே அடியே


உயிரினை காதல் தாங்காதா

ஒரு விழியாவது தூங்காதா

மொழி இருந்தும் வழி இருந்தும்

என் காதலை சொல்ல முடியாதா


ஒரு விழி இன்பம் ஆனதடி

ஒரு விழி வன்மம் ஆனதடி

மின்சாரம் ரீங்காரம்

இரண்டுக்கும் நடுவே தவித்தேனே


வாசம் அது வாசம் வீசுதடி

வாசம் அது வாசம் வீசுதடி



உன் கண்கள்

கண்ணாடி ஆனால்

கண்ணின் முன்னே

என்னை காண கூடாதா


ஆகாயம் தேடி

நான் போக மாட்டேன்

வீட்டோடு வெண்ணிலா நீதானே


மயில் தோகையோ

என் கை ரேகையாய்

சேரும் வரை சேர்ந்திருப்பேன்


இவள் ஒரு காதல் அழகா நீ

இரு விழி தாயின் மொழியா நீ

உன் மடியில் நான் தினமும்

ஒரு புல்லின் மீது பனியானேன்


ஆருயிர் உன்னை மறவேனே

யாரிடம் என்னை தருவேனே

நீயே சொல் நீயே சொல்

ஒரு மின்மினி இல்லா இரவானேன்


வாசம் அது வாசம் வீசுதடி

வாசம் அது வாசம் வீசுதடி

Galatta Kalyanam - Murali Mogha

படம்: கலாட்டா கல்யாணம் (2021)

இசை : A.R ரஹ்மான்

பாடியவர்கள் : ஹரிச்சரன் சேஷாத்ரி, K.S. சித்ரா

பாடல்வரிகள்: ரோகினி





தக திமித்த திமித்த மதி சரிய சரிய 

சதிராட்டம் இட்டு போனானே

ஒரு சிமிட்டு சிமிட்டி ஒரு கணத்தில் 

அனைத்து மறு கணத்தில் நண்பனானவனே

அவன் நீல வண்ண கார் மேக கண்ணன் போல் 

பூத்ததிந்த சிறு மயிலின் நெஞ்சம் 

அடி அங்கம் எங்கும் சச்சரவு நடக்க 

ஒரு உறவு வேண்டி உத்தரவு தருமா அவள் இதழ்கள்


முரளி மோஹா குழலிசையிலே

முரளி மோஹா குழலிசையிலே

முரளி மோஹா குழலிசையிலே


என் நேச சுவாசமே இசைந்து

என் நேச சுவாசமே இசைந்து தருவாய்

காதலின் காதலின் மோகத்தின் வரம்


முரளி மோஹா குழலிசையிலே

முரளி மோஹா குழலிசையிலே

முரளி மோஹா குழலிசையிலே


ஆஹ்...


பறந்தோம் நீயும் நானும் 

துளி வானம் ஆனோமே

பிரிவோம் நாம் மெய் எனில் 

உயிர் நீங்கும் நீங்குமே

உன் அங்கம் அங்கம் தரும் அந்தரங்கம் 

அதில் மயங்குதே விழி கலங்குதே

உன் அங்கம் அங்கம் தரும் அந்தரங்கம் 

அதில் மயங்குதே விழி கலங்குதே


உன் அங்கம் அங்கம் தரும் அந்தரங்கம் 

அதில் மயங்குதே விழி கலங்குதே

பறந்தோம் நீயும் நானும் 

துளி வானம் ஆனோமே

பிரிவோம் நாம் மெய் எனில் 

உயிர் நீங்கும் நீங்குமே

உன் அங்கம் அங்கம் தரும் அந்தரங்கம் 

அதில் மயங்குதே விழி கலங்குதே

உன் அங்கம் அங்கம் தரும் அந்தரங்கம் 

அதில் மயங்குதே விழி கலங்குதே



நம்மில் உன்னை கண்டு உன்மத்தம் ‍‍‍- உன்மத்தம்

காற்றில் நீருக்குள்ள தன்மத்தம் ‍- தன்மத்தம்

எண்ணில் உன்னை கண்டு உன்மத்தம்


பார்வைகள் மீர பந்தம் என்று தந்த ஆதாரம் ‍ - ஆதாரம்

வாழ்வை வெட்டி போகாதே பார்வை பறிக்காதே

இதயம் நனையும் உன் விழிகளிலே

உயிர் ஓவியம் ‍ உயிர் ஓவியம்

பாதை எங்கே போனாலும் நீ வேண்டும்


உன் அங்கம் அங்கம் தரும் அந்தரங்கம் 

அதில் மயங்குதே விழி கலங்குதே

உன் அங்கம் அங்கம் தரும் அந்தரங்கம் 

அதில் மயங்குதே விழி கலங்குதே

உன் அங்கம் அங்கம் தரும் அந்தரங்கம் 

அதில் மயங்குதே விழி கலங்குதே

உன் அங்கம் அங்கம் தரும் அந்தரங்கம் 

அதில் மயங்குதே விழி கலங்குதே


முரளி மோஹா குழலிசையிலே

முரளி மோஹா குழலிசையிலே

முரளி மோஹா குழலிசையிலே


என் நேச சுவாசமே இசைந்து

என் நேச சுவாசமே இசைந்து தருவாய்

காதலின் காதலின் மோகத்தின் வரம்


முரளி மோஹா குழலிசையிலே

முரளி மோஹா குழலிசையிலே

முரளி மோஹா குழலிசையிலே

Monday, January 31, 2022

Pushpa - Srivalli

 படம்: புஷ்பா (2021)

இசை : தேவிஸ்ரீ பிரசாத்

பாடியவர்கள் : சித் ஸ்ரீராம்

பாடல்வரிகள்: விவேகா


Download this MP3


நான் பாக்குறேன் பாக்குறேன்

பாக்காம நீ எங்க போற

நீ பாக்குற பாக்குற

எல்லாம் பாக்குற என்ன தவிர


காணாத தெய்வத்த

கண் மூடாம பாக்குறியே

கண் முன்னே நானிருந்தும்

கடந்து போகிறியே


பார்வ கற்பூர தீபமா... ஸ்ரீவள்ளி

பேச்சே கல்யாணி ராகமா

பார்வ கற்பூர தீபமா... ஸ்ரீவள்ளி

வாசம் கஸ்தூரி வாசமா



கூட்டத்துல போனா

நான் நடப்பேன் முன்னே

நீ நடந்தா மட்டும்

வருவேன் உன் பின்னே

எவனையுமே பாத்து

தலை குனிஞ்சது இல்ல

உன் கொலுச பாக்கத்தான்

தலை குனிஞ்சேன்டி புள்ள


பாதகத்தி உன்ன நான்

பாக்க சுத்தி வந்தாலும்

பாத்திடாம போறியே

பாவம் பாக்காம


பார்வ கற்பூர தீபமா... ஸ்ரீவள்ளி

பேச்சே கல்யாணி ராகமா

பார்வ கற்பூர தீபமா... ஸ்ரீவள்ளி

வாசம் கஸ்தூரி வாசமா



நீ ஒண்ணும் பெரிய

பேரழகி இல்ல

தேறாத கூட்டத்தில அழகா

தெரியுறடி புள்ள

பதினெட்டு வயச

தொட்டாலே போதும்

நீ இல்ல எல்லா பொண்ணும்

தினுசா தான் தோணும்


குத்துக்கல்லுக்கு சேல கட்டி

விட்டா கூட சிட்டா தெரியும்

கொத்து பூவ கூந்தலில் வச்சா 

எந்த பொண்ணும் போதை ஏத்தும்



ஆனா...

பார்வ கற்பூர தீபமா... ஸ்ரீவள்ளி

பேச்சே கல்யாணி ராகமா

பார்வ கற்பூர தீபமா... ஸ்ரீவள்ளி

வாசம் கஸ்தூரி வாசமா







Monday, January 17, 2022

Bachelor - Adiye

படம்: பேச்சுலர் (2021)

இசை : திபு நினன் தாமஸ்

பாடியவர்கள் : கபில் கபிலன்

பாடல்வரிகள்: GKB





அடியே நீதானடி

என் போதை தேனே

முத்தம் கொஞ்சு


சகியே நீயாரடி

கை தீண்டும் பௌர்ணமி

கொஞ்சம் நில்லு


பெண்ணே பெண்ணே

உந்தன் கையில் நானும்

கூடும் நேரம் விட்டு செல்லாதே


கண்ணே கண்ணே

நீளும் காலம் வேண்டும்

வாராயோ அருகிலே


பூவே காதல் பூக்கும் பூவே

சாரல் வீச ஈரம் என்னை கொஞ்சும்

மழையில் உன் வாசம்


கெஞ்சும் நெஞ்சம் உன்னை கெஞ்சும்

புலரும் காலை வேண்டாம்

இரவின் குளிரே என்னை கொல்லாதே




இரவுகள் நீள இமைகளும் மூட

இடைவெளி ஏனோ கண்மணியே

யுகங்களை தாண்டி விரல்களை பூட்டி

முத்தங்களை தின்போம் அடியே


சாளரத்தின் வெளிச்சத்திலே

அரும்புகிறேன்

மெய் கடலின் அலைகளிலே

சுழலுதே கவிழுதே மனமதுவே


அடியே நீதானடி

என் போதை தேனே

முத்தம் கொஞ்சு


சகியே நீயாரடி

கை தீண்டும் பௌர்ணமி

கொஞ்சம் நில்லு


பெண்ணே பெண்ணே

உந்தன் கையில் நானும்

கூடும் நேரம் என்னை விட்டு செல்லாதே


கண்ணே கண்ணே

நீளும் காலம் வேண்டும்

வாராயோ அருகிலே அடியே........


பூவே காதல் பூக்கும் பூவே

சாரல் வீச ஈரம் என்னை கொஞ்சும்

மழையில் உன் வாசம்


கெஞ்சும் நெஞ்சம் உன்னை கெஞ்சும்

புலரும் காலை வேண்டாம்

இரவின் குளிரே என்னை கொல்லாதே


பூவே காதல் பூக்கும் பூவே

சாரல் வீச ஈரம் என்னை கொஞ்சும்

மழையில் உன் வாசம்


கெஞ்சும் நெஞ்சம் உன்னை கெஞ்சும்

புலரும் காலை வேண்டாம்

இரவின் குளிரே என்னை கொல்லாதே ஹே...

Thursday, September 16, 2021

Netrikann - Idhuvum Kadandhu Pogum

 படம்: நெற்றிக்கண் (2021)

இசை: கிரீஷ் கோபாலகிருஷ்ணன்

பாடியவர்கள்:  சித் ஸ்ரீராம்

பாடல்வரிகள்: கார்த்திக் நேத்தா




இதுவும் கடந்து போகும்

இதுவும் கடந்து போகும்


சுடரி இருளில் ஏங்காதே

வேலி தான் கதவை மூடாதே

அட ஆறு காலங்களும் மாறி மாறி வரும்

இயற்கையின் விதி இதுவே

அழியாத காயங்களை ஆற்றும் மாயங்களை

அனுபவம் கொடுத்திடுமே


மழை காற்றோடு போகும் வரை போனால் என்ன

அதில் ஏதோ ஒரு பூவின் துணை ஆனால் என்ன


சுடரி சுடரி உடைந்து போகாதே

உடனே வலிகள் மறைந்து போகாதே

சில நாள் வரைக்கும் அதை சீண்டாதே

அதுவாய் மறக்கும் பின் தோன்றாதே


இதுவும் கடந்து போகும்

இதுவும் கடந்து போகும்



இதுவும் கடந்து போகும்

இதுவும் கடந்து போகும்

இதுவும் கடந்து போகும்

ஏதுவும் கடந்து போகும்


அதுவே படைக்கும் அதுவே உடைக்கும்

மனம் தான் ஒரு குழந்தையே

அதுவாய் மலரும் அதுவாய் உதிரும்

அது போல் இந்த கவலையே


நாள்தோறும் ஏதோ மாறுதல்

வானும் மண்ணும் வாழும் ஆறுதல்

பேசாமல் வா வாழ்வை வாழ்ந்திருப்போம்


மழை காற்றோடு போகும் வரை போனால் என்ன

அதில் ஏதோ ஒரு பூவின் துணை ஆனால் என்ன


சுடரி சுடரி உடைந்து போகாதே

உடனே வலிகள் மறைந்து போகாதே

சில நாள் வரைக்கும் அதை சீண்டாதே

அதுவாய் மறக்கும் பின் தோன்றாதே


இதுவும் கடந்து போகும்

இதுவும் கடந்து போகும்



அதுவாய் விழுந்தே அதுவாய் எழுந்தே

குழந்தை நடை பழகுதே

மனதால் உணர்ந்தே உடலே விரிந்தே

பறவை திசை அமைக்குதே


வாசம் தான் பூவின் பார்வைகள்

காற்றில் ஏறி காணும் காட்சிகள்

காணாமல் வெளியாக பார்த்திடுமே


சிறு ஊற்றாக நேசம் எங்கோ உருவாகுமே

பெரும் காற்றாக மாறி சென்று உறவாடுமே


சுடரி சுடரி வெளிச்சம் தீராதே

அதை நீ உணர்ந்தால் பயணம் தீராதே

அழகே சுடரி அட ஏங்காதே

மலரின் நினைவில் மணம் வாடாதே


இதுவும் கடந்து போகும்

இதுவும் கடந்து போகும்

இதுவும் கடந்து போகும்

இதுவும் கடந்து போகும்

போகும்... கடந்து போகும்...

Monday, August 9, 2021

Navarasa - Guitar Kambi Mele Nindru - Naanum

படம்: நவரசா (2021)
இசை: கார்த்திக்
பாடியவர்கள்:  கார்த்திக்
பாடல்வரிகள்: மதன் கார்க்கி






மயக்கும் மழலை மொழியோ
அவிழும் அருவி ஒலியோ
குவியும் குயிலின் குரலோ
தேயும் தேயும் இவள் முன்

குளம்பி கிளப்பும் மணமோ
புதினம் பிரிக்கும் மணமோ
துளசி இலையின் மணமோ
தேயும் தேயும் இவள் முன்

ஏன்? அதை நான் உணரவில்லை... ஏன்?
ஏன்? உணர்ந்தும் திருந்தவில்லை?

நாணும் நேரமிது
நானும் நாணும் நேரமிது
ஓர் ஆணின் நாணமிது அன்பே!
நாணும் நேரமிது
நானும் நாணும் நேரமிது
என் வேறு கோணம் இது அன்பே!
 


இசை தேடி நீ வந்தாய்
இசை என்றென்னில் ஆனாய்
இசையின்றி என்னாவேன்?
இசையில்லா மண்ணாவேன்
திருந்தும் வாய்ப்பொன்று தந்தால்
மறந்தும் மீண்டும் செய்யேன்
செல்லாதே நீ வா வா என்னிசையே!


நாணும் நேரமிது
நானும் நாணும் நேரமிது
என் வேறு கோணம் இது அன்பே!

Sunday, August 8, 2021

Navarasa - Guitar Kambi Mele Nindru - Thooriga

படம்: நவரசா (2021)
இசை: கார்த்திக்
பாடியவர்கள்:  கார்த்திக்
பாடல்வரிகள்: மதன் கார்க்கி






ஹே... விழும் இதயம் ஏந்திப்பிடி
ஹே... அதில் கனவை அள்ளிக்குடி
ஹே... குறுஞ்சிறகு கோடி விரி
வா... என் இதழில் ஏறிச் சிரி
கிட்டார் கம்பி மேலே நின்று
கீச்சும் கிளியானாய்
வண்ணம் இல்லா என் வாழ்விலே
வர்ணம் மீட்டுகிறாய்
தூரிகா... என் தூரிகா...
ஒரு வானவில் வானவில்
மழையென பெய்கிறாய்
சாரிகா... என் சாரிகா...
அடிமன வேர்களை 
வேர்களைக் கொய்கிறாய்
 
நான்... துளி இசையில் வாழும் இலை
நீ... எனை தழுவ வீழும் மழை
வேர் வரை நழுவி ஆழம் நனை
நீ எனை உயிரில் நீயும் இணை
பியானோ பற்கள் மேலே வந்து
ஆடும் மயிலானாய்
வண்ணம் இல்லா என் வாழ்விலே
வர்ணம் மீட்டுகிறாய்
தூரிகா... என் தூரிகா...
ஒரு வானவில் வானவில்
மழையென பெய்கிறாய்
சாரிகா... என் சாரிகா...
அடிமன வேர்களை 
வேர்களைக் கொய்கிறாய்
 


தூரிகா... என் தூரிகா...
ஒரு வானவில் வானவில்
மழையென பெய்கிறாய்
சாரிகா... என் சாரிகா...
அடிமன வேர்களை 
வேர்களைக் கொய்கிறாய்
காரிகா... என் காரிகா...
இதழோடுதான் கூடதான் தவித்திட
காத்திடு என சோதனை செய்கிறாய்
தூரிகா... என் தூரிகா...
வானவில் மழையென
மழையென பெய்கிறாய்

Wednesday, August 4, 2021

Naam - Adi Penne (Duet)

படம்: நாம் (2021)
இசை: ஸ்டீபன் ஜக்கரியா
பாடியவர்கள்:  ஸ்டீபன் ஜக்கரியா, ஸ்ரீநிஷா ஜெயசீலன்
பாடல்வரிகள்: சூரியவேலன்







அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தாள்
என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்
அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தாள்
என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்

ஏன் எனது இதயம்
துடிக்கும் இசையில்
கவிதை ஒன்றை எழுதினாய்
அதை விழியில் கோர்த்து உயிரின் உள்ளே
பார்வையாலே சொல்கிறாய்

உன்னோடு நானும் வாழ
உன்னோடு நானும் சாக
உன் மடி சாயவா
உன் மடி சாயவா

உன் பார்வை என்னை கொல்ல
சாய்ந்தேனே நானும் மெல்ல
நீதான் என் மன்னவா
நீதான் என் மன்னவா



ஓ... உனது சிரிப்பினில் சிதறும் அழகினை
பூக்கள் ரசித்தே வாசம் பிறந்ததோ

வேர்வை துளிகளும்தீர்த்தம் போல
என் மேலே படுகையில் பாவம் அழியுதோ

இருவர் வாழும் உலகிலே
உன்னை அணைத்து கொள்வேன் உயிரிலே

இரவில் தேயும் நிலவிலே
நாம் சேர்த்து வாழ்வோம் அருகிலே

அடி உன்னோடு வாழும்
ஒவ்வொரு நாளும்
இறகை போல பறக்கிறேன்

நான் உன்னோடு வாழும் நொடியில் ஏனோ
மீண்டும் முதல் முறை பிறக்கிறேன்
உன் பார்வை என்னை கொல்ல
சாய்ந்தேனே நானும் மெல்ல
நீதான் என் மன்னவா
நீதான் என் மன்னவா

உன்னோடு நானும் வாழ
உன்னோடு நானும் சாக
உன் மடி சாயவா
உன் மடி சாயவா

என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்
என்னுள்ளே ஏதோ புது மயக்கம்
என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்
என்னுள்ளே ஏதோ புது மயக்கம்




எனது பிறவியின் அர்த்தம் உணரவே
உன்னை எனது வாழ்வில் தந்ததோ

தேகம் தீண்டும் தூரம் இருந்துமே
உனது விழியிலே ஜீவன் தொலையுதோ
மழையில் காதல் உன் மடியிலே
நித்தம் அணைத்து கொள்ளடா உயிரிலே

விழிகள் பேசும் மொழியிலே
இனி மௌனம் கூட பிழை இல்லை

அன்பே உன்னோடு வாழும்
ஒவ்வொரு நாளும்
இறகை போல பறக்கிறேன்

நான் உன்னோடு வாழும் நொடியில் ஏனோ
மீண்டும் முதல் முறை பிறக்கிறேன்
அடி பெண்ணே ஒரு முறை நீ சிரித்தால்
என் நெஞ்சுக்குள்ளே மழை அடிக்கும்

என் அன்பே ஒரு முறை நீ ரசித்தால்
என்னுள்ளே ஏதோ புது மயக்கம்

நீ இரவல் உயிரா
உறவின் வெயிலா
மழையின் வாசம் நீயடி
நீ கவிதை மொழியா
கவிஞன் வழியா
உயிரின் சுவாசம் நீயடி

உன்னோடு நானும் வாழ
உன்னோடு நானும் சாக
உன் மடி சாயவா
உன் மடி சாயவா

உன் பார்வை என்னை கொல்ல
சாய்ந்தேனே நானும் மெல்ல
நீதான் என் மன்னவா
நீதான் என் மன்னவா

Friday, July 30, 2021

Naatpadu Theral 07 - Adaiyalam Yeralam

படம்: நாட்படு தேறல் (2021)
இசை: வாகு மசான்
பாடியவர்கள்: அந்தோணிதாசன், வாகு மசான்
பாடல்வரிகள்: வைரமுத்து
இயக்கம்: செல்வகண்ணன்





Download this MP3


அடையாளம் ஏராளம்
ஆளெங்க? பேரெங்க?
நெனப்பிருக்கு நெஞ்செல்லாம்
நீயெங்க? நானெங்க?

கும்பி எரியுதடி
கொந்தளிக்கும் எம்மனசில்
தும்பி பறக்குதடி
தோணுதடி பழையகதை


அடையாளம் ஏராளம்
ஆளெங்க? பேரெங்க?
நெனப்பிருக்கு நெஞ்செல்லாம்
நீயெங்க? நானெங்க?

கும்பி எரியுதய்யா
கொந்தளிக்கும் எம்மனசில்
தும்பி பறக்குதய்யா
தோணுதய்யா பழையகதை



ஓ.... மின்னல் வெட்டும் ராத்திரியில்
சன்னல் பக்கம் நீஅழைக்க
அந்நேரம் பாத்து
அஞ்சாறு நாய் கொலைக்க

வெறிச்சோடிப் போயிருந்த
வீதியில நான்விழுந்து
தெறிச்சோடிப் போனதுக்குத்
தெருவிளக்கு அடையாளம்


சொட்டாங்கல்லு ஒண்ணு  - எந்
தொடைப்பக்கம் தவறிவிழ
கல்லெடுக்கும் சாக்குல நீ
கள்ளத்தனம் பண்ண

ஆடி விழுந்ததுக்கும்
ஆளவிடு சாமியின்னு
ஓடி ஒளிஞ்சதுக்கும்
ஓடைக்கரை அடையாளம்


அடையாளம் ஏராளம்
ஆளெங்க? பேரெங்க?
நெனப்பிருக்கு நெஞ்செல்லாம்
நீயெங்க? நானெங்க?

கும்பி எரியுதடி
கொந்தளிக்கும் எம்மனசில்
தும்பி பறக்குதடி
தோணுதடி பழையகதை



ஓ....சீலகட்டத் தெரியாத
சிறுமியின்னு பாக்காம
வேளகெட்ட வேளையில
வெறிகொண்டு நீயணைக்க

மாமான்னு மிரண்டதுக்கும்
மணமாலை கேட்டதுக்கு
ஆமான்னு சொன்னதுக்கும்
அம்மன்கோயில் அடையாளம்


ஓ.... ஊருக்கே தெரியாம
யாருக்கோ பெண்டாகிக்
குதிரைவண்டி ஏறிக்
கொடிக்கால் கடக்கையில

மடிவிழுந்த கண்ணீரு
மழையாகிப் போனதுக்கு
இடிவிழுந்த ஆலமரம்
இன்னைக்கும் அடையாளம்

அடையாளம் ஏராளம்
ஆளெங்க? பேரெங்க?
நெனப்பிருக்கு நெஞ்செல்லாம்
நீயெங்க? நானெங்க?

கும்பி எரியுதடி
கொந்தளிக்கும் எம்மனசில்
தும்பி பறக்குதடி
தோணுதடி பழையகதை

Naatpadu Theral 05 - En Kadhala

 படம்: நாட்படு தேறல் (2021)

இசை: N.R. ரகுநந்தன்

பாடியவர்கள்: ஸ்ரீநிஷா ஜெயசீலன்

பாடல்வரிகள்: வைரமுத்து



Download this MP3

என் காதலா
காதல் வயது பார்க்குமா?
நானும் சின்னக் கன்று என்று 
இன்று சிந்தை மாறுமா?

வயதால் நம்
வாழ்வு முறியுமா?
வாய் முத்தம்
வயது அறியுமா?

நிலா வெண்ணிலா
வயதில் மூத்ததில்லையா
இருந்தும் நிலவு சொல்லி 
இளைய அல்லி மலர்வதில்லையா?

என்வாழ்வில் தந்தை இல்லையே!
தந்தைபோல் கணவன் வேண்டுமே!

என் காதலா
காதல் வயது பார்க்குமா?
நானும் சின்னக் கன்று என்று 
இன்று சிந்தை மாறுமா?


ஆணும் பெண்ணும் சேர்வது
ஆசைப் போக்கில் நேர்வது
காதல் நீதி என்பது
காலம் தோறும் மாறுது

வெட்டுக்கிளியின் ரத்தமோ
வெள்ளையாக உள்ளது
விதிகள் எழுதும் ஏட்டிலே
விதிவிலக்கும் உள்ளது

ஆழி ரொம்ப மூத்தது
ஆறு ரொம்ப இளையது
ஆறு சென்று சேரும்போது
யாரு கேள்வி கேட்பது?



காதல் சிந்தும் மழையிலே
காலம் தேசம் அழியுதே
எங்கே சிந்தை அழியுதோ
காதல் அங்கே மலருதே!

அறிவழிந்து போனபின்
வயது வந்து தோன்றுமா?
பொருள் அழிந்து போனபின்
நிழல் கிடந்து வாழுமா?

அறமிருக்கும் வாழ்விலே
முரணிருக்கும் என்பதால்
முரணிருக்கும் வாழ்விலும்
அறமிருக்கும் இல்லையா?

என் காதலா
காதல் வயது பார்க்குமா?
நானும் சின்னக் கன்று என்று
இன்று சிந்தை மாறுமா?

என் காதலா
காதல் வயது பார்க்குமா?
நானும் சின்னக் கன்று என்று 
இன்று சிந்தை மாறுமா?

Naatpadu Theral 03 - Merkku Thodarchi Mala

படம்: நாட்படு தேறல் (2021)
இசை: அந்தோணிதாசன்
பாடியவர்கள்: அந்தோணிதாசன்
பாடல்வரிகள்: வைரமுத்து





Download this MP3


மேற்குத் தொடர்ச்சி மலை
இளைச்சுப் போகும்
அந்த மேகாத்து மேல்மூச்சு
வாங்கிப் போகும்

மேற்குத் தொடர்ச்சி மலை
இளைச்சுப் போகும்
அந்த மேகாத்து மேல்மூச்சு
வாங்கிப் போகும்

மாசம் ஒருவாட்டி
நான் வடுகபட்டி போகாட்டி
வலது கைநீட்டி
நான் மலையோட பேசாட்டி…

மாசம் ஒருவாட்டி
நான் வடுகபட்டி போகாட்டி
வலது கைநீட்டி
நான் மலையோட பேசாட்டி…

மேற்குத் தொடர்ச்சி மலை
இளைச்சுப் போகும்
அந்த மேகாத்து மேல்மூச்சு
வாங்கிப் போகும்



வைகை நதிமேல என்
வலதுகை நனைக்காம
வைகையில வெளையாடும்
வாளமீனு தூங்காது

பூமரத்துக் கீழே நான்
புதுப்பாட்டு எழுதாம
பூமரத்தில் கூடுகட்டும்
புறா இரை கொள்ளாது

கத்தாழங் காடு
எங்கால்சூடு காங்காமக்
கத்தாழம் புதரோட
காடைமுட்டை போடாது

மஞ்சளாறு அணையில் நான்
மலைக்காத்து வாங்காம
மஞ்சளாத்து மூலையில
மணிக்குருவி மேயாது

மலையைக் கொஞ்சம்
கடிச்சுக் கிட்டே
கூழ்குடிச்ச பூமியடா
மண்ணும் மழையும் எங்க
பரம்பரைக்கே சாமியடா

மலையைக் கொஞ்சம்
கடிச்சுக் கிட்டே
கூழ்குடிச்ச பூமியடா
மண்ணும் மழையும் எங்க
பரம்பரைக்கே சாமியடா

மேற்குத் தொடர்ச்சி மலை
இளைச்சுப் போகும்
அந்த மேகாத்து மேல்மூச்சு
வாங்கிப் போகும்



கும்பக்கரைச் சாலையில
கோமிய வாசம் புடிக்காம
மண்டக்குள்ள மல்லுக்கட்டி
மல்லியப்பூ பூக்காது

கெடையாட்டு மந்தையில
கெடாக் கூத்துக் காங்காம
காஞ்சுபோன பொழப்புக்குள்ள
கற்பனையே கெளம்பாது

சாதிசனம் பேசும்
மொழி சங்கீதம் கேளாம
இதிகாச எழுத்துக்கு
சகவாசம் இருக்காது

சுட்ட மீன் கவுச்சி
வந்து சுர்ருன்னு ஏறாம
எண்சீர் விருத்தத்தில்
ஏழாஞ்சீரு வாராது

மலையைக் கொஞ்சம்
கடிச்சுக்கிட்டே
கூழ்குடிச்ச பூமியடா
மண்ணும் மழையும்
எங்க பரம்பரைக்கே சாமியடா

மலையைக் கொஞ்சம்
கடிச்சுக்கிட்டே
கூழ்குடிச்ச பூமியடா
மண்ணும் மழையும்
எங்க பரம்பரைக்கே சாமியடா

மேற்குத் தொடர்ச்சி மலை
இளைச்சுப் போகும்
அந்த மேகாத்து மேல்மூச்சு
வாங்கிப் போகும்

மாசம் ஒருவாட்டி
நான் வடுகபட்டி போகாட்டி
வலது கைநீட்டி
நான் மலையோட பேசாட்டி

மேற்குத் தொடர்ச்சி மலை
இளைச்சுப் போகும்
அந்த மேகாத்து மேல்மூச்சு
வாங்கிப் போகும்

Naatpadu Theral 01 - Naakku Chevandhavarae

படம்: நாட்படு தேறல் (2021)

இசை: வாகு மசான்

பாடியவர்கள்: வாகு மசான்

பாடல்வரிகள்: வைரமுத்து


Download this MP3


ஒருவாய் வெத்தலைய

இருவாய் உண்டகதை

திருவாய் மறந்தாலும்

தின்னருசி மறந்திருமோ?


ஒருவாய் வெத்தலைய

இருவாய் உண்டகதை

திருவாய் மறந்தாலும்

தின்னருசி மறந்திருமோ?


நாக்குச் செவந்தவரே

நாலெழுத்து மந்திரியே

மூக்கு வெடச்சவரே

முன்வழுக்கை மன்னவரே


நாக்குச் செவந்தவரே

நாலெழுத்து மந்திரியே

மூக்கு வெடச்சவரே

முன்வழுக்கை மன்னவரே



கூத்து முடிஞ்சிருச்சு

கொமரிப்புள்ள எதுக்குன்னு

பாத்தும் பாக்காமப்

பரபரன்னு போறீரோ!


ஒருவாய் வெத்தலைய

இருவாய் உண்டகதை

திருவாய் மறந்தாலும்

தின்னருசி மறந்திருமோ?


ஒருவாய் வெத்தலைய

இருவாய் உண்டகதை

திருவாய் மறந்தாலும்

தின்னருசி மறந்திருமோ?



வைக்கப் போர்ப்படப்புக்கு

வடஇருட்டு மூலையில

அக்கப்போர் செஞ்சகதை

அய்யனுக்கு மறந்திருச்சோ?


சவரக் கத்திக்குத்

தப்பிச்ச குறுமுடியில்

முகர ஒரசுனது

முழுசாத்தான் மறந்திருச்சோ?


மொட்டு மொட்டு மல்லிகையை

முட்டிமுட்டித் தட்டிவிட்டு

முத்துமுத்து வேர்வைச் சொட்டு

மோந்தகதை மறந்திருச்சோ?


வாழைத் தோப்புக்குள்ள

வளவி ஒடச்சகதை

வாழை மறந்திருக்கும்

வலதுகையி மறந்திருமோ?


ஒருவாய் வெத்தலைய

இருவாய் உண்டகதை

திருவாய் மறந்தாலும்

தின்னருசி மறந்திருமோ?


ஒருவாய் வெத்தலைய

இருவாய் உண்டகதை

திருவாய் மறந்தாலும்

தின்னருசி மறந்திருமோ?



தேனேறிப் போயிருந்த

சிறுக்கிமக தலைமயிரு

பேனேறிப் போனதய்யா

பேச்சுவார்த்தை இல்லாம


புள்ளித் தேமலுக்கும்

புதுவேட்டி மடிப்புக்கும்

கருப்பட்டி ஒதட்டுக்கும்

கருத்தகிளி அலையுதய்யா


ஆறுசரம் சங்கிலியோ

அட்டிகையோ கேக்கலையே

மஞ்சக் கயித்துக்கு

மனசுக்குள்ள அரிக்குதய்யா


ஆம்பளைக சகவாசம்

அடுத்தொருத்தி வாரவரைக்கும்

பொம்பளைக சகவாசம்

புதைகாடு போறவரைக்கும்

Wednesday, July 28, 2021

Sulthan - Yaaraiyum Ivlo Azhaga

 படம்: சுல்தான் (2021)

இசை: விவேக்-மெர்வின்

பாடியவர்கள்: சிலம்பரசன் (STR)

பாடல்வரிகள்: விவேகா



Download this MP3

ஹே யாரையும் இவ்ளோ அழகா பாக்கல

உன்னை போல் எவளும் உசுர தாக்கல

காதுல வேற எதுவும் கேக்கல

காலிதான் ஆனேன் போற போக்குல


கோணலா பாக்குறா... கோவமா பேசுறா

சேனலா மாத்துறா... என் மனச


முதல் முறை பார்த்தேன் தலைகீழ் ஆனேன்

மறுமுறை பார்த்தா ஐய்யய்யோ

பல முறை பார்த்தா பைத்தியம் ஆவேனே


முதல் முறை பார்த்தேன் தலைகீழ் ஆனேன்

மறுமுறை பார்த்தா ஐய்யய்யோ

பல முறை பார்த்தா பைத்தியம் ஆவேன்

பாவம் பாரு பெண்ணே


யாரையும் இவ்ளோ அழகா பார்க்கல

உன்ன போல் எவளும் உசுர தாக்கல

காதுல வேற எதுவும் கேக்கல

காலிதான் ஆனேன் போன போக்குல


கோணலா பாக்குறா... கோவமா பேசுறா

சேனலா மாத்துறா... என் மனச


முதல் முறை பார்த்தேன் தலைகீழ் ஆனேன்

மறுமுறை பார்த்தா ஐய்யய்யோ

பல முறை பார்த்தா பைத்தியம் ஆவேன்

பாவம் பாரு பெண்ணே


 

நீ தண்ணிகுள்ள கைய வெச்சா

தண்ணிக்கு ஜன்னி ஏறும்

கட்டெறும்பு உன்ன தொட்டா

பட்டாம்பூச்சியா மாறும்


நீ மஞ்ச பூச கைய வெச்சா

அஞ்சாறு கலரா ஆகும்

நீ எட்டு வெச்ச கட்டான் தரை

மிட்டாய போல இனிக்கும்


காது திருகாணியில்

காதல் தலைக்கேறுதே

நீ பூசும் மருதாணியில்

என் பூமி சிவப்பாகுதே


சேவல் இறகால சேலை நான் செஞ்சி

தாரேன் வாடி என் தமிழ் இசையே...

தமிழ் இசையே...


முதல் முறை பார்த்தேன் தலைகீழ் ஆனேன்

மறுமுறை பார்த்தா ஐய்யய்யோ

பல முறை பார்த்தா பைத்தியம் ஆவேன்

பாவம் பாரு பெண்ணே


யாரையும் இவ்ளோ அழகா பார்க்கல

உன்ன போல் எவளும் உசுர தாக்கல

காதுல வேற எதுவும் கேக்கல

காலிதான் ஆனேன் போற போக்குல

Friday, July 9, 2021

Konjam Pesu

படம்: கொஞ்சம் பேசு (2021)

இசை: நரேன்

பாடியவர்கள்: ப்ரதீப் குமார், நித்யஸ்ரீ வெங்கடரமணன்

பாடல்வரிகள்: யுகபாரதி

தயாரிப்பு: ராஜு முருகன்





ஒ...ஒ...ஒ...ஒ...

ஒ...ஒ...ஒ...ஒ...
ஒ...ஒ...ஒ...ஒ...
ஒ......

ஒற்றை நிலா தேய்ந்துவிட்டது
அன்பே நீயில்லை
ஜன்னல் மழை ஒய்ந்துவிட்டது
நீ ஏன் இல்லை

எச்சில் முத்தம் காய்ந்துவிட்டது
செல்லம் நீயில்லை
நெஞ்சில் இசை தீர்ந்துவிட்டது
நீ ஏன் இல்லை

கண் ரெண்டில் நான் 
கண்டேன் ஆயிரம் இரவு
உன் மார்பில் சாயாமல் 
ஏன் இந்த பிரிவு

உன்பாடு நான் 
இன்று பேசிய உதடு
மெளனத்தில் கொன்றாலே 
சாவது இனிது

கொஞ்சம் பேசு கோபம் என்ன
தூங்க கண்கள் தா...
நானே என்னை தேற்றிக்கொள்ள
வார்த்தை கொஞ்சம் தா...


பூமரங்களில் மின்மினிகளும்
தீக்காற்று வீசும்
நாள் முழுவதும் உன் நினைவுகள் 
ஒயாமல் பேசும்


முதல்முறை பழகிய தெரு இங்கே
பலமுறை பருகிய இதழ் எங்கே
உயிர் நிழல் தழுவிய அறை இங்கே
இருதயம் நிரம்பிய உறவேங்கே
ஆசை முகம்மறந்திட
கண்ணால் முடியுமா
காதல் காற்றில் உதிருமா

தூரம் தரும் வலிகளை
சொன்னால் புரியுமா
ஈரம் நதியே விலகுமா

மரித்திடும் நொடியிலும் 
உனது அன்பு உயிர்த்தரும்
சிரித்திட ஒருமுறை வா வா அன்பே


கொஞ்சம் பேசு கோபம் என்ன
தூங்க கண்கள் தா...
நானே என்னை தேற்றிக்கொள்ள
வார்த்தை கொஞ்சம் தா...

கண்ணே இன்னும் காயம் என்ன
கையில் தூங்க...வா
வார்த்தை ஒன்றும் தேவையில்லை
வாரி கொள்வேன் வா


Source: https://www.youtube.com/watch?v=O18c0dhb7Y0

Popular Posts