படம் : திருமணம் என்னும் நிக்காஹ் (2014)
இசை : ஜிப்ரான்
பாடியவர்கள் : ஷாதாப் ஃபரிதி, சின்மயி
பாடல்வரிகள் : கார்த்திக் நேத்தா
என்தாரா என்தாரா நீயே என் தாரா
என் மனம் பூத்ததே தாரா
கண்பூரா கண்பூரா நீயேதான் தாரா
கண்ணாரக் காண்கிறேன் பூரா
தண்ணீரை கூசிக் கொண்டு
மெல்ல செல்லும் பிம்பங்கள் நீயாகிறாய்
எதிரே என்னோடு காதல் வந்தே
என்ன சொல்ல வெட்கங்கள் பேசுதே
உன்தாரா உன்தாரா நானே உன்தாரா
என் வானம் பூத்ததே சீரா
கண்பூரா கண்பூரா நீயேதான் வீரா
என் பார்வை ஆனதே கூரா
தண்ணீரை கூசிக் கொண்டு
மெல்ல செல்லும் பிம்பங்கள் நீயாகிறாய்
எதிரே என்னோடு காதல் வந்து
என்ன சொல்ல வெட்கங்கள் பேசுதே
ஏனோ இன்று ஏனோ
நா.....ன் உந்தன் நானோ
நீயோ இல்லை நானோ
நா....ம் என்னும் நாமோ
தூண்டிலா..... நீ ஊஞ்சலா
தூரலா நீ..... காணலா
ப்ரேத்யேக மௌனம் நீ கொண்டு வந்தாய்
என் வார்த்தை ஆனதே
இல்லாத ஊரில் இல்லாத பேரில்
நம் காதல் வாழுமே
ஒய் நம் காதல் வாழுமே
உன் அசைவினில் என் திசைகளை
பட படவென தந்தாய்
மின்மினிகளை உன் விழிகளில் கொண்டாய்
கண் இமைகளில் என் இரவினை
கத கதப்புடன் தந்தாய்
கண் அவிழ்கையில் வெண்ணிலவொளி தந்தாய்
பிரம்மாண்ட காலம் நீ தந்து சென்றாய்
என் நாட்கள் தீர்ந்ததே
உன் பாத சூட்டில் என் காதல் பூக்கும்
நம் தேடல் தீருமே.....
என்தாரா என்தாரா நீயே என் தாரா
என் மனம் பூத்ததே தாரா
கண்பூரா கண்பூரா நீயேதான் தாரா
கண்ணாரக் காண்கிறேன் தாரா
தண்ணீரை கூசிக் கொண்டு
மெல்ல செல்லும் பிம்பங்கள் நீயாகிறாய்
எதிரே என்னோடு காதல் வந்து
என்ன சொல்ல...
வெட்கங்கள் பேசுதே...