Showing posts with label Ramya Pandiyan. Show all posts
Showing posts with label Ramya Pandiyan. Show all posts

Wednesday, October 17, 2018

Aan Dhevathai - Pesugindren Pesugindren

ப‌டம் : ஆண் தேவதை (2018)
இசை : ஜுப்ரான்
பாடியவர் : சைத்ரியா அப்படிபுடி
பாடல்வரிகள் : கார்த்திக் பிரசன்னா

Related image



பேசுகின்றேன் பேசுகின்றேன்
பேச்சை தாண்டி வந்து பேசுகின்றேன்
ஓசை எல்லாம் வேஷம் என்றே
உள்ளிருந்தே உள்ளம் பேசுகின்றேன்

வாழ்கின்ற நேரத்தை வாழ்கின்ற நேரத்தில்
வாழ்கின்ற நேர்மை தான் வாழ்க்கையாகும்
தூரத்தில் காண்கின்ற மேகத்தின் பிரம்மாண்டம்
மழையாகி விழும்போது துணையாய் மாறும்

பேசுகின்றேன் பேசுகின்றேன்
பேச்சை தாண்டி வந்து பேசுகின்றேன்
உள்ளிருந்தே உள்ளம் பேசுகின்றேன்


தனக்கென பிடித்த ஒன்றை
சலனத்தில் தவற விட்டு
பழங்கதை புழுதியிலே ஏனிந்த மோதல்
இருப்பதை ரசித்து கொண்டு
கிடைப்பதில் உயர்வு கொண்டு
மகிழ்ச்சியில் திளைத்திருந்தால் தீராதே காதல்

மீனோடு வாழ்நாளும் அலைகளில் இல்லை நாற்றம்
நாம் காணும் எல்லாமே முரண்களின் சிநேகம்
மாட்டாத காற்றுக்கு ஏன் பலவித தூண்டில்
எந்நாளும் ஏன் இந்த கோமாளி தேடல்
அட முயல் ஆமை கதையாச்சு உலகமே சலனமே
அகந்தை கூட மரணமே

பேசுகின்றேன் பேசுகின்றேன்
பேச்சை தாண்டி வந்து பேசுகின்றேன்
ஓசை எல்லாம் வேஷம் என்றே
உள்ளிருந்தே உள்ளம் பேசுகின்றேன்

வாழ்கின்ற நேரத்தை வாழ்கின்ற நேரத்தில்
வாழ்கின்ற நேர்மை தான் வாழ்க்கையாகும்
தூரத்தில் காண்கின்ற மேகத்தின் பிரம்மாண்டம்
மழையாகி விழும் போது துணையாய் மாறும்

பேசுகின்றேன் பேசுகின்றேன்
பேச்சை தாண்டி வந்து பேசுகின்றேன்
உள்ளிருந்தே உள்ளம் பேசுகின்றேன்

Monday, October 8, 2018

Aan Dhevathai - Nigara Than Nigara

படம் : ஆண் தேவதை (2018)
இசை : ஜுப்ரான்
பாடியவர் : வினித் சீனிவாசன்
பாடல்வரிகள் : செளந்தராஜன் K


Related image




நிகரா தன் நிகரா ஓர் தாலாட்டு நீ

இதமாய் பெரிதமாய் ஓர் தந்தை மொழி
மயில்தோகையாய் இவன் வாசனை 
தாயாகிடும் ஆண் தேவதை 
அன்பின் உயரம் உருவம் தாயுமானவன்

நிகரா தன் நிகரா ஓர் தாலாட்டு நீ

இதமாய் பெரிதமாய் ஓர் தந்தை மொழி


உலகை இந்த உலகை அறிமுகம் செய்யும் ஒருவன்

ஒளியாய் வழித்துணையாய் விர‌ல் பிடித்திடும் தலைவன்
பிழையை நம் பிழையை திருத்திடும் ஒரு கவிதை
தந்தை உன் நிழலில் நிலைத்திடுமா கவலை
தாயாக மாற முயல்வாய் பல நேரம்
உனைமீறி அடைவாய் பிள்ளையெனும் வேடம்
தாய்பட்டம் நெஞ்சோடு சுமக்கும் தந்தையே

நிகரா தன் நிகரா ஓர் தாலாட்டு நீ

இதமாய் பெரிதமாய் ஓர் தந்தை மொழி
மயில்தோகையாய் இவன் வாசனை
தாயாகிடும் ஆண் தேவதை 
அன்பின் உயரம் உருவம் தாயுமானவன்


மடியே இவன் மடியே மரகத தலையணையே

மழலை தன் மழலை குறும்பினில் இவன் நகலே 
விடியல் புது விடியல் கொடுத்திடும் கதிரவனே
நிலவும் கண்வளரும் கதைகளை கதைப்பவனே
தாயென்ற ஒன்றில் பால் என்பதில்லை
தன்கண்கள் ரெண்டால் பாலூட்டும் அன்னை
உயிர்தந்து தனைதந்திடும் தந்தைக்கினையில்லை

நிகரா தன் நிகரா ஓர் தாலாட்டு நீ

இதமாய் பெரிதமாய் ஓர் தந்தை மொழி
மயில்தோகையாய் இவன் வாசனை 
தாயாகிடும் ஆண் தேவதை 
அன்பின் உயரம் உருவம் தாயுமானவன்
நிகரா தன் நிகரா ஓர் தாலாட்டு நீ

Popular Posts