Showing posts with label Kathir. Show all posts
Showing posts with label Kathir. Show all posts

Tuesday, October 23, 2018

Madha Yaanai Koottam - Kona Kondakari

படம் : மதயானை கூட்டம் (2013)
இசை : N.R. ரகுநந்தன்
பாடியவர்கள் :  G.V.பிரகாஷ்
பாடல்வரிகள்: ஏகாதசி

Image result for madhayanai kootam



கோண கொண்டைக்காரி 
குத்துற கண்ணால கொன்னுதான் போறாளே
நான் பாயில் படுக்குல நோயில் கெடக்குறேன்
காரணம் யாருங்க கேரளத்து சாரலுதானுங்க
கோண கொண்டைக்காரி 
குத்துற கண்ணால கொன்னுதான் போறாளே
நான் பாயில் படுக்குல நோயில் கெடக்குறேன்
காரணம் யாருங்க கேரளத்து சாரலுதானுங்க

தினம் தினம் திரிக்ககுள்ள 
கேப்பையாட்டம் என்னை திரிக்குறா
அய்யய்யோ கடுகுதுண்டு 
இடையவச்சி கிறங்க அடிக்குறா 
குமரி புள்ள நேசம் அட கோழி குழம்பு வாசம்
உள்ளுக்குள்ள ஒளிஞ்சிகிட்டு உசுர அறுக்குறா

கோண கொண்டைக்காரி 
குத்துற கண்ணால கொன்னுதான் போறாளே
நான் பாயில் படுக்குல நோயில் கெடக்குறேன்
காரணம் யாருங்க கேரளத்து சாரலுதானுங்க
கோண கொண்டைக்காரி 
குத்துற கண்ணால கொன்னுதான் போறாளே
நான் பாயில் படுக்குல நோயில் கெடக்குறேன்
காரணம் யாருங்க கேரளத்து சாரலுதானுங்க


சொலக பாக்குறேன் இதயம்போல் தெரியுதே
அடுப்பு தீயபோல் உசுரும் எரியுதே
காலுல நடக்குறேன் மனசுல பறக்குறேன்
அவமுகம் பாத்துட்டா அரையடி வளருறேன்
சேதாரம் இல்லாம செஞ்சதாரு அவள
அவ பஞ்சாரம் போட்டுதான் கவுக்குறாளே ஆள
நான் ஆட்டு புழுக்க‌ போல
சுடும் வெயிலுக்குள்ள கெடக்கேன்
அவகூட்டி பெருக்கும்போது
நான் கூடைக்குள்ள போவேன்

கோண கொண்டைக்காரி 
குத்துற கண்ணால கொன்னுதான் போறாளே
நான் பாயில் படுக்குல நோயில் கெடக்குறேன்
காரணம் யாருங்க கேரளத்து சாரலுதானுங்க
கோண கொண்டைக்காரி 
குத்துற கண்ணால கொன்னுதான் போறாளே
நான் பாயில் படுக்குல நோயில் கெடக்குறேன்
காரணம் யாருங்க கேரளத்து சாரலுதானுங்க


உதட்டு சிரிப்புல உசுரு கரையுதே
அவள நினைச்சுதான் வயிறு நெறையுதே
சோளதட்ட தான் சுமைய தாங்குமா
ஆள சாய்க்குதே அள்ளிப்பூ இரண்டுதான்
போரால‌ சாவில்ல மாராலதான் சாவு
நூறாள தாக்குதே உசிலம்பட்டி சேவு
இங்க அறுவா தூக்க தானே
நம்ம ஆளு குறைஞ்சு கிடக்கு
அவ பத்துபுள்ள என்னைபோல
பெத்து கொடுக்கணும்

கோண கொண்டைக்காரி 
குத்துற கண்ணால கொன்னுதான் போறாளே
நான் பாயில் படுக்குல நோயில் கெடக்குறேன்
காரணம் யாருங்க கேரளத்து சாரலுதானுங்க
கோண கொண்டைக்காரி 
குத்துற கண்ணால கொன்னுதான் போறாளே
நான் பாயில் படுக்குல நோயில் கெடக்குறேன்
காரணம் யாருங்க கேரளத்து சாரலுதானுங்க

தினம் தினம் திரிக்ககுள்ள 
கேப்பையாட்டம் என்னை திரிக்குறா
அய்யய்யோ கடுகுதுண்டு 
இடையவச்சி கிறங்க அடிக்குறா 
குமரி புள்ள நேசம் அட கோழி குழம்பு வாசம்
உள்ளுக்குள்ள ஒளிஞ்சிகிட்டு உசுர அறுக்குறா

கோண கொண்டைக்காரி 
குத்துற கண்ணால கொன்னுதான் போறாளே
நான் பாயில் படுக்குல நோயில் கெடக்குறேன்
காரணம் யாருங்க கேரளத்து சாரலுதானுங்க

Wednesday, September 19, 2018

Pariyerum Perumal - Vaa Rayil Vida Polaama

படம் : பரியேறும் பெருமாள் (2018)
இசை : சந்தோஷ் நாராயணன்
பாடியவர்கள் : ப்ரீதிகா
பாடல்வரிகள் : விவேக்

Related image



வா ரயில் விட போலாமா
உனக்கின்னும் கோவமா
மன்னிச்சிடு போலாம் வா

ஏன் எட்டி நின்னு பாக்குற நீ
கைபிடிச்சு போவேமே
அதுபோல போலாம் வா

நீ புடிக்கும் எனக்கு
உனக்கு நான் காயா பழமா
நீ வரீயா நெசமா சொல்லு
நான் வருவேனே

வா ரயில் விட போலாமா
உனக்கின்னும் கோவமா
மன்னிச்சிடு போலாம் வா


இங்க நான் தனியா இருக்கேன்
எதுக்குனு தெரியுமா
நீயும் தான் தனியா இருக்க‌
வந்து உன்ன பாக்கவா

ஒசத்தி கொறச்சல்
என்னவோ எனக்கெதும் புரியல‌
அழுக்கா கருப்பா
அது என்னவோ எனக்கது தெரியல‌

நீயும் வேற நானும் வேற
அம்மா அப்பா சொல்லிட்டாங்க
நம்பாம நான் ஓடி வந்தேன்
எங்க உன்ன காணும் இங்க

வா ரயில் விட போலாமா
வா ரயில் விட போலாமா
வந்துடு நீ சீக்கிரம்
விளையாட போலாம் வா

வா ரயில் விட போலாமா
கைபிடிச்சு போவேமே அதுபோல போலாம் வா

வா வா ரயில் விட போலாமா
வந்துடு நீ சீக்கிரம்
விளையாட போலாம் வா
வா ரயில் விட போலாமா
கைபிடிச்சு போவேமே அதுபோல போலாம் வா
வா வா ரயில் விட போலாமா

வா... ரயில் விட போலாமா...

Saturday, May 19, 2018

Pariyerum Perumal - Engum Pugazh

ப‌டம்: பரியேறும்பெருமாள் (2018)
இசை : சந்தோஷ் நாராயணன்
பாடகர்கள் : அந்தோணிதாசன், கல்லூர் மாரியப்பன்
பாடல்வரிகள்: மாரி செல்வராஜ்

Related image


Download this MP3

எங்கும் புகழ் துவங்க‌........
ஆமா... ஆமா சாமி... போடு...
இங்கு நானும் நான் துவங்க... 
ஒ ஹோ...
அன்னையான சுந்தரியே ஞானதங்கமே
ஆமா... ஆமா... ஆமா...
பறக்கவிட்டு தேடலானோம் தேவதைய காணோமே

ம்ம்... ம்ம்... ம்ம்... ம்ம்...
ம்ம்... ம்ம்... ம்ம்... ம்ம்...

எங்கும் புகழ் துவங்க இங்கு நானும் நான் துவங்க
எங்கும் புகழ் துவங்க இங்கு நானும் நான் துவங்க
அன்னையான சுந்தரியே ஞானதங்கமே
பறக்கவிட்டு தேடலானோம் தேவதைய காணோமே
அன்னையான சுந்தரியே ஞானதங்கமே
பறக்கவிட்டு தேடலானோம் தேவதைய காணோமே


பள்ளிகூடம் படிக்க வந்தாய் பவுசாக கூட இருந்தாய்
பள்ளிகூடம் படிக்க வந்தாய் பவுசாக கூட இருந்தாய்
பட்டம் பெறாமலே ஞானதங்கமே
பாதியில பறந்துடியே ரத்தினமே கண்ணம்மா
பட்டம் பெறாமலே ஞானதங்கமே
பாதியில பறந்துடியே ரத்தினமே கண்ணம்மா


கையை பிடித்து கொண்டு கதைகதையாய் தினம் உரைத்தாய்
கையை பிடித்து கொண்டு கதைகதையாய் தினம் உரைத்தாய்
கதைசொல்லி முடிக்கும்முன்னே ஞானதங்கமே
கண்ணீர்கடலில் கலந்துடியே ரத்தினமே கண்ணம்மா
கதைசொல்லி முடிக்கும்முன்னே ஞானதங்கமே
கண்ணீர்கடலில் கலந்துடியே ரத்தினமே கண்ணம்மா


கொலுது சினுக்கி காட்டி....
ஒ ஹோ... சலக்கு... சலக்கு... 
சலக்கு... சலக்கு... சலக்கு...

கொலுது சினுக்கி காட்டி குழந்தையாக எனை அழைத்தாய்
கொலுது சினுக்கி காட்டி குழந்தையாக என்னை அழைத்தாய்
உன்மடி சேருமுன்னே ஞானதங்கமே
மாயமாக மறஞ்சிடியே ரத்தினமே கண்ணம்மா
ஆமா.. உன்மடி சேருமுன்னே ஞானதங்கமே
மாயமாக மறஞ்சிடியே ரத்தினமே கண்ணம்மா


சாப்பிட்டு கைகழுவி சந்தைக்கு போய் வாரேனுனு
சாப்பிட்டு கைகழுவி சந்தைக்கு போய் வாரேனுனு
சொல்லிபுட்டு போனீயேடி ஞானதங்கமே
போனவள வரக்காணுமே ரத்தினமே கண்ணம்மா
சொல்லிபுட்டு போனீயேடி ஞானதங்கமே
போனவள வரக்காணுமே ரத்தினமே கண்ணம்மா
போனவள வரக்காணுமே ரத்தினமே கண்ணம்மா
போனவள வரக்காணுமே ரத்தினமே கண்ணம்மா

தன்னானே நானேநன்னே தானேநன்னே நானேநன்னே
தன்னானே நானேநன்னே தானேநன்னே நானேநன்னே
தன்னநன்னே நானே நானே தனநன்னானே
தானேநன்னே நானேநன்னே நானேநன்னே 
தனநன்னனா தன்னானே
தன்னநன்னே நானே நானே தனநன்னானே
தானேநன்னே நானேநன்னே நானேநன்னே 
தனநன்னனா தன்னானே ஹ... ஹ...
ஹய்யோ... போடுயா... போடுயா...
அட... அட... அட...
புளியங்குளம் செல்வராசியா கொக்கா... ஆமா
ஆத்தா... ஆத்தா... ஆத்தா... ஆஹா
அவன் நடைய பாருயா... ஆமா
டிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரா.......

Monday, May 14, 2018

Pariyerum Perumal - Karuppi

படம்: பரியேறும்பெருமாள் (2018)
இசை : சந்தோஷ் நாராயணன்
பாடகர்கள் : சந்தோஷ் நாராயணன்
பாடல்வரிகள்: விவேக், மாரி செல்வராஜ்



Related image


அடி கருப்பி என் கருப்பி
நகதடமே என் பாத
நீ இல்லாத காட்டில் நான்
எப்படி தான் திரிவேனோ
அடி கருப்பி என் கருப்பி
நகதடமே என் பாத
நீ இல்லாத காட்டில் நான்
எப்படி தான் திரிவேனோ

கருப்பி என் கருப்பி
நான் பேசுறது கேக்குதா
என் அழுகையும் கேக்குதா
அந்த ரயிலின் அடியில் சிக்கி செதறி 
இதயம் கத்தும் வலியும் வேதனையும் கேக்குதா

இப்ப உடனே நான் உன்ன பாக்கணும்
மூக்கில் முகம் வச்சி ஒரசனும்
உன் நாக்கில் நக்கி என் அழுக்க கழுவி போகணும்
எங்க வந்தா உன்ன பாக்கலாம்
யார் அந்த காட்டில் ஒடஞ்சி கிடப்பது
நீயா இல்ல நானா நானா இல்ல நீயா
நீயா நானா நானா நீயா கருப்பி....

இறந்தது நீயா இருப்பது நானா
இருப்பது நீயா இறந்தது நானா
நம்மள கொன்னவன் யாருன்னு
எனக்கு நல்லா தெரியும்
அங்க செத்தது யாருன்னு
அவனுக்கு மட்டும் தான் புரியும்

அழிஞ்சது நீயா...  ஓ... ஓ... ஓ...
அழுவது நானா ஓ... ஓ... ஓ...
அழுவது நீயா... ஓ... ஓ... ஓ...
அட அழிஞ்சது நானா

அடி கருப்பி என் கருப்பி
நகதடமே என் பாத
நீ இல்லாத காட்டில் நான்
எப்படி தான் திரிவேனோ
அடி கருப்பி என் கருப்பி
நகதடமே என் பாத
நீ இல்லாத காட்டில் நான்
எப்படி தான் திரிவேனோ


எந்திரி கருப்பி அம்மா கூப்புடுறா
குளிக்க போகணும் எந்திரிடி
ஏன்டி பேசல என் கூட
என்னடி நடந்திச்சி அங்க
வலிய தாங்காம துடிச்சியா
கடைசி நிமிஷம் என்ன நெனைச்சியா
உன்ன கொல்லும் போது அவன் சிரிச்சானா
நீ கொரைக்கும் போது அவன் மொறைச்சானா

கருப்பி என் கருப்பி
நகதடமே என் பாத
நீ இல்லாத காட்டில் நான்
எப்படி தான் திரிவேனோ

உன்கிட்ட படிச்சி படிச்சி சொன்னேனே கேட்டியா
யார் கூப்டு நீ போன ஏன்டி போன
எத்தன தடவ சொல்லி இருக்கேன்
எல்லா மனுசனும் இங்கே ஒன்னு இல்லன்னு

வளத்து அணைக்குறவன் கழுத்த நெரிக்கிறவன்
கண்ண தடவுறவன் கால நொடிக்கிறவன்
கொன்னு சிரிக்கிறவன் நின்னு அழுகுறவன்
கருப்பன் செவப்பன் சாமி சாத்தான்
அடிமை ஆண்டான் மயிரு மட்ட
ஆயிரம் மனுஷன் உண்டுன்னு
உனக்கு அப்போவே சொன்னேன் கேட்டியா நீ
ஓ... ஓ... ஓ...
இப்ப உடனே நான் உன்ன பாக்கணும் கருப்பி
ஓ... ஓ... ஓ...

அடி கருப்பி என் கருப்பி
நகதடமே என் பாத
நீ இல்லாத காட்டில் நான்
எப்படி தான் திரிவேனோ
அடி கருப்பி என் கருப்பி
நகதடமே என் பாத
நீ இல்லாத காட்டில் நான்
எப்படி தான் திரிவேனோ
அடி கருப்பி என் கருப்பி
நகதடமே என் பாத

நாளைக்கு வந்து அப்பா கேப்பாரு
நான் என்னடி பதில் சொல்லுவேன்
உன்ன எங்கன்னு சொல்லுவேன்
எங்கடி இருக்க நீ

நீ இல்லாத காட்டில் நான்
எப்படி தான் திரிவேனோ
அடி கருப்பி என் கருப்பி
நகதடமே என் பாத
நீ இல்லாத காட்டில் நான்
எப்படி தான் திரிவேனோ

எந்திரி கருப்பி எந்திரி கருப்பி
எந்திரி கருப்பி எந்திரி கருப்பி

அடி கருப்பி என் கருப்பி
நகதடமே என் பாத
நீ இல்லாத காட்டில் நான்
எப்படி தான் திரிவேனோ

ரெண்டு காலிலோ நாலு காலிலோ
இந்த மண்ணிலே உலவிட்டு கெடக்க
நாய் இல்லடி நீ நான் இல்லையா நீ

Popular Posts