Showing posts with label Sri Divya. Show all posts
Showing posts with label Sri Divya. Show all posts

Thursday, August 16, 2018

Varuthapadatha Valibar Sangam - Yennada Yennada

படம்: வருத்தப்படாத வாலிபர் சங்கம் (2013)
இசை: D.இமான்
பாடியவர்கள்: ஸ்ரேயா கோஷல், சூரஜ் சந்தோஷ்,
 ஸ்வேதா சுரேஷ் (விசில்)

பாடல்வரிகள்: யுகபாரதி






யென்னடா யென்னடா... யென்னடா யென்னடா...


யென்னடா யென்னடா உன்னாலே தொல்லையா போச்சு

சொல்லவே இல்லையே தன்னாலே என்னவோ ஆச்சு
பாராமல் பொலம்பவிடும் பார்த்தாலே 
பதுங்கிவிடும் வால் பையன் நீதானடா 
யென்னடா யென்னடா உன்னாலே தொல்லையா போச்சு
சொல்லவே இல்லையே தன்னாலே என்னவோ ஆச்சு

ஓ... நீ லேசாக பார்த்தாலும் லூசாகி போறேன்
பச்ச நெருப்பா பத்திக்கிடுறேன் 
விளையாட்டு பொம்மைய போல உடைஞ்சேனே நானும் கூட
அநியாயம் பண்ணுற காதல் அடங்காம ஆட்டம் போட
பொல்லாத உன் நெனப்பு எப்போதும் போட்டி போட்டு கொல்ல
போகாத கோயிலுக்கும் நான் போவேன் பூச பண்ணுறேன்..
என்ன சொல்ல...

யென்னடா... 
ஓ.யென்னடா...

ஓ... யென்னடா யென்னடா... உன்னாலே தொல்லையா போச்சு

சொல்லவே இல்லையே.. தன்னாலே என்னவோ ஆச்சு
பாராமல் பொலம்பவிடும் பார்த்தாலே 
பதுங்கிவிடும் வால் பையன் நீதானேடா 

யென்னடா...  யென்னடா...

யென்னடா...  யென்னடா...

Wednesday, March 8, 2017

Maruthu - Karuvakaatu Karuvaaya

படம் : ம‌ருது (2016)
இசை : D. இமான்
பாடியவர்கள் : வந்தனா சீனிவாசன், ஜித்தின் ராஜ், ஜெயமூர்த்தி
பாடல்வரிகள்: வைரமுத்து


Image result





கருவகாட்டு கருவாயா
கூட காலமெல்லாம் வருவாயா
முத்தம் கொடுக்கும் திருவாயா
என்ன மூச்சுமுட்ட விடுவாயா
கால் வளந்த மன்னவனே... வா...
காவலுக்கு நின்னவனே... வா... வா...

நான் வெல்லாங்கரட்டு முளைச்ச மொட்டு
உன் வேட்டி எடுத்து வேலி கட்டு
உன் அண்ணாக்கயத்தில் முடிஞ்சிகிட்டு
என் ஆயுள் முழுக்க அன்ப கொட்டு

தானே நானே... த‌னன்னனே....
தானே த‌னன்னனே....
தானே நானே... தானே நானே...

தானே ந‌னன்னனே....


தன்னந்தனி மானு
இவ தண்ணியில்லா மீனு
மஞ்சத்தாலி போட்ட 
நீ மட்டுந்தானே ஆளு

குத்தமில்லா பொண்ணு
நீ குத்தவச்ச தேனு
கண்ணுக்குள்ள வச்சு 
உன்ன காப்பாத்துவேன் நானு

தொடுத்த பூவுக்கு நார் பொறுப்பு
என் துவண்ட‌ சேலைக்கு நீ பொறுப்பு
இழுத்த இழுப்புக்கு நான் பொறுப்பு
என் இடுப்பு வலிக்கு நீ பொறுப்பு

நட்சத்திரம் எத்தனையோ
எண்ணிக்கை தெரிஞ்சது எனக்கு
மச்சம் மட்டும் எத்தனையோ
இன்னமும் எடுக்கல கணக்கு

நான் வெல்லாங்கரட்டு முளைச்ச மொட்டு
உன் வேட்டி எடுத்து வேலி கட்டு
உன் அண்ணாக்கயத்தில் முடிஞ்சிகிட்டு
என் ஆயுள் முழுக்க அன்ப கொட்டு
கருவகாட்டு கருவாயா
கூட காலமெல்லாம் வருவாயா
முத்தம் கொடுக்கும் திருவாயா...


ஏ... பாசமுள்ள நெஞ்சில்
நான் வாசம் பண்ணப் போறேன்
வாரம் வரும் முன்னே 
உன்ன மாசம் பண்ணப்போறேன்

சாமக்கோழி கூவ
உன் சங்கதிக்கு வாரேன்
ஒத்த முத்தம் தந்தா 
நான் ரெட்டப்புள்ள தாரேன்

பாலு தயிரா உறையும் முன்னே
பத்து தடவ சேர்ந்திருப்போம்
தியிரு மோரா மாருமட்டும்
உயிரும் உயிரும் கலந்திருப்போம்

உசுரையும் மானத்தையும் உங்கிட்ட
கொடுத்திட்டேன் தலைவா
ஏழுசென்மம் தீரும் மட்டும் 
எனக்கு இருக்கனும் உறவா

நான் வெல்லாங்கரட்டு முளைச்ச மொட்டு
உன் வேட்டி எடுத்து வேலி கட்டு
உன் அண்ணாக்கயத்தில் முடிஞ்சிகிட்டு
என் ஆயுள் முழுக்க அன்ப கொட்டு
கருவகாட்டு கருவாயா

Friday, December 2, 2016

Maaveeran Kittu - Kannadikkala

படம்: மாவீரன் கிட்டு (2016)
இசை:  D. இமான்
பாடியவர்கள்: பூஜா வைத்யநாத், ஜித்தின் ராஜ்
பாடல்வரிகள்: யுகபாரதி 





கண்ணடிக்கல கைப்புடிக்கல
உள்ள வந்து ஒட்டிக்கிட்ட காதல் 
தாலாட்ட மெல்ல வாலாட்ட
கண்ணடிக்கல கைப்புடிக்கல
உள்ள வந்து ஒட்டிக்கிட்ட காதல்
தாலாட்ட மெல்ல தாலாட்ட
என் பாட்ட நித்தம் நீ கேட்ட
 
கண்ணடிக்கல கைப்புடிக்கல
பச்சப்பொய்ய சொல்ல சொல்லி வாங்கும்
பாராட்ட வண்ண பூ மூட்ட
கண்ணடிக்கல கைப்புடிக்கல
பச்சப்பொய்ய சொல்ல சொல்லி வாங்கும்
பாராட்ட வண்ண பூ மூட்ட
என் கூட்ட விட்டு போமாட்ட
 
உன்னையே தினம் தினம் இவள் ம‌னம் சுத்துதே தூசியா
என்னவோ சுகம் சுகம் அதில் விழ‌ என்னுதே ஈசியா
 
அருவால தூக்கும் ஆசை ஆசையா ஓ...ஓ...ஓ...

கண்ணடிக்கல கைப்புடிக்கல
உள்ள வந்து ஒட்டிக்கிட்ட காதல் தாலாட்ட
மெல்ல வாலாட்ட
 

சிலம்புகள் பறை இசை கேட்க
பர‌ம்பொருள் தெருவையும் பார்க்க
சிலம்புகள் பறை இசை கேட்க
பர‌ம்பொருள் தெருவையும் பார்க்க
 
வந்ததென்ன சொப்பனங்கள் சொல்லிடாமலே
உன்னையன்றி செல்வமில்லை இந்த வாழ்விலே
வந்ததென்ன சொப்பனங்கள் சொல்லிடாமலே
உன்னையன்றி செல்வமில்லை இந்த வாழ்விலே
 
அல்லல்படும் வாழ்வும் அழகாகும் இனிமேலே
கொட்டி கொடுத்தாலும் கிடைக்காதே உனைப்போல
 
உப்பளத்தில் விழுந்து நீ முத்தெடுத்து போனாயே உயிரே
 

கண்ணடிக்கல

கைப்புடிக்கல
 
உள்ள வந்து ஒட்டிக்கிட்ட காதல்
 
தாலாட்ட

மெல்ல வாலாட்ட 

கண்ணடிக்கல  கைப்புடிக்கல
உள்ள வந்து ஒட்டிக்கிட்ட காதல்
தாலாட்ட  மெல்ல வாலாட்ட

வாலாட்ட......
என் பாட்ட நித்தம் நீ கேட்ட
 
உன்னையே தினம் தினம் இவள் ம‌னம் சுத்துதே தூசியா
என்னவோ சுகம் சுகம் அதில் விழ‌ என்னுதே ஈசியா
 
அருவால தூக்கும் ஆசை ஆசையா ஹா... ஹா... ஹா...


Maaveeran Kittu - Elanthaari

படம்: மாவீரன் கிட்டு (2016)
இசை:  D. இமான்
பாடியவர்கள்: பூஜா வைத்யநாத்
பாடல்வரிகள்: யுகபாரதி 







இளந்தாரி சொல்லு என்ன வேணும்
தருவேனே நெஞ்ச அள்ளி நானும்
உன பாத்தா மல்லுக்கட்டத் தோணும்
ஒதுங்காம ஒத்துக்கொள்ளு போதும்
வெரசா தொட வா... முழுசா கெடவா
நெருங்காம தூர நின்னு நெல்லுக்குத்தாத

இளந்தாரி சொல்லு என்ன வேணும்
தருவேனே நெஞ்ச அள்ளி நானும்
உன பாத்தா மல்லுக்கட்டத் தோணும்
ஒதுங்காம ஒத்துக்கொள்ளு போதும்
 

ஒன்ன எனக்கு ரொம்பப் பிடிக்கும்
சொல்லுறத கேளு
கண்ணு முழிச்சா ஒன்ன நெனச்சி
சுத்துது என் காலு
குத்துக்கறிப்போல நீயும் ஏன்
என்ன கொடை சாய்க்குற
வெக்கையில‌ தூறல் மாதிரி
நெஞ்சுருக பார்க்குற
ருவாட்ட பாத்தா வட்டம் போடும் காக்கா
அதுபோல தானே ஒன்னா சேரும் வாழ்க்க
மனசாலே என நீயும் மஞ்சக்குளிக்க வைய்யி 

இளந்தாரி சொல்லு என்ன வேணும்
தருவேனே நெஞ்ச அள்ளி நானும்

 
நெஞ்சப் பொளந்து உள்ள இருக்கும்
உன்ன நெதம் பாப்பேன்
உச்சந்தலையில் அம்மி அரைக்கும்
முத்தம் இட கேட்பேன்
மெத்தையில தூங்கிடாமலே வித்தைகள காட்டிட
கையில் உள்ள ரேகை தேயலாம்
கட்டிக்கொள்ள பார்த்திட
உனக்காக தானே உப்பு புளி காரம்
ஒதுக்காம வாங்கி திங்குது என் தேகம்
தலவாழ இல போட்டு தண்ணி தெளிச்சி வைய்யி

இளந்தாரி சொல்லு என்ன வேணும்
தருவேனே நெஞ்ச அள்ளி நானும் 
வெரசா தொட வா... முழுசா கெடவா
நெருங்காம தூர நின்னு நெல்லுக்குத்தாத

இளந்தாரி... ம்...ம்....ம்...
தருவேனே... ம்...ம்....ம்...
இளந்தாரி...

Maaveeran Kittu - Inaivom

படம்: மாவீரன் கிட்டு (2016)
இசை:  D. இமான்
பாடியவர்கள்: பிரதீப் விஜய்
பாடல்வரிகள்: யுகபாரதி






உயிரெல்லாம் ஒன்றே உறவாவோம் இன்றே
காக்கைக் குருவி எங்கள் ஜாதி
என்றே சொன்னான் பாரதி
வாழும் உலகை அன்பால் வெல்ல
செய்வோம் செய்வோம் ஓர் விதி
நேயம் இருந்தால் போதுமடா
காயம் உடனே ஆறுமடா... ஆறுமடா...

இணைவோம்... இணைவோம்...
இதயம் பூக்க இணைவோம்...
இணைவோம்... இணைவோம்...
இடரை நீக்க இணைவோம்... 
இணைவோம்... இணைவோம்...
மனிதம் காக்க இணைவோம்... 
இணைவோம்... ஆ... ஆ... ஆஆஆஆஆ...

உயிரெல்லாம்… ஒன்றே உறவாவோம்…… இன்றே…
மேலே என்ன கீழே என்ன
ஏனோ இந்த பாடுகள்
ஆசை அன்பு காதல் கொண்டால்
தீரும் எல்லைக் கோடுகள்
வாசம் மலரின் மேடையடா
நேசம் உலகின் ஆடையடா... ஆடையடா...

இணைவோம்... இணைவோம்...
இதயம் பூக்க இணைவோம்...
இணைவோம்... இணைவோம்...
இடரை நீக்க இணைவோம்... 
இணைவோம்... இணைவோம்...
மனிதம் காக்க இணைவோம்... 
இணைவோம்………

ஏழை கோழை என்றே பார்த்து
வானம் பொழிவது இல்லையடா
நீயா நானா சண்டைப்போட
பூமி சுழல்வது இல்லையடா
மரமென்றால் காற்று மணலென்றால் ஊற்று
இயற்கையில் ஏது பிரிவினை
இணைவது தானே உறுதுணை
எதுவும் இங்கே கைவசமாக
அறிவோம் அறிவோம் மனிதமே
முடியும் என்றால் உதவிகள் செய்து
கலைவோம் கலைவோம் துயரமே... துயரமே...

இணைவோம்... இணைவோம்...
இதயம் பூக்க இணைவோம்...
இணைவோம்... இணைவோம்...
இடரை நீக்க இணைவோம்... 
இணைவோம்... இணைவோம்...
மனிதம் காக்க இணைவோம்... 
இணைவோம்...

Wednesday, August 3, 2016

Eetti - Naan Pudicha

படம்: ஈட்டி (2015)
இசை: G.V.பிரகாஷ்
பாடியவர்கள்: G.V.பிரகாஷ், சக்திஸ்ரீ கோபாலன்
பாடல்வரிகள்: ஏகாதசி


Image result for Eetti





நான் புடிச்ச மொசக்குட்டியே
ஏன் மனச கசக்கிட்டியே
உன்னோட நானும் சேர்ந்திட சேர்ந்திட
நத்தைக்கு கூடா வாழ்ந்திட வாழ்ந்திட
வேண்டான்னு சொல்லாத
வேல் குத்தி கொல்லாத
போகாது உன் கிறுக்கு

என் உசுர திருடிபுட்டு
ஏன்டா பையா அடகுவச்ச
கண்ணாடி பொம்மநா பாத்துக்க பாத்துக்க
கையால என்னத்தான் போத்திக்க‌ போத்திக்க‌
சாச்சாயி சொல்லால‌ மூச்செல்லாம் உன்மேல
காத்தாகி உன்ன தொடுவேன்


மீச கொண்டு ஊசி நான் போடணும்

ஆசை வைச்ச ஆள தான் பாக்கணும்

பாயிக்கு லீவு விட்டாயே

நோய்க்கு டோக்கன் தந்தாயே

நாற்காலியா நான் மாறவா
தேவதையே உட்கார வா

தூரம் தானே ஈரம் பேசும்
அருகே வந்தால் மோசமாய் போகுதே

நான் புடிச்ச மொசக்குட்டியே
ஏன் மனச கசக்கிட்டியே


போனு நம்பர் போதைய ஏத்துது

பேச்சு இப்போ பாதைய மாத்துது

நூலின்றி ஊசி கோர்த்தேனே

மீன் வாங்கி சாம்பார் வச்சேனே

ஒ... ஹைகூ பேச்சா ஆரம்பிச்சி
நாவல் போலே ஆகிப்போச்சே

பட்டாம்பூச்சி ரெக்கை வாங்கி
இதயம் ரெண்டில் வண்ணங்கள் பூசுதே

ஏ... நான் புடிச்ச மொசக்குட்டியே
ஏன் மனச கசக்கிட்டியே
உன்னோட நானும் சேர்ந்திட சேர்ந்திட
நத்தைக்கு கூடா வாழ்ந்திட வாழ்ந்திட
வேண்டான்னு சொல்லாத
வேல் குத்தி கொல்லாத
போகாது உன் கிறுக்கு

Friday, August 21, 2015

காக்கி சட்டை - கட்டிக்கிடும்

படம்: காக்கி சட்டை (2015)
இசை: அனிருத்
பாடியவர்: அந்தோணிதாசன், அனிதா, மானசி
பாடல்வரிகள்: அந்தோணிதாசன்




ஏடியே.... 
கட்டிக்கிடும் முன்னே நாம ஒத்திகைய பாக்கனுடி
கத்துகடி மாமங்கிட்ட அத்தனையும் அத்துபடி
விட மாட்டேன் பொண்ணே நானே
உன்ன பிச்சி தின்ன போறேன் மானே
அடியே கட்டிக்கிடும் முன்னே நாம ஒத்திகைய பாக்கனுடி
கத்துகடி மாமங்கிட்ட அத்தனையும் அத்துபடி
விட மாட்டேன் பொண்ணே நானே
உன்ன பிச்சி தின்ன போறேன் மானே

ஹோ... கண்ணே உன் கன்னம் ரெண்டும் முள்ளேயில்லா ரோசாவடி
பொண்ணே உன் கெண்ட காலு மோகத்தத்தான் தூண்டுதடி
ஓடாதே என் புள்ளி மானே நீ இல்லயினா வெம்பி போனேன்
அச்சாரம் போட்ட பின்னே ஆசைக்கு என்ன வேலியடி
ஆத்தா உன் கோயிலுக்கு பூச பண்ண நானும் ரெடி
உன் சன்னதி தேடி தானே அடி ஓடி இங்கே வந்தேன் நானே

ஒதுங்கி போடா தள்ளி நான் முள்ளிருக்கும் கள்ளி
என்ன தொட்டுபுட்டா அங்க இங்க வெட்டி வைப்பேனே
அடிக்கீறியே சொல்லி அர சைசு கிள்ளி
என்கிட்ட வந்தா வால ஓட்ட நறுக்கிடுவேனே

கட்டிகிட... கட்டிகிட... கட்டிகிட... கட்டிகிட... கட்டிகிட.......

கட்டிக்கிடும் முன்னே நாம ஒத்திகைய பாக்கனுடி
கத்துகடி மாமங்கிட்ட அத்தனையும் அத்துபடி
விட மாட்டேன் பொண்ணே நானே
உன்ன பிச்சி தின்ன போறேன் நானே.. ஏடியே....


ஏடியே.... ஏடியே....
தாரம் ஆதாரம் ஆக போறே சேதாரமா நீ வா

ஆக்க பொறுத்த என் மாமா உனக்கு ஆற பொறுக்கலையா

ஆஆஆ... வாடி என் ஜோடி நீ தானடி ஒரசி பாத்துக்கலாம்

வாரேன் சம்சாரம் ஆன பின்னே பசிய தீத்துக்கலாம்

அடி பித்தனானே உன்னாலே சித்திரமே
என்ன கொல்லாம கொல்லுறியே
நான் தினுசாக பொறந்தேனே உனக்காக வளந்தேனே
அள்ளாம அள்ளுறியே

ஒதுங்கி போடா தள்ளி நான் முள்ளிருக்கும் கள்ளி
என்ன தொட்டுபுட்டா அங்க இங்க வெட்டி வைப்பேனே
அடிக்கீறியே சொல்லி அர சைசு கிள்ளி
என்கிட்ட வந்தா வால ஓட்ட நறுக்கிடுவேனே

கட்டிகிட... கட்டிகிட... கட்டிகிட... கட்டிகிட...  கட்டிகிட.......

ஏடியே.... கட்டிக்கிடும் முன்னே நாம ஒத்திகைய பாக்கனுடி
கத்துகடி மாமங்கிட்ட அத்தனையும் அத்துபடி
விட மாட்டேன் பொண்ணே நானே
உன்ன பிச்சி தின்ன போறேன் மானே

கண்ணே உன் கன்னம் ரெண்டும் முள்ளேயில்லா ரோசாவடி
பொண்ணே உன் கெண்ட காலு மோகத்தத்தான் தூண்டுதடி
ஓடாதே என் புள்ளி மானே நீ இல்லயினா வெம்பி போனேன்
அச்சாரம் போட்ட பின்னே ஆசைக்கு என்ன வேலியடி
ஆத்தா உன் கோயிலுக்கு பூச பண்ண நானும் ரெடி
உன் சன்னதி தேடி தானே அடி ஓடி இங்கே வந்தேன் நானே

ஒதுங்கி போடா தள்ளி நான் முள்ளிருக்கும் கள்ளி
என்ன தொட்டுபுட்டா அங்க இங்க வெட்டி வைப்பேனே
அடிக்கீறியே சொல்லி அர சைசு கிள்ளி
என்கிட்ட வந்தா வால ஓட்ட நறுக்கிடுவேனே

கட்டிகிட... கட்டிகிட... கட்டிகிட... கட்டிகிட...  கட்டி....கிட.......

Thursday, August 20, 2015

வெள்ளக்கார துரை - அம்மாடி உன்

படம்: வெள்ளக்கார துரை (2014)
இசை: D. இமான்
பாடியவர்: சத்ய பிரகாஷ்
பாடல்வரிகள்: யுகபாரதி




அம்மாடி ன் அழகு செம தூளு
உன்ன கண்டா பொழுதும் திருநாளு
ன பாத்துதான் தடுமாறுறேன்
புயல் காத்துல பொறி ஆகுறேன்
அடிமாடு நான் வெரண்டு ஓடுறேன்
ஒரு வார்த்த சொல்லு உயிர் தாரேன்

அம்மாடி உன் அழகு செம தூளு
உன்ன கண்டா போதும் திருநாளு


முன்னழகில் நீயும் சீதை
பின்னழகில் ஏறும் போத
பொட்ட புள்ள உன நான் பாத்து
சொட்டு சொட்ட கரஞ்சேனே
ரெக்கக்கட்டி பறந்த ஆளு
பொட்டி குள்ள அடஞ்சேனே
ஆத்தாடி நீதான் அழுக்கடையாத பால் நுரை
சேத்தோட வாழ்ந்தும் கறை படியாத தாமரை
பூக்குற என தாக்குற

அம்மாடி உன் அழகு செம தூளு
உன்ன கண்டா பொழுதும் திருநாளு


கண்ணு ரெண்டு போத வில்ல
கட்டழக பாத்து சொல்ல
ஓட்டு மொத்த ஒயில காண
பத்து சென்மம் எடுப்பேனே
கட்டு செட்டா கனிஞ்ச உன்ன
கட்டி வச்சு ரசிப்பேனே
தேசாதி தேசம் வர திரிஞ்ஜேனே ஆம்பள
ஆனாலும் கூட ரதி உனப்போல பாக்கல
ஏட்டுல எழும் பாட்டுல

அம்மாடி உன் அழகு செம தூளு
உன்ன கண்டா பொழுதும் திருநாளு
உன்ன பார்த்துதான் தடுமாறுறேன்
புயல் காத்துல பொறி ஆகுறேன்
அடிமாடு நான் வெரண்டு ஓடுறேன்
ஒரு வார்த்த சொல்லு உயிர் தாரேன்

அம்மாடி உன் அழகு செம தூளு
உன்ன கண்டா போதும் திருநாளு

Friday, April 10, 2015

ஜீவா - நேற்று நான் பார்த்ததும்

படம் : ஜீவா  (2014)
இசை : D.இமான்
பாடியவர்கள் : சத்யபிரகாஷ்
பாடல்வரிகள் : மதன்கார்கி







நேற்று நான் பார்த்ததும் உன்னை தானா சொல்
இன்று நான் காண்பதும் உன்னை தானா சொல்
ஆடை மாற ஜாடை மாற
கூந்தல் பாதம் யாவும் மாற
கண்களோ உன் கண்களோ ஹே மாறவில்லை
கண்களோ என் கண்களோ ஏமாறவில்லை பொய் கூறவில்லை


நேற்று நான் பார்த்ததும் உன்னை தானா சொல்
இன்று நான் காண்பதும் உன்னை தானா சொல்
பள்ளிகூட வாசம் மீண்டும்
தள்ளி போன நேசம் மீண்டும்
தூரத்தில் உன் வாசனை எனை தாக்குதடி
பார்வையை உன் பார்வையை எதிர் பாக்குதடி மனம் கேட்குதடி


Popular Posts