Showing posts with label Anandhi. Show all posts
Showing posts with label Anandhi. Show all posts

Wednesday, September 19, 2018

Pariyerum Perumal - Vaa Rayil Vida Polaama

படம் : பரியேறும் பெருமாள் (2018)
இசை : சந்தோஷ் நாராயணன்
பாடியவர்கள் : ப்ரீதிகா
பாடல்வரிகள் : விவேக்

Related image



வா ரயில் விட போலாமா
உனக்கின்னும் கோவமா
மன்னிச்சிடு போலாம் வா

ஏன் எட்டி நின்னு பாக்குற நீ
கைபிடிச்சு போவேமே
அதுபோல போலாம் வா

நீ புடிக்கும் எனக்கு
உனக்கு நான் காயா பழமா
நீ வரீயா நெசமா சொல்லு
நான் வருவேனே

வா ரயில் விட போலாமா
உனக்கின்னும் கோவமா
மன்னிச்சிடு போலாம் வா


இங்க நான் தனியா இருக்கேன்
எதுக்குனு தெரியுமா
நீயும் தான் தனியா இருக்க‌
வந்து உன்ன பாக்கவா

ஒசத்தி கொறச்சல்
என்னவோ எனக்கெதும் புரியல‌
அழுக்கா கருப்பா
அது என்னவோ எனக்கது தெரியல‌

நீயும் வேற நானும் வேற
அம்மா அப்பா சொல்லிட்டாங்க
நம்பாம நான் ஓடி வந்தேன்
எங்க உன்ன காணும் இங்க

வா ரயில் விட போலாமா
வா ரயில் விட போலாமா
வந்துடு நீ சீக்கிரம்
விளையாட போலாம் வா

வா ரயில் விட போலாமா
கைபிடிச்சு போவேமே அதுபோல போலாம் வா

வா வா ரயில் விட போலாமா
வந்துடு நீ சீக்கிரம்
விளையாட போலாம் வா
வா ரயில் விட போலாமா
கைபிடிச்சு போவேமே அதுபோல போலாம் வா
வா வா ரயில் விட போலாமா

வா... ரயில் விட போலாமா...

Saturday, May 19, 2018

Pariyerum Perumal - Engum Pugazh

ப‌டம்: பரியேறும்பெருமாள் (2018)
இசை : சந்தோஷ் நாராயணன்
பாடகர்கள் : அந்தோணிதாசன், கல்லூர் மாரியப்பன்
பாடல்வரிகள்: மாரி செல்வராஜ்

Related image


Download this MP3

எங்கும் புகழ் துவங்க‌........
ஆமா... ஆமா சாமி... போடு...
இங்கு நானும் நான் துவங்க... 
ஒ ஹோ...
அன்னையான சுந்தரியே ஞானதங்கமே
ஆமா... ஆமா... ஆமா...
பறக்கவிட்டு தேடலானோம் தேவதைய காணோமே

ம்ம்... ம்ம்... ம்ம்... ம்ம்...
ம்ம்... ம்ம்... ம்ம்... ம்ம்...

எங்கும் புகழ் துவங்க இங்கு நானும் நான் துவங்க
எங்கும் புகழ் துவங்க இங்கு நானும் நான் துவங்க
அன்னையான சுந்தரியே ஞானதங்கமே
பறக்கவிட்டு தேடலானோம் தேவதைய காணோமே
அன்னையான சுந்தரியே ஞானதங்கமே
பறக்கவிட்டு தேடலானோம் தேவதைய காணோமே


பள்ளிகூடம் படிக்க வந்தாய் பவுசாக கூட இருந்தாய்
பள்ளிகூடம் படிக்க வந்தாய் பவுசாக கூட இருந்தாய்
பட்டம் பெறாமலே ஞானதங்கமே
பாதியில பறந்துடியே ரத்தினமே கண்ணம்மா
பட்டம் பெறாமலே ஞானதங்கமே
பாதியில பறந்துடியே ரத்தினமே கண்ணம்மா


கையை பிடித்து கொண்டு கதைகதையாய் தினம் உரைத்தாய்
கையை பிடித்து கொண்டு கதைகதையாய் தினம் உரைத்தாய்
கதைசொல்லி முடிக்கும்முன்னே ஞானதங்கமே
கண்ணீர்கடலில் கலந்துடியே ரத்தினமே கண்ணம்மா
கதைசொல்லி முடிக்கும்முன்னே ஞானதங்கமே
கண்ணீர்கடலில் கலந்துடியே ரத்தினமே கண்ணம்மா


கொலுது சினுக்கி காட்டி....
ஒ ஹோ... சலக்கு... சலக்கு... 
சலக்கு... சலக்கு... சலக்கு...

கொலுது சினுக்கி காட்டி குழந்தையாக எனை அழைத்தாய்
கொலுது சினுக்கி காட்டி குழந்தையாக என்னை அழைத்தாய்
உன்மடி சேருமுன்னே ஞானதங்கமே
மாயமாக மறஞ்சிடியே ரத்தினமே கண்ணம்மா
ஆமா.. உன்மடி சேருமுன்னே ஞானதங்கமே
மாயமாக மறஞ்சிடியே ரத்தினமே கண்ணம்மா


சாப்பிட்டு கைகழுவி சந்தைக்கு போய் வாரேனுனு
சாப்பிட்டு கைகழுவி சந்தைக்கு போய் வாரேனுனு
சொல்லிபுட்டு போனீயேடி ஞானதங்கமே
போனவள வரக்காணுமே ரத்தினமே கண்ணம்மா
சொல்லிபுட்டு போனீயேடி ஞானதங்கமே
போனவள வரக்காணுமே ரத்தினமே கண்ணம்மா
போனவள வரக்காணுமே ரத்தினமே கண்ணம்மா
போனவள வரக்காணுமே ரத்தினமே கண்ணம்மா

தன்னானே நானேநன்னே தானேநன்னே நானேநன்னே
தன்னானே நானேநன்னே தானேநன்னே நானேநன்னே
தன்னநன்னே நானே நானே தனநன்னானே
தானேநன்னே நானேநன்னே நானேநன்னே 
தனநன்னனா தன்னானே
தன்னநன்னே நானே நானே தனநன்னானே
தானேநன்னே நானேநன்னே நானேநன்னே 
தனநன்னனா தன்னானே ஹ... ஹ...
ஹய்யோ... போடுயா... போடுயா...
அட... அட... அட...
புளியங்குளம் செல்வராசியா கொக்கா... ஆமா
ஆத்தா... ஆத்தா... ஆத்தா... ஆஹா
அவன் நடைய பாருயா... ஆமா
டிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரா.......

Monday, May 14, 2018

Pariyerum Perumal - Karuppi

படம்: பரியேறும்பெருமாள் (2018)
இசை : சந்தோஷ் நாராயணன்
பாடகர்கள் : சந்தோஷ் நாராயணன்
பாடல்வரிகள்: விவேக், மாரி செல்வராஜ்



Related image


அடி கருப்பி என் கருப்பி
நகதடமே என் பாத
நீ இல்லாத காட்டில் நான்
எப்படி தான் திரிவேனோ
அடி கருப்பி என் கருப்பி
நகதடமே என் பாத
நீ இல்லாத காட்டில் நான்
எப்படி தான் திரிவேனோ

கருப்பி என் கருப்பி
நான் பேசுறது கேக்குதா
என் அழுகையும் கேக்குதா
அந்த ரயிலின் அடியில் சிக்கி செதறி 
இதயம் கத்தும் வலியும் வேதனையும் கேக்குதா

இப்ப உடனே நான் உன்ன பாக்கணும்
மூக்கில் முகம் வச்சி ஒரசனும்
உன் நாக்கில் நக்கி என் அழுக்க கழுவி போகணும்
எங்க வந்தா உன்ன பாக்கலாம்
யார் அந்த காட்டில் ஒடஞ்சி கிடப்பது
நீயா இல்ல நானா நானா இல்ல நீயா
நீயா நானா நானா நீயா கருப்பி....

இறந்தது நீயா இருப்பது நானா
இருப்பது நீயா இறந்தது நானா
நம்மள கொன்னவன் யாருன்னு
எனக்கு நல்லா தெரியும்
அங்க செத்தது யாருன்னு
அவனுக்கு மட்டும் தான் புரியும்

அழிஞ்சது நீயா...  ஓ... ஓ... ஓ...
அழுவது நானா ஓ... ஓ... ஓ...
அழுவது நீயா... ஓ... ஓ... ஓ...
அட அழிஞ்சது நானா

அடி கருப்பி என் கருப்பி
நகதடமே என் பாத
நீ இல்லாத காட்டில் நான்
எப்படி தான் திரிவேனோ
அடி கருப்பி என் கருப்பி
நகதடமே என் பாத
நீ இல்லாத காட்டில் நான்
எப்படி தான் திரிவேனோ


எந்திரி கருப்பி அம்மா கூப்புடுறா
குளிக்க போகணும் எந்திரிடி
ஏன்டி பேசல என் கூட
என்னடி நடந்திச்சி அங்க
வலிய தாங்காம துடிச்சியா
கடைசி நிமிஷம் என்ன நெனைச்சியா
உன்ன கொல்லும் போது அவன் சிரிச்சானா
நீ கொரைக்கும் போது அவன் மொறைச்சானா

கருப்பி என் கருப்பி
நகதடமே என் பாத
நீ இல்லாத காட்டில் நான்
எப்படி தான் திரிவேனோ

உன்கிட்ட படிச்சி படிச்சி சொன்னேனே கேட்டியா
யார் கூப்டு நீ போன ஏன்டி போன
எத்தன தடவ சொல்லி இருக்கேன்
எல்லா மனுசனும் இங்கே ஒன்னு இல்லன்னு

வளத்து அணைக்குறவன் கழுத்த நெரிக்கிறவன்
கண்ண தடவுறவன் கால நொடிக்கிறவன்
கொன்னு சிரிக்கிறவன் நின்னு அழுகுறவன்
கருப்பன் செவப்பன் சாமி சாத்தான்
அடிமை ஆண்டான் மயிரு மட்ட
ஆயிரம் மனுஷன் உண்டுன்னு
உனக்கு அப்போவே சொன்னேன் கேட்டியா நீ
ஓ... ஓ... ஓ...
இப்ப உடனே நான் உன்ன பாக்கணும் கருப்பி
ஓ... ஓ... ஓ...

அடி கருப்பி என் கருப்பி
நகதடமே என் பாத
நீ இல்லாத காட்டில் நான்
எப்படி தான் திரிவேனோ
அடி கருப்பி என் கருப்பி
நகதடமே என் பாத
நீ இல்லாத காட்டில் நான்
எப்படி தான் திரிவேனோ
அடி கருப்பி என் கருப்பி
நகதடமே என் பாத

நாளைக்கு வந்து அப்பா கேப்பாரு
நான் என்னடி பதில் சொல்லுவேன்
உன்ன எங்கன்னு சொல்லுவேன்
எங்கடி இருக்க நீ

நீ இல்லாத காட்டில் நான்
எப்படி தான் திரிவேனோ
அடி கருப்பி என் கருப்பி
நகதடமே என் பாத
நீ இல்லாத காட்டில் நான்
எப்படி தான் திரிவேனோ

எந்திரி கருப்பி எந்திரி கருப்பி
எந்திரி கருப்பி எந்திரி கருப்பி

அடி கருப்பி என் கருப்பி
நகதடமே என் பாத
நீ இல்லாத காட்டில் நான்
எப்படி தான் திரிவேனோ

ரெண்டு காலிலோ நாலு காலிலோ
இந்த மண்ணிலே உலவிட்டு கெடக்க
நாய் இல்லடி நீ நான் இல்லையா நீ

Sunday, December 10, 2017

Kayal - Deeyaalo Deeyaalo

படம்: கயல் (2014)
இசை: D. இமான்
பாடியவர்: பல்ராம்
பாடல்வரிகள்: யுகபாரதி


Image result for kayal tamil movie



டீயாலோ... டீயாலோ... டீயாலோ...
டீயாலோ... டீயாலோ... டீயாலோ...

அவ மேல ஆச வச்சான்
அநியாய காதல் வச்சான்
அழு மூஞ்சா போனா மச்சான்
வருவானு பூச வச்சான்
வழி மேல கண்ண வச்சான்
மனசால தீ மிதிச்சான்
ஒரு கண்ணாடி கண்ணால உடஞ்சான்
அவ நெஞ்சோட நெஞ்ச வச்சி கடஞ்சான்
வித வைக்காம உள்ளூர விளஞ்சான்
அத வெள்ளாம பண்ண நித்தம் அலஞ்சான்

டீயாலோ... டீயாலோ... டீயாலோ...
டீயாலோ... டீயாலோ... டீயாலோ...


கரை ஏறி வந்த மீனு
கருவாடா போகுமுனு
புரியாம போச்சே நண்பா
அறியாம சொன்ன சொல்லு
பழி வாங்கி கொல்லுமுன்னு
தெரியாம போச்சே நண்பா

திசை இல்லாம அப்போ நான் திரிஞ்சேன்
வழி இல்லாம இப்போ இங்க உறஞ்சேன்
விதி பந்தாட காத்தோட மறஞ்சேன்
சதி பண்ணாம சொட்டு சொட்டா கரஞ்சேன்

டீயாலோ... டீயாலோ... டீயாலோ...
டீயாலோ... டீயாலோ... டீயாலோ...


வருவாடா அந்த பொண்ணு
வருந்தாம பிரேயர் பண்ணு
வருங்காலம் வானவில்லு
மனசோட சோகம் எல்லாம்
மறஞ்சேதான் போகுமுன்னு
முழுசா நீ நம்பி நில்லு

அவ வரும்போது ஆனந்த சாரல்
வழி எங்கேயோ வண்ண வண்ணத் தூரல்
இது உசிரோட ஓயாதத் தேடல்
அட ஒருபோதும் கெட்டதில்ல காதல்
ஏ... வருவாடா அந்த பொண்ணு
வருந்தாம பிரேயர் பண்ணு
வருங்காலம் வானவில்லு
மனசோட சோகம் எல்லாம்
மறஞ்சேதான் போகுமுன்னு
முழுசா நீ நம்பி நில்லு

டீயாலோ... டீயாலோ... டீயாலோ...
டீயாலோ... டீயாலோ... டீயாலோ...

டீயாலோ... டீயாலோ... டீயாலோ...
டீயாலோ... டீயாலோ... டீயாலோ...

Tuesday, August 4, 2015

சண்டிவீரன் - அலுங்குறேன் குலுங்குறேன்

படம்: சண்டிவீரன்   (2015)
இசை: அருணகிரி
பாடியவர்: நமீதா பாபு, பிரசன்னா ராவ்
பாடல்வரிகள்: மோகன் ராஜன்




அலுங்குறேன் குலுங்குறேன் ஒரு ஆச நெஞ்சுல
அதுங்குறேன் இதுங்குறேன் ஒன்னும் பேச தோணல
நடயா நடந்தேன் கெடயா கெடந்தேன்
மினுங்குற சிணுங்குற தழும்பொனு தழும்புற

அலுங்குறேன் குலுங்குறேன் ஒரு ஆச நெஞ்சுல
அதுங்குறேன் இதுங்குறேன் ஒன்னும் பேச தோணல


பஞ்சி நீ, பஞ்சுல பதுங்கி வரும் நூலு நான்
அஞ்சி நீ, அஞ்சுல அடங்கி வரும் நாலு  நான்

பந்த நீ, பந்தல தாங்குற காலு நான்
பந்து நீ, பந்துல நிரம்பி நிக்கும் காத்து நான்

ஆத்தாடி என்ன ஆத்துனு ஆத்துன
காத்தாகி  மெல்ல தூத்துனு தூத்துன
காதல மீட்டுன கடவுள காட்டுன

அலுங்குறேன் குலுங்குறேன் ஒரு ஆச நெஞ்சுல
அதுங்குறேன் இதுங்குறேன் ஒன்னும் பேச தோணல
நடயா நடந்தேன் கெடயா கெடந்தேன்

மினுங்குற சிணுங்குற தழும்பொனு தழும்புற
அலுங்குறேன் குலுங்குறேன் ஒரு ஆச நெஞ்சுல
அதுங்குறேன் இதுங்குறேன் ஒன்னும் பேச தோணல


கோணலா மாணலா இருந்த மனம் நேருல
காலு தான் போகுதே காதலென்னும் ஊருல

நாணலா நாணலா அசஞ்சி மனம் ஆடல
தொலஞ்சது தெரிஞ்சும் நான்  இன்னும் ஏன் தேடல

கண்ணெல்லாம் ஒன் காச்சிதான் காச்சிதான்
காதெல்லாம் ஒன் பேச்சிதான் பேச்சிதான்

காதல மீட்டுன கடவுள காட்டுன
அலுங்குறேன் குலுங்குறேன் ஒரு ஆச நெஞ்சுல
அதுங்குறேன் இதுங்குறேன் ஒன்னும் பேச தோணல
நடயா நடந்தேன் கெடயா கெடந்தேன்
மினுங்குற சிணுங்குற தழும்பொனு தழும்புற

Wednesday, April 22, 2015

கயல் - எங்க புள்ள இருக்க

படம்: கயல் (2014)
இசை: D. இமான்
பாடியவர்: பல்ராம்
பாடல்வரிகள்: யுகபாரதி

Image result for kayal tamil movie



எங்க புள்ள இருக்க நீ சொல்லடி
கண்ணுமுன்ன வந்து நீ கொஞ்சம் நில்லடி
ஒத்தையா வேகுறேன் மொத்தமா நோகுறேன்
இது ஏனோ தானோ இல்ல இல்ல உசுரே


அரிதான பொருளாக தெரிந்தாயடி
அடைகாக்க முடியாமல் தொலைத்தேனடி
எனக்குள்ளே புது மூச்சை கொடுத்தாயடி
சுழல் போல அதை நீயே இழுத்தாயடி
பொத்தி வச்ச ஒன் நினைப்பு பொத்துக்கிட்டு கொட்டுதடி
சுத்தி விட்ட ராட்டினமா என் மனசு சுத்துதடி
இது ஏனோ தானோ இல்ல இல்ல உசுரே
எங்க புள்ள இருக்க நீ சொல்லடி
கண்ணுமுன்ன வந்து நீ கொஞ்சம் நில்லடி


எனக்கான வரம்போல பிறந்தாயடி
தவமேதும் புரியாமல் கிடைத்தாயடி
இனிமேலும் இவன் வாழ முடியாதடி
இறந்தாலும் உனைத்தேடி அலைவேனடி
உன்ன இவன் கண்ணுமுழி பெத்தவளா காணுதடி
உன்ன எண்ணி அப்படியே செத்துடவும் தோணுதடி
இது ஏனோ தானோ இல்ல இல்ல உசுரே
எங்க புள்ள இருக்க நீ சொல்லடி
கண்ணுமுன்ன வந்து நீ கொஞ்சம் நில்லடி
ஒத்தையா வேகுறேன் மொத்தமா நோகுறேன்
இது ஏனோ தானோ இல்ல இல்ல உசுரே

கயல் - உன்ன இப்ப பாக்கனும்

படம்: கயல் (2014)
இசை: D. இமான்
பாடியவர்: ஹரிச்சரண், வந்தனா ஸ்ரீநிவாஸ்
பாடல்வரிகள்: யுகபாரதி

Image result for kayal tamil movie






உன்ன இப்ப பாக்கனும்...
ஒன்னு பேசனும்... ஹோ...
என்ன கொட்டித் தீக்கனும்...
அன்ப காட்டனும்....

ஒறவே மனம் தெம்புதே...
உசுரே தர ஏங்குதே....

நீ எங்கேயும் போகாத, நான் வாறேன் வாடாத
உன்ன இப்ப பாக்கனும்...
ஒன்னு பேசனும்........

என்ன கொட்டித் தீக்கனும்.....
அன்ப காட்டனும்.....


இங்கே கடல் அங்கே நதி
இணைந்திட நடை போடுதே
அங்கே வெயில் இங்கே நிழல்
விழுந்திட இடம் தேடுதே
தண்ணீரிலே காவியம்
கண்ணீரிலே ஓவியம்
வரயோ விதி என்னென்ன செய்திடுமோ
முடிவில் உயிர் வண்ணங்கள் மாறிடுமோ
உன்ன இப்ப பாக்கனும்...
ஒன்னு பேசனும்...

என்ன கொட்டித் தீக்கனும்....
அன்ப காட்டனும்....


இங்கே உடல் அங்கே உயிர்
இதயத்தில் வலி கூடுதே
எங்கே நிலா என்றே விழி
பகலிலும் அலைந்தோடுதே
காயும் இருள் நானடி
பாயும் ஒளி நீயடி
கதிரே வந்துக் கண்ணோடு கலந்துவிடு
கலந்தே இவன் நெஞ்சோடு இருந்துவிடு

உன்ன இப்ப பாக்கனும்...
ஒன்னு பேசனும்... ஹோ...

என்ன கொட்டித் தீக்கனும்.....
அன்ப காட்டனும்.....
ஒறவே மனம் தெம்புதே...

உசுரே தர ஏங்குதே....

நீ எங்கேயும் காணாமல் எங்கேதான் போனாயோ


உன்ன இப்ப பாக்கனும்...

கயல் - ஏன் ஆள பாக்க

படம்: கயல் (2014)
இசை: D. இமான்
பாடியவர்: ஸ்ரேயா கோஷல் 
பாடல்வரிகள்: யுகபாரதி

Image result for kayal tamil movie




ஏன் ஆள பாக்க போறேன்
பாத்து சேதி பேச போறேன்

ஏன் ஆள பாக்க போறேன்
பாத்து சேதி பேச போறேன்
அவன் கண்ணுக்குள்ள என்ன வைக்க போறேன்
அவன் நெஞ்சுக்குள்ள என்ன தைக்க போறேன்
நானே.... என்ன...... தரபோறேன்....
ஏன் ஆள பாக்க போறேன்
பாத்து சேதி பேச போறேன்


வீட்ட விட்டு வந்துட்டேனு சொல்ல போறேன்
கூட்டிக்கிட்டு போயிடுனு சொல்ல போறேன்
இதுதான் எதிர்பார்த்து
நான் கிடந்தேன் உயிர் வேர்த்து
என சொல்லி ஆசையில் அல்லாடுவான்
மனம் துள்ளி காதலில் தள்ளாடுவான்
அத நான்... பாத்தே... அழப்போறேன்...
ஏன் ஆள பாக்க போறேன்
பாத்து சேதி பேச போறேன்


உன்னாலதான் தூங்கலன்னு சொல்லப் போறேன்
சோறு தண்ணி சேரலன்னு சொல்லப் போறேன்
புதுசா புழுகாமா ரொம்ப பெருசா வழியாம
அடி எப்ப நீ எனக்கு பொஞ்சாதியா
ஆக போகுறேனு அப்பாவியா
நானே... கேட்டு... வரப்போறேன்....

ஏன் ஆள பாக்க போறேன்
பாத்து சேதி பேச போறேன்
அவன் கண்ணுக்குள்ள என்ன வைக்க போறேன்
அவன் நெஞ்சுக்குள்ள என்ன தைக்க போறேன்
நானே... என்ன... தரபோறேன்...

கயல் - எங்கிருந்து வந்தாயோ

படம்: கயல் (2014)
இசை: D. இமான்
பாடியவர்: ஸ்ரேயா கோஷல் 
பாடல்வரிகள்: யுகபாரதி 



Image result for kayal tamil movie



எங்கிருந்து வந்தாயோ
எதுக்காக வந்தாயோ
என்னமோ சொன்னாயே
கத பேசி போனாயே
அதை நானும் அறியும் முன்னே
அட நீயும் மறைந்தாயே
மெல்லக் காற்றில் கரைந்தாயே

எங்கிருந்து வந்தாயோ
எதுக்காக வந்தாயோ
என்னமோ சொன்னாயே
கத பேசி போனாயே
அதை நானும் அறியும் முன்னே
அட நீயும் மறைந்தாயே
மெல்லக் காற்றில் கரைந்தாயே


வாசத்தண்ணி தெளிக்கையில
வந்து நீயும் நனைக்கிறியே
துணிமணிய துவைக்கையிலே
என்ன நீயும் புளியிறியே
ஆஞ்சி வச்ச கீர போல
நினைப்புல தான் கடையுரியே
அம்மி வச்ச தேங்கா சில்லா
அடி மனச நசுக்குறியே
அட நீயும் மறைந்தாயே
மெல்லக் காற்றில் கரைந்தாயே
எங்கிருந்து வந்தாயோ
எதுக்காக வந்தாயோ


நடக்கையில தொடர்ந்து வர
நடு நடுவே மறஞ்சுடுற
தலமுடிய ஒதுக்கையில
வகிடுக்குள்ள ஒழிஞ்சுடுற
கண்ணுக்குள்ள இருக்கும் உன்ன
கழுவிவிட மனமில்லையே
உள்ளுக்குள்ள அறுக்கும் உன்ன
ஒதர ஒரு வழி இல்லையே
அட நீயும் மறைந்தாயே
மெல்லக் காற்றில் கரைந்தாயே

உயிரோடு உறைந்தாயே......

Popular Posts