Showing posts with label Deepak. Show all posts
Showing posts with label Deepak. Show all posts

Sunday, July 22, 2018

Mersal - Aalaporan Thamizhan

படம்: மெர்சல் (2017)
இசை: A.R.ரஹ்மான்
பாடியவர்கள்: கைலாஷ் க்ஹெர், சத்ய பிரகாஷ், தீபக் & பூஜா
பாடல்வரிகள்: விவேக்


Image result for Mersal



ஊருக்கண்ணு, உறவுக்கண்ணு
உன்ன மொச்சுப் பாக்கும் நின்னு
சின்ன மகராசன் வரான் மீசமுறுக்கு
எங்க மண்ணு தங்க மண்ணு
உன்ன வைக்கும் சிங்கமுன்னு

முத்துமணி ரத்தினத்தைப் பெத்தெடுத்த ரஞ்சிதம்
ஊருக்குன்னே வாழு கண்ணு அப்பனுக்கும் சம்மதம்
எந்த இடம் வலிகண்டாலும் கண்ணுதானே கலங்கும்
கண்ணபோல எங்களுக்கு காவலா நீ வரணும்...

ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே
வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே
வீரன்னா யாருனு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே
வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே

சொல்லிச் சொல்லி.. சரித்திரத்தில் பேர் பொறிப்பான்
நெஞ்சில் அள்ளி.. காற்றில் நம்ம தேன் தமிழ்தெளிப்பான்
இன்னும் உலகம் ஏழ, அங்க தமிழப்பாட
பச்சத்தமிழ் உச்சிப்புகழ் ஏறி சிரிக்கும்…

வாராயோ வாராய் நீ அன்பா வந்தா ஒளி கொடுப்போம்
வாராயோ வாராய் நீ வம்பா வந்தா சுளுக்கெடுப்போம்
தமிழன்டா எந்நாளும்.. சொன்னாலே திமிரேறும்
காற்றோட கலந்தாலும்.. அதுதான் உன் அடையாளம்


ஏ... அன்பக்கொட்டி எங்கமொழி அடித்தளம் போட்டோம்
மகுடத்தை தரிக்கிற  ழகரத்தை சேர்த்தோம்
தலைமுறை கடந்துமே விரிவதைப் பாத்தோம்
உலகத்தின்  முதல்மொழி உசுரெனக் காத்தோம்

நாள்நக மாற்றங்கள் நேரும் உன் மொழி சாயும் என்பானே
பார் இல்லையா தமிழனும் வருவான் தாய்த்தமிழ் தூக்கி நிற்பானே
கடைசித் தமிழனின் ரத்தம் எழும் வீழாதே…
தமிழினமே…   வீழாதே… தமிழினமே…
கண்ணுபோல எங்களுக்கு காவலா நீ வரணும்


நெடுந்தூரம் உன்இசை கேட்கும்
பிறை நீக்கி பௌர்ணமியாக்கும்
வெதக்காட்டில் விண்மீன் பூக்கும்
விழிச்சாலும் நெசந்தான்
உயிர் அலையுமோ நெத்தி முத்தம் போதும்
வருங்காலம் வாசனை சேர்க்கும்

முத்துமணி ரத்தினத்தைப் பெத்தெடுத்த ரஞ்சிதம்
ஊருக்குன்னே வாழு கண்ணு அப்பனுக்கும் சம்மதம்
எந்த இடம் வலிகண்டாலும் கண்ணுதானே கலங்கும்
கண்ணபோல எங்களுக்கு காவலா நீ வரணும்..

ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே
வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே
வீரன்னா யாருனு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே
வாயில்லா மாட்டுக்கும் அவன் நீதிய தந்தானே...

வாராயோ வாராய் நீ அன்பா வந்தா ஒளி கொடுப்போம்
வாராயோ வாராய் நீ வம்பா வந்தா சுளுக்கெடுப்போம்
தமிழாலே ஒண்ணானோம்... மாறாது எந்நாளும்...
தமிழாலே ஒண்ணானோம்... மாறாது எந்நாளும்...

Wednesday, September 6, 2017

Nedunalvaadai - Karuvatheva

படம்: நெடுநல்வாடை (2017)
இசை: ஜோஸ்  ‍ஃப்ராங்களின் 
பாடியவர்கள்: தீபக்
பாடல் வரிகள்: வைரமுத்து

Image result for nedunalvaadai tamil movie wiki


கருவாத்தேவா அட... கருவாத்தேவா
ஒங் கண்ணெல்லாம் கண்ணீரா கருவாத்தேவா
ஒன் நெலம சொன்னா கொளம் நெருப்பா போகும்
ஒங் கதையே ஒரு கருமாயம் கருவாத்தேவா

பொட்டபிள்ள பழுதாப்போச்சு கருவாத்தேவா
பெத்த பிள்ள பகையா போச்சு விதிதானே யார் வெல்வா?
சொந்தமெல்லாம் சொமையாப்போச்சு கருவாத்தேவா
அண்ணந்தம்பி பகையானா மக எங்கே போவா?

கருவாத்தேவா அட... கருவாத்தேவா
ஒங் கண்ணெல்லாம் கண்ணீரா கருவாத்தேவா
ஒன் நெலம சொன்னா கொளம் நெருப்பா போகும்
ஒங் கதையே ஒரு கருமாயம் கருவாத்தேவா


முள்ளு மேல ஒரு சொந்தமோ?
எந்த பக்கம் எது கிழியுமோ?
மானங்காக்க ஒரு கோவங்காட்ட‌ இந்த வாழ்க்கையில் எடமில்ல‌
வேட்டி ஒன்னு தான் மிச்சமோ?
நீ காட்டும் பாசம் அது உச்சமோ?
வானம் பாத்து இந்த பூமி பொளந்திருக்கு மேகம் துளியில்ல‌

தேகந்தான் தேயும்.. செருப்பெல்லாந் தேயும்
நீ காட்டும் பேரன்பு தேயாதய்யா
நிலங்கூட தீரும் கடல் கூட தீரும்
நீ பெத்த‌ கடன் மட்டும் தீராதய்யா
ஒரு பசுவின் தியாகந்தான் உசுரா ஒழுகுது பாலாக‌
ஒரு மனுசனின் தியாகந்தான் ஒவ்வொரு குடும்பம் ஆளாக‌

கருவாத்தேவா அட... கருவாத்தேவா
ஒங் கண்ணெல்லாம் கண்ணீரா கருவாத்தேவா
ஒன் நெலம சொன்னா கொளம் நெருப்பா போகும்
ஒங் கதையே ஒரு கருமாயம் கருவாத்தேவா



சொத்து இருந்தாலும் தொல்லையே
அது இத்து விழுந்தாலும் தொல்லையே
பாசமுள்ள ஒரு பாவிமனசு அது படுத்தா தூங்காது
பாரம் எறங்கும் ஒரு வயசுல‌
புது பாரம் ஏறுவது நியாயமா?
பாவம் வாழமரம் அய்யோ ஏழமரம் இடிய தாங்காது

நரை கொண்ட கேசம் திரை கொண்ட தேகம்
திடமான ஒன் நெஞ்சு நரைக்காதய்யா
உறவெல்லாம் மாறும் வரவெல்லாந் தீரும்
உசுரான ஒம்பாசம் வெளுக்காதய்யா
ஒரு கிழவனின் கண்ணீரோ தரையில் ஓடுது நதியாக‌
நதியோடிய தடமெல்லாம் குடும்பம் வளருது பயிராக‌


கருவாத்தேவா அட... கருவாத்தேவா
ஒங் கண்ணெல்லாம் கண்ணீரா கருவாத்தேவா
ஒன் நெலம சொன்னா கொளம் நெருப்பா போகும்
ஒங் கதையே ஒரு கருமாயம் கருவாத்தேவா

Monday, March 31, 2014

என்னமோ ஏதோ - Shut Up Your Mouth

படம்: என்னமோ ஏதோ (2014)
இசை: D.இமான்
பாடியவர்கள்: தீபக், ஸ்ருதிஹாசன்
பாடல்வரிகள்: மதன் கார்க்கி






ஓ... ஹோஹ்ஹ்ஹ் ஹ்ஹ்ஹ்... நநயே ...
ஓஹோ... ஒஹோஒ...

Shut Up Your Mouth,  ஒன் சட்டி பானை கவுத்
Shut Up Your Mouth, ஒன் சட்டி பானை கவுத்
Shut Up Your Mouth,  ஒன் சட்டி பானை !@#$
Shut Up Your Mouth,  ஒன் சட்டி பானை கவுத்

ஹேய் யோடா யோடா யோவ்டா கோவம் ஏனோடா?
ஹேய் யோடா யோடா யோவ்டா பக்கம் நீ வாடா 
ஹேய் யோடா யோடா யோவ்டா சீற்றம் ஏனோடா?
ஹேய் ஹையோ ஹையய்யோடா ஆட நீ வாடா

Shut Up Your Mouth,  ஒன் சட்டி பானை கவுத்
Shut Up Your Mouth,  ஒன் சட்டி பானை

Caffine-ல் விழிகள் செய்தான்
Cocoa-வில் இதழை செய்தான் 
Cocktail-லாய் மண்ணில் வந்த பெண்ணே நான் தான் 
நீ வந்து பருக தானே உன்னை செய்தான் 

Shut Up Your Mouth... ஒன் சட்டி பானை கவுத்
வாய கொஞ்சம் மூடு... ஒன் சட்டி பானை... சட்டி பானை 


ஹன்னன்ன... ஹே... ஹேய்...

அழகென்ற ஒன்று தான் அழுகைக்கெல்லாம் மூலம்
அலைபாயும் நெஞ்சமே அழிவுக்கெல்லாம் மூலம்

அலைபாய்கிறாய் அலைபாய்கிறாய் எனதழகில் நீ சாய்கிறாய் 
குளிர்காயவா குளிர்காயவா? எனதருகில் நீ மேய்கிறாய் 
அழிந்தாலுமே இவள் வேண்டுமே இமைக்காமல் பார்க்கிறாய் 

Shut Up Your Mouth, ஒன் சட்டி பானை கவுத்
Shut Up Your Mouth, ஒன்... ஒன்... ஒன்...


அடி வாங்கி நெஞ்சிலே மீண்டும் மீண்டும் காயம் 
விலங்காக மாறினேன் இதிலே என்ன மாயம்?

மிருகங்களின் ரணம் போக்குதல் என் தொழிலாய் கொண்டேனடா
ஒரு ஊசியாய் உன்னில் ஏறியே ரணமாற்ற வந்தேனடா 
வலி என்பதை வலி கொண்டுதான் எடுப்பேனே பாரடா 

Shut Up Your Mouth... Hey Let Your Body Shout

ஹேய் யோடா யோடா யோவ்டா போதை ஏனோடா?
ஹேய் யோடா யோடா யோவ்டா என் கண்ணால் தான்டா 
ஹேய் யோடா யோடா யோவ்டா நேற்றே வேணான்டா
ஹேய் யோடா உந்தன் மூச்சு காற்றே நான் தான்டா

Shut Up Your Mouth... ஒன் சட்டி பானை கவுத்
Shut Up Your Mouth... ஒன் சட்டி பானை கவுத்


Popular Posts