Showing posts with label Uma Devi. Show all posts
Showing posts with label Uma Devi. Show all posts

Saturday, June 15, 2019

NSK - Anbae Peranbae

படம் :  NGK (2019)
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர்கள் : ஸ்ரேயா கோஷல், சித் ஸ்ரீராம்
பாடல்வரிகள் : உமா தேவி

Image result for ngk tamil movie



அன்பே... அன்பே... அன்பே...
அன்பே... அன்பே... அன்பே...
பேரன்பே... பேரன்பே...
பேரன்பே... பேரன்பே...


ஏனோ இரவோடு ஒளியாய் கூடும்
உறவொன்று கேட்கிறேன்
வரைமீறும் இவளின் ஆசை
நிறைவேற பார்க்கிறேன்
நதி சேரும் காடலின் மீது
மழை நீராய் சேருவேன்
அமுதே பேரமுதே
பெண் மனதின் கனவின்
ஏக்கம் தீர்க்குமா... ஈர்க்குமா
மதியை தன் மதியை
இவன் அழகின் பிம்பம்
கண்கள் பார்க்குமா... தோற்குமா

மழைவானம் தூறும் போது
மணல் என்ன கூசுமோ
மலரோடு மலர்கள்கூட
ஊர் என்ன தூற்றுமோ
திரையே திரை கடலே
உன் அதிரும் அன்பு
மதிலை தாண்டுதே... தூண்டுதே


ஓ... நெஞ்சோரம் தூங்கும் மோகம்
கண்ணோரம் தூபம் போட
சொல்லாத ரகசியம் நீதானே
ஊர் கேட்க ஏங்குதே
தனிமையில் துணை வரும் யோசனை
நினைவிலும் மணக்குது உன் வாசனை
எல்லாமே ஒன்றாக மாறுதே
மணந்திட சேவல் கூவுதே

ஓ... கோடை காலத்தின் மேகங்கள்
கார்காலம் தூறும்ம்ம்ம்ம்
ஆள் இல்லாத காட்டிலும்
பூபாளம் கேட்கும்

அன்பே... பேரன்பே
நெடுவாழ்வின் நிழல்கள்
வண்ணம் ஆகுதே... ஆகுதே
உறவே... நம் உறவே
ஒரு அணுவின் பிரிவில்
அன்றில் ஆகுதே... ஆகுதே

ஓஓ... உறையாத சொல்லின் பொருளை
மொழி இங்கு தாங்குமோ
உறவாக அன்பில் வாழ
ஒரு ஆயுள் போதுமோ

Wednesday, May 9, 2018

Kaala - Kannammaa

ப‌டம்: காலா(2018)
இசை: சந்தோஷ் நாராயணன்
பாடியவர்கள்: ப்ரதீப் குமார், தீ, அனந்து
பாடல்வரிகள்: உமா தேவி


Image result for kaala tamil movie mp3 free download



பூவாக என் காதல் தேனுறுதோ
தேனாக தேனாக வானுறுதோ
கண்ணம்மா... கண்ணம்மா...
கண்ணிலே என்னம்மா

ஆகாயம் சாயாம தூவானமேது
ஆறாம ஆறாம காயங்களேது
கண்ணம்மா... கண்ணம்மா...
கண்ணிலே என்னம்மா

உன் காதல் வாசம் என் தேகம் பூசும்
காலங்கள் பொய்யானதே
தீராத காதல் தீயாக மோத‌
தூரங்கள் மடை மாறுமோ
வான் பார்த்து ஏங்கும் சிறு புல்லின் தாகம்
கானல்கள் நிறைவேற்றுமோ
நீரின்றி மீனும் சேறுண்டு வாழும்
வாழ்விங்கு வாழ்வாகுமோ
ஆ... ஆ... ஆ...

கண்ணம்மா... கண்ணம்மா...
கண்ணிலே என்னம்மா
ஆகாயம் சாயாம தூவானமேது
ஆறாம ஆறாம காயங்களேது


மீட்டாத வீணை தருகின்ற ராகம்
கேட்காது பூங்காந்தலே
பூட்டாத தாயின் கன‌க்கின்ற பால்போல்
என் காதல் கிடக்கின்றதே
காயங்கள் ஆற்றும் தலை கோதி தேற்றும்
காலங்கள் கை கூடுதே
தொடுவானம் இன்று நெடுவானம் ஆகி
தொடும் நேரம் தொலைவாகுதே

கண்ணம்மா... கண்ணம்மா...
கண்ணிலே என்னம்மா
ஆகாயம் சாயாம தூவானமேது
ஆறாம ஆறாம காயங்களேது
கண்ணம்மா... கண்ணம்மா...
கண்ணிலே என்னம்மா

Saturday, July 9, 2016

Kabali - Maya Nadhi

படம்: கபாலி (2016)
இசை: சந்தோஷ் நாரயணன்
பாடியவர்: அனந்து, பிரதீப் குமார், ஸ்வேதா மோகன்
பாடல்வரிகள்: உமா தேவி





நெஞ்சமெல்லாம் வண்ணம் பலவண்ணம் ஆகுதே
கண்களெல்லாம் இன்பம் கூடி கண்ணீர் ஆகுதே

நான் உனை காணும் வரையில் தாபத நிலையே
தேசங்கள் திரிந்தேன் தனியே தனியே

ஆயிரம் கோடி முறை நான் தினம் இறந்தேன்
நான் என்னை உயிர்த்தேன் பிரிவில் பிரிவில்
மாயநதி இன்று... மார்பில் வழியுதே...
தூய நரையிலும்... காதல் மலருதே...
மாயநதி இன்று... மார்பில் வழியுதே...
தூய நரையிலும்... காதல் மலருதே...


நீர் வழியே மீன்களை போல்
என் உறவை நானிழந்தேன்
நீ இருந்தும் நீ இருந்தும்
ஒரு துறவை நானடைந்தேன்
ஒளி பூக்கும் இருளே
வாழ்வின் பொருளாகி
வலி தீர்க்கும் வலியாய்
வாஞ்ஜை தரவா

மாயநதி இன்று... மார்பில் வழியுதே...
தூய நரையிலும்... காதல் மலருதே...
யானை பலமிங்கே... சீறும் உறவிலே...
போன வழியிலே... வாழ்க்கை திரும்புதே...


தேசமெல்லாம் ஆளுகின்ற‌
ஒரு படையை நான் அடைந்தேன்
காலமென்னும் வீரனிடம்
என் கொடியை நான் இழந்தேன்
மணலொரம் மழையாய்
மடிமீது விழவா... வா...
அணை மீறும் புணலாய்
மார் சாய்ந்து அழவா


மாயநதி இன்று... மார்பில் வழியுதே...
தூய நரையிலும்... காதல் மலருதே...

யானை பலமிங்கே... சீறும் உறவிலே...
போன வழியிலே... வாழ்க்கை திரும்புதே...


Popular Posts