Saturday, November 1, 2014

Thirumanam Enum Nikkah - Chillendra Chillendra

படம் : திருமணம் என்னும் நிக்காஹ் (2014)
இசை : ஜிப்ரான் 
பாடியவர்கள் : சுந்தர் நாராயன ராவ் - கௌஷிகி சக்ரபர்டி -
                         முன்னா சௌகத் அலி -  ஜிப்ரான்
பாடல்வரிகள் : காதல்மதி - முன்னா சௌகத் அலி





ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... 
யா மெரே மோலா 
ஷுகுரு ஹே தேரா
யா மெரே மோலா 
ஷுகுரு ஹே தேரா

சில்லென்ற சில்லென்ற காற்றிலே
சிறகை விரித்தேனே

சில்லென்ற சில்லென்ற காற்றிலே
சிறகை விரித்தேனே
மெஹந்தி வரைந்த வானிலே
தேடி அலைந்தேனே

ஹமாரே திலோங்கா ஹே கெஹெனா

நேசத்தின் சாரல்கள் தூவத் தூவ

தேரி பியாரி அதாஏ தேரா பாங்க் பன்   
க்யா பாத் ஹே வல்லா

வானில் உதிர்ந்த இறகொன்று 
காற்றின் கன்னங்களில் 
கவிதை எழுதியதே

சில்லென்ற சில்லென்ற காற்றிலே
சிறகை விரித்தேனே
சிறகை விரித்தேன் 
தேடி அலைந்தேன்... ஓ.. ஓ.. ஓஓஓ...

யா மெரே மோலா 
ஷுகுரு ஹே தேரா
யா மெரே மோலா 
ஷுகுரு ஹே தேரா
ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... 


கர்தேஷே துனியா...
சுற்றிடும் உலகம் 
சுழலும் ஓசையும்
காதில் கேட்குமா

மௌனத்தின் வெளியில் 
ஓம்கார ஒலியும்
ஆமீனும் கேட்குமே

உன் மூச்சு நின்றாலும் 
உன்னைத் தான் நீங்காத சொந்தம் எது

கண் மூடிப் போனாலும் 
உன்னோடு சாய்கின்ற நிழல் தானது

என்னைப் போல் பெண் ஒன்று
அச்சாக இன்னொன்று கண்டேனே நான் 
இன்று யாரென்று சொல்

தாயா... உன் சேயா...

நேசத்தை சொல்ல 
வார்த்தை வசப்படுமா

சில்லென்ற சில்லென்ற காற்றிலே
சிறகை விரித்தேனே

மெஹந்தி வரைந்த வானிலே
பாடிப் பறந்தேனே


இரண்டு வானம் விண்மீன் கூட்டம்
வட்ட நிலா என்ன?

ஏழை ஒருவன் கந்தல் குடை போல்
தொலைந்த என் மனம்

ஆ... மெல்லிய வெப்பத்தில் மேகத்தின் குளிர்சியின்
சலனம் தான் என்ன?

சட்டென்று தூவிடும் நட்பென்னும் பூ மழை
சாரலே அது

எல்லாமே நீயாக எண்ணத்தில் பூவாக
சொல்லாத சொல்லொன்று என்னென்று சொல்

பாசமா... நேசமா...

மெஹபூபு மேரா ஹோ 
பொஹத்து கூபு சஜ்னா...  
வாழ்வே உன்னோடு   
என்னுடன் இணைந்திட வா

இனி எல்லாம் நீ தான் 
நீயே நான் தான்

ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... 
யா மெரே மோலா 
ஷுகுரு ஹே தேரா

சில்லென்ற சில்லென்ற காற்றிலே
சிறகை விரித்தேனே
சிறகை விரித்தேனே 
பாடிப் பறந்தேனே

யா மெரே மோலா 
ஷுகுரு ஹே தேரா
யா மெரே மோலா 
ஷுகுரு ஹே தேரா
ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... 


Popular Posts