Showing posts with label Ranjith. Show all posts
Showing posts with label Ranjith. Show all posts

Thursday, April 9, 2020

Pokkiri - Dole Dole Than

படம் : போக்கிரி (2006)
இசை : மணி சர்மா
பாடியவர்கள் : ரஞ்சித், சுசித்ரா
பாடல் வரிகள்: பா.விஜய்

Pokkiri Movie: Showtimes, Review, Songs, Trailer, Posters, News ...



டோலு டோலு தான் அடிக்கிறான்
இரு தோலுந் தோலுந்தான் ஒரசுறான்
மேலும் கீழுமாய் இழுக்குறான்
முப்பாலும் கலந்து என்ன கலக்குறான்
புலி மானை வேட்டைதான் ஆடிடுமே காட்டில்
மான் புலியை வேட்டைதான் ஆடுமிடம் கட்டில்
முன்னும் பின்னும் தான் முழுமையா
நான் சொர்க்க நரகத்தின் கலவையா
பெண் இடையும் இறைவனும் ஒன்று தான்
ரெண்டும் இருந்தும் தெரிவதே இல்லை.

அய்லா அய்லா அடி ஆரியமாலா
அகந்த விழிகள் என்ன கூரியவேலா
ஒய்லா ஒய்லா நீ சில்மிஷ தேளா
சிரிக்கி சிரிப்பு என்ன மந்திரக்கோலா
கோலா... கோலா... கோலா... கோலா...


சுட சுட மழையை குளு குளு வெயிலை
முதல் முறை உலகத்தில் கண்டேனே
வெள்ளை நிற இரவை கரு நிற பகலை
முதல் முறை பார்த்தேனே

இடிகளை உரசி புயல்களை அலசி
நடந்தவன் நான் தானே
இது என்ன மாயம் மலர் ஒன்றை பறிக்க
முதல் முறை பயந்தேனே

நீ ஞனன நமன... யா ஆ
நான் யழ‌ல வழ‌ல... யா ஆ
நீ உடைந்து உருக... யா ஆ
நான் உணர்ந்து பருக


வலப்பக்கம் சுழலும் பூமிப்பந்து திரும்பி
இடப்பக்கம் சுழலுது உன்னாலே
கைப்பிடி அளவு இருக்கின்ற இதயம்
விரிந்தது குடை போலே

இருபது வருஷம் பறவையைப் போலே
சுற்றிச் சுற்றி திரிந்தேனே
இரண்டொரு நொடியில் உனக்குள்ளே விழுந்து
முழுவதும் தொலைந்தேனே

நீ எனக்குள் நுழைய... யா ஆ
நான் உனக்குள் வளைய... யா ஆ
நாம் நமக்குள் கரைய... யா ஆ
நம் உலகம் உறைய 
புலி மானை வேட்டைதான் ஆடிடுமே காட்டில்
மான் புலியை வேட்டைதான் ஆடுமிடம் கட்டில்
முன்னும் பின்னும் தான் முழுமையா
நான் சொர்க்க நரகத்தின் கலவையா
பெண் இடையும் இறைவனும் ஒன்று தான்
ரெண்டும் இருந்தும் தெரிவதே இல்லை.

அய்லா அய்லா அடி ஆரியமாலா
அகந்த விழிகள் என்ன கூரியவேலா
ஒய்லா ஒய்லா நீ சில்மிஷ தேளா
சிரிக்கி சிரிப்பு என்ன மந்திரக்கோலா
கோலா... கோலா... கோலா... கோலா...

Sunday, December 2, 2018

Thiruvilayadal Aarambam - Theriyama Parthu

படம் : திருவிளையாடல் ஆரம்பம் (2006)
இசை : D.இமான்
பாடியவர்கள் : ரஞ்சித், சுஜாதா
பாடல்வரிகள் : விவேகா

Image result for Thiruvilaiyaadal Aarambam



தெரியாம பாத்துபுட்டேன் 
உன்ன தெரிஞ்சே தான் மாட்டிகிட்டேன்

ஓ... ஓஓ...
தெரியாம பாத்துபுட்டேன்
உன்ன தெரிஞ்சே தான் மாட்டிகிட்டேன் 
என்ன நடக்க போகுதோ... ஹான் ஹான்
எங்கு முடிய போகுதோ... ஹான் ஹான்
தொல்லையா ஆச்சுடி தூக்கமே போச்சுடி

தெரியாம பாத்து புட்டேன்
உன்ன தெரிஞ்சே தான் மாட்டிகிட்டேன் 
என்ன நடக்க போகுதோ... ஹான் ஹான்
எங்கு முடிய போகுதோ... ஹான் ஹான்
தொல்லையா ஆச்சுடா தூக்கமே போச்சுடா

தெரியாம

உன்ன தெரிஞ்சே தான்



ஹிட்லர் போல உங்க அண்ணன் 
இம்சை பண்ணுறானே என்னை

ரொம்ப பாசம்தான் என் மேலதான்
அவன் உயிரே நான்தான் தெரியுமா 
அத சொன்னா உனக்கு புரியுமா

சொல்லு சொல்லு என் செல்லம் செல்லம் 
நீ சொல்லாக்காட்டி நான் டூ கா செல்லம்

கண்ணில் சிறு தூசு பட்டால்
காத்த கூட நிறுத்தி வெப்பான்
காலில் ஒரு முள்ளு தச்சா 
காட்ட கொளுத்துவான்

ஹையோ... ஹையோ...

தெரியாம பாத்து புட்டேன் 
உன்ன தெரிஞ்சே தான் மாட்டிகிட்டேன் 



காதல் என்பதொரு கோட்டை 
அந்த கதவு திறந்துட்டா வேட்டை

உள்ள போவோமா வெல்லம் கசக்குமா 
நான் இரும்புல செஞ்ச எறும்புடி
இனி விடியிற வரைக்கும் குறும்புடி

வேணாம் வேணாம் என் செல்லம் செல்லம்
அண்ணன் பாத்தா உன்னை கொல்லும் கொல்லும்

உன் அண்ணன் என்ன பிஸ்தா பருப்பா
காதலுன்னா ஏன்டி வெறுப்பா
என் மேல தான் கைய வெச்சா
சங்க அறுப்பேன்டி

ஹையோ... ஹையோ...

தெரியாம பாத்து புட்டேன் 
உன்ன தெரிஞ்சே தான் மாட்டிகிட்டேன் 

என்ன நடக்க போகுதோ... ஹான் ஹான்
எங்கு முடிய போகுதோ... ஹான் ஹான்

தொல்லையா ஆச்சுடா தூக்கமே போச்சுடா

தெரியாம

உன்ன தெரிஞ்சே தான்

ஹையோ... ஹையோ...

Wednesday, October 3, 2012

கும்கி - சொல்லிட்டாளே அவ

படம் : கும்கி (2012)
இசை : D. இமான்
பாடியவர்கள் : ரஞ்சித், ஸ்ரேயா கோஷல்
பாடல் வரிகள் : யுகபாரதி








சொல்லிட்டாளே அவ காதல
சொல்லும் போதே சுகம் தாளல
இது போல் ஒரு வார்த்தைய யாரிடமும் நெஞ்சு கேக்கல
இனி வேறொரு வார்த்தைய கேட்டிடவும் எண்ணி பார்க்கல
அவ சொன்ன சொல்லே போதும்
அதுக்கிடே இல்லை ஏதும்... ஏதும்...

சொல்லிட்டேனே இவ காதல
சொல்லும் போதே சுகம் தாளல
இது போல் ஒரு வார்த்தைய யாரிடமும் சொல்ல தோணல
இனி வேறொரு வார்த்தைய பேசிடவும் எண்ணம் கூடல
உனதன்பே ஒன்றே போதும்
அதுக்கிடே இல்லை ஏதும்... ஏதும்...

ம்ம்... ஹோ.. ம்ம்...

ம்.. ம்ம். .ம்ம்... ம்ம்ம்ம்.....

அம்மையவள் சொன்ன சொல் கேக்கல
அப்பனவன் சொன்ன சொல் கேக்கல
உன்னுடைய சொல்ல கேட்டேன்
ரெண்டு பேரா ஒன்னா பாத்தேன்

மனசயும் தொறந்து சொன்னா
எல்லாமே கிடைக்குது உலகத்துல
வருவத எடுத்து சொன்னா
சந்தோஷம் முளைக்குது இதயத்துல

அட சொன்ன சொல்லே போதும்
அதுக்கிடே இல்லை  ஏதும்... ஏதும்...  

சொல்லிட்டேனே இவ காதல

சொல்லிட்டாளே அவ காதல

ம்..ம்ம்... ம்ம்ம்ம்..... ம்ம்ம்ம்.....
ம்ம்ம்ம்..... ம்ம்ம்ம்..... ம்ம்ம்ம்.....
ம்ம்ம்ம்..... ம்ம்ம்ம்..... ம்ம்ம்ம்.....

ஒ... ஒ... ஒ... எத்தனையோ சொல்லு சொல்லாமலே
உள்ளத்திலே உண்டு என்பார்களே
சொல்லுறதில் பாதி இன்பம்
சொன்ன பின்னே ஏது துன்பம்

உதட்டுல இருந்து சொன்னா
தன்னாலே மறந்திடும் நிமிசத்துல
இதயத்தில் இருந்து சொன்னா
போகாம நிலைச்சிடும் உதிரத்துல
அவ சொன்ன சொல்லே போதும்
அதுக்கிடே இல்லை ஏதும்... ஏதும்...

சொல்லிட்டேனே இவ காதல
சொல்லும் போதே சுகம் தாளல
இது போல் ஒரு வார்த்தைய யாரிடமும் சொல்ல தோணல
இனி வேறொரு வார்த்தைய பேசிடவும் எண்ணம் கூடல
உனதன்பே ஒன்றே போதும்
அதுக்கிடே இல்லை ஏதும்... ஏதும்...

Saturday, March 17, 2012

Vaagai Sooda Vaa - Poraney Poraney



படம் : வாகை சூடவா (2011)
இசை : ஜிப்ரான்
பாடியவர்கள் : ரஞ்சித், நேஹா பஸின்
பாடல் வரிகள் : கார்த்திக் நேதா




(Right click & Save Link As)


போறானே போறானே காத்தோட தூத்தல போல
போறானே போறானே போவாமத்தான் போறானே

போறானே போறானே காத்தோட தூத்தல போல
போறானே போறானே போவாமத்தான் போறானே
அழகா நீ நிறைஞ்சே அடடா பொந்துக்குள் புகைய போல

போறாளே போறாளே காத்தோட தூத்தல போல
போறாளே போறாளே போவாமத்தான் போறாளே
போறாளே போறாளே காத்தோட தூத்தல போல
போறாளே போறாளே போவாமத்தான் போறாளே

பருவம் தொடங்கி ஆச வச்சேன்
இல்லாத சாமிக்கும் பூச வச்சேன்

மழையில் நனைஞ்ச காத்தை போல
மனசை நீயும் நனைச்சுப்புட்ட

ஈரக்கொலைய கொஞ்சம் இரவல் தாய்யா
பொண்ணு மனசை கொஞ்சம் புனைய வாய்யா
ஏற இறங்க பார்க்கும் ரோசக்காரா
டீ தூளு வாசம் கொண்ட மோசக்காரா

அட நல்லாங்குருவி ஒண்ணு மனச மனச
சிறு கன்னங்குழியிலே பதுக்கிருச்சே
சின்ன சின்ன தொரட்டிப்பொண்ணு
கண்ணு முழியத்தான் ஈச்சங்காயா ஆஞ்சிருச்சே

போறானே போறானே காத்தோட தூத்தல போல
போறானே போறானே போவாமத்தான் போறானே
போறானே போறானே காத்தோட தூத்தல போல
போறானே போறானே போவாமத்தான் போறானே

கிணத்து நிலவா நான் இருந்தேன்
கல்லை எரிஞ்சு குழப்பிப்புட்ட

உன்னை பார்த்து பேசையில
ரெண்டாம் முறையா குத்த வச்சேன்

மூக்கணாங்கவுற போல உன் நினைப்பு
சீம்பாலு வாசம் போல உன் சிரிப்பு

அடை காக்கும் கோழி போல என் தவிப்பு
பொசுக்குன்னு பூத்திருக்கே என் பொழப்பு

அடி மஞ்சக்கிழங்கு உன்னை நினைச்சு நினைச்சு
தினம் மனசுக்குள்ள வச்சு பூட்டிக்கிட்டேன்
உன் பிஞ்சுவிரல் பதிச்ச மண்ணை எடுத்து
நான் காயத்துக்கு பூசிக்கிட்டேன்
போறாளே… போறாளே
போறாளே…போவாமத்தான் போறாளே

அழகா நீ நிறைஞ்சே அடடா பொந்துக்குள் புகைய போல
போறானே போறானே காத்தோட தூத்தல போல
போறானே போறானே போவாமத்தான் போறானே
போறானே போறானே காத்தோட தூத்தல போல
போறானே போறானே போவாமத்தான் போறானே
போறானே… போறானே…

Sunday, May 15, 2011

சிவா மனசுல சக்தி - ஒரு பார்வையில்



படம் : சிவா மனசுல சக்தி (2009)
இசை : 
யுவன் சங்கர் ராஜா

பாடியவர் :  ரஞ்சித்
பாடல் வரி : நா.முத்துகுமார்









ஒரு பார்வையில் பூ கொடுத்தாய்
ஒரு வார்த்தையில் வாழ வைத்தாய் 
ஒரு மேகத்தை போல் எந்தன்
தேகத்தை மாற்றி வைத்தாய் 


இறகை போல் ஒரு வேகத்தில் வேகத்தில் 
வானத்தில் வானத்தில் செல்லுகின்றேன் 
நிலவை போல் உன்னை தூரத்தில் தூரத்தில் 
பார்க்கின்ற போதெல்லாம் துள்ளுகின்றேன் 


நீ எனது உயிராக நான் உனது உயிராக 
ஒர் உறவு நெஞ்சத்தில் தோன்றிடும் நேரம் 


நீ காணும் கனவெல்லாம் நான் காணும் கனவாகி 
நாம் சேர்ந்து ஒன்றாக பார்த்திட வேண்டும் 


உயிரே நீ பார்த்தாலே 
உயிருக்குள் பூகம்பங்கள் தோன்றும் 
உன்னால் அடி உன்னாலே
உள்ளுக்குள் என்னென்னவோ ஆகும்

Tuesday, July 27, 2010

Eeram - Mazhaiye Mazhaiye

படம் : ஈரம் (2009)
இசை : S.தமன்
பாடியவர் :  ரஞ்சித்
பாடல் வரி : விவேகா

     



விழியே விழியே பேசும் விழியே
ஒரு பார்வை பார்த்தாய்
மழையே மழையே நெஞ்சில் மழையே
தனியே தனியே வாழ்ந்தேன் தனியே
நான் மாறி போனேன்
இனிமே இனிமே நீ தான் துணையே


மழையே மழையே தூவும் மழையே
இது காதல் தானா


தனியே தனியே நனைந்தேன் மழையே
ம்ம்ம் மனமே மனமே தீயை கொதிக்கும்
ஒரு காய்ச்சல் போல
தவியாய் தவியாய் தவித்தேன் மழையே


மழையே மழையே தூவும் மழையே
இது காதல் தானா


தனியே தனியே நனைந்தேன் மழையே
ம்ம்ம் மனமே மனமே தீயை கொதிக்கும்
ஒரு காய்ச்சல் போல
தவியாய் தவியாய் தவித்தேன் மழையே


ஏ நான் தான் நான் தான் ஒரு தீவாய் இருக்கின்றேன்
ஏய் நீ தான் நீராய் எனை சுற்றி இருக்கின்றாய்


ஏ நான் தான் நான் தான் ஒரு தீவாய் இருக்கின்றேன்
ஏய் நீ தான் நீராய் எனை சுற்றி இருக்கின்றாய்


சொல்லாமல் சொல்லாமல் சொல்வாய்
செல்லாமல் செல்லாமல் செல்வாய்


மழையை மழையை


மாறி மாறி மழையே


உன் ஆடை பட்டாலே ஒரு சாரல் அடிக்கிறது
உன் ஓர புன்னகையால் பெரும் தூறல் வருகிறது
உன் முகத்தில் அசையும் முடி எனை துளியாய் நனைக்கிறது
உன் கைகள் தீண்டுவதால் அடை மழையே பொழிகிறது


போதும் போ நீ போ
என் கண்கள் வலிக்கிறது
ஒ நீ போ நீ போ
என் உலகம் உருகிறது


விழியே விழியே பேசும் விழியே
ஒரு பார்வை பார்த்தாய்
மழையே மழையே நெஞ்சில் மழையே
தனியே தனியே வாழ்ந்தேன் தனியே
நான் மாறி போனேன்
இனிமே இனிமே நீ தான் துணையே

Angadi theru - Aval Appadi Onrum

படம் : அங்காடி தெரு (2010)
இசை : G.V. பிரகாஷ் & விஜய் அண்டனி
பாடியவர்கள் :  வினித் ஸ்ரீனிவாஸ், ரஞ்சித்
பாடல்வரிகள் : நா.முத்து குமார்

Angadi - Theru - ShijuMadhav by shijumadhav on SoundCloud - Hear ...





அவள் அப்படி ஒன்றும் அழகில்லை

அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லை


அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லை


அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை
அவளைப் படித்தேன் முடிக்கவில்லை
அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை
இருந்தும் கவனிக்க மறக்கவில்லை


அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லை


அவள் நாய்க்குட்டி எதுவும் வளர்க்கவில்லை
நான் காவலிருந்தால் தடுக்கவில்லை
அவள் பொம்மைகள் அணைத்து உறங்கவில்லை
நான் பொம்மை போலே பிறக்கவில்லை
அவள் கூந்தல் ஒன்றும் நீளமில்லை
அந்தக்காட்டில் தொலைந்தேன் மீளவில்லை
அவள் கவிரல் மோதிரம் தங்கமில்லை
கைப்பிடித்ததும் ஆசையில் தூங்கவில்லை
அவள் சொந்தமின்றி எதுவுமில்லை
எனக்கு எதுவுமில்லை


அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லை


அவள் பட்டுப்புடவை என்றும் அணிந்ததில்லை
அவள் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை
அவள் திட்டும்போதும் வலிக்கவில்லை
அந்த அக்கரைப்போல வேறு இல்லை
அவள் வாசம் ரோஜா வாசமில்லை
அவள் இல்லாமல் சுவாசமிலை
அவள் சொந்தம் பந்தம் எதுவுமில்லை
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை
எனக்கு எதுவுமில்லை


அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லை

Popular Posts