Showing posts with label V. Show all posts
Showing posts with label V. Show all posts

Saturday, October 1, 2011

Vaagai Sooda Vaa - Sara Sara Saara Kathu

படம் :  வாகை சூடவா (2011)
இசை : ஜிப்ரான்
பாடியவர்க‌ள் : சின்மயி
பாடல் வரிக‌ள்: வைரமுத்து




சர சர சார காத்து வீசும் போது
சார பாத்து பேசும் போது
சார பாம்பு போல நெஞ்சம் சத்தம் போடுதே...

சர சர சார காத்து வீசும் போது
சார பாத்து பேசும் போது
சார பாம்பு போல நெஞ்சம் சத்தம் போடுதே...

இத்து இத்து இத்து போன நெஞ்சு தைக்க
ஒத்த பார்வை பாத்து செல்லு
மொத்த சொத்த எழுதி தாரேன் மூச்சு உட்பட...

இத்து இத்து இத்து போன நெஞ்சு தைக்க
ஒத்த பார்வை பாத்து செல்லு
மொத்த சொத்த எழுதி தாரேன் மூச்சு உட்பட...

டீ போல நீ... என்ன ஏன்... ஆத்துற

சர சர சார காத்து வீசும் போது
சார பாத்து பேசும் போது
சார பாம்பு போல நெஞ்சம் சத்தம் போடுதே


எங்க ஊரு பிடிக்குதா... எங்க தண்ணி இனிக்குதா
சுத்தி வரும் காத்துல... சுட்ட ஈரல் மணக்குதா
முட்டை கோழி பிடிக்கவா... முறை படி சமைக்கவா
எலும்புங்க கடிக்கயில்... என்ன கொஞ்ச நினைக்க வா
கம்மஞ்சோறு ருசிக்க வா... சமைச்ச கைய கொஞ்சம் ரசிக்க வா
மொடகத்தா ரசம் வச்சு மடக்க தான் பாக்குறேன்
ரெட்டை தோசை சுட்டு வச்சு காவ காக்குறேன்
முக்கண்ணு நொங்கு நான் விக்கிறேன்
மண்டு நீ கங்கைய கேக்குற

சர சர சார காத்து வீசும் போது
சார பாத்து பேசும் போது
சார பாம்பு போல நெஞ்சம் சத்தம் போடுதே

புல்லு கட்டு வாசமா... புத்திக்குள்ள வீசுற
மாட்டு மணி சத்தம்மா... மனசுக்குள் கேக்குற
கட்ட வண்டி ஓட்டுற... கையளவு மனசுல
கையெழுத்து போடுற... கன்னி பொண்ணு மார்புல
மூனு நாளா பாக்கல... ஊரில் எந்த பூவும் பூக்கல
ஆட்டு கல்லு குழியில ஒறங்கி போகும் பூனையா
உன்னை வந்து பாத்து தான் கிறங்கி போறேன்யா
மீனுக்கு ஏங்குற கொக்கு நீ
கொத்தவே தெரியல மக்கு நீ


சர சர சார காத்து வீசும் போது
சார பாத்து பேசும் போது
சார பாம்பு போல நெஞ்சம் சத்தம் போடுதே...

சர சர சார காத்து வீசும் போது
சார பாத்து பேசும் போது
சார பாம்பு போல நெஞ்சம் சத்தம் போடுதே...


இத்து இத்து இத்து போன நெஞ்சு தைக்க
ஒத்த பார்வை பாத்து செல்லு
மொத்த சொத்த எழுதி தாரேன் மூச்சு உட்பட...

இத்து இத்து இத்து போன நெஞ்சு தைக்க
ஒத்த பார்வை பாத்து செல்லு
மொத்த சொத்த எழுதி தாரேன் மூச்சு உட்பட...

டீ போல நீ... என்ன ஏன்... ஆத்துற

காட்டு மல்லிக பூத்திருக்கு காதலா காதலா
வந்து வந்து ஓடிபோகும் வண்டுக்கு என்ன காச்சலா

Monday, August 29, 2011

விண்ணுக்கும் மண்ணுக்கும் - உனக்கென உனக்கென


படம் : விண்ணுக்கும் மண்ணுக்கும் (2001)
இசை : S.A ராஜ்குமார்
பாடியவர் : S.P பாலசுப்ரமணியம், சுஜாதா
பாடல் வரி : பா.விஜய்









உனக்கென உனக்கெனப் பிறந்தேனே
உயிரென உணர்வென கலந்தேனே


உனக்கென உனக்கெனப் பிறந்தேனே
உயிரென உணர்வென கலந்தேனே
இதயத்தை இதயத்தை இழந்தேனே
இமைகளில் கனவுகள் சுமந்தேனே
உனக்கென உனக்கெனப் பிறந்தேனே
உயிரென உணர்வென கலந்தேனே


திருவிழா போல காதல் தான்
அதில் நீயும் நானும் தொலைவோமா
தினசரி செய்திதாள்களில்
நம்மை தேடும் செய்தி தருவோமா
ஸ்ரீராமஜெயத்தை போல் உனது பெயரை
தினம் எழுதிப் பார்க்கிறேன்
கிளி ஒன்றை வாங்கி உன் பெயரைக் கூறி
தினம் சொல்ல கேட்கிறேன்
அடி... ஒரு கோடி கொலுசில் உன் கொலுசின் ஓசை
உயிர் வரை கேட்கிறதே


உனக்கென உனக்கெனப் பிறந்தேனே
உயிரென உணர்வென கலந்தேனே
இதயத்தை இதயத்தை இழந்தேனே
இமைகளில் கனவுகள் சுமந்தேனே


கடலாக நீயும் மாறினால்
அதில் மூழ்கி மூழ்கி அலையாவேன்
நெருப்பாக நீயும் மாறினால்
அதில் சாம்பலாகும் வரம் கேட்பேன்
அரிதாரம் பூசும் ஒரு வானவில்லை
பரிசாகக் கேட்கிறேன்
அகல் தீபமாகி ஆகாய நிலவை
உறவோடுப் பார்க்கிறேன்
அடி பொய்யென்ற போதும்
உன்னோடு பேசும் கனவுகள் வேண்டுகிறேன்


உனக்கென உனக்கெனப் பிறந்தேனே
உயிரென உணர்வென கலந்தேனே
இதயத்தை இதயத்தை இழந்தேனே
இமைகளில் கனவுகள் சுமந்தேனே


உனக்கென உனக்கெனப் பிறந்தேனே
உயிரென உணர்வென கலந்தேனே
இதயத்தை இதயத்தை இழந்தேனே
இமைகளில் கனவுகள் சுமந்தேனே


உனக்கென உனக்கெனப் பிறந்தேனே

Friday, August 12, 2011

வேங்கை - ஒரே ஒரு

படம் : வேங்கை (2011)
இசை : தேவி ஸ்ரீபிரசாத்
பாடியவர் : திப்பு, ஹரிணி
பாடல் வரி : விவேகா





யாரோ மனச உலுக்க... ஏதோ உடைந்து வலிக்க...
நானோ தனித்து நடக்க... நீயோ மௌனமாக...
ஒரே ஒரு வார்த்தைக்காக ஒயாம காத்திருப்பேன்
ஒரே ஒரு பார்வைக்காக எந்நாளும் தவமிருப்பேன்
ஒரே ஒரு நொடி கூட உன்னோடு தான் வாழ்வேனே
ஒரே ஒரு உயிர் அதை உன் கையில் தந்து சாயுவேன்

ஒரே ஒரு வார்த்தையாலே என் நெஞ்சு கலைகிறதே
ஒரே ஒரு பார்வையாலே உள்ளூர கரைகிறதே

யாரோ மனச உலுக்க... ஏதோ உடைந்து வலிக்க...

ஒ... சிக்கிக்கொண்டு சிக்கிக்கொண்டு தவிக்கும் ஒரு இதயம்
வெட்டிக்கொண்டு வெட்டிக்கொண்டு தவிர்க்கும் ஒரு இதயம்
காதல் என்னும் கைக்குழந்தை கதறி அழுகிறதே
மறுநாள் நெனைச்சு உள்ளம் இப்போ போராடுதே

ஒரே ஒரு வார்த்தைக்கேட்டு என் நெஞ்சு வெடிச்சிருச்சே
ஒரே ஒரு பார்வை புயலா எம்மேல அடிச்சிருசே

உள்ளுக்குள்ள முள்ள வச்சு எதுக்கு நீ சிரிச்ச
காதலெனும் பேர சொல்லி கழுத்த நீ நெரிச்ச
ஒன்ன நெனச்ச பாவத்துக்கு இது தான் தண்டனையா
என்ன பெத்த தெய்வத்துக்கே சோதனையா

ஒரே ஒரு வார்த்தை பேச என்னால முடியலையே

ஒரே ஒரு துரோகம் தாங்க என் நெஞ்சில் பலமில்லையே
யாரோ மனச உலுக்க... ஏதோ உடைந்து வலிக்க...
நானோ தனித்து நடக்க... நீயோ மௌனமாக...

வேங்கை - என்ன சொல்ல போற

படம் : வேங்கை (2011)
இசை : தேவி ஸ்ரீபிரசாத்
பாடியவர் : தேவி ஸ்ரீபிரசாத்,  M.L.R. கார்த்திகேயன்
பாடல் வரி : (டைரக்டர்) ஹரி





உன்ன மட்டும் நெஞ்சுகுள்ள வச்சிருக்கான் இந்த புள்ள
வீணாக இவன் மனச கிள்ளாத..
மூணு மாசம் ஆறு மாசம் காத்திருக்கும் பய புள்ள
நீயாக இவன் மனச கொல்லாத..
நீ கொல்லாத… ஒ.... கொல்லாத..

என்ன சொல்ல போற நீ என்ன சொல்ல போற
எப்ப சொல்ல போற நீ எப்ப சொல்ல போற
ஒ... என்ன சொல்ல போற நீ என்ன சொல்ல போற
எப்ப சொல்ல போற நீ எப்ப சொல்ல போற
காத்திருபேன் காத்திருபேன் ஆறு மாசம் தான்
கண் முளிச்சு படுத்திருந்தேன் மூணு மாசம் தான்
என்னமோ நடக்குது... இதயம் வலிக்குது... மனசு தவிக்குது
உன்னோடைய வார்த்தைக்காக
என்ன சொல்ல போற நீ என்ன சொல்ல போற
எப்ப சொல்ல போற நீ எப்ப சொல்ல போற

உன்ன மட்டும் நெஞ்சுகுள்ள வச்சிருக்கான் இந்த புள்ள
வீணாக இவன் மனச கிள்ளாத கிள்ளாத
மூணு மாசம் ஆறு மாசம் காத்திருக்கும் பய புள்ள
நீயாக இவன் மனச கொல்லாத கொல்லாத

ம்... சின்ன புள்ள நேசம் இது பச்ச புள்ள பாசம் இது
என் மனச தாக்கியது முன்னால முன்னால
ம்... ஜாதி மதம் பாக்கலையே சம்மதத்த கேக்கலையே
காதலுனு ஆயிருச்சு தன்னாலே தன்னாலே
நெசமா நெசமா நெஞ்சுக்குள்ளே நான் அழுதேன்
உன்னோடைய வார்த்தைக்காக
என்ன சொல்ல போற நீ என்ன சொல்ல போற
எப்ப சொல்ல போற நீ எப்ப சொல்ல போற

உன்ன மட்டும் நெஞ்சுகுள்ள வச்சிருக்கான் இந்த புள்ள
வீணாக இவன் மனச கிள்ளாத
மூணு மாசம் ஆறு மாசம் காத்திருக்கும் பய புள்ள
நீயாக இவன் மனச கொல்லாத
நீ கொல்லாத…

ஒ... வெட்டருவா தூக்கிக்கிட்டு வெட்டி பய போலிருந்தேன்
வெக்கப்பட்டு நான் நடந்தேன் உன்னால உன்னால
கட்ட கம்ப தூக்கிக்கிட்டு கண்டபடி நான் திரிஞ்சேன்
கட்டுப்பட்டு நான் நடந்தேன் பின்னால உன் பின்னால
புதுசா புதுசா மாறிருக்கேன் தேறிருக்கேன்
உன்னோடைய பார்வையால
என்ன சொல்ல போற நீ என்ன சொல்ல போற
எப்ப சொல்ல போற நீ எப்ப சொல்ல போற

உன்ன மட்டும் நெஞ்சுகுள்ள வச்சிருக்கான் இந்த புள்ள
வீணாக இவன் மனச கிள்ளாத
மூணு மாசம் ஆறு மாசம் காத்திருக்கும் பய புள்ள
நீயாக இவன் மனச கொல்லாத
நீ கொல்லாத…

Monday, August 1, 2011

வசீகரா - நெஞ்சம் ஒரு முறை

படம் :வசீகரா (2003)
இசை :S.A.ராஜ்குமார்
பாடியவர் :ஹரிஹரன், சாதனாசர்கம்
பாடல் வரி : நா.முத்துகுமார்




நெஞ்சம் ஒரு முறை நீ என்றது
கண்கள் மறுமுறை பார் என்றது



நெஞ்சம் ஒரு முறை நீ என்றது
கண்கள் மறுமுறை பார் என்றது
ரெண்டு கரங்களும் சேர் என்றது
உள்ளம் உனக்குத தான் என்றது
சத்தமின்றி உதடுகளோ முத்தம் எனக்கு தா என்றது
உள்ளம் என்ற கதவுகளோ உள்ளே உன்னை வா என்றது


நீ தான் நீ தான் எந்தன் உள்ளம் திறந்து
உள்ளே உள்ளே வந்த முதல் வெளிச்சம்


நீ தான் நீ தான் எந்தன் உயிர் கலந்து
நெஞ்சை நெஞ்சை தொட்ட முதல் ஸ்பரிசம்


கன்னம் என்னும் தீ அணைப்பு துறையில்
உன் முத்தம் தானே பற்றி கொண்ட முதல் தீ


கிள்ளும் போது எந்தன் கையில் கிடைத்த
 உன் விரல் தானே நானும் தொட்ட முதல் பூ


உன் பார்வை தானே எந்தன் நெஞ்சில் முதல் சலணம்


அன்பே என்றும் நீ அல்லவா
கண்ணால் பேசும் முதல் கவிதை


காலமுள்ள காலம் வரை
நீ தான் எந்தன் முதல் குழந்தை
  

நெஞ்சம் ஒரு முறை நீ என்றது

கண்கள் மறுமுறை பார் என்றது

காதல் என்றால் அது பூவின் வடிவம்
ஆனால் உள்ளே அது தீயின் உருவம்


காதல் வந்தால் இந்த பூமி நழுவும் 
பத்தாம் கிரகம் ஒன்றில் பாதம் பரவும்  


காதல் வந்து நெஞ்சுக்குள்ளே நுழையும்
ஒரு தட்பவெப்ப மாற்றங்களும் நிகழும்


காதல் வந்து கண்ணை தட்டி எழுப்பும்
அது ஊசி ஒன்றை உள்ளுக்குள்ளே அனுப்பும்


இந்த காதல் வந்தால் இலை கூட மலை சுமக்கும்


காதல் என்ற வார்த்தையிலே
ஒன்றாய் சேர்ந்து நாம் தொலைவோம்
காதல் என்ற காற்றினிலே
தூசி போல நாம் அலைவோம்

நெஞ்சம் ஒரு முறை நீ என்றது 

கண்கள் மறுமுறை பார் என்றது

ரெண்டு கரங்களும் சேர் என்றது 

உள்ளம் உனக்குத தான் என்றது 

சத்தமின்றி உதடுகளோ முத்தம் எனக்கு தா என்றது 

உள்ளம் என்ற கதவுகளோ உள்ளே உன்னை வா என்றது

Friday, July 15, 2011

வேட்டையாடு விளையாடு - உயிரிலே

படம் : வேட்டையாடு விளையாடு (2006)
இசை : ஹரீஸ் ஜெயராஜ்
பாடியவர் : ஸ்ரீனிவாஸ், மகாலட்சுமி அய்யர்
பாடல் வரி : தாமரை









உயிரிலே எனது உயிரிலே
ஒரு துளி தீயை உதறினாய்
உணர்விலே எனது உணர்விலே
அணுவென உடைந்து சிதறினாய்


ஏன் என்னை மறுத்து போகிறாய்
கானல் நீரோடு சேர்கிறாய்
கொடுத்தாய் சொன்ன இதயத்தை
திருப்பி நான் வாங்க மாட்டேனே


உயிரிலே எனது உயிரிலே
ஒரு துளி தீயை உதறினாய்
உணர்விலே எனது உணர்விலே
அணுவென உடைந்து சிதறினாய்


அருகினில் உள்ள தூரமே
அலை கடல் தீண்டும் வானமே
நேசிக்க நெஞ்சம் ரெண்டு
போதாதா போதாதா நீ சொல்லு
நேசமும் ரெண்டாம் முறை
வராதா கூடாதா நீ சொல்லு


இது நடந்திட கூடுமா
இரு துருவங்கள் சேருமா
உச்சரித்து நீயும் விலக
தத்தளித்து நானும் மருக
என்ன செய்வேனோ


உயிரிலே எனது உயிரிலே
ஒரு துளி தீயை உதறினாய்
உணர்விலே எனது உணர்விலே
அணுவென உடைந்து சிதறினாய் 


ஏதோ ஒன்று என்னை தடுக்குதே
பெண் தான் நீ நீ என்று உரைக்குதே
என்னுள்ளே காயங்கள் 
ஆறாமல் தேறாமல் நின்றேனே
விசிறியாய் உன் கைகள் 
வந்தாலும் வாங்காமல் சென்றேனே


வா வந்து என்னை சேர்ந்திடு
என் தோள்களில் தேய்ந்திடு
சொல்ல வந்தேன் சொல்லி முடித்தேன்
வரும் திசை பார்த்து இருப்பேன்
நாட்கள் போனாலும்....


ஏன் என்னை மறுத்து போகிறாய்
கானல் நீரோடு சேர்கிறாய்
கொடுத்தாய் சொன்ன இதயத்தை
திருப்பி நான் வாங்க மாட்டேனே

Wednesday, May 11, 2011

V - Alphabet Movie Title





வம்சம் (2010)


வசூல்ராஜா MBBS (2004)

வசீகரா (2003)

வள்ளி (1993)

வனஜா கிரிஜா (1994)

வண்டி சோலை சின்ராசு (1994)

வட்டாரம் (2006) 

வர்ணஜாலம் (2004)

வாகை சூடவா (2011)

வானமே எல்லை (1991)

வானத்தைப்போல (2000)




வாலி (1999)

வாழ்த்துக்கள் (2008)

வாரணம் ஆயிரம் (2008)
விசில்  (2003)

விரும்புகிறேன் (2002)


விருமாண்டி (2004)


விண்னை தாண்டி வருவாயா (2010)

விண்ணுக்கும் மண்ணுக்கும் (2001)


வில்லு (2009)

வில்லுப்பாட்டுக்காரன் (1992)


வியட்நாம் வீடு (1970)

விஜய் டிவி சீரியல் (காதலிக்க நேரமில்லை)
வெள்ளி விழா (1972)

வெற்றிக்கொடி கட்டு (2000)



வெடி (2011)

வேதம் (2001)


வேலாயுதம் (2011)


வேட்டையாடு விளையாடு (2006)

Popular Posts