Friday, November 16, 2012

லீலை - ஒரு கிளி ஒரு கிளி



படம்: லீலை (2009)
இசை: சதீஷ் சக்ரவர்த்தி
பாடியவர்கள்: சதீஷ் சக்ரவர்த்தி, ஸ்ரேயா கோஷல்
பாடல்: வாலி





ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி
உனைத் தொடவே அனுமதி
ஒரு துளி ஒரு துளி சிறு துளி
வழிகிறதே விழி வழி

உனக்குள் நான் வாழும் விவரம் நான் கண்டு
வியக்கிறேன் வியர்க்கிறேன்

எனக்கு நானல்ல உனக்குத்தான் என்று உணர்கிறேன்

நிழலெனத் தொடர்கிறேன்
ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி

உனைத் தொடவே அனுமதி
ஒரு துளி ஒரு துளி சிறு துளி
வழிகிறதே விழி வழி



விழியல்ல விரலிது ஓர் மடல்தான் வரைந்தது
உயிரல்ல உயிலிது உனக்குத்தான் உரியது

இமைகளின் இடையில் நீ இமைப்பதை நான் தவிர்க்கிறேன்
விழிகளின் வழியில் நீ உறக்கம் வந்தால் தடுக்கிறேன்

காதல்தான் எந்நாளும் ஒரு வார்த்தைக்குள் வராதது

காலங்கள் சென்றாலும் அந்த வானம் போல் விழாதது
ஒரு கிளி ஒரு கிளி


சிறு கிளி
உனைத் தொடவே அனுமதி
ஒரு துளி ஒரு துளி சிறு துளி
வழிகிறதே விழி வழி



தூரத்தில் மேகத்தை துரத்திச் செல்லும் பறவை போலே
தோகையே உனை நான் தேடியே வந்தேன் இங்கே

பொய்கை போல் கிடந்தவள் பார்வை என்னும் கல்லெறிந்தாய்
தங்கினேன் உன் கையில் வழங்கினேன் எனை இன்றே

தோழியே உன் தேகம் இளந்தென்றல்தான் தொடாததோ

தோழனே உன் கைகள் தொட நாணம்தான் விடாததோ
ஒரு கிளி ஒரு கிளி


சிறு கிளி
உனைத் தொடவே அனுமதி
ஒரு துளி ஒரு துளி சிறு துளி
வழிகிறதே விழி வழி



உனக்குள் நான் வாழும் விவரம் நான் கண்டு
வியக்கிறேன் வியர்க்கிறேன்

எனக்கு நானல்ல உனக்குத்தான் என்று உணர்கிறேன்

நிழலெனத் தொடர்கிறேன்



ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி
உனைத் தொடவே அனுமதி
ஒரு துளி ஒரு துளி சிறு துளி
வழிகிறதே விழி வழி


Popular Posts