Showing posts with label Atharvaa. Show all posts
Showing posts with label Atharvaa. Show all posts

Thursday, August 30, 2018

Imaikkaa Nodigal - Vilambara Idaiveli

ப‌டம் : இமைக்கா நொடிகள் (2018)
இசை : ஹிப்பாப் தமிழா
பாடியவர்கள் :  கிறிஸ்டொபர் ஸ்டான்லி, சுதர்சன் அசோக், ஸ்ரீனிஷா ஜெயசீலன் 
பாடல் வரிகள் : கபிலன் வைரமுத்து

Image result for Imaikkaa Nodigal



ஒளி இல்லா உன் மொழிகள்
விடை தேடும் என் விழிகள்
இமைக்காத நம் நொடிகள்
கெடிகார தேன் துளிகள்

அடி வாயார உன் காதல் நீ சொல்லடி
வாராத நடிப்பெல்லாம் வேண்டாமடி
மின்னஞ்சல் குறுஞ்செய்தி அனுப்பாதடி
கண் முன்னே உந்தன் எண்ணம் கூறடி

விளம்பர இடைவெளி மாலையில்
உன் திருமுகம் திறக்கின்ற‌ வேளையில்
என் நிறமற்ற இதயத்தில் வானவில்
அடி என்ன நிலை உந்தன் மனதில்

நான் உனதே அடி  நீ எனதா?
தெரியாமல் நானும் தேய்கிறேன்
இல்லை என்றே  சொன்னால் இன்றே
என் மோக பார்வை மூடுவேன்


காதல் பூவை நான் ஏற்றுக்கொண்டால்
உன் காத்திருப்பு நிறைவாகுமே
காத்திருப்பு அது தீர்ந்து விட்டால்
நம் கால் தடங்கள் அவை திசை மாறுமே

இவளின் கனவோ... உள்ளே ஒளியும்
இரவும் பகலும்... இதயம் வழியும்
வழியும் கனவு... இதழை அடையும்
எந்த காட்சியில்... அது வார்த்தையாகிடும்

விளம்பர இடைவெளி மாலையில்
உன் திருமுகம் திறக்கின்ற‌ வேளையில்
என் நிறமற்ற இதயத்தில் வானவில்
அடி என்ன நிலை உந்தன் மனதில்


நிலமெல்லாம் உன் தடமே
நிலவெல்லாம் உன் படமே
நிஜமெல்லாம் உன் நிறமே
நினைவெல்லாம் உன் நயமே

மதுரம் கொஞ்சம் இளைஞன் நீயோ
மத‌மே இல்லா இறைவன் நீயோ
வயதை கடிக்கும் குழந்தை நீயோ
வரம்பு மீறலோ என்னை தொடரும் தூறலோ

நான் உனதே அடி நீ எனதா?
தெரியாமலே நானும் தேய்கிறேன்
இல்லை என்றே சொன்னால் இன்றே
என் மோக பார்வை மூடுவேன்

நான் உனதே அடி நீ எனதா?
தெரியாமலே நானும் தேய்கிறேன்
இல்லை என்றே சொன்னால் இன்றே
என் மோக பார்வை மூடுவேன்

Imaikkaa Nodigal - Neeyum Naanum Anbe

ப‌டம் : இமைக்கா நொடிகள் (2018)
இசை : ஹிப்பாப் தமிழா
பாடியவர்கள் :  ரகு தீட்சித், சத்யபிரகாஷ், ஜித்தின் ராஜ் 
பாடல் வரிகள் : கபிலன்

Image result for Imaikkaa Nodigal



நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்துக்கொண்டு
வாழ்வின் எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்

ஆயுள் காலம் யாவும்
அன்பே நீயே போதும்
இமைகள் நான்கும் போர்த்தி
இதமாய் நாம் தூங்கலாம்

நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்துக்கொண்டு
வாழ்வின் எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்

என் பாதை நீ... என் பாதம் நீ
நான் போகும் தூரம் நீயடி
என் வானம் நீ... என் பூமி நீ
என் ஆதி அந்தம் நீயடி

என் பாதை நீ... என் பாதம் நீ
நான் போகும் தூரம் நீயடி
என் வானம் நீ... என் பூமி நீ
என் ஆதி அந்தம் நீயடி


தாய்மொழி போலே நீ வாழ்வாய் என்னில்
உன் நிழல் பிரிந்தாலும் வீழ்வேன் மண்ணில்
மின்மினி பூவே உன் காதல் கண்ணில்
புதிதாய் கண்டேனே என்னை உன்னில்
தாமதமாய் உன்னை கண்ட பின்பும்
தாய்மடியாய் வந்தாய் நான் தூங்கவே

நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்துக்கொண்டு
வாழ்வின் எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்


உன் தேவையை நான் தீர்க்கவே
வெந்நீரில் மீனாய் நீந்துவேன்
உன் காதலை கடன் வாங்கியே
என்னை நானே தாங்குவேன்

உன் பாதியும் என் மீதியும்
ஒன்றேதான் என்று வாழ்கிறேன்
உன் கண்களில் நீர் சிந்தினால்
அப்போதே செத்து போகிறேன்

சாலை ஓர பூக்கள் சாய்ந்து நம்மை பார்க்க
நாளை தேவை இல்லை பெண்ணே நாளும் வாழலாம்  

நீயும் நானும் அன்பே
கண்கள் கோர்த்துக்கொண்டு
வாழ்வின் எல்லை சென்று
ஒன்றாக வாழலாம்

என் பாதை நீ... என் பாதம் நீ
நான் போகும் தூரம் நீயடி
என் வானம் நீ... என் பூமி நீ
என் ஆதி அந்தம் நீயடி

என் பாதை நீ... என் பாதம் நீ
நான் போகும் தூரம் நீயடி
என் வானம் நீ... என் பூமி நீ
என் ஆதி அந்தம் நீயடி

Thursday, August 31, 2017

Irumbu Kuthirai - Penne Penne

படம்: இரும்பு குதிரை (2015)
இசை: G.V.பிரகாஷ்
பாடியவர்: G.V.பிரகாஷ், பவதாரணி, யாழினி
பாடல் வரிகள்:  தாமரை


Related image



ஹாஹா... ஹாஹாஹா... ஹாஹாஹாஹா...
ஹாஹா... ஹாஹாஹா... ஹாஹாஹாஹா...

பெண்ணே பெண்ணே அலைகிறேன்
அன்றிளாகி அழுகிறேன் 
பெண்ணே பெண்ணே நீயும் எங்கே 
என்றே தேடி திகைக்கிறேன்  

நீ சொல்லாததால் மொழி இல்லை 
நீ செல்லாததால் வழி இல்லை 
நீ பாராததால் ஒளி இல்லை 
நீ தாராததால் நிழல் இல்லை 
உயிர் போனாலும் போகட்டும் 
இப்போதே பார்த்தாக வேண்டும்  
நான் உன்னை உன்னை 

ஹாஹா... ஹாஹாஹா... ஹாஹாஹாஹா...

ஓ... பெண்ணே பெண்ணே அலைகிறேன்
அன்றிளாகி அழுகிறேன் 


காற்றை தூதாக நான்விட 
கண்ணே உன் கூந்தல் கோதி பாறாதோ 
உன் கண்ணின் மை பூசி நீவிட 
காற்றும் பெண்ணாகி இங்கு வாராதோ 
முன்னம் முன்னூறு ஆண்டுகள் 
ஒன்றாய் நாம் வாழ்ந்த ஞாபகம் 
ஏங்கி நான் பெற்ற என் வரம் 
ஐயோ இப்போது யாரிடம் 
உன்னை பாராது முத்தம் தாராது 
இனி தூங்காது என் கண்களே 


பெண்ணே பெண்ணே அலைகிறேன்
அன்றிளாகி கரைகிறேன்
பெண்ணே பெண்ணே நீயும் எங்கே 
என்றே தேடி திகைக்கிறேன்  

நீ சொல்லாததால் மொழி இல்லை 
நீ செல்லாததால் வழி இல்லை 
நீ பாராததால் ஒளி இல்லை 
நீ தாராததால் நிழல் இல்லை 
உயிர் போனாலும் போகட்டும் 
இப்போதே பார்த்தாக வேண்டும்  
நான் உன்னை உன்னை 

Wednesday, August 30, 2017

Gemini Ganeshanum Suruli Raajanum - Ammukuttiye

படம்: ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் (2017)
இசை: D. இமான்
பாடியவர்: ப்ரதீப் குமார்
பாடல் வரிகள்:  யுகபாரதி


Image result for Gemini Ganeshanum Suruli Raajanum



அம்முகுட்டியே அடியே உன்ன‌ எண்ணி கலஞ்சேன்டி
குட்டி குட்டியா கவித சொல்லி கட்டு கொலஞ்சென்டி
உன்ன‌ பெத்த தாய காட்டடி கும்பிட்டுப் போக நான் ரெடி

செல்லக்குட்டி நீயும் பேச சீனி மூட்ட கொட்டுதடி
கன்னுக்குட்டி போல ஆச காதல் பாட்ட‌ கட்டுதடி
அம்முகுட்டியே அடியே உன்ன‌ எண்ணி கலஞ்சேன்டி
குட்டி குட்டியா கவித சொல்லி கட்டு கொலஞ்சென்டி


தங்க செல போல மங்கிடாம என்ன ஓரசி போகுற‌
அங்கம் அழகாக செல்லம் நீயும் எங்க அரிசி வாங்குற
ஒட்டுமொத்த ஊரும் அண்ணாந்து பாக்க சிட்டாகுற‌
முத்தம் ஒண்ணு கேட்டா மின்சாரம் போல கட்டாகுற‌
பொங்க வைக்கும் நீ பால் நொற நெஞ்ச தொட்ட மூணாம்பிற
சொகமா... உசுர... கவ்வுற...

அம்முகுட்டியே அடியே உன்ன‌ எண்ணி கலஞ்சேன்டி
குட்டி குட்டியா கவித சொல்லி கட்டு கொலஞ்சென்டி


எத்தனையோ பேர‌ தள்ளி போனு சொல்லி ஜெயிச்ச ஆம்பள
உன்னுடைய பார்வ கொக்கி போட கண்ணு முழியும் தூங்கல
தள்ளுவண்டி போல முன்னால நானும் தள்ளாடல...
முன்ன வந்து நீயும் கிக்காக‌ பேச உக்காரல‌
ஒண்டி கட்ட நான் வீட்டுல ஒட்டிக்கிட்ட நீ மூச்சுல
நெசமா... கதையும்... சொல்லல...

அம்முகுட்டியே அடியே உன்ன‌ எண்ணி கலஞ்சேன்டி
குட்டி குட்டியா கவித சொல்லி கட்டு கொலஞ்சென்டி
உன்ன‌ பெத்த தாய காட்டடி கும்பிட்டுப் போக நான் ரெடி
செல்லக்குட்டி நீயும் பேச சீனி மூட்ட கொட்டுதடி
கண்ணுக்குட்டி போல ஆச காதல் பாட்ட‌ கட்டுதடி...

Wednesday, August 3, 2016

Eetti - Naan Pudicha

படம்: ஈட்டி (2015)
இசை: G.V.பிரகாஷ்
பாடியவர்கள்: G.V.பிரகாஷ், சக்திஸ்ரீ கோபாலன்
பாடல்வரிகள்: ஏகாதசி


Image result for Eetti





நான் புடிச்ச மொசக்குட்டியே
ஏன் மனச கசக்கிட்டியே
உன்னோட நானும் சேர்ந்திட சேர்ந்திட
நத்தைக்கு கூடா வாழ்ந்திட வாழ்ந்திட
வேண்டான்னு சொல்லாத
வேல் குத்தி கொல்லாத
போகாது உன் கிறுக்கு

என் உசுர திருடிபுட்டு
ஏன்டா பையா அடகுவச்ச
கண்ணாடி பொம்மநா பாத்துக்க பாத்துக்க
கையால என்னத்தான் போத்திக்க‌ போத்திக்க‌
சாச்சாயி சொல்லால‌ மூச்செல்லாம் உன்மேல
காத்தாகி உன்ன தொடுவேன்


மீச கொண்டு ஊசி நான் போடணும்

ஆசை வைச்ச ஆள தான் பாக்கணும்

பாயிக்கு லீவு விட்டாயே

நோய்க்கு டோக்கன் தந்தாயே

நாற்காலியா நான் மாறவா
தேவதையே உட்கார வா

தூரம் தானே ஈரம் பேசும்
அருகே வந்தால் மோசமாய் போகுதே

நான் புடிச்ச மொசக்குட்டியே
ஏன் மனச கசக்கிட்டியே


போனு நம்பர் போதைய ஏத்துது

பேச்சு இப்போ பாதைய மாத்துது

நூலின்றி ஊசி கோர்த்தேனே

மீன் வாங்கி சாம்பார் வச்சேனே

ஒ... ஹைகூ பேச்சா ஆரம்பிச்சி
நாவல் போலே ஆகிப்போச்சே

பட்டாம்பூச்சி ரெக்கை வாங்கி
இதயம் ரெண்டில் வண்ணங்கள் பூசுதே

ஏ... நான் புடிச்ச மொசக்குட்டியே
ஏன் மனச கசக்கிட்டியே
உன்னோட நானும் சேர்ந்திட சேர்ந்திட
நத்தைக்கு கூடா வாழ்ந்திட வாழ்ந்திட
வேண்டான்னு சொல்லாத
வேல் குத்தி கொல்லாத
போகாது உன் கிறுக்கு

Tuesday, August 4, 2015

சண்டிவீரன் - அலுங்குறேன் குலுங்குறேன்

படம்: சண்டிவீரன்   (2015)
இசை: அருணகிரி
பாடியவர்: நமீதா பாபு, பிரசன்னா ராவ்
பாடல்வரிகள்: மோகன் ராஜன்




அலுங்குறேன் குலுங்குறேன் ஒரு ஆச நெஞ்சுல
அதுங்குறேன் இதுங்குறேன் ஒன்னும் பேச தோணல
நடயா நடந்தேன் கெடயா கெடந்தேன்
மினுங்குற சிணுங்குற தழும்பொனு தழும்புற

அலுங்குறேன் குலுங்குறேன் ஒரு ஆச நெஞ்சுல
அதுங்குறேன் இதுங்குறேன் ஒன்னும் பேச தோணல


பஞ்சி நீ, பஞ்சுல பதுங்கி வரும் நூலு நான்
அஞ்சி நீ, அஞ்சுல அடங்கி வரும் நாலு  நான்

பந்த நீ, பந்தல தாங்குற காலு நான்
பந்து நீ, பந்துல நிரம்பி நிக்கும் காத்து நான்

ஆத்தாடி என்ன ஆத்துனு ஆத்துன
காத்தாகி  மெல்ல தூத்துனு தூத்துன
காதல மீட்டுன கடவுள காட்டுன

அலுங்குறேன் குலுங்குறேன் ஒரு ஆச நெஞ்சுல
அதுங்குறேன் இதுங்குறேன் ஒன்னும் பேச தோணல
நடயா நடந்தேன் கெடயா கெடந்தேன்

மினுங்குற சிணுங்குற தழும்பொனு தழும்புற
அலுங்குறேன் குலுங்குறேன் ஒரு ஆச நெஞ்சுல
அதுங்குறேன் இதுங்குறேன் ஒன்னும் பேச தோணல


கோணலா மாணலா இருந்த மனம் நேருல
காலு தான் போகுதே காதலென்னும் ஊருல

நாணலா நாணலா அசஞ்சி மனம் ஆடல
தொலஞ்சது தெரிஞ்சும் நான்  இன்னும் ஏன் தேடல

கண்ணெல்லாம் ஒன் காச்சிதான் காச்சிதான்
காதெல்லாம் ஒன் பேச்சிதான் பேச்சிதான்

காதல மீட்டுன கடவுள காட்டுன
அலுங்குறேன் குலுங்குறேன் ஒரு ஆச நெஞ்சுல
அதுங்குறேன் இதுங்குறேன் ஒன்னும் பேச தோணல
நடயா நடந்தேன் கெடயா கெடந்தேன்
மினுங்குற சிணுங்குற தழும்பொனு தழும்புற

Popular Posts