Showing posts with label Vijay. Show all posts
Showing posts with label Vijay. Show all posts

Thursday, April 9, 2020

Pokkiri - Dole Dole Than

படம் : போக்கிரி (2006)
இசை : மணி சர்மா
பாடியவர்கள் : ரஞ்சித், சுசித்ரா
பாடல் வரிகள்: பா.விஜய்

Pokkiri Movie: Showtimes, Review, Songs, Trailer, Posters, News ...



டோலு டோலு தான் அடிக்கிறான்
இரு தோலுந் தோலுந்தான் ஒரசுறான்
மேலும் கீழுமாய் இழுக்குறான்
முப்பாலும் கலந்து என்ன கலக்குறான்
புலி மானை வேட்டைதான் ஆடிடுமே காட்டில்
மான் புலியை வேட்டைதான் ஆடுமிடம் கட்டில்
முன்னும் பின்னும் தான் முழுமையா
நான் சொர்க்க நரகத்தின் கலவையா
பெண் இடையும் இறைவனும் ஒன்று தான்
ரெண்டும் இருந்தும் தெரிவதே இல்லை.

அய்லா அய்லா அடி ஆரியமாலா
அகந்த விழிகள் என்ன கூரியவேலா
ஒய்லா ஒய்லா நீ சில்மிஷ தேளா
சிரிக்கி சிரிப்பு என்ன மந்திரக்கோலா
கோலா... கோலா... கோலா... கோலா...


சுட சுட மழையை குளு குளு வெயிலை
முதல் முறை உலகத்தில் கண்டேனே
வெள்ளை நிற இரவை கரு நிற பகலை
முதல் முறை பார்த்தேனே

இடிகளை உரசி புயல்களை அலசி
நடந்தவன் நான் தானே
இது என்ன மாயம் மலர் ஒன்றை பறிக்க
முதல் முறை பயந்தேனே

நீ ஞனன நமன... யா ஆ
நான் யழ‌ல வழ‌ல... யா ஆ
நீ உடைந்து உருக... யா ஆ
நான் உணர்ந்து பருக


வலப்பக்கம் சுழலும் பூமிப்பந்து திரும்பி
இடப்பக்கம் சுழலுது உன்னாலே
கைப்பிடி அளவு இருக்கின்ற இதயம்
விரிந்தது குடை போலே

இருபது வருஷம் பறவையைப் போலே
சுற்றிச் சுற்றி திரிந்தேனே
இரண்டொரு நொடியில் உனக்குள்ளே விழுந்து
முழுவதும் தொலைந்தேனே

நீ எனக்குள் நுழைய... யா ஆ
நான் உனக்குள் வளைய... யா ஆ
நாம் நமக்குள் கரைய... யா ஆ
நம் உலகம் உறைய 
புலி மானை வேட்டைதான் ஆடிடுமே காட்டில்
மான் புலியை வேட்டைதான் ஆடுமிடம் கட்டில்
முன்னும் பின்னும் தான் முழுமையா
நான் சொர்க்க நரகத்தின் கலவையா
பெண் இடையும் இறைவனும் ஒன்று தான்
ரெண்டும் இருந்தும் தெரிவதே இல்லை.

அய்லா அய்லா அடி ஆரியமாலா
அகந்த விழிகள் என்ன கூரியவேலா
ஒய்லா ஒய்லா நீ சில்மிஷ தேளா
சிரிக்கி சிரிப்பு என்ன மந்திரக்கோலா
கோலா... கோலா... கோலா... கோலா...

Tuesday, April 7, 2020

Master - Andha Kanna Paathaakaa

படம் : மாஸ்டர் (2020)
இசை : அனிருத்
பாடியவர்கள் : யுவன் சங்கர் ராஜா
பாடல்வரிகள் : விக்னேஷ் சிவன்

Master Trailer: Reason Why Makers Of The Vijay Starrer Didn't ...



அந்த கண்ண பார்த்தாக்கா
லவ்வு தானா தோனாதா
அவன் கிட்ட போனாக்கா
மனம் மானா மாறாதா

அகமெல்லாம் அவன்தான்
அவன்தான் இருந்தான்
நடந்தான் அவன் கனவெல்லாமே
அவன் முகம் தானே

அழகன்தான் அவன்தான் 
அவன்தான் அழகா அளவா 
அவன் சிரிப்பானே
அட அழகன் தானே

பூப்போல மனசு ஏறாத வயசு
பாவம்டா நம்ம கேர்ள்ஸு
மத்தாப்பு சிரிப்பு மாறாத நடப்பு
கிளாஸ்ஸானா மாஸ்டர் மாஸு

பட்டாசு பார்வை பட்டாலே போதும்
ஃபெயில்லான ஹார்ட்டு பாஸு
சிங்கிள்ன்னு நியூஸு
இதுதான்மா சான்ஸு

அந்த கண்ண பார்த்தாக்கா
லவ்வு தானா தோனாதா
அவன் கிட்ட போனாக்கா
மனம் மானா மாறாதா

அந்த கண்ண பார்த்தாக்கா
லவ்வு தானா தோனாதா
அவன் கிட்ட போனாக்கா
மனம் மானா மாறாதா


லவ்வு தானா தோனாதா


அகமெல்லாம் அவன்தான் 
அவன்தான் இருந்தான் நடந்தான் 
அவன் கனவெல்லாமே
அவன் முகம் தானே

அழகன்தான் அவன்தான் 
அவன்தான் அழகா அளவா 
அவன் சிரிப்பானே
அட அழகன் தானே

நட்பான பார்வை நிதான பேச்சு
எல்லார்க்கும் புடிச்சி போச்சு
மேக்னட்டு ஈர்ப்பு ரொம்பதான் ஷார்ப்பு
எப்போதும் மாஸ்டர் டாப்பு

ஏதோ ஓர் பவரு ஏதோ ஓர் திமிரு
எப்போதும் இருக்கும் பாரு
சோலோவா நின்னா 
ஏங்காத பொண்ணா

அந்த கண்ண பார்த்தாக்கா
லவ்வு தானா தோனாதா
அவன் கிட்ட போனாக்கா
மனம் மானா மாறாதா

அந்த கண்ண பார்த்தாக்கா
லவ்வு தானா தோனாதா
அவன் கிட்ட போனாக்கா

லவ்வு தானா தோணாத

Master - Polakatum Para Para

படம் : மாஸ்டர் (2020)
இசை : அனிருத்
பாடியவர்கள் : சந்தோஷ் நாராயணன், விஜய் சேதுபதி
பாடல்வரிகள் : விஷ்ணு எதவன்



Image result for master tamil movie poster



உங்களுக்கு ரெண்டு நிமிஷம்
டைம் தரேன்
முடிஞ்சா என்ன கொன்னுட்டு
உங்கள காப்பாத்திகோங்க

பொளக்கட்டும் பற பற
தெறிக்கட்டும் அளப்பற
நம்ம படை படை
வெளுக்கும் தரை தரை

தப்பாது தப்பாது 
தப்பு அடிச்சா எனக்கு
துடிக்காத நரம்பு இல்ல 
கொட்டு அடிச்சா அட்றா

விடியிற வரை வரை
அலறட்டும் தரை தரை
முடியிற வரை வரை
ஆட்டத்த கொறை கொற

எமனுக்கும் சாவுண்டு
இவன் மொறச்சா டேய் தம்பி
சூடம் ஏத்து சாமி வந்துருச்சா

ஊரு முழுக்க சந்து பொந்து
தேடி பாத்துக்க நீ
இவனை எதுக்க சத்தம் கொடுக்க
கொம்பன் இல்லை இனி பவனி



அடிக்கிற அடியில் அட தவுலு
கிழிஞ்சு தொங்கட்டும்
அடிச்சது யாரு வெறும் சத்தம்
கேட்டு சொல்லட்டும்

மவனே....
அடிக்கிற அடியில் அட தவுலு
கிழிஞ்சு தொங்கட்டும்
அடிச்சது யாரு வெறும் சத்தம்
கேட்டு சொல்லட்டும்

போதை தெளிஞ்சு பட்டை எடுக்க
கிளம்பி வரவன்டா
உன்ன தொங்கவுட்டு தோல உரிப்பேன்
சொல்லி வெச்சவன்டா
வாத்தி...

பொளக்கட்டும் பற பற
தெறிக்கட்டும் அளப்பற
நம்ம படை படை
வெளுக்கும் தரை தரை

தப்பாது தப்பாது
தப்பு அடிச்சா எனக்கு
துடிக்காத நரம்பு இல்ல
கொட்டு அடிச்சா அட்றா

விடியிற வரை வரை
அலறட்டும் தரை தரை
முடியிற வரை வரை
ஆட்டத்த  கொறை கொற

எமனுக்கும் சாவுண்டு
இவன் மொறச்சா டேய் தம்பி
சூடம் ஏத்து சாமி வந்துருச்சா

Wednesday, April 1, 2020

Villu - Daddy Mummy

படம் : வில்லு (2009)
இசை : தேவி ஸ்ரீ பிரசாத்
பாடியவர்கள் : நவீன் மாதவ், மம்தா மோகன்தாஸ்
பாடல்வரிகள் :


Villu - Action Packed Mass - Villu Movie Review



ஹே டாடி மம்மி வீட்டில் இல்ல
தட போட யாருமில்ல
விளையாடுவோமா உள்ள வில்லாளா

ஹே மைதானம் தேவை இல்ல
அம்பயரும் தேவை இல்ல
யாருக்கும் தோல்வி இல்ல வில்லாளா

ஹே கேளேன்டா மாமூ இது இன்டொரு கேமு
தெரியாம நின்னா அது ரொம்ப ஷேமு
விளையாட்டு ரூலு நீ மீறாட்டி ஃபுலு
எல்லைகள் தாண்டு அது தான்டா கோலு

டாடி மம்மி... டாடி மம்மி...
டாடி மம்மி வீட்டில் இல்ல
தட போட யாருமில்ல
விளையாடுவோமா உள்ள வில்லாளா


ஹ்ம்ம்...
டாக்ஸிகாரன் தான் நா ஏறும்போதெல்லாம்
அட மீட்டர்க்கு மேல தந்து
பல் இளிச்சானே ஆஹ ஆஹ
ஓஹோ... பஸ்சில் ஏறி தான் ஒரு சீட்டு கேட்டேனே
தன் சீட்டை டிரைவர் தந்து விட்டு
ஓரம் நின்னானே...

ஹே அளவான உடம்புக்காரி
ஹே அளவில்லா கொழுப்புக்காரி
ஹோய் அளவான உடம்புக்காரி
அளவில்லா கொழுப்புக்காரி
இருக்குது இருக்குது வாடி
உனக்கு ராத்திரி கச்சேரி

டாடி மம்மி வீட்டில் இல்ல
தட போட யாருமில்ல
விளையாடுவோமா உள்ள வில்லாளா



வைர வியாபாரி என் பல்லை பார்த்தானே
தான் விற்கும் வைரம் போலி என்று
தூக்கிபோட்டானே ஆஹ... ஆஹ...

த த தங்க வியாபாரி என் அங்கம் பார்த்தானே
அவன் தங்கம் எல்லாம் மட்டம் என்று
தொழிலை விட்டானே

ஹே... அழகான சின்ன பாப்பு
ஆ... வைக்காதே எனக்கு ஆப்பு
ஹேய்... அழகான சின்ன பாப்பு
வைக்காதே எனக்கு ஆப்பு
கொப்பும் கொலையா இருக்குற
உனக்கு நான் தான்டி மாப்பு

டாடி மம்மி... ட டா டி மம்மி
டாடி மம்மி வீட்டில் இல்ல
தட போட யாருமில்ல
விளையாடுவோமா உள்ள வில்லாளா

Villu - Vaada Mappillai

படம் : வில்லு (2009)
இசை : தேவி ஸ்ரீ பிரசாத்
பாடியவர்கள் : திப்பு, வடிவேலு, சவிதா ரெட்டி, ரிடா
பாடல்வரிகள் : கபிலன்


Villu - Action Packed Mass - Villu Movie Review



Bloody beggar...

ஹே வாடா மாப்பிள்ள 
வாழப்பழ தோப்புல
வாலிபால் ஆடலாமா

ஹே ஆடும் சாக்குல
சைக்கிள் கேப்புல
கிடுக்குபுடி போடலாமா

மூக்கு கீழ... பலே பலே
முத்தம்கொடு... பலே பலே

கடிச்சுப்புட்டா... பலே பலே
கத்த கூடாதே

முந்தானையில்... பலே பலே
மூட்ட கட்டு... பலே பலே

முள்ளு குத்தும்... பலே பலே
ரத்தம் வராதே

எப்படி... எப்படி...

அப்படி... அப்படி...

ஹே வாடா மாப்பிள்ள 
வாழப்பழ தோப்புல
வாலிபால் ஆடலாமா
கம் ஆன்... கம் ஆன்...

ஹே ஆடும் சாக்குல
சைக்கிள் கேப்புல 
கிடுக்குபுடி போடலாமா
கம் ஆன்... கம் ஆன்...


Don't angry me... Bad Girl


Attack the blacky...

மம்மா.... ஜப்பா...


ஹே மைக்ரோ மினி போடட்டா 
பூனை நட நடக்கட்டா 
ஜோலிக்கே பீஜே-ன்னு சோக்கா பாடட்டா

ஹே இங்கிலிபீசு வேணா டி 
ஹிந்தி திணிப்பு வேணா டி 
கரகாட்டம் ஆடிக்கிட்டே தமிழில் பாடேன்டி

விண்ணோடும்... பலே பலே
முகிலோடும்... பலே பலே
விளையாடும்... பலே பலே
வெண்ணிலாவே

எப்படி... எப்படி...

அப்படி... அப்படி...

ஹே வாடா மாப்பிள்ள 
வாழப்பழ தோப்புல
வாலிபால் ஆடலாமா

ஹே ஆடும் சாக்குல
சைக்கிள் கேப்புல 
கிடுக்குபுடி போடலாமா



பாட்றி...

கம்பரசம் தரட்டுமா 
இன்பரசம் தரட்டுமா 
நயாகரா போல நானும் பொங்கி வரட்டுமா

ஹே சொன்னதெல்லாம் சந்தோஷம் 
சொல்லி தந்தா சந்தோஷம்
காவேரியா நீயும் வந்தா டபுள் சந்தோஷம்

தை பொறந்தா... பலே பலே
வழி பொறக்கும்... பலே பலே
பொங்கலுக்கு... பலே பலே
பரிசம் போடு

எப்படி... எப்படி...

அப்படி... அப்படி...

ஹே வாடா மாப்பிள்ள 
வாழப்பழ தோப்புல
வாலிபால் ஆடலாமா.... 
ஆ... ஆ... ஆ..

ஹே ஆடும் சாக்குல
சைக்கிள் கேப்புல 
கிடுக்குபுடி போடலாமா... 
மா... ஆமா... 


I will bomb u
உன்ன‌
என்ன புக வருது
அடியாங்கோ

Villu - Dheemthanakka Thillana

படம் : வில்லு (2009)
இசை : தேவி ஸ்ரீ பிரசாத்
பாடியவர்கள் : தேவி ஸ்ரீ பிரசாத், திவ்யா விஜயகோபால்
பாடல்வரிகள் : சினேகன்

Villu - Action Packed Mass - Villu Movie Review



Yo check it out check it out check check it out
Get up get up now let's get it out
शोर मजाके नर नर नाचो
Get up get up now let's get it out
शोर मजाके नर नर नाचो


தீம் தனக்க தில்லானா
தீம் தனக்க தில்லானா
தீ தெறிக்கும் வில்லன் நான் தானே

தீம் தனக்க தில்லானா
தீம் தனக்க தில்லானா
தீ பிடிச்ச நிலா நான்தானே

நான் ஒத்த கிஸ்சு தாறேன்
உன் ரத்த ரேச‌ பாரேன்
நூறு குதிர வேகத்தோட போட்டி போடுமே

நான் ஒத்த ஹக்கு தாறேன்
கிக்கு ஏறும் பாரேன்
மதம் புடிச்ச யான போல மாறுவ

ஏ... கண்ணன் 
நான் கண்ணனுக்கு அண்ணன்
அட லீலைகளின் மன்னன்
அந்த மன்மதனின் மாமன் நான்தானே

அத்தை 
நான் மேனகைக்கு அத்தை
வா கத்து தாறேன் வித்த
அந்த வித்தைகெல்லாம் பாஸு நான்தானே

தீம் தனக்க தில்லானா...
ஹே தீம் தனக்க தில்லானா
தீம் தனக்க தில்லானா
தீ தெறிக்கும் வில்லன் நான் தானே


வெட்டி வச்ச ஆப்பிள் போல
உன் கன்னம் இருப்பதால
பார்த்தாலே நாக்கெல்லாம் எச்சில் ஊறிப்போகுதே
பூட்டி வச்ச புதையல் போல
உன் உடம்பு இருப்பதால
திருடத்தான் என் நெஞ்சு திட்டம் தீட்டி பாக்குதே

ஹே கத்தி கத்தி கத்தி 
உன் கண்ணுரெண்டும் கத்தி
நேரம் காலம் பாா்க்காமல் வருதே என்னை சுத்தி
வெட்டி வெட்டி வெட்டி
உன் வெட்கத்த நீ வெட்டி
வேக வைக்க கேக்குறியே தீப்பெட்டி

ஏ... கண்ணன் 
நான் கண்ணனுக்கு அண்ணன்
அட லீலைகளின் மன்னன்
அந்த மன்மதனின் மாமன் நான்தானே

அத்தை ....
நான் மேனகைக்கு அத்தை
வா கத்து தாறேன் வித்த
அந்த வித்தைகெல்லாம் பாஸு நான்தானே

தீம் தனக்க தில்லானா...
தீம் தனக்க தில்லானா
தீம் தனக்க தில்லானா
தீ தெறிக்கும் வில்லன் நான் தானே

தீம் தனக்க தில்லானா
தீம் தனக்க தில்லானா
தீ பிடிச்ச நிலா நான்தானே


சஹாராவில் இளனி போல
சிரபூஞ்சி டீய போல 
எங்கேயும் எப்போதும் உன் தாகம் தீர்ப்பேனே

ப்ளுடோவில் வாட்டர் போல
என்னோட நெஞ்சுகுள்ள யாருக்கும்
தெரியாமல் ஒளிஞ்சிருக்க நீதானே

ராரா... ராரா... ராரா... 
நீ ர‌ங்கம் நோக்கி ராரா
இன்பமான இம்ச பண்ணு  ராத்திரி நீ ரா

ஏ... வாடி வாடி வாடி
நீ மீசை இல்லா கேடி 
ஒக்க சாரி சொர்க்கத்தை நீ பாரடி

ஏ... கண்ணன் 
நான் கண்ணனுக்கு அண்ணன்
அட லீலைகளின் மன்னன்
அந்த மன்மதனின் மாமன் நான்தானே

அத்தை 
நான் மேனகைக்கு அத்தை
வா கத்து தாறேன் வித்த
அந்த வித்தைகெல்லாம் பாஸு நான்தானே

தீம் தனக்க தில்லானா...
தீம் தனக்க தில்லானா
தீம் தனக்க தில்லானா
தீ தெறிக்கும் வில்லன் நான் தானே

தீம் தனக்க தில்லானா
தீம் தனக்க தில்லானா
தீ பிடிச்ச நிலா நான்தானே


Yo check it out check it out check check it out
Get up get up now let's get it out
शोर मजाके नर नर नाचो

Jilla - Verasa Pogayile

படம் : ஜில்லா (2014)
இசை : D. இமான்
பாடியவர்கள் : D. இமான்
பாடல்வரிகள் : பார்வதி

Jilla film songs video download



வெரசா போகையில புதுசா போறவளே 
இதுவரையில குளிா் எடுக்கல பெண்ணால
அவ சிாிச்சதும் தல உறையுது தன்னால
என் பேச்சு மூச்சு எங்க காணல

வெரசா போகையில புதுசா போறவளே 
இதுவரையில குளிா் எடுக்கல பெண்ணால
அவ சிாிச்சதும் தல உறையுது தன்னால 
என் பேச்சு மூச்சு எங்க காணல


இது நானா என்ன பழசெல்லாம் எங்க
புது சந்தேகங்கள் உண்டாகுது
இது திண்டாட்டமா இல்ல துள்ளாட்டமா
மண்ண விட்டு ரெண்டு கால் தாவுது
எப்போதும் நான் போகும் பாதை இது
இப்போது நிற்காமல் ஏன் நீளுது
என்னுள்ளம் லேசாக கை மீறுது
வெரசா போகையில புதுசா போறவளே


நல்ல கச்சிதமா என்ன பிச்சி சும்மா
தைச்சி சேக்குறது உன் வேலையா
சுற்று வட்டாரத்தில் தந்த பட்டமெல்லாம்
இப்ப நூல் அறுந்த காத்தாடியா
நேத்தோட நீ வேற நான் வேறயா
இப்போ நீ என் நெஞ்சின் மேற்கூரையா
என்னுள்ளே நீ பாதி நான் மீதியா

வெரசா போகையில புதுசா போறவளே 
இதுவரையில குளிா் எடுக்கல பெண்ணால
அவ சிாிச்சதும் தல உறையுது தன்னால 
என் பேச்சு மூச்சு எங்க காணல

Wednesday, March 18, 2020

Deva - Chinna Paiyyan

படம் : தேவா (1995)
இசை : தேவா
பாடியவர்கள் : S.N.சுரேந்தர், K.S.சித்ரா
பாடல்வரிகள் : வாலி





சின்னப்பையன் சின்னப்பொண்ணை காதலிச்சா
ஒரு பாட்டு வரும்... காதல் பாட்டு வரும்
கன்னிப்பொண்ணு என்னைப்பாத்து கண் அசைச்சா
ஒரு காய்ச்சல் வரும்... மனக்காய்ச்சல் வரும்

ஒன்ன தோளோடு தோள் சேர்த்து
தினம் நான் பாடும் தேன் பாட்டு
சின்னைய்யா... என்னய்யா
இன்னும் என்ன வேணும் சொல்லையா
சின்னப்பையன் சின்னப்பொண்ணை காதலிச்சா
ஒரு பாட்டு வரும்... காதல் பாட்டு வரும்
கன்னிப்பையன் என்னைப்பாத்து கண் அசைச்சா
ஒரு காய்ச்சல் வரும்... மனக்காய்ச்சல் வரும்


எண்ணிரண்டு வயதில்
உன் கண்ணிரண்டில் விழுந்தேன்

முத்திருக்கும் கடலில்
நான் முக்குளிச்சு எழுந்தேன்

வேலிகளை தாண்ட சொல்லும்
வாலிபத்தின் வேகம் தான்

வேறெதுக்கு பூத்ததிந்த
பேரழகு தேகம் தான்

உன் முத்தமழையே 
இங்கு நித்தம் குளிக்கும்
சின்னசிட்டு எந்தன் பட்டு கன்னம் 
கட்டி வெல்லம் அல்லவா

சின்னப்பையன் சின்னப்பொண்ணை காதலிச்சா
ஒரு பாட்டு வரும்... காதல் பாட்டு வரும்
கன்னிப்பொண்ணு என்னைப்பாத்து கண் அசைச்சா
ஒரு காய்ச்சல் வரும்... மனக்காய்ச்சல் வரும்


சின்ன சின்ன கவிதை
என் கையெழுத துடிக்கும்

மெல்ல மெல்ல எழுது
என் மெல்லிடையும் தவிக்கும்

கன்னி மலர் கண்ணில் பட்டா
கற்பனைகள் பாயாதா?

கற்பனைகள் பாயாவிட்டால்
கன்னி மலர் காயாதா?

என் முல்லை வனமே
மின்னும் முத்து வடமே
உன்னை பக்கம் வந்து நிக்கும்
இன்ப சொர்க்கம் என்று சொல்லவா

சின்னப்பையன் சின்னப்பொண்ணை காதலிச்சா
ஒரு பாட்டு வரும்... காதல் பாட்டு வரும்
கன்னிப்பையன் என்னைப்பாத்து கண் அசைச்சா
ஒரு காய்ச்சல் வரும்... மனக்காய்ச்சல் வரும்

ஒன்ன தோளோடு தோள் சேர்த்து
தினம் நான் பாடும் தேன் பாட்டு

சின்னையா என்னய்யா
இன்னும் என்ன வேணும் சொல்லையா

சின்னப்பையன் சின்னப்பொண்ணை காதலிச்சா
ஒரு பாட்டு வரும்... காதல் பாட்டு வரும்

ஒ... 
கன்னிப்பையன் என்னைப்பாத்து கண் அசைச்சா
ஒரு காய்ச்சல் வரும்... மனக்காய்ச்சல் வரும்

Popular Posts