Friday, November 16, 2012

வட்டாரம் - இது காதல் காதல்

படம்: வட்டாரம் (2006)
இசை: பரத்வாஜ்
பாடியவர்: ராஜேஷ் கிருஷ்ணா
பாடல்வரி: வைரமுத்து

VATTARAM


ஒ... ஒ... ஒ.......
ஒ... ஒ... ஒ.......
ஒ... ஒ... ஒ.......
ஒ... ஒ... ஒ... ஒ... ஒ.....
இது காதல் காதல் காதல் காதல்தானா
இல்லை கண்ணில் தோன்றி கை வராத வானா
இது கையில் கையில் கையில் சுற்றும் பூவா
இல்லை காலை காலை காலை சுற்றும் பாம்பா
தெரியவில்லையே வலியோ குறையவில்லையே
ஐந்து புலன்களும் சொன்னால் அடங்கவில்லையே
பொத்தி வைத்த விதை முளைத்தது போலே
புத்திக்குள்ளே நீயும் வெடித்தனாலே
தலை இரண்டாய் பிளக்கிறதே தோழி

சட்டை மீது பட்டாம் பூச்சி ஒட்டும் போது வெறுத்தவன்
விட்டு விலகி போகும் போது விரல் நீட்டி துடிப்பதோ
காதல் வந்து கதவை தட்ட கதவை மூடி நடித்தவன்
தெருவை தாண்டி காதல் போனதும் தெரியாமல் திறப்பதோ
இரும்பில் செய்த ஆயுதம் எல்லாம் என் மேல் விழுந்து உடைந்ததே
கரும்பில் செய்த ஆயுதம் ஒன்று என் உயிரை அறுத்ததே
மார்புக்கு நடுவிலே இருதயம் வெகுதே

இது காதல் காதல் காதல் காதல்தானா
இல்லை கண்ணில் தோன்றி கை வராத வானா
இது கையில் கையில் கையில் சுற்றும் பூவா
இல்லை காலை காலை காலை சுற்றும் பாம்பா

ந...ன...ன....... ந...ன...ன.......

ஒ... ஒ... ஒ....... ஒ.... ஹோ...
ஒ... ஒ... ஒ....... ஒ.... ஹோ...
ஒ... ஒ... ஒ....... ஒ.... ஹோ...
ஒ... ஒ... ஒ... ஒ... ஒ.....
உன்னை தேடி உன்னை தேடி ஒற்றை சிறகில் பறக்கிறேன்
உடைந்து போன இன்னோர் சிறகை உறங்காமல் தேடினேன்
நேற்று வரையில் எந்தன் இதயம் மூங்கில் காடாய் கிடந்தது
முள் இருந்த காடு இன்று முல்லை காடாய் மலர்ந்தது
மனது என்ற ஆயுதம் கொண்டே மனித கூட்டம் வளர்ந்தது
மனது என்ற ஆயுதம் கொண்டு தன்னை தானே வதைத்தது
கோட்டை போல் எழுகிறேன் குமிழி போல் உடைகிறேன்

இது காதல் காதல் காதல் காதல்தானா
இல்லை கண்ணில் தோன்றி கை வராத வானா
இது கையில் கையில் கையில் சுற்றும் பூவா
இல்லை காலை காலை காலை சுற்றும் பாம்பா
தெரியவில்லையே வலியோ குறையவில்லையே
ஐந்து புலன்களும் சொன்னால் அடங்கவில்லையே
பொத்தி வைத்த விதை முளைத்தது போலே
புத்திக்குள்ளே நீயும் வெடித்தனாலே
தலை இரண்டாய் பிளக்கிறதே தோழி


Popular Posts